Wednesday, April 23, 2014

காமெடி டிராமா

1. நான் பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை - திருமாவளவன் # பணத்துக்காகத்தான் ,பணம் சம்பாதிக்கத்தான் போட்டி இடறார் போல=================\\\2 சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்! - கார்த்திக் # லட்சிய திராவிட முன்னேற்றக்கழகத்தலைவர் டி ஆர் உடனா?"அவர் கட்சியைக்கலைச்ட்டாரே?
==================
3 ஜெ.வின் பொய் பித்தலாட்டத்துக்கு் மக்கள்் ஏமாறமாட்டார்கள்: கருணாநிதி # உங்க கிட்டயும் ஏமாந்தாச்சு.இனி புதுசா யார் கிட்டேயாவது தான் ஏமாறனும்
==============================
4 மான் கராத்தே’ படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட்: இயக்குநருக்கு பாராட்டு # ஹன்சிகா.வுக்கு அப்போ படத்துல திறமை காட்ட வாய்ப்பே தர்ல போல
=================5 மதுரையில் மு.க. அழகிரியை விமர்சிக்காமல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெ # அதிமுக கிரி ஆகிடுவார்னு நினைக்கறாரோ?

====================
6 காங். ஆதரவு- கருணாநிதி முன்பே சொல்லியிருந்தால் அரசியல் களம் மாறியிருக்கும்: ப.சிதம்பரம் # மாறி இருக்காது.இன்னும் அதிகமா நாறி இருக்கும்
==================
7 கோச்சடையான் ரொம்ப கஷ்டமான படம்.எடுக்க எல்லாராலும் முடியாது -,ஷ்ங்கர் # தியேட்டர் காரங்க கூட் கஷ்டம்னு தான் சொன்னாங்க
=================
8 அதிமுகவிற்கு ஆதரவு , தேர்தலுக்கு பிறகு பாஜகவோடு கூட்டணி வைத்தால் எதிர்ப்போம் - சீமான் # வீட்ல கதவை சாத்திக்கிட்டு சத்தம் இல்லாம மவுனமா?
===================
9 தியேட்டர்ல படம் பாத்துக்கிட்டே படம் நல்லாலை னு SMS பண்ணாதீங்க - சரத்குமார் # சுருக்கமா டப்பா னு SMS பண்லாமா?

====================
10 சவுந்தர்யா ஆக்சன் னு சொன்னதும் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு - ரஜினி # படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க தலைவா! ஊரே சந்தோஷ்மா ரசிச்சு சிரிக்கும்
====================
11 அச்சம் என்பது மடமையடா என்ற பாடலை ஜெ பாட வேண்டாம்: ப.சிதம்பரம்# என் கிட்டே மோதாதே பாடச்சொல்லிடலாமா பாஸ்?
=======================
12 மு.க.அழகிரியின் பிரச்சனை 14 ந்் தேதிக்குள் சரியாகிவிடும் - SVசேகர் # சென்னை டூ சேலம்320 கிமீ.5 மணி நேரத்துல போய்டலாமே? எதுக்கு 16 நாள்?

=======================
13 20 மணி நேரம் மின்வெட்டு தரும்் இந்த அரசுக்கு என்ன தண்டனை தரப்போகிறீர்கள்-ஸ்டாலின்: # இன்னாசெய்தாரை மன்னிக்க னு அண்ணா வே சொல்லி இருக்கார்

======================
14 இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது-வாசன்# இப்போ நீங்க காங்கிரசா?பிஜேபியா?குழப்பமா இருக்கு

======================
15 மோடி பிரதமர் பதவிக்கு 'அலை'வது தெரிகிறது, 'அலை' வீசுவதாக தெரியவில்லை'': தா.பாண்டியன்" # யார் என்ன சொன்னாலும் அலை கள் ஓய்வதில்லை
=====================16 தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்படும்! - ப.சிதம்பரம் # காங்கிரஸ் வேட்பாளர்கள் எல்லாருமே டெபாசிட் வாங்கிடுவாங்க்ளோ?

======================
17 எஸ்.வி.சேகர் மு.க.அழ்கிரியை சந்தித்தார்! # 2 பேரும் காமெடி டிராமா நல்லா பண்ணுவாங்க
====================
18 அதிமுக கட்சி கேப்டன் இல்லாத கட்சியாக உள்ளது! - ஜி.கே.வாசன் #கேப்டன் உள்ள கட்சி தேமுதிக மட்டுமே! எங்களுக்கு போயஸில் கிளைகள் கிடையாது

==================
19 எனக்கு சீட் தராமல் கள்ளாட்டம் ஆடி விட்டனர் -- விஜயதாரணி!! # அடுத்த எலக்சன் வர்றக்குள்ளே தாரணி னு கெஜட் ல மாத்திடுங்க.சீட் உண்டு
==================
20 என் மகனை டெல்லிக்கு அனுப்புங்கள்-ப.சிதம்பரம் # அப்பா நீங்க தான் அனுப்பனும்.பிளைட் டிக்கெட் எடுத்து அனுப்பிடுங்க========================

0 comments: