Sunday, April 20, 2014

அடிச்சார் பாருய்யா ஒரு அந்தர் பல்டி !!!

1. பா.ஜனதாவின் கூட்டணி வெற்றி பெறாது: திருமாவளவன்...# நடக்கும் என்பார் நடக்காது ,நடக்காது என்பார் நடந்து விடும்==============
2 தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கம்- கலைஞர்

# அடடே டெம்ப்ரவரி டிஸ்மிஸ் இப்போ பர்மனன்ட் டிஸ்மிஸ்?


============

3 9PMிக்கு மேல் மாணவர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த ஜப்பானில் தடை. # நல்ல வேளை.தமிழன் தப்பிச்சான்.அவன் 9 மணிக்கு மேலதான் அதிகம் யூஸ் பண்றான்


=================


4 தலைவர் கலைஞர் ஏப்ரல் 13 அன்று என்னை மதுரையில் சந்திக்கிறார்! - அழகிரி # ஏப்ரல் பூல் அப்டிம்பாரோ?==================


5 அண்டை மாநில ரவுடிகளுக்கு தமிழகம் புகலிடமாக உள்ளது! - பிரேமலதா # இல்லையே .உள்ளூர் ரவுடிகளுக்கே முன்னுரிமை=================
Embedded image permalink


6 அதிமுக ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது! - மு.க.ஸ்டாலின் # மலிவு விலை மளிகைக்கடை திறந்துட்டா போச்சு-ஜெ


================


7 அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்பேன்-ஞானதேசிகன்# நமீதா ஆதரவு கிடைச்சாலாவது ஏதோ மேடைக்கு எதிரே கூட்டத்தையாவது பாக்கலாம்


==================


8 மின்கட்டண உயர்வுக்கு தமிழக அரசு காரணம் அல்ல. மின்சாரவாரியம் தான் காரணம் - ஜெ # கோர்ட்ல சொந்த சைனையே இது என் சைன் இல்லைனு சொன்னவராச்சே?===============


9 மீனவர் பிரச்சினையில் மத்திய மாநில அரசுகளை இலங்கை ஏமாற்றுகிறது.-மு.க. # தலைவர் லேட் பிக்கப்னு யாரும் நினைச்சுடாதீங்க.இது் சாணக்கியத்தனம்


==================


10 2 ஊழலை ஒழிக்க நான் இருக்கிறேன் - விஜயகாந்த்.# ஒழித்தல் ,அழித்தல் ,முடித்தல் ,குடித்தல்னு எப்பவுமே நெகடிவாதான் பேசுவார் போல
=============

11 பாஜக கூட்டணியில் திமுக இருந்ததே, ஏன்? கருணாநிதிக்கு ஜெ கேள்வி: # தேவை ஏற்பட்டா ஆன்மீகவாதியுடனும் கூட்டணி உண்டு என்பதே பகுத்தறிவும்பாரோ?

=================
12 கறுப்பு பணத்தை மீட்க ஜெ பிரதமராக வேண்டும் - விந்தியா
# அறிவாலயத்தில் இருக்கும் கறுப்புப்பணத்தை மீட்க ஜெpm.போயஸ் ஸில் இருப்பதை மீட்க முக PM


==============

13 சிவகார்த்திகேயன் இனி மாதவன் பாணியைப்பின் பற்றப்போகிறார் -செய்தி #,அப்போ கமல் கூட சேர்ந்து.# அன்பே சிவகார்த்தி னு படம் பண்ணுவாரோ?

=================

14 காங்., - தி.மு.க.,விடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்:முதல்வர் ஜெ., ஆவேசம் # சக்கர இனிக்கிற சக்கர.இந்த எறும்புக்கு என்ன அக்கறை


===================


15 மக்களைச் சந்திக்கப் பயந்துவிட்டார் ப.சிதம்பரம்: பொன்.ராதாகிருஷ்ணன்: # இல்லீங்க்ளே.அவரோட மனைவி மக்களை சந்திச்சுட்டுதானே இருக்காரு?


=====================


16 பெண்களின் தற்காப்புக்குநிர்பீக் துப்பாக்கி: நிர்பயாவின் நினைவாக அறிமுகம்: # இந்த துப்பாக்கி யும் ஹிட் ஆகுதா?னு பொறுத்திருந்து பார்ப்போம்


====================


17 ராகுலை விட மோடிக்கு ஏழைகள் கஷ்டம் தெரியும் : நடிகை ஸ்ருதி # ஓஹோ! அது எப்டி உங்களுக்குத்தெரியும்?


-------------------=============


18 காங்கிரசு தனித்து விடப்பட இல்லை. மக்களுடன் கூட்டணி -EVKS# ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.கட்சிக்கு கடைசில சிக்குபவன் வாக்காளன்===================


19 தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: அழகிரி #
குடும்ப நல கோர்ட்டிலா?==================


20 காங்கிரஸ் கட்சி மனந்திருந்தினால் ஆதரிப்போம்: கருணாநிதி
# அடிச்சார் பாருய்யா ஒரு அந்தர் பல்டி !!!

===================

0 comments: