Thursday, April 03, 2014

‘தெனாலிராமன்’ - ஒரு ‘கிங்’கா வரணும்னு ஆசைப்பட்டேன்!: - வடிவேலு

a

ஒரு ‘கிங்’கா வரணும்னு ஆசைப்பட்டேன்!: வடிவேலு


பல மாதங்களுக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் தயாராகியிருக்கிறது ‘தெனாலிராமன்’. வடிவேலுவுடன் மீனாட்சி தீட்சித், ராதாரவி, மனோபாலா மற்றும் பலர் நடிக்க, யுவராஜ் தயாளன் இயக்கி இருக்கிறார். இமான் இசையமைத்து இருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.


ஏப்ரல் 18ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்றது. பல மாதங்கள் கழித்து வடிவேலு நடிப்பில் படம் வெளியாக இருப்பதாலும், தேர்தல் நேரத்தில் பத்திரிகையாளர்களை வடிவேலு சந்திப்பதாலும் அரங்கு நிரம்பி வழிந்தது.


படத்தின் இசையை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் வெளியிட வடிவேலு பெற்றுக் கொண்டார். அவ்விழாவில் வடிவேலு பேசியது:


"“என்ன பார்க்கறீங்கன்னு தெரியுது எனக்கு…தேவையா உனக்கு? ஏன்யா…? அதானே.!


நானா எடுத்துக்கிட்ட முடிவு கிடையாது. காலத்தின் கட்டாயம். இந்த இரண்டு, இரண்டரை வருஷம், எனக்கு நல்ல ஓய்வு கிடைச்சது. பயங்கர மகிழ்ச்சி, அதுல எனக்கு எந்த வேதனையும் கிடையாது.அந்த நேரங்கள்ல எனக்கு நிறைய படங்களும் வந்துச்சி. அந்த படங்களையெல்லாம் நான்தான் வேண்டாம்னு அவாய்ட் பண்ணினேன். காரணம் என்னன்னா, இனிமேல் நடிச்சி வர படம் ஒரு ‘கிங்’கா வரணும்னு ஆசைப்பட்டேன். அதான் இந்த ‘தெனாலிராமன்’.


ஒவ்வொரு வீட்டுலயும் நான் ரேஷன் கார்டுலதான் இல்லன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். உங்க வீட்டுல நானும் ஒருத்தங்கறத, இந்த இரண்டு வருஷ கேப்புல உணர்ந்தேன்.எனக்கு படம் நடிக்கக் கொடுக்கிறதுக்கு பாதி பேர் யோசிச்சாங்க. ஏதாவது பிரச்சினை ஆயிடுமோன்னு பயந்தாங்க. இங்க இல்லாம, மலையாளம், தெலுங்கு படங்கள்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படியே போய் நடிச்சிருந்தால், இங்க வடிவேலுவுக்கு மார்க்கெட் முடிஞ்சி போச்சி, அதான் ஊரை விட்டு காலி பண்ணிட்டு போயிட்டான்னு ஒரு வார்த்தை வந்துடும், அதனாலதான் அங்கலாம் போயி நடிக்கலை.


இந்த படத்தோட கதையை டைரக்டர் யுவராஜ் வந்து சொன்னாரு, புலிகேசி படத்துக்கப்புறமா நான் ரொம்ப நாள் எதிர்பார்த்துட்டிருந்த ஒரு கதை. யுவராஜ்தான் அகோரம் சார் தயாரிக்க ரெடியா இருக்காருன்னு சொன்னாரு. இருந்தாலும் அவர் கிட்ட போய் சிலர் பயமுறுத்தியிருக்காங்க. மெசேஜ்லாம் போயிருக்கு. இன்னும் ஏன் வாடகை சைக்கிள்லாம் எடுத்துக்கிட்டு போய் அவர் வாசல் முன்னாடி கதறி அழுதிருக்காங்க. மோசம் போயிட்டீங்களே…ன்னு சொல்லியிருக்காங்க.


ஆனால் அவரோ, வடிவேலு என்ன தப்பு பண்ணியிருக்காரு? என்ன பெரிய குத்தம் பண்ணாரு? என்னமோ போனாரு வந்தாரு. அங்கயும் போயி காமெடிதானயா பண்ணியிருக்காருன்னு சொல்லியிருக்கறாரு. நான் பண்ண காமெடியத்தான் இப்ப வெளியில பண்ணிக்கிட்டிருக்காங்க.அகோரம் சார், அண்ணண் தம்பி மூணு பேரையும் நான் கடவுளாத்தான் பார்க்கிறேன். அவங்கள கையெடுத்து கும்புடறேன். இந்த படத்துல சும்மாவே நடிக்கிறேன், பணமே வேணாம்னு சொல்ற அளவுக்கு போயிட்டேன். ரொம்ப அற்புதமான படத்துல ஒரு கேப் விட்டு நடிச்சது சந்தோஷமா இருக்கு.


ஹீரோயின் மீனாட்சி தீட்சித்த பாருங்க. என் ஜோடி. அந்த பொண்ணு மேடைக்கு வந்ததும், நான் யார் தெரியுதான்னு கேட்டேன், இதாம்மா என் சொந்த உருவம்னு சொன்னேன். மீனாட்சி என் சொந்த உருவத்தை பார்த்ததே கிடையாது. ஷுட்டிங் நேரத்துல காட்டிடக் கூடாதுடா….ன்னு சொல்லிக்கிட்டிருப்பேன். இல்லன்னா, கெடுத்து உட்டுடுவாங்க. முதல்ல அஞ்சாறு ஹீரோயினிய செலக்ட் பண்ணால், மெசேஜா அனுப்புறாங்க. வேண்டாம்….வடிவேலு கூட நடிச்ச, எந்த ஹீரோ கூடவும் நடிக்க மாட்டன்னு..சொல்லி, இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்பியிருக்காங்க.

டைரக்டர் ஒவ்வொரு பொண்ணா கூட்டிட்டு வருவாரு, அவங்க டிக்கட் போட்டு அனுப்பி வச்சிடுவாங்க. கடைசியில மீனாட்சி தீட்சித் நடிக்க ஒத்துக்கிட்டாங்க. என்னைய பாருங்க , அவங்கள பாருங்க, தக்காளி பழத்துல தார் ஊத்தின மாதிரி இருக்கு. ஷுட்டிங்ல கெட்டப்போடதான் போய் அவங்க முன்னாடி நிக்கிறது. டேய், அந்த புள்ள வந்திருக்கா பாருன்னு கேட்டுட்டு, டக்குன்னு கேரவன் உள்ள போயிட்டு மேக்கப்பை போட்டுட்டு வந்து ஸ்டைலா நிக்கிறது. ஏன்னா, கெடுத்து விட்டுருவாங்களே..ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடுது…எந்த நேரம்னே தெரியாது. நிம்மதியே இல்லை.ஷுட்டிங் நடந்துக்கிட்டிருக்கும் போதே, செட்டை பிரிச்சால், யூனிட்டே பிரிஞ்சி போச்சின்னு எழுதறாங்க. அண்ணே போச்சாம்ணே…எல்லாம் போச்சாம்ணே…ன்னு சந்தோஷமா சொல்லிட்டு, நிம்மதியா தூங்கலாம்பான்றாங்க…என்ன செய்யச் சொல்றீங்க…ஆனால், புரொடியூசர் அசரலை…


ஆரூர்தாஸ் ஐயா, இந்த படத்துல வசனங்களை அள்ளித் தீட்டியிருக்கிறாரு. இந்த படத்துல அவருடைய உழைப்பும் கடுமையான உழைப்பு.


ஆக, ஒரு அருமையான படத்துல நடிச்சிருக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்து, மறுபடியும் நம்ம வண்டிய ஸ்டார்ட் பண்ணி விட்ட, அகோரம் அவர்களுக்கும், உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இந்த படம் உங்க ஆசீர்வாதத்தால, அன்பால பெரிய வெற்றி பெறணும்னு கேட்டுக்கிறேன்.” என பேசினார்.

a


 •  வி. Murugan  
  போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் எல்லாம் இறைவனுக்கு. திரு கவுண்டமணிக்கும் இதுபோல இடைவெளி ஏற்பட்டதுண்டு. மீண்டும் சிலிர்த்தெழுந்தார். தமிழ் திரைப்படத்துறையையே தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதுபோல தாங்களும் இனி திரைத்துறையில் மட்டும் கவனம் செலுத்தி மீண்டும் பல பரிமாணங்களை காட்ட வேண்டும்.
  about 3 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
  •  tamil  
   பெரியவக வீட்டு தகராறுக்கு எதுக்கு வீணா போகணும் இப்ப கதறனும் /////ஆளானப்பட்ட சிவாஜியே ஆன்ண்டியாக்கீனானக
   about 3 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
   •  சரவணன் சுதந்திரன்  
    ஒங்க பங்குக்கு ஒண்ணுரெண்டு வத்திக்குச்சி போட்டுருக்கீங்க.."கிங்கா" வரணும்னு நெனச்சன்னு தலைப்பு வேற.. விடமாட்டீங்க போலிருக்கு..!

   0 comments: