Thursday, April 17, 2014

பிரம்மச்சாரி vs .சம்சாரி

1. ஒரு மோசமான ஊழல்வாதியை விட ரோசமான சர்வாதிகாரி மேல்=================


2 எனி ஹெல்ப் ஷாலினி குரூப் கிட்டே ஏமாறும் பெண்களே! நீங்க இல்லாதப்ப உங்க தங்கச்சி கிட்டேயும் மச்சினி முறை ல எனி ஹெல்ப் ஷாம்லினு கேட்பாங்க


================


3 மேத்ஸ் மிஸ் மேக்லா - சைன் தீட்டா ,காஸ் தீட்டா பத்தி பாக்கப்போறோம்.


ஜொள் & லொள் மாணவன் - டீச்சர்.முதல்ல COTதீட்டா பத்தி பாப்போம்


====================

4 பாரீன் பையரை கூட்டிட்டுப்போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க்கிக்குடுங்க னு எம் டி சொன்னாரு.பெரியமாரியம்மன் கோவில் போய் கூழ் வாங்கிக்குடுத்தேன்


==================


5 தன் திறமை கூர் தீட்டப்படாமல் இருக்கும்போதும் ,அங்கீகாரம் மறுக்கப்படும்போதும் ஒரு படைப்பாளியின் நாள் துக்க தினம் ஆகும்


=================


6 பெண்கள் இருக்கும் சபையில் யாரிடமும் வழியாமல் இருக்கையில் ஒரு ஆணின் கம்பீரம் சிலாகிக்கப்படும்


===============

7 எதிரில் இருப்பது அதிர்ஷ்ட தேவதையின் வீடாக இருந்தாலும் தன்மானம் பாதிக்கப்பட்டால்் ஒரு ஏழை திறமைசாலி வாய்ப்புக்கதவை தட்டமாட்டான்


===============


8 கோபம் ,துக்கம் ,ஆற்றாமை என எந்த உணர்வாக இருந்தாலும் சூட்டோடு சூட்டாக வரி வடிவில் இறக்கி வைத்து விடுவது ஒரு படைப்பாளியின் முக்கிய குணம்

=================

9 நாகரீகம் கருதி் ஆபீசில் பலர் சின்ன டிபன் பாக்சில் கொஞ்சம் சாப்பாடு கொண்டுவர்றாங்க.நான் தலைவாழை இலையில் 10 அன்னக்கரண்டி சாப்பாடு. ீ


==================


10 FLASH NEWS - தமிழ் இனத்தலைவரின் மூத்த மகன் அழகிரி 6 வது முறையாக நிரந்தரமாக நீக்கப்பட்டார்.( 25 3 2014 )


=============


11 இன்று அழகிரி ஒபாமா வை சந்திக்க அமெரிக்கா விரைகிறார். இதனால் இந்திய அரசியலில் பெரும் மாற்றம் வரலாம்


============


12
டீ டைம்் விட்டா கால தேவனே பிரம்மிக்கும்படி 5 நிமிச கேப் ல ஹார்லிக்ஸ் ,2 பஜ்ஜி ,2 வடை ,ஒரு கேக் சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுபவன் தமிழன்


=============


13 பஸ் பயணத்தில் இளையராஜா இசை ஒலித்தால் பஸ்ஸில் உள்ள பிகர்கள் எல்லாம் ராணிகளாகவும் நாம் பிகர் உலாப்போகும் மன்னர் போலவும் தோன்றும்


============


14 கல் உப்பின் ஒரு சிறு துகள் அவள் நாசியின் அருகில் ஒட்டிக்கொண்டிருக்க பார்க்கையில் ஒற்றை வைரக்கல் மூக்குத்திப்போலே !


=============


15 முதல்இரவு அறைக்குள்ளே போற மாதிரி பொண்ணுங்க மல்லிகைப்பூ ,சம்பங்கிப்பூ ,ஜாதிமுல்லை் வெச்சுட்டு வந்தா தமிழன் எப்டிஆபீஸ்ல வேலை செய்வான்?==============


16 பஸ் ல ஒரு பிகரு கையோட கொண்டு வந்த பொட்டு அட்டைல இருந்து ஒவ்வொரு பொட்டா வெச்சுக்காட்டி இது ஓக்கேவா? னு கேட்டுிட்டிருக்கு ( என்னிடம் அல்ல.)


=============


17 காலையில் நான் பகிரும் படங்கள் தெளிவாக இருந்தால் அது வாக் கிளிக்.ஷேக் ஆகி இருந்தால் அது ஜாகிங் போய்க்கிட்டே எடுத்த ஜாக் க்ளிக் !===============


18
பிரம்மச்சாரி தன் துணிகளை மட்டும் துவைச்சாப்போதும்.சம்சாரி தன் துணையின் துணியையும் துவைக்கனும் #,சிந்திப்பீர்! செயல்படுவீர்.


=============


19 ஒரு நல்ல இசை ரசிகன் தன்னை யாராவது கொலை செய்ய வந்தாக்கூட தப்பிக்கப்பார்க்காம ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறிடானு பாட்டு பாடுவான்


================


20 முருகனுக்கு வள்ளி தெய்வானையைப்பார்க்கவே நேரம் பத்தாது.இவரைக்கனவில் வந்து கூப்ட்டாராம்.என்னய்யா கலர் கலரா ரீல் விடறீங்க?


=======================ac

0 comments: