Tuesday, April 01, 2014

கேஜ்ரிவால் VS நமீதா நடிச்ச இந்திரவிழா

1. மரியாதையை இழந்துவிட்டோம்! - தா.பாண்டியன் # அதென்ன தோம் தோம்? இழந்தேன் -னு சொல்லுங்க்ணா


================


2 பிஜேபி-தேமுதிக கூட்டணி தேமுதிக அதிகாரபூர்வ அறிவிப்பு-சத்தியம் டிவி # கேப்டன் இதுல டூயல் ரோலா? திமுக கூட கூட்டணினு சொன்னாங்க?


=================


3 காங்கிரசின் கொள்கையை யாராலும் அழிக்கமுடியாது! - ராகுல் # காங்கிரஸ் அடிச்ச கொள்ளையையும் யாராலும் ஒளிக்க முடியாது


================


4 மக்களவைத் தேர்தல் கூட்டணி: தேமுதிக – பாஜக பேச்சுவார்த்தை தொடங்கியது # நைன்ட்டீன் விட்டு இறங்கி வர மாட்டேன்.

நைன்ட்டி னு கேள்விப்பட்டோம்?=====================

5 இடதுசாரிகள் வந்தால் ஏற்றுக்கொள்வோம்: கருணாநிதி#வாழாவெட்டிகள் எல்லோருக்கும்வாழ்வளிக்க முன் வந்த வேந்தே!


==================


6 பாஜக-தேமுதிக கூட்டணி! # சைவமா மாறிடனும்.சரக்கு அடிக்கக்கூடாது.கண்டிஷனுக்கு ஓக்கேவா?


=================


7 5 கேட்டோம்,3 எதிர்பார்த்தோம்,2 வலியுறுத்தினோம், 1 தான் கிடைத்தது - திருமா # தேவலை. இதயத்தில் மட்டும் தான் இடம் இருக்குனு சொல்லாம விட்டாரே?


====================

பா.ஜ.கவிடம் 12 தொகுதிகள் கேட்டிருக்கிறோம்: வைகோ  # ஒரு டஜன் அளவு கேட்டா தான் ஒரு ஜான் அளவாவது கிடைக்கும்===================

9  பாமக ஆட்சிக்கு வந்தால் கிராமத்துக்கு ஒரு டிராக்டர் தருவோம்- ராமதாஸ்.  # நடக்காததெல்லாம் நன்மைக்கே! =====================


10 ஜெ பிரதமர் ஆக மம்தா ஆதரவு- செய்தி! # ஒரு பொண்ணோட பதவி ஆசையை  இன்னொரு பொண்ணால தான் புரிஞ்சுக்க முடியும் =========================


11  தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது விடுதலை சிறுத்தை? திருமாவளவன் நாளை அவசர ஆலோசனை # அண்ணனுக்கு புதுசா ரோஷம் வந்திடுச்சு போலயே?


==================


12 காங்கிரஸ் ஆட்சியே பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பை அளித்தது, பெண் குலத்திற்கு பொற்காலம்- ஞானதேசிகன். # ஆமா, டெல்லி பஸ் சம்பவம் எந்த ஆட்சி?


====================


13 தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள் # வழி விடு வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் - கலைஞர் செல் ரிங்க் டோன் ==========================

14  சமத்துவமக்கள்கட்சி 40 தொகுதிகளில் தனித்து போட்டி - சரத்குமார்"# கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும்
நமீதாவைத்தூக்கி காங்கிரஸ் ரதத்துல வைன்னானாம்


===============


15 விடுதலை சிறுத்தைக்கு 1சீட் மட்டுமே ஒதுக்குதியதால் தொண்டர் தீக்குளிக்க முயற்சி# மானம் கெட்ட தலைவர்கள் ,புத்தி கெட்ட தொண்டர்கள்


====================

16 அதிமுக வை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்-மதுரை ஆதினம் # தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது , நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்=====================


17 அமெரிக்காவில் கணவரை கொன்றதாக இந்திய பெண் மீது வழக்கு # ரசம் வெச்சா? விஷம் வெச்சா?


=================


18 என்னை அடிக்க ஆள் வைத்தார் இயக்குநர் பாலா!- மவுனிகா குற்றச்சாட்டு # பாலா ரொம்ப நல்லவர் போல.அப்பவும் அவர் அடிக்கல பார்த்தீங்களா?=================

19 திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கீடு!"# அழுத பிள்ளைக்கு பால் ,வெளியேறுவேன் என மிரட்டின கட்சிக்கு சீட்டு


==================

20 குஜராத் வளர்ச்சி மாநிலமா? -கெஜ்ரிவால்!  # அண்ணன் இன்னும் நமீதா நடிச்ச இந்திரவிழா பார்க்கல போல ========================

0 comments: