Tuesday, April 08, 2014

மீன ராசி அன்பர்களே!

1. திறமைசாலியின் வீட்டுக்கதவை அதிர்ஷ்ட தேவதை தேடி வந்து தட்டுவாள்.புத்திசாலி திறமைசாலியைத்தன் வீட்டில் தங்க.வைத்துக்கொள்வான்=====================


2  பசியுடன் இருக்கும் ஏழைக்கு பழைய சோறே அமிர்தம். அன்பு கொண்ட நெஞ்சம் உதிர்க்கும் கட்டளை வாக்கியம் கூட கவிதை வாக்கியம்=======================


3 மேனேஜர் ,சொந்தசம்சாரம் 2 பேரிடமும் அவங்களை விட புத்திசாலித்தனத்தில் ஒரு படி நீ கீழே இருப்பது போலவே காட்டிக்கொள்.=======================

4 தவிர்க்க இயலாத காரண்த்தால் இன்று ஆபீசில் வேலை செய்யவேண்டி இருந்ததால் ட்வீட்ஸ் போடமுடியவில்லை.அனைவரும் பொறுக்கவும்.ஸாரி.பொறுத்து அருளவும்


============================5  டெய்லி காலண்டர் ல ஷீட் கிழிக்கறமாதிரி டெய்லி டி பி மாத்திட்டு இருக்கும் புண்ணியவதிகளுக்கு அரசு வரி போட்டா ஏகப்பட்ட காசு சேரும்=======================


6 இருக்கற துக்ளியூண்டு இடமான 1 செமீ *1செமீ இடத்துலயே 7 போட்டோவை நுணுக்கி நுணுக்கி வைப்பாள் தமிழச்சி=======================

7  தனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லைன்னா எல்லோரும் அப்டித்தான் இருப்பாங்கனு நம்பி எல்லா பொண்ணுங்க கிட்டேயும் R U FREE?னு கேட்பான் தமிழன்========================


8 பொண்ணுங்க ட்வீட் போட்டா அதைப்படிச்சுப்பாக்காம லொக்கேசன் என்ன? னு பார்த்து ஏரியா எதுனு கண்டுபிடிப்பான் தமிழன்


=====================


9  நைட் மொட்டை மாடில வெச்சிருந்த செல்போன் பனி ல நனைஞ்சு ஈரம் ஆகி ஒர்க் ஆகலை.ரிப்பேர் பண்ண 500 ரூபா கேட்டான்.வெய்யில்ல காயவெச்சேன் சரி ஆகிடுச்
=======================


10 ஊரில் எல்லாக்க்குழந்தைகளுக்கும் பாடம் போட்டு குணப்படுத்தும் பள்ளிவாசல் குருக்கள் தன் குழந்தைக்குக்காய்ச்சல் வந்தால் ஹாஸ்பிடல் போவது ஏனோ?்==================


11 சின்னவயசுலஇருந்தே ஜடை பின்னிப்பின்னி சர்வீஸ்ஆன கைகள் இருப்பதால்தான் புருசன் கூட சண்டை பொடும்போது பொண்டாட்டிகளால் பின்னி எடுக்க முடியுது
====================


12  கடவுள் இருப்பது உண்மையானால் மலேசியா விமானத்திற்கு என்ன ஆச்சுனு சொல்லி இருப்பார்.ஒரு வேளை கடவுளும் அதில் பயணித்து மாட்டி இருப்பாரோ?===============


13 தேன் மொழிக்கு டி எம் அனுப்பினா எப்டி தகவல் சொல்றது? ஹாய் TM .C DM=============


14 ஏழைகளை ,மாற்றுத்திறனாளிகளை வைத்து செய்யப்ப்டும் பகடிக்கு ஆயுள் இல்லை.


============

15 நீங்கள் நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும் வசதி உள்ளவராக இருந்தாலும் அம்மா உணவகத்துக்கு வழி கேட்கும் ஏழைகளை பரிகசிக்காதீர்


============


16 பேராவூரணி டூ புதுக்கோட்டை பஸ்ல ஒரு ட்ரிப் அடிச்சா 2 லவ் உறுதி # காதல் பாட்டு ,வளைவான திருப்பங்கள்


=============

17 எல்லா பஸ்லயும் நேர்வழி னு தான் போட்டிருக்காங்க.அப்போ சுற்றுவழி ல போற பஸ்சை எப்டி அடையாளம் காண?


================

18 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு வீட்டை விட்டு வெளில போய் சினிமா பார்க்காதீங்க.திருடன் வந்து தீபாவளி கொண்டாடிவான்


==============

19 ஜி ஹெச் ல OP BLOCK = OUT PATIENT BLOCK (வெளி நோயாளிகள் பிரிவு) நல்லா ஓபி அடிக்கறாங்க .டாக்டர்ங்க.நர்ஸ்ங்க வேணா சரியா வேலை செய்யறாங்க


===================

20 What is your career path and why did you choose it?"

1 கடலை சாகுபடி 2 விவசாயம் தழைத்தோங்க :


=================

0 comments: