Wednesday, April 02, 2014

நயன்தாரா,சோனாக்ஷி சின்ஹா களவாடிய பொழுதுகள் - பிரபு தேவா.பேட்டி

‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படப்பிடிப்பில் அஜய்தேவ்கன், பிரபுதேவா
‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படப்பிடிப்பில் அஜய்தேவ்கன், பிரபுதேவா
பாலிவுட் சினிமாவில் தொடரும் வெற்றிகளால் தமிழில் படம் இயக்க ஆசை இருந்தும் மீண்டு வர முடியாமல் இருக்கிறார், பிரபு தேவா. பாலிவுட்டின் மோஸ்ட் வான்டேட் இயக்குநராக பரபரப்பின் உச்சத்தில் இருந்தாலும் மகன்களின் நினைவு கண்களில் திரையோடினால் உடனே சென்னைக்குப் பறந்து வந்துவிடுகிற தகப்பனாகவும் இருக்கிறார். அப்படிச் சென்னைக்கு வந்தபோது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து….

ஸ்பைடர்மேன் மாதிரி ஒரு படம் எடுக்கணும்: பிரபுதேவாமுழுக்க நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கத் திட்டமிட்ட உங்கள் படம் என்னாச்சு?


எனக்கும் ஆசைதான். தொடர்ந்து என்னிடம் ஆக் ஷன் படத்தையே எதிர்பார்க்கிறார்கள். நான் இயக்கும் ஆக் ஷன் படங்கள் நல்ல ரிசல்ட் தருவதால் அதையே எதிர்பார்க்கிறார்கள். டான்ஸ் படம் ரொம்பவே சுவாரஸ்யமா செய்யணும். உடன் பணியாற்ற அற்புதமான டான்ஸர் வேணும். அதை முழுமையாகக் கொண்டாடும் ஹீரோ, ஹீரோயின் வேண்டும். தயாரிப்பாளர் நடனத்தைக் காதலிப்பவராக இருக்க வேண்டும். எல்லாம் அமைந்தால் நானும் தயார்.‘ஆர். ராஜ்குமார்' படத்துக்கு ஆஸ்கர் லைப்ரரியில் இடம், மீண்டும் அக்ஷய் குமாரோடு புதிய படம், ஏ.பி.சி.டி. பார்ட் 2 என்று உங்கள் பாலிவுட் கேரியர் பிரகாசமாக நகர்கிறதே?


தமிழ் உள்பட தென்னிந்தியப் படங்களில் சின்ன வயதிலேயே கேரியரைத் தொடங்கியாச்சு. நிறைய சினிமா நண்பர்கள் சந்திப்பு, நட்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவம் கிடைத்தது. புதிதாக யாரையும் பார்க்கவில்லை. அனுபவமும், பக்குவமும்தான் பாலிவுட்டில் பயணிக்க உற்சாகத்தையும், உந்து சக்தியையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏ.பி.சி.டி. பார்ட் 2 ஜூலையில் ஷூட்டிங் ஆரம்பம்.


 மும்பை, அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் நகரங்களில் 2 மாதம் படப்பிடிப்பு இருக்கும். உலக அளவிலான டான்ஸர். முழுக்க 3 டி படம். உண்மைக் கதை. ஒரு நடிகனாக என்னை ஒப்படைக்கப்போகிறேன். திரில்லான அனுபவமாக அமையும்.


‘ஆர்… ராஜ்குமார்' திரைப்படம் ‘ஆஸ்கர் லைப்ரரி' வரைக்கும் போயிருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு.


‘ரவுடி ரதோர்' வெற்றி விழாவில் அக்ஷய் குமாருக்கு விருது கொடுக்கும்போது, படத்தில் சிரிப்பு, கோபம், நடிப்பு எல்லாவற்றிகும் பிரபு தேவாதான் காரணம் என்று பாராட்டை என் பக்கம் திருப்பிவிட்டுவிட்டுப் போகிறார். ‘ஆக் ஷன் ஜாக்ஸன்' படத்தோட இறுதி கட்ட வேலைகள் மட்டும் இருக்கிறது. அக் ஷய் குமாரின் அடுத்த படப் பணிகளைத் தொடங்கிட்டேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சைஃப் அலி கான் படம். கதையை முழுமையாகக் கேட்காமலே அவர் ஆர்வத்தோடு இருக்கார். இப்படி எல்லோரும் என்மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். பொறுப்பும், பயமும்தான் அதிகரிக்கிறது. எல்லா நல்லதுக்கும் கடவுள் ஆசீர்வாதம்தான் காரணம்.தமிழ்ப் படங்கள் பற்றி…


இங்கே கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய மாற்றமே நடந்திருக்கு. புதியவர்கள் படு திறமைசாலிகளா கலக்கிட்டிருக்காங்க. இவங்களோட போட்டிபோட முடியுமா என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கு.


குழந்தைகள் என்ன படிக்கிறாங்க?


எல்லா அப்பா, அம்மாவுக்கும் அவங்களோட குழந்தைங்கதானே அல்டிமேட். எனக்கும் அப்படித்தான். பெரியவன் வர்ற வருஷம் சிக்ஸ்த் போகிறான். சின்னவன் செகண்ட் ஸ்டாண்டர்ட். டிராயிங், கேம், ஸ்போட்ர்ஸுன்னு வளர்ந்து வர்றாங்க. அவங்களோட எதிர்கால ஆசை என்னன்னுகூட கேட்க வேண்டாம்னு இருக்கேன். அவங்களுக்கு என்னல்லாம் பிடிக்குதோ, அதையெல்லாம் செய்யட்டும்.உங்களோட கனவுப் படம்?


'தி லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்', 'ஸ்பைடர்மேன்' மாதிரியான ஒரு படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி இதில் எதுவாக அமைந்தாலும் ஓ.கே. கடவுள்தான் அந்த வாய்ப்பைக் கொடுக்கணும்.நயன்தாராவுடன் சிம்பு சேர்ந்துட்டாரே. நீங்களும் ஏன் ஒரு படத்தில் ஜோடி சேரக் கூடாது?


(சிரிப்புடன்) நம்ம பயணமே இப்போ வேற. முழுக்க மும்பைவாசியாகவே ஆனதால் இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போச்சு. நீங்க சொல்லித்தான் இருவரும் இணைந்து நடிக்கும் விஷயமே எனக்குத் தெரிகிறது. சென்னையில் இருக்கும்போதே இப்படியான விஷயங்களை எல்லாம் ஃபாலோ செய்ய மாட்டேன். காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 1 மணி வரை வேலைகள். போக்குவரத்து டிராபிக் நேரத்தைக்கூட சினிமா குறித்து பேசும் நேரமாக மாற்றிக்கொண்டு திரிகிறேன். இப்படியான பிஸியில் இதெல்லாம். அவசியமே இல்லைனு நினைக்கிறேன்.தொடர்ந்து உங்க படத்தில் சோனாக்ஷி சின்ஹா இடம் பிடித்துவிடுகிறாரே?


அதற்கு தனி காரணம் எதுவும் இல்லை. என்னோட படங்களில் மிடில் டவுன், வில்லேஜ் லுக் அதிகம் இருக்கும். அதற்கு ஆப்டான நடிகையாக அவங்க பொருந்துவாங்க. இந்தியன் லுக், நல்ல ஆக்டிங் இதெல்லாம்தான் காரணம்.


‘களவாடிய பொழுதுகள்' திரைப்படம் என்னாச்சு?


அழகான காதல் படம். கண்டிப்பா ரிலீஸாகணும் ஆசையா இருக்கேன். தங்கர் எந்த மாதிரியான டென்ஷன்ல இருக்கார்னு தெரியலை. அதனால்தான் அவரிடம் பேசவும் இல்லை. என்னோட டிராவல்ல புதிதாக அமைந்த படம். கண்டிப்பா வரும்.


THANX - THE HINDU

0 comments: