Saturday, April 12, 2014

என்னோட பெஸ்ட் 'நான் சிகப்பு மனிதன்' : விஷால் பேட்டி

நான் சிகப்பு மனிதன்' படத்தில் தனது ஹீரோயிசத்தை காட்டாமல், எதார்த்தமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறார் நடிகர் விஷால். தனது நடிப்பிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் பெரும் உற்சாகத்தில் இருந்தவரிடம் தொலைபேசியில் உரையாடியதில் இருந்து.. 



'நான் சிகப்பு மனிதன்' படத்தில் நடித்த அனுபவம் ?

 
'நான் சிகப்பு மனிதன்' படத்தை பொருத்தவரையில், நிறைய பேர் இயக்குநர் திருவுடன் ஏன் படம் பண்றீங்க என்று கேட்டார்கள். ஆனால் எனக்கு இந்த கதை பிடித்திருந்தது, கதாபாத்திரம் பிடித்திருந்தது, மற்ற படங்கள் மாதிரியே என்னோட பெஸ்ட்டை நான் கொடுத்திருக்கேன், 


இப்படத்தில் உள்ள நார்கோலெப்சி (Narcolepsy) அப்படிங்கிற விஷயம் புதுசா இருந்தது. இப்படத்தில் நான் வொர்க் பண்ணியதை நினைக்கையில் மகிழ்ச்சி என்பதை விட பெருமையாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். இதை இன்றல்ல இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து கேட்டால் கூட சொல்லுவேன். 


வெளிநாடுகளில் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருக்கு, இப்போ எப்படி ஃபில் பண்றீங்க ?

 
மிகவும் நல்ல விஷயம் தான். இந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வந்திருக்கிறது பார்க்குறப்போ பெரிய நம்பிக்கை தருது, நிறைய வித்தியாசமான முயற்சிகள் பண்ணணும்னு புதிய உற்சாகம் கிடைக்கிறது. 


படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏதேனும் குழப்பம் இருந்ததா?

 
குழப்பம் ஏதும் இல்லை. சென்சார் தரப்பினர் மிகவும் நியாயமாக நடந்து கொண்டார்கள். படத்துடைய கதை திடமாக அமைந்ததால் அவர்கள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினார்கள், நாங்களும் மனநிறைவுடன் பெற்றுக்கொண்டோம். சென்சார் துறையினர் மிகவும் பொறுப்புடன் செயல்படுகின்றர். 


இயக்குநர் திருவுடன் மூன்று படம் பண்ணீருக்கீங்க, அடுத்தும் அவருடன் படம் பண்ணுவீங்களா ?

 
அவருடன் மூன்று இல்லை, ஐந்து, ஆறு இன்னும் எத்தனை படம் வேண்டுமானாலும் பண்ணலாம். 


இந்தி படங்களிள் ரிலீஸ் ஆகும் தேதியை படப்பிடிப்பிற்கு முன்பே அறிவிக்கிறார்கள், அதை தமிழ் சினிமாவில் நீங்களும் பின்பற்றிருக்கும் காரணம் என்ன ? இது தொடருமா?

 
நிச்சயமா தொடரும், ’பாண்டிய நாடு’ படத்திலும் சரி , ’நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் சரி ரிலீஸாகும் தேதியை படம் ஆரம்பிக்கும் முன்பே தெரிவித்திருந்தோம். அதன் படியே நடத்தியும் காட்டியிருக்கிறோம். 


இதன் காரணம் என்னவென்றால், ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பே வெளியாகும் தேதியை அறிவித்தால், மக்களுக்கும் அந்த படத்தில் வேலை பார்க்கும் கலைஞர்களுக்கும் ஒரு தெளிவு பிறக்கும். அதுவே படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். 


’பூஜை’ படத்தின் படப்பிடிப்பு எப்போ தொடங்குது? எப்போ ரீலிஸ் ?

 
’பூஜை’ படத்தின் போட்டோ ஷூட் முடிந்துவிட்டது. ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி ஷூட் ஆரம்பிக்கிறது. தீபாவளிக்கு ரீலிஸ் ஆகும். 


த இந்து -நன்றி

0 comments: