Saturday, April 19, 2014

அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை!

1. மோடியிடம் சண்டை போட்டாவது வேண்டியதைப் பெற்றுத்தருவேன்! - விஜயகாந்த் # மறைமுகமா மோடியை வில்லன் கறாரோ?=================


இந்த தேர்தலில் அதிமுகவுக்கு டாட்டா பைபை சொல்லுங்கள்! - விஜயகாந்த் # அவங்களுக்கு டாட்டா உங்களுக்கு நோட்டா!


==================


3 ஆதிமுக ஆட்சியில் பல"சரக்கு"களின் விலை அதிகரித்து விட்டது - மு.க. ஸ்டாலின் # கேப்டனே கவலைப்படலை.நீங்க ஏன் அங்கலாய்க்கறீங்க?


=================


4 தொண்டர்களின் எழுச்சியால் திமுக கூட்டணி வெல்லும்:- ஸ்டாலின் # மக்கள் எழுச்சி தான் வெற்றிக்கு வழி கோலும்=====================


5 தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை, நடுநிலை வகிக்க முடிவு! - ரஜினி IT SO? BJP க்கு ஆதரவு கேட்டிருப்பாரே துக்ளக் சோ?


==================


6 மோடிக்குமுழுமையானஆதரவு அலை இல்லை: அன்னா ஹசாரே # குறை சொல்லிட்டே இருக்கறவங்க புத்த பூர்ணிமா அன்னைக்குக்கூட நிலா அப்டி 1ம்.அழகில்லைம்பாங்க===================


7 மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி பேச ஜெ வுக்கு என்ன தகுதி இருக்கிறது?: கருணாநிதி # அவர் இன்றைய சிஎம் நாளைய பிஎம் .இந்த தகுதி போதாதா?==================


8 சேலத்தில் விஜயகாந்த் மச்சான் சுதீஷ் போட்டி # குடும்ப அரசியல் ஆதிக்கம்் திமுக வில் அதிகம்னு ஒரு மானஸ்தர் சொன்னாரே யாராவது பார்த்திங்ளா?


===================


9 நல்லது முதலில் மற்றதெல்லாம் இரண்டாவது தான்: விஜயகாந்த் # சரக்கு வாங்குவோம் முன்னே ,சைடு டிஷ் வாங்குவோம் பின்னே 


===================


10  யாரோ எழுதி கொடுத்ததைத்தான் ஜெ பிரச்சாரத்தில் பேசிவருகிறார்! - ப.சிதம்பரம் # இவரு சொந்தமா யோசிச்சுக்கதை விடுவாரு போல===================11 மு.க.அழகிரியைச் சந்தித்து ஆதரவு கோரினார் வை.கோ # இதுக்குப்பேசாம தாய்க்கழகத்தோட இணைஞ்சிருந்தா கவுரவமாவது மிச்சம் ஆகி இருக்கும்


=================


12 இனிதேர்தலில் போட்டியில்லை.காந்திய வழியில் மக்களுக்கு சேவை-ப.சிதம்பரம்# செஞ்ச பாவத்துக்கெல்லாம் பரிகாரம் தேடுவது மனிதன்ன் 50 வது வயதின்பின்===================


13 அரசு அலுவலகங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்த தடை!
# நல்ல வேளை.எனக்கு கவர்மென்ட் ஜாப் இல்லை==================14 மண்ணை மதிக்காதமல் வான்மூலம் வந்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்கிறார்! - ப.சிதம்பரம் # இவரு பாதாள பைரவி மாதிரி போவாரோ?==================


15 வெற்றிப் பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டோம்! - ஞானதேசிகன் # ரன்னிங் ரேஸ் ல அவனவன் அரக்கப்பரக்க ஓடிட்டிருக்கான்.இவரு இப்போ தான் வாக்


==================


16 அத்வானி ஓரங்கட்டப்படவில்லை” : வெங்கையா நாயுடு # கட்டம் கட்டிட்டாங்க?


=================


17 பிரச்சாரத்தின் போது மது அருந்த கூடாது: வைகோ # கேப்டன்.உங்களைத்தான் சொல்றாரு.ஏதாவது கவுன்ட்டர் குடுங்க சின்னக்கவுண்டரே!


==============

18 ஊழலை ஒழிக்க நான் இருக்கிறேன் - விஜயகாந்த்.# ஒழித்தல் ,அழித்தல் ,முடித்தல் ,குடித்தல்னு எப்பவுமே நெகடிவாதான் பேசுவார் போல
=============

19 பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்? கருணாநிதிக்கு ஜெ கேள்வி: # தேவை ஏற்பட்டா ஆன்மீகவாதியுடனும் கூட்டணி உண்டு என்பதே பகுத்தறிவும்பாரோ?

=================

20 மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசு காரணம் அல்ல. மின்சாரவாரியம் தான் காரணம் - ஜெ # கோர்ட்ல சொந்த சைனையே இது என் சைன் இல்லைனு சொன்னவராச்சே?


================

0 comments: