Monday, April 21, 2014

இளைய தளபதியின் கத்தி படத்தால் எனக்கு ரூ 1 லட்சம் நட்டம் , எப்படி?

1.எதிரியிடம் இரந்து நிற்க வேண்டிய நிலை வந்தால் அதுவே உயிருடன் இருக்கும்போதே நாம் இறந்து நிற்கும் நிலை==========2 உன் புறக்கணிப்புகள் எல்லாம் என்னை பலம் ஆக்குகிறதா?,பலவீனம் ஆக்குகிறதா? என்பதைக்கண்டு பிடிக்கமுடியாத பலவீன நிலையில் நான்
===================
3 நாம் நடந்ததை நினைத்துப்பார்த்தால் இன்பம்.நாம் நினைப்பது நடந்தால் பேரின்பம்

===============
4 நம் உள்ளங்கைகள் இணைந்த போது காதல் ரேகைகள் தங்களுக்குள் 10 பொருத்தமும் பொருந்தியிருப்பதைக்கண்டுகொண்டன
=================
5 டி எம் அனுப்பி பொண்ணு கிட்டே இருந்து பதில் வர்லைன்னா நீங்க பேக் ஐடியா? னு புத்திசாலிதனமா பிளேட்டைத்திருப்பிப்போடுவான் தமிழன்
==============
6 மயிலே மயிலே இறகு போடுன்னா மயில் உடனே நம்ம பேச்சைக்கேட்க நம்ம சம்சாரமா?
=============
7

இன்று உச்சத்தில் இருக்கும் எல்லோருமே ஒரு காலத்தில் குப்பை என யாரோ ஒருவரால் நிராகரிக்கப்பட்டவராய்த்தான் இருப்பார்.==============
8நாம் போகும் பாதை எல்லாம் எதிரிகள் நிறைந்திருந்தால் அவர்களை வீழ்த்திக்கொண்டிருப்பதை விட ஒதுங்கிப்போவது விரைவான முன்னேற்றத்துக்கு நல்லது

=================
9 அபிமான நடிகரை கலாய்க்கும் சாதாரண கிண்டல்களை உங்களால் ரசிக்கமுடியவில்லை ,கோபம் வருகிறது எனில் உங்கள்ரசனை அபாயகட்டத்தில் என அறிக !
=============
10 ஒரு பெண்ணை நீ பகைத்துக்கொள்வது 1000 ஆண்களைப்பகைத்துக்கொள்வதற்குச்சமம்
=============
11 ஒரு மணி நேரத்துக்கு ஒரு டீ குடிச்சு தன் சுறுசுறுப்பை ஆக்டிவேட் செய்து கொள்வான் தமிழன்
==============
12 காலைல ஏன் லேட்டா எந்திரிக்கறே? னு கேட்டா உங்களால தான் லேட் னு மடக்குது சம்சாரம்

=============
13 கத்தி விஜய் பஞ்ச் டயலாக் - என் கைல கத்தி இல்லை .ஆனா என் மூளை ல புத்தி இருக்கு.அது கத்தியை விடக்கூர்மையா இருக்கும்
=============
14 நீறு பூத்த நெருப்பாய் உன் கோபங்களை எல்லாம் எப்படி உள்ளுக்குள் சேமித்து வைப்பது என்பதை பெண்களிடமிருந்து கற்றுக்கொள்
==================
15 இந்த வருசம் எனக்கு இன் க்ரீமென்ட் கட்டாம்.டேமேஜரோட சம்சாரத்தோட 1 விட்ட 4 வது தங்கச்சி விஜய் ரசிகையாம்.கத்தி யை கலாய்ச்சுட்டேனாம்
=============
16 ஆபீஸ் ல லஞ்ச்.13 பேர் டிபன் பாக்சில் ஷேர் .ஊர் ல ஒரு பய வீட்லயும் ரசத்துல உப்பு சரியாப்போடலை.நல்ல வேளை.நம்ம சம்சாரம் எவ்வளவோ தேவலை ;-))
================
17 சும்மா வணக்கம் வெச்சா பசங்க உடனே ஓடி வந்து சாப்டாச்சா?னு கேட்கறாங்கனு இப்பவெல்லாம் பொண்ணுங்க உஷாரா "சாப்டேன் வணக்கம்;))" ங்கறாங்க
================
18 பஸ் ல ஒரு பொண்ணு அவசரமா ஓடி வந்து ஏறி ஹேன்ட் பேக் ல இருந்து தாலிச்செயினை போட்டுக்குது # தமிழர் பண்பாடு காத்த தமிழச்சி வாழ்க!=================


19 ஏம்மா ! பஸ் ல ஏறுனதும் ஆளாளுக்கு செல் போன் ல வீடியோகேம்ஸ் ஆடிட்டிருந்தா தமிழன் எப்படி சைட் அடிப்பான் ? :-((


====================

20 டவுன் பஸ்சில் முன் பாதி சொர்க்கம் ,பின் பாதி நரகம்


========================


0 comments: