Sunday, April 13, 2014

காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம்

1. பழமை விரும்பி,புதுமை விரும்பியாகவோ உங்கள் இஷ்டத்துக்கு இருந்துகொள்ளுங்கள்.ஆனால் நம் பாரம்பரியத்தையும் ,பண்பாட்டையும் விட்டுக்கொடுக்காதீர்==============2 நான் உங்களை விட 2 படம் அதிகம் பண்ணி முன்னால போய்க்கிட்டு இருக்கேன்.வெற்றியின் அளவு நீள தூரத்தை மட்டும் வெச்சு பாக்கக்கூடாது.உயரத்தையும்


================


3 புதுக்கோட்டை ஆலங்குடி டூ அறந்தாங்கி கார்ல போனா வழி நெடுக சாலை ஓரத்தில் ஏகப்பட்ட பலா மரங்கள் காய்த்து இருக்கு.அள்ளிக்கலாம்

==============


4 விமானத்தைத்தேடுவது போல் பாவ்லா காட்டிக்கொண்டே அதைக்கடத்தியவரிடம் டிமான்ட்ஸ் பற்றி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கவும் சாத்தியம் இருக்கு


=================


5 மாரியம்மன் கோவில் பண்டிகை ல மஞ்சத்தண்ணி ஊத்தி ஊத்து விளையாடுவமே அது தான் ஹோலிக்கெல்லாம் முன்னோடி # தமிழேண்டா


=============


6 ஹோலிப்பண்டிகை கொண்டாடலையா?னு கேட்டா இப்போ தான் ஒரு முழுக்கோழியை அடிச்சு சாப்ட்டுட்டு வரேன் கறார் # தமிழேண்டா


==============

7 பஸ் சின் ஜன்னல் அருகே கீழே நிற்கும் பெண்களே! பஸ் சில் இருப்பவர்க்கு நீங்கள் டாப் ஆங்க்கிள் என்பதை அறிக


=============

8 ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்துல கள்ளக்காதலர்கள் ஜோடி யாருமே வராதது அதிர்ச்சியா இருக்கு.தமிழன் திருந்திட்டானா?வந்துட்டுப்போய்ட்டானா?


============

9 ஓட்டுப்பிச்சை எடுக்கும் அரசியல்வாதிகளுக்கு ரோஷம் வருவது இந்தியாவிலேயே இது முதல் முறை.வாட் எ மெடிக்கல் மிராக்கிள் # டாக்டர் அய்யா விலகல்


==============

10 என் ஜோக்ஸ் (!?)எல்லாம் மொக்கைனும் ,FOTOS ஓரளவு சுமார்னும் சொல்றாங்க.இனிமே ஜோக் எழுதி அதை போட்டோ பிடிச்சு போட்ரலாம்னு இருக்கேன்


==============

11 பாரின் ல இருக்கும் ஒரு பொண்ணு ஏதோ மொக்கை ஸ்டேட்டஸ் போட்டுட்டு தூங்கிடுச்சு.நடுநிசி 2 மணி க்கு "ஏன் இன்னும் தூங்கலையா?"னு கமெண்ட் போட்டிருக்கான் தமிழன்


================

12 தொப்பையைக்குறைக்க அரை பர்லாங் தூரம் கடனுக்கு வாக் போய்ட்டு 4 மசால் வடையை சாம்பார் ,சட்னி தொட்டு அடிப்பான் தமிழன்


==============

13 ஏதாவது பொய்யைச்சொல்லி பசங்களைக்கழட்டி விடறது பொண்ணுங்க பாலிசி.பொய் சொல்லியாவது பொண்ணை பிக்கப் பண்றது பசங்க பாலிசி # மான் கராத்தே


===============

14 ஒரே ஒரு அடியாவது நான் அவனை அடிக்கனும் மாஸ்டர்.அடிச்ட்டு அவன் கண்ணைப்பாக்கனும் # மான் கராத்தே


==============

15 மூக்கும் முழியுமா அழகா இருக்கும் பிகரு போடும் ஸ்மைலி ல மூக்கு இருக்காது :)).சுமார் மூஞ்சி குமாரா இருந்தாலும் ஸ்மைலில மூக்கு இருக்கும் ;-))


=============

16 மான் கராத்தே ட்ரெய்லர் எடிட்டிங் யாரோ? முழுத்திரைக்கதையையும் சுலபமா யூகிக்க முடியுதே!


================

17 மாண் கராத்தே = எதிர்நீச்சல் + பத்ரி + ஒரு கல் ஒரு கண்ணாடி #2 நிமிஷ ட்ரெய்லர் பார்த்தே 2 1/2 மணி நேரப்படத்தைப்பார்த்தமாதிரி விமர்சிப்போர்


==============


18 நீங்க சந்தோஷமான ஜாலி மூட் ல இருந்தாலும் டேமேஜர் முன் பரபரப்பான கவலை ,டென்ஷன் முகத்துடன் இருக்கவும்.இல்லைனா அவர் டென்சன் ஆகிடுவார்


================

19 டச் போன் உபயோகிப்பாளரின் மூளை கூர்மையாகுதோ,மழுங்கிப்போகுதோ அவர் விரல்கள் கூர்மையாகின்றன


=================

20 காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நாம்


================


0 comments: