Tuesday, April 01, 2014

பெரியார் பிறந்தது திருச்சியா? ஈரோடா? குஷ்பூ பி ஹிச் டி விளக்கம்

1. திமுக = சுத்தம் ,அதிமுக = அசுத்தம் - தமிழ் இனத்தலைவர் # பதவி ஏற்கும்போது அரசு கஜானா ல எவ்ளவ் சொத்து இருந்தாலும் சுத்தம் பண்ணிடு வார்=======================


2 திமுக தலை நிமிர்ந்து விட்டது, நேரு# அப்போ தலை குனிந்திருந்ததை ஒத்துக்கறாரா?=======================


3 மலையாளப் படங்களில் நடிக்க ரெடி: த்ரிஷா அறிவிப்பு # தமிழ் ல காட்டாத திறமையை எல்லாம் இங்கே காட்டுவார்னு எதிர்பார்க்கலாம்==========================4 எம்.பி. தேர்தலில் நடிகை ராதிகா போட்டி?- பலத்தைக் காட்ட நெல்லையில் இன்று மாநாடு நடத்தும் சரத்குமார் # புருசன்னா இப்டி இருக்கனும்


=======================5 கைவசம் படங்கள் இருப்பதால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன்: வித்யா பாலன் # ஓ! இது தான் பெரும்பாலான நடிகைகளோட கொள்கை ஆச்சே?
=====================


6  ஜெயலலிதா பிரதமராக சுதர்சன மகா யாகம்- நாகையில் அமைச்சர் ஜெயபால் # யாகம் நடத்தினா பிரதமர் ஆகிடலாம்னா யாகவா முனிவர் பிஎம் ஆகி இருக்கனுமே?


=====================7 தமிழக வளர்ச்சியை குறைத்ததே அதிமுக அரசின் சாதனை: ஸ்டாலின் தாக்கு # கழக ஆட்சியில் உச்சத்தில் இருந்த நமீதா ,மார்க்கெட் டவுன் ஆனதை சொல்றாரா?======================


8 கண்ணுக்குத் தெரியாமல் இந்தியாவில் காணாமல் போய்விட்ட பெண்களின் எண்ணிக்கை, 60 கோடி# ஜவுளிக்கடைல டேரா போட்டிருப்பாங்க


=====================


9  சூரியஒளி மின்சாரம் மூலம் ஒரே ஆண்டில் மின்வெட்டைப் போக்கலாம்' -விவசாயி சுப்புராயலு # சூரியன்? அதுக்கு புரட்சித்தலைவி ஒத்துக்க மாட்டாங்களே=====================


10 திருச்சி மாநாட்டில் 3 பேர் மாரடைப்பில் மரணம் # இதுக்குக்காரணம் குஷ்பூ உரையாத்தான் இருக்கும்.பெரியார் பிறந்தது திருச்சின்னு அள்ளிவிட்டாரே?=====================


11   இடிந்தகரை போராட்டக்காரர்களை லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க ஆம் ஆத்மி கட்சி திட்டம # ராஜ தந்திரத்தைக்கரைத்துக்குடித்திருப்பார் போலயே===========================12 சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மகளிரணித் தலைவியானார் ராதிகா # சித்தீதீதீ .தீயா வேலை செஞ்சுட்டாரு சரத் குமாரு=======================13 கல்லூரியில் படித்தபோது பகுத்தறிவு சிந்தனை உருவானது: நடிகர் சத்யராஜ் # இதுக்குத்தான் நாங்க காலேஜ் போனாலும் படிக்காம கட் அடிச்சிடறது=====================14 திருட்டு நடந்தால் 'ஆன்லைனில்' புகார் தரலாம்- டெல்லி போலீஸ் புது திட்டம் # திருடு போனதே நெட் கனெக்சன் மோடம் தானுங்க=====================15 கோச்சடையான் ரிலீஸ் தேதி 34 வது முறையாக தள்ளி வைப்பு - செய்தி # டைட்டிலயே சடை இருக்கே? ஜடைன்னாலே நீண்டுதான் இருக்கும்=====================16 ட்விட்டர் தளத்தில் இணைந்த சினேகா # நமக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை. இனி பிரசன்னா தான் ஜாக்கிரதையா இருந்துக்கனும்


=====================17 கூட்டணிக்கு பேரம் பேசும் விஜயகாந்த்- சரத்குமார் # அவராவது பேரம் பேசறாரு, நாம கால்லயே விழுந்துட்டோமே?சித்தப்பா!!


=====================


18 டெல்லியில் யாரையும் சந்திக்கவில்லை- சென்னை திரும்பிய விஜயகாந்த் பேட்டி # டெல்லி ஏர்போர்ட்ல செக்கிங்க் ஆஃபீசர் கிட்டே சண்டை போட்டீங்களாமே?===================


19  ஜெயலலிதா பிரதமரானால் ராஜபக்சேவுக்கு தண்டனை- அதிமுக கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு # அப்போ அவரு வாழ்நாள் பூரா தண்டனை இல்லாம எஸ்?


=======================


20  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை: ஸ்டாலின் # எப்டிங்க இருக்கும் ? கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு எல்லாம் நம்ம கட்சில தானே?========================

0 comments: