Friday, April 11, 2014

இலங்கை கடற்கரையில் அனுஷ்கா சர்மா உடன் ஜாலி... சர்ச்சையில் சிக்கிய கோஹ்லி

1. வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார் - ஆ. ராசா # தீர்ப்பை இவரே முந்திக்கிட்டு சொல்றாரே? கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகிடுச்சா?====================

2 பிரதமருடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு. # அப்பா உங்களைப்பார்த்துட்டு வரச்சொன்னார். அப்டியா? எங்கே?,அவருக்கு ஒரு போன் போடுங்க.கேட்போம்=======================


3 நடிகர் பவன்கல்யாண் புதிய கட்சி நாளை தொடங்குகிறார்..# யாரு?2 வருசத்துல 3 சம்சாரம் கட்டுன கல்யாண் பவன் புகழ் பவன் கல்யாண் தானே?


======================4 தேர்தலில் கறுப்பு பணம்: 700 அதிகாரிகள் நியமனம் # 700 பேருக்கும் செம வேட்டை தான்


=====================
5 இலங்கையில் நடந்த சண்டை தமிழர்களுக்கு எதிரானதல்ல: அதிபர் ராஜபக்சே விளக்கம் # ஆமா, ஒட்டு மொத்த மனித நேயத்துக்கே எதிரானது
=====================


6   நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் அரசியல் கட்சிகள் ரூ.30 ,000 கோடி வரையில் செலவு செய்ய தயாராக உள்ளன # சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை...


======================
மோடி பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடுகிறார்-கபில் சிபில் # நீங்க எப்டிங்க்ணா? வெற்றி வாய்ப்பே இல்லாத தொகுதியாப்பார்த்து நிப்பீகளோ===========
8 தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசம்: விஜயகாந்த் பிரச்சாரம்... # ஆமாங்க்ணா.குடிகாரப்பசங்க தண்ணி போட்டுட்டு ரவுசு பண்றாங்க்ணா

==============9 விலைவாசியை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - விகாந்த் # சரக்கு விலை எல்லாம் தாறுமாறா ஏறிடுச்சுனு சொல்ல நம் கைவசம் இருக்கும் ஒரே தலைவர்
================10 81,40,00,000 பேர் இந்தியா முழுக்க வாக்களிக்க இருக்கிறார்கள் - #" கூட்டுத்தொகை 4,வருது.4 பேர் 4 விதமாப்பேசி நாலாபக்கமும் ஓட்டு சிதறும்
================11 திமுக ஒரு மண் குதிரை - அழகிரி # அண்ணன் பொன் குதிரை ப்பா.கன்னத்தைப்பார்த்தீங்களா ? ரோஸ் பவுடர் மின்னுது!
==================
12 தனிகட்சியா? பாரதீய ஜனதாவுக்கு ஆதரவா? 16 3 14 ல் அழகிரி முடிவு # கேப்டனைப்பிடிக்கலைனு தானே அப்பாகிட்டே பைட்.? இப்போ எப்டி அதே கூட்டணி?
===================
13 ரஜினியைச் சந்தித்தார் முக அழகிரி. புதிய அரசியல் வியூகம்#,வீட்ல சும்மா இருக்க போர் அடிக்குதுனு டைம் பாஸ்.சந்திப்பு வாரம் கொண்டாடறாரோ?
===================14 அஜீத்தா, விஜய்யான்னா அஜீத் தான்: ஜனனி அய்யர் # ஓஹோ.அப்போ விஜய் யா?,அஜித் தா? ன்னா விஜய் யா?
=================15 ஆண்களுக்கு இணையாக பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும்: சோனா...#,வந்தா இணை யுடன் வாங்க.இல்லை இரை யாகிடுவீங்க
==================16 நக்மா மீரட்டில் போட்டியிடுகிறார்-காங்கிரஸ்-ன் இரண்டாவது பட்டியலில் பெயர் # உப்புமா கட்சி சார்பா நின்னா ஜக்கம்மாவே நின்னாலும் தோல்விதான்
==================17 தனித்து போட்டியிடும் வாய்ப்பு,இறைவன் கொடுத்த வரம்-ஞானதேசிகன்# டைவர்ஸ் ஆன டைட்டானிக் ஹீரோ மாதிரி புலம்பறாரே ?
===============18 லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன் -தங்கபாலு# ஜோக்கர்கள் எல்லாம் பர்பார்ம் பண்ண லோக்சபா என்ன லொள்ளு சபாவா?
===============
19 சத்ரியனாக இருந்த நான் சாணக்கியனாக மாறியுள்ளேன் -டி.ராஜேந்தர்# இது கேப்டனுக்கு வேணா மேட்ச் ஆகுது
=================20 இலங்கை கடற்கரையில் அனுஷ்கா சர்மா உடன் ஜாலி... சர்ச்சையில் சிக்கிய கோஹ்லி # கோலி தன் தோழி உடன் ஜாலி.மாலை மலர்.டைட்டில் ஐடியா


====================

0 comments: