Friday, June 20, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 19 6.2014 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

1. வடகறி -
Durai Dhayanithi Alagiris Vadacurry
கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு பிரியாணி கிண்டிக் கொண்டிருக்கிறார். அதற்கிடையில் பீட்சா வந்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தது. பீட்சாவ இயக்கியவரே இப்போது ஜிகிர்தண்டா டைரக்ட் செய்து கொண்டிருக்கிறார். ஆசை தோசை என்று டி.பி.கஜேந்திரன் ஒரு படம் டைரக்ட் செய்கிறார். பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் என்ற படம் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த நிலையில் சென்னையின் பாப்புலரான வடகறி என்ற புதிய படத்தை மேகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.  இதில் ஜெய் ஹீரோ. ஹீரோயின் சுவாதி. சரவணராஜன் டைரக்ட் செய்கிறார். ஆகஸ்ட் 19ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்ற நடிகர் நடிகைகள் செலக்ஷன் நடந்து வருகிறது. ஒரு ஸ்பெஷல் தகவல் என்னவென்றால் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் அனுஷா தயாநிதி.


சன்னிலியோன் முதன் முதலில் தமிழில்  நடிக்கும் படம் வடகறி. இந்த படத்தில் சன்னிலியோன் எப்பொழுது நடிக்க ஒபந்தம் செய்யப்பட்டாரோ அன்று முதல் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. தற்பொழுது படத்தின் ப்ரோமோ சாங் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலின் முதல் வரியே பார்ப்பவர்கள் அனைவரையும்  கிளுகிளுப்பு அடையசெய்துள்ளது. சன்னியம்மா லிப்ஸ்டிக் சன்னியம்மா லிப்ஸ்டிக் என இந்த பாடல் துவங்குவது தான் அதற்கு காரணம்.


படம் நேத்தே  ( 19 6 2014 ) ரிலீஸ்டு . விமர்சனம் படிக்க

வடகறி - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_591.html 

 

 

2.  நேற்று இன்று’

பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த ‘அம்முவாகிய நான்’ படத்தை இயக்கிய பத்மா மகன் இயக்கும் புதிய படம் ‘நேற்று இன்று’. இதில் விமல், ரிச்சர்ட், நிதிஷ், பரணி, ஹரிஷ், ஜெமினி பாலாஜி ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். நந்தகி அருந்ததி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் பிரசன்னாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

பல கோணங்களில் நடக்கும் கதையை மாறுபட்ட திரைக்கதை அமைத்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பத்மாமகன். இப்படம் குறித்து அவர் கூறும்போது,

எதிர்பாராத சம்பவங்களும், திருப்பங்களும் நிறைந்த இத்திரைக்கதை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. காட்சிகளை தத்ரூபமாக படமாக்குவதற்காக கடும் சிரத்தை மேற்கொண்டு ஆள் அரவமற்ற சூரிய வெளிச்சம்கூட உட்புக முடியாத அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்று காட்சிகளை படமாக்கியுள்ளோம் என்று கூறினார்.

மேலும், இத்திரைப்படத்தில் சினிமாவை மட்டும் நம்பி வாழும் சினிமா தொழிலாளர்களையும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் வாழ்க்கை சூழலையும் பற்றி ஒரு பாடல் வருகிறது. இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடியதோடு மட்டுமல்லாமல் இப்பாடலுக்கு நடித்தும் கொடுத்துள்ளார்.

26699 சினிமா சார்பில் எஸ்.மாலதி இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். கேரளா, தலக்கோணம், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. எஸ்.தணிகைவேல் வழங்கும் இத்திரைப்படம் ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.


விமல், ‌ரிச்சர்ட் நடித்திருக்கும் காடும் காடு சார்ந்த பகுதிகளையும் களமாகக் கொண்ட படம்.

காட்டுக்குள் நுழையும் இளைஞர் கூட்டம் தொலைந்து போய் பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொள்ளும் ஹாலிவுட்டின் வழக்கமான கதைக்களம்தான் இந்த நேற்று இன்று. 

 

 

நேற்று இன்று - சினிமா விமர்சனம்


http://www.adrasaka.com/2014/06/blog-post_5435.html

 

 

3 சூறையாடல்

விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாராணி, அவள் ஆகிய சீரியலை டைரக்ட் செய்தவர் தாமரைக் கண்ணன். அவர் இயக்கும் பெரிய திரை சினிமாவின் பெயர் சூறையாடல். கூத்துப்பட்டறையில் இருந்து வந்திருக்கும் ஸ்ரீபாலாஜி ஹீரோவாக நடிக்கிறார். நர்த்தகி, லீமா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

தனது சூறையாடல் பற்றி டைரக்டர் தாமரை கண்ணன் கூறியதாவது: எல்லா குணங்களும் நிறைந்தவன்தான் மனிதன். அதற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டும்போதுதான் பிரச்னை வருகிறது. காதல், காமம், கோபம் இந்த குணங்கள் கொஞ்சம் அபாயகரமானவை அதை சரியாக கையாளாவிட்டால் என்ன நடக்கும் அது நம்மையே சூறையாடிவிடும் என்பதுதான் படத்தோட மெயின் லைன். தேனி கம்பம் பகுதியில் நிறைய ஷ¨ட்டிங் நடந்திருக்கு. கம்பத்துலேருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆட்டுப்பாறைங்க கிராமத்துலதான் படம்பிடிச்சோம். கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளாக படம் இருக்கும். என்கிறார் தாமரைக் கண்ணன்.

 

சூறையாடல் - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/06/blog-post_7814.html

 

 

வெற்றிச்செல்வன்

2 வருடங்கள் முடங்கிக் கிடந்த வெற்றிச்செல்வன் ரிலீசாகிறது

Vetriselvan ready for release
அஜ்மல், ராதிகா ஆப்தே நடித்த படம் வெற்றிச் செல்வன். பாடகர் மனோ வில்லனாக நடித்துள்ளார். மணி சர்மா இசை அமைத்துள்ளார். ரமேஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ருத்ரன் இயக்கி உள்ளார். இந்த படம் மென்மையான காதல் கதைதான் என்றாலும் மனநல காப்பகத்தில் நடக்கும் முறைகேடுகள், கொடுமைகள், பாலியல் தொல்லைகளை யாதார்த்தமாக சொல்கிற படம். சுமார் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. படம் முடிந்து ஒரு வருடங்கள் ஆகியும் வெளிவராமல் முடங்கிக் கிடந்தது. இப்போது அதனை வெளியிடுவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார் அதன் இயக்குனர் ருத்ரன்.

"மக்கள் பிரச்னையை பேசுகிற படம் அதற்காக யு சான்றிதழ் கேட்டு போராடினோம். மருத்துவமனை கொடுமைகள் சிறுவர்கள் பார்க்க இயலாது என்று சொல்லி யு/ஏ சான்றிதழ்தான் கொடுத்தார்கள். சில காட்சிகள் ரீ ஷூட் பண்ண வேண்டியது இருந்தது. இதற்காக அஜ்மல், ராதிகா ஆப்தே இருவரும் இணைந்த கால்ஷீட் கிடைப்பது சிரமமாக இருந்தது. காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்தபோது சில பிரச்னைகள் ஏற்பட்டது. இப்படி தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாத்தான் படம் தாமதமானது. இப்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டோம். இந்த மாத இறுதியில் வெளியாகிறது" என்றார். இயக்குனர் ருத்தரன்.

வெற்றிச்செல்வன் - சினிமா விமர்சனம்http://www.adrasaka.com/2014/06/blog-post_8644.html


Humshakals (2014) Poster
5

Humshakals (2014) 

A comedy centered around three people who each have a lookalike of a lookalike, all with the same name.


thanx - dinamalar. maalaimalar, all cine magazinesடிஸ்கி - http://www.adrasaka.com/2014/06/blog-post_8644.html

0 comments: