Thursday, April 17, 2014

LSS KISS - பொண்ணுங்க மட்டும் ஏன் ப்ளெயின் ஜாக்கெட் போடறாங்க?

1. கோவில் உள்ளே கேமரா அனுமதி இல்லைங்கறாங்க.ஆனா சன் டி வி மட்டும் வீடியோ கேமராவோட பிரகாரத்துக்குள்ளேயே போய் சாமிக்கே க்ளோசப் ஷாட் வைக்குது


===============


2 வாடி என் கப்பக்கிழங்கே பாட்டுக்கு லிப்ஸ்டிக் உதட்டழகி (!!) கலா மாஸ்டர் நடனமாட இருப்பதால் இதய பல்கீனத்தார் மானாட மயிலாட வைத்தவிர்க்கவும் ( 23 3 14 )


=================


3 சில்லுனு ஒரு காதல் இயக்குநரின் அடுத்த படைப்பு நெடுஞ்சாலை திரைக்கதையில் சுவராஸ்யம் இருக்கும் என்பது மேலோட்டமான ட்ரெய்லரில் தெரிகிறது=================4 நாம் அனைவரும் நம்மிடம் உள்ள அனைத்து நல்ல குணங்களையும் நம் பெற்றோரிடம் இருந்து பெற்றோரே!


===============


5 படையப்பா வில் இருந்து நான் கற்றுக்கொண்டது - எதித்த மாதிரி டக்கர் பிகருங்க 2 பேர் இருந்தாலும் கண்டுக்காம பாம்புக்கோ தேளுக்கோ கிஸ் தரனும்=================


6 என்னதான் உலகம் மாடர்னா மாறினாலும் பட்டன் காளான் ஜிப் காளான் ஆகாது


=================


7 LSS KISS = யார் நிறுத்தச்சொன்னாலும் கடமையே கண்ணாக உதட்டை விடாம பிடித்துக்கொள்வது


==================


8  ஆபீஸ் ல பொண்ணுங்க எந்த சேலை கட்டிட்டு வந்தாலும் இது உங்களுக்கு எடுப்பா இருக்குங்கனு அள்ளி விட்டு நமக்கு கடுப்பை ஏற்படுத்தறாங்க====================


9 செக்டு சர்ட் ,கோடு போட்டது ,பூ போட்டதுன்னு பல டிசைன் ல பசங்க சட்டை போட்டாலும் பொண்ணுங்க மட்டும் ஏன் ப்ளெயின் ஜாக்கெட் போடறாங்க?==================


10 தன் மனதுக்குப்பிடித்த பெண்ணை அழவைக்க எந்த ஆணும் நினைத்ததே இல்லை.தனக்கு சொந்தமான ஆணை ஒரு முறையாவது அழ வைக்காத பெண் இல்லை======================


11  இணையத்தில் பலர் அக்கா ,தங்கை உறவு கொண்டாடுவது நிஜமாக இருந்தால் மகிழ்ச்சி! உள் நோக்கம் கொண்ட தொலைநோக்கு ஆதாயப்பார்வை எனில் எச்சரிக்கை


=================


12 தம்பதியர்க்கிடையே பிரச்சனை வரும்போது குடும்ப நலன் கருதி ஆண் தான் இறங்கிப்போவான்.அவன் எந்த அளவு இறங்குவான் என்று ஆழம் பார்த்திருப்பாள் பெண்====================


13 மருதாணி வைத்த உள்ளங்கை உடனே ஆரஞ்சுச்சிவப்பாக சிவந்தால் நல்ல ரத்த ஓட்டம் உள்ள உடம்பு எனவும் கறுத்தால் பித்த உடம்பு எனவும் அறிக!=====================

14 பரஸ்பரம் இருவரும் பாலோ செய்தும் DM் அனுப்பமுடியவில்லை எனில் அன்பாலோ செய்து மீண்டும் பாலோ செய்க. செல் பேட்டரி கழட்டி பின் பொருத்துவது போல்


=====================15 வாக்கிங் முடிச்ட்டு ஒரு தென்னந்தோப்புல உக்காந்தா " யாரு தம்பி? தனியா தோப்புல?"ங்கறார் ஓனர்.ஜோடியா இருந்தா விட்ருப்பார் போல


=================


16 பைக் ல ஒரு தம்பதி ஒரு அட்ரஸ் விசாரிக்கறாங்க.அந்தப்பொண்ணு அந்த ஆள் கிட்டே சொல்ல அதை என் கிட்டே அப்டியே சொல்லி கேட்கார்.ஏன்?பொண்ணு கேட்காதோ


=====================


17 கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது TL் பூரா அது சம்பந்தமான அப்டேட் பார்த்து பொண்ணுங்க எல்லாம் ட்வீட் போடலாமா? வேணாமா?னு யோசிச்சுட்டிருப்பாங்


==================


18 சன்டே அன்னைக்கு எந்தக்கோயில் லயும் பிரசாதம் தர்றதில்லை.அன்னைக்குத்தானே தமிழ்னுக்கு ஓய்வு கிடைக்கும்.தந்தா என்னவாம்?


==================


19 பிரச்னை என்னன்னே நம்ம கிட்டே சொல்லாம அந்தப்பிரச்சனையை நாமதான் தீர்த்து வைக்கனும்னு எதிர்பார்ப்பாள் பெண்


================


20 பெண்கள் எந்தப்பிரச்னை வந்தாலும் முடிந்த வரை பெண் மருத்துவரை நாடுவது நல்லது.====================

0 comments: