Tuesday, April 22, 2014

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தார் கலைஞர்: லட்சிய திமுக நிறுவனர் - தலைவர் டி.ராஜேந்தர் பேட்டி

இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண் டிருக்கும் சூழலில், திமுக-வுக்கு எதி ராக சங்கநாதம் எழுப்பி இருக்கிறார் லட்சிய திமுக நிறுவனர் - தலைவர் டி.ராஜேந்தர். அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்பு பேட்டி.


திமுக தேர்தல் பிரச்சாரத்துக்காக தானே உங்களை அழைத்தார் கருணாநிதி.. இடையில் என்ன நடந்தது?திமுக-வில் உட்கட்சி பூசல் பூதாகரமாய் நிற்கிறது. ஒரு தலைவ ரோட பிள்ளை தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த வரே திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறார். ஸ்டாலின் பிரச்சாரத்தை தவிர திமுக தரப்பில் மற்ற யாரு டைய பிரச்சாரத்தையும் தொலைக் காட்சியில் காட்டுவதில்லை. திமுக-வினருக்கே இந்த நிலை என்றால் நான் எல்லாம் எம்மாத்திரம்?டி.ராஜேந்தரை விட்டிருந்தால், எதிர் அணியில் அழைத்து எம்.பி. சீட் கொடுத்திருப்பார்கள் என்றும் மேடையில் ஏறி தலைமுடியை கோதியிருப்பார்… களத்தில் இறங்கி மோதியிருப்பார் என்றும் நினைத்திருப்பார்கள். அதற்கு பயந்துதான் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தார் கலைஞர். திமுக-வின் பிரச்சாரத்தை பலப்படுத்த என்னை அழைத்த அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிர். அது எல்லாமும் எனக்கு தெரியும். அதைப்பற்றி தற்போது விமர்சிக்க வேண்டாம்.இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் அதிமுக- வுக்கு ஆதரவாக இருந்திருப் பீர்களா?இனிமேல், யார் கேட்பார்கள், அழைப்பார்கள் என்கிற கற்பனை கனவுகளை எல்லாம் வளர்த்துக் கொண்டு இருக்க போவதில்லை. ஏற்கெனவே இரண்டு முறை அதிமுக-விற்காக பிரச்சாரம் செய் தேன். காஞ்சிபுரம், கும்மிடிப் பூண்டி, புதுக்கோட்டை இடைத் தேர் தல்களில் முதல்வர் அழைத்ததால் பிரச்சாரம் செய்தேன். அதிமுக வெற்றி பெற்றது. அப்போதே எவ் வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவன். இப்போதா மாறப்போ கிறேன்?பிரச்சார அலை ஓயும் இந்த நேரத் தில் திடீரென திமுக-வை எதிர்த்து அறிக்கை வெளியிடக் காரணம்?
’திமுக-வுக்கு ஆதரவான அலையை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது’ என்கிறார் கலை ஞர். அது என் மனதை ரொம்பவே புண்படுத்தியது. ஒருவேளை காலம் கனிந்து, எதிர் அணியில் நின்று நான் களமாடியிருந்தால் கலைஞரால் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்க முடியுமா? அதனால்தான் நான் இப்போது பேச வேண்டி இருக்கிறது. விஜயகாந்த்துக்கு பின்னால் அலைந்த கலைஞர் ஏன் என்னை கூப்பிட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி.
ஸ்டாலின்தான் உங்களை புறம் தள்ளினாரா?அவரை பற்றி பேச எதுவும் இல்லை. அவரை பொருட்டாக நினைக்கவும் இல்லை. என்னிடம் திறமை இருக்கிறது. நான் என்னு டைய தந்தை பெயரை சொல்லிக் கொண்டு நிற்கவில்லை. எத்தனை கலைஞர் என்னை கைவிட்டாலும், கடவுள் துணையோடு என் பயணத்தைத் தொடருவேன். • இவருக்கு இந்த முறை கை செலவுக்கு காசு கிட்டைகவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது
  2 minutes ago ·   (0) ·   (0) ·  reply (0)
  •  SHAN  
   dmk க்கு ஸ்டாலின்,அழகிரி,கனிமொழி ஒப்புக்கு குஷ்பு என ஒரு கிராமமே உள்ளது.குத்துதே குடையுதே என இவரையெல்லாம் சேர்த்துக்கொண்டு ஆட்டம் ஆட ஸ்டாலின் தயாரயில்லை.இவருக்கு பொருத்தமான கட்சி IJK தான்.அங்கே கொபசெ post காலியாக உள்ளது
   about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
   • தி மு க பிரைவேட் லிமிடெட் கம்பெனியில் இருக்கும் திறமை வாய்ந்த ஆட்களை அவர்கள் பிரகாசிக்க விடாமல் வெளியேற்றும் செயல் கலைஞர் காலத்திலேயே தொடங்கி விட்டது. ஸ்டாலின் அதை தொடருகிறார் ! எம் .ஜி .ஆர் ., வைகோ ., பரிதி இளம்வழுதி பட்டியலில் வுள்ளே வெளியே விளையாட்டில் டி .ராஜேந்தர் . இப்படியே போனால் தி மு க பெட்டிகடையாக சுருங்கி விடும் !
    about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
    •  Sundaram  from Salem
     ராஜேந்தர், வைகோ, நெடுமாறன், சீமான், தமிழருவி போன்றோர் ஆற்றல் இருந்தும், வீணாகி கொண்டு இருகிறார்கள் .தெளிவான சிந்தனை இல்லை .கொக்கரிக்கும் குணம் மட்டும் போதாது .சுட்ச்ச்சமம்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்கள் எவரிடுமும் இல்லை .நல்ல உள்ளங்கால் .ஆனால் தான் என்ற மமதை ,ஆகங்காரம் இவர்களை பின்னுக்கு தள்ளுகிறது .ராதிகா ராஜேந்தர் இவ்விருவர் மட்டுமே எம். ஜி .ஆர் ஈக்கு ஈடு கொடுத்து திமுகவை தூக்கி நிறுத்தியவர்கள் .வல்லமை உள்ளவர்கள். பாவம் மேல குறிப்பிட்டுள்ள ஐந்து பேருக்குமே அதிர்ஷ்டதேவதை அருள் இல்லை .இவர்கள் மர்ற்றவர்களை தூக்கி நிறுத்த கூடியவர்கள் .ஆனால் இவர்களை தூக்கி நிருதத எவரும் இல்லை .ஆரூடம் கூறுவதானால், இவர்களுக்கு இந்நிலை தொடரவே செய்யும் .தமிழ்நாட்டில் தேசியம் வளர உதவ வேண்டும். திராவிட கட்சிகள் யாவும், குடும்ப கட்சிகள் ஆகிவிட்டன. இவர்களிடமிரிந்து ஒதுங்கி கொண்டு தேசிய கட்சிகளில் சேர்ந்து தமிழ் உணர்வுடன் பணியை தொடரலாம் சுந்தரம்

    thanx - the hindu

    1 comments:

    Unknown said...

    வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்