Friday, June 06, 2014

மஞ்சப்பை -சினிமா விமர்சனம்


பொதுவா கிராமத்துல இருந்து நகரத்துக்கு வர்ற பெருசுங்களை மஞ்சப்பைன்னு  கிண்டலா  சொல்வாங்க .ஆனா அந்த மாதிரி  பெரியவங்க  கிட்டே நமக்குத்தெரியாத , நம்ம கிட்டே இல்லாத அனுபவ அறிவு  இருக்கு அவங்களை அலட்சியப்படுத்தக்கூடாது,அவங்க அட்வைஸ் நமக்கு என்னைக்கும்  தேவை என்பதை  உணர்த்தும் படம்  தான்  130  நிமிடங்கள்  ஓடும்  இந்த மஞ்சப்பை .அதனால மஞ்சள்  துண்டு , மஞ்சப்பை கிட்டே நாம எப்பவும்  ஜாக்கிரதையாவே  இருந்துக்கனும். 


ஹீரோ ஐ டி கம்பெனில  ஒரு லட்சம்  ரூபா சம்பளம் மாசா மாசம் வாங்கும் ஆள் . அவர் நகரத்தில்  இருக்கார் . தாத்தா  கிராமத்தில் . அம்மா, அப்பா சின்ன  வயசுலயே  இல்லை , எல்லாம்  தாத்தா தான் . சிட்டில  கண் டாக்டரை எதேச்சையா சந்திச்சு  ஹீரோ  லவ்வறார். காதலுக்கே கண் இல்லைங்கறப்போ காதல்ல விழுந்த கண் டாக்டருக்கு மட்டும் கண் இருக்கவா போகுது ? அதும் லவ்வுது . 

 கிராமத்துல  இருந்து தாத்தா வர்றார் .  அவர் அப்பாவித்தனமா செய்யும்   பல விஷயங்கள்  ஹீரோவுக்கு  எதிரா  முடிஞ்சிடுது . ஹீரோயின் காதல் பரிசா கொடுத்த சட்டையை வேற யாருக்கோ  தந்துடறார் தாத்தா . இது   ஹீரோயினுக்குப்பிடிக்கலை . 

ஹீரோ  குடி  இருக்கும் அபார்மெண்ட்டில்  எல்லோர்  வெறுப்பையும் சம்பாதிக்கிறார் தாத்தா .அவர்  எப்படி  எல்லோர் மனதிலும்  இடம் பிடிக்கிறார் என்பதே  மிச்ச மீதிக்கதை  ஹீரோ   சந்தேகமே  இல்லாம ராஜ் கிரண் தான் . கலக்கலான நடிப்பு . அவர் பேரன்  மீது மட்டும்  இல்லாமல் அபார்ட்மெண்ட்டில் குடி இருக்கும்  அனைவர்  மீதும் அன்பைப்பொழிவது  கிராமத்து யதார்த்தம் . தவமாய் தவமிருந்து படத்துக்குப்பின் இவருக்கு கிடைச்ச நல்ல தீனி இந்தப்படம் 

 செகண்ட்  ஹீரோவா விமல் . குறை  சொல்ல முடியாத நடிப்பு . செமயான  குத்தாட்ட சாங்கில் கூட அழகிரி மாதிரி  தேமே என்றிருப்பது கடுப்பை வரவழைக்கிறது 


ஹீரோயினா திருப்பதி லட்டு , புட்டு வைத்த  குழாப்புட்டு , தாடையில்  இருக்கும் தழும்பைக்கூட அழகின்  இன்னொரு லேண்ட் மார்க்காக மாத்திய மார்க்கமான பொண்ணு கண்ணுக்கு லட்சணமான லட்சுமி\மேணன் . இவரது  டிரஸ்ஸிங்க்  சென்ஸ் வழக்கம்  போல் அருமை . நதியாவுக்கு அடுத்து ஆடை கலையாமல் பார்த்துக்கொள்ளும் அருமை நாயகி . சில காட்சிகளில்  வில்லியாக தோன்ற வேண்டிய கட்டாயம் . 

பூவே  பூச்சுடவா படத்தின் உல்டா  \ரீமேக்காக அதாவது பாட்டி பேத்தி க்குப்பதிலாக  தாத்தா - பேரன் கதை , அதை இயக்குநர் பாசிட்டிவ் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமன் இயக்கினால் எப்படி  இருக்கும் ? அது போல்  குடும்பப்பாங்கான  கதை 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1.  ராஜ் கிரண் பாத்திரப்படைப்பு , அவர் நடிப்பு  கனகச்சிதம் . தாய்க்குலங்களை கண்ணீர் சிந்த வைக்கும் காட்சிகள் ஆங்காங்கே 


2   லட்சுமி மேணன்  - விமல் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் 


3  அபார்ட்மெண்ட்  ஆட்களிடம்  ராஜ் கிரண்  பாசமாகப்பழகுவது ,  வீட்டு ஆள்  போல் நடந்து  கொள்வது  எல்லாம் நம்ம  வீட்டில்  இப்படி ஒரு தாத்தா  இல்லையே என ஏங்க வைக்கும்  காட்சிகள் 


4  பாடல் காட்சிகள்  இதம் . லட்சு  போடும் டப்பாங்குத்து ஆட்டம்  ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை டான்ஸின் உல்டா  தான் , இருந்தாலும் ரசிக்கலாம் . இந்தப்பாட்டில்  லட்சு  தொப்புள் காட்டி நடிச்சிருக்கார் . அது கிராஃபிக்ஸ் என சர்ச்சை  வரப்போகுது 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. ஐ டி டிபார்ட்மெண்ட்டில்  ஒர்க் பண்ணும்  ஆள் பிராஜக்ட் எனும் வார்த்தைக்குக்கூட ஸ்பெல்லிங்க்  தப்பா அடிக்கும் ஆளா இருப்பாரா? காமெடிக்குன்னாலும்  ஒரு லாஜிக் வேணாமா ? 


2 ஓப்பனிங்க்  சீனில்   ஹீரோ - ஹீரோயின்  டிராஃபிக் போலீசிடம் மாட்டி  தாங்கள்   போலீஸ் டிபார்மெண்ட் , உங்களை செக் பண்ண வந்திருக்கோம் என்பது காதில்  பூ . அவர் ஐ டி கார்டு கேட்க மாட்டாரா ? 


3 அப்பா  போலீஸ் ஆஃபீசர் , இவர்  கண் டாக்டர் .  ஆனா ஸ்கூட்டில தான் வருவார்  போவாரா? கார் இருக்காதா ?  அப்படியே ஸ்கூட்டி ல டெய்லி  போகிறவரா  இருந்தாலும்  லைசென்ஸைக்கூட  வண்டில  வெச்சிருக்க மாட்டாரா?> 


4  முன்  பின் பாராத  போலீஸ் ஆஃபீசரை அவர்  வீட்டுக்கே  போய்  ராஜ் கிரண்  அறையும் காட்சி  செயற்கைத்தனம் . அப்போ அந்த  போலீஸ் ஆஃபீசரின் பாடி லேங்குவேஜ் சரி இல்லை 


5   காதலன்   குடி  போதையில்  இருந்தால்   டாக்சியில்  ஏத்திட்டுப்போகாமல்  ஸ்கூட்டியில்  உட்கார வெச்சு இப்படியா  ஊருக்கே  வெளிச்சம்  போட்டுக்காட்டுவார் சிட்டி  பொண்ணு? 


6  அழுத்தமான சம்பவங்கள்  மிகவும்  குறைவு . ரொம்ப நாடகத்தனமான காட்சிகள்  திரைக்கதையின்  பலவீனம் 


7  இடைவேளை ட்விஸ்ட்டாக வரும்  லேப்டாப்பை மைக்ரோ வோவன் என நினைத்து  ராஜ் கிர\ண் அடுப்பில் வைக்கும் காட்சி  எல்லாம்  ஓவர் . அவர்   விமல்  வீட்டில் வந்து பல நாட்கள்  தங்கி  இருக்கும்போது  விமல்  லேப்டாப்பில்  ஒர்க் பண்றதை பார்த்திருக்க மாட்டாரா? 


8 க்ளைமாக்சில்  தாத்தா   மன நலன்  குன்றியவராக மாறுவது  வலிய திணிக்கப்பட்ட செண்ட்டிமெண்ட் காட்சி . அனுதாப ஓட்டு வாங்க  அரசியல் வாதிகள் ஆள் விட்டு தன்னைத்தானே அறையச்சொல்வது  போல்  இயக்குநர்கள்  இப்படி நெகடிவ் க்ளைமாக்ஸ் வைப்பது  பெருகி விட்டது 

9  திரைக்கதையில்  பெரிய  திருப்பம் , சின்ன திருப்பம் , மீடியம்  திருப்பம் எதுவுமே இல்லை . சின்னக்குழந்தை கூட கணித்து விடக்கூடிய மிகச்சாதாரண  திரைக்கதை மைனஸ் 


மனம் கவர்ந்த வசனங்கள்

அம்மா ,அப்பா தான் என் கிட்டே சொல்லாமயே செத்துப்போய்ட்டாங்களே.இனி எல்லாமே எனக்கு தாத்தா தான் # மஞ்சப்பை


2 காபி வாங்கவே காசில்லை.காப்பீட்டுத்திட்டத்துக்கு காசுக்கு எங்கே போவேன்? # மஞ்சப்பை


3 லட்சு - உனக்கு நான் முக்கியமா? தாத்தா முக்கியமா? இப்பவே தெரிஞ்சாகனும்விமல் - என்னடி ரொம்பக்குதிக்கறே?எனக்கு என் தாத்தா தான் முக்கியம்4 லட்சு = நாளை என் பர்த் டேவிமல்=அடடா ,மறந்துட்டேனே?
லட்சு=ம்க்கும்.நினைவிருந்தாத்தானே மறக்க?போடா!


5 வீட்ல ஒரு நல்லது கெட்டது எடுத்துச்சொல்ல பெரியவங்க ஒவ்வொரு விட்டிலும் இருக்கனும் # ம பை


6 டியர்.இந்த உலகத்துலயே அழகான பரிசு உனக்கு வாங்கிட்டு வந்திருக்கேன்
லட்சு= என்னடா?இது?கண்ணாடி?
ம்.உன் முகம் இது ல தெரியும் #ம பை


7 நேர்த்திக்கடனுக்கு வெச்சிருந்ததை ஏன் அநாதை இல்லத்துக்கு தந்துட்டீங்க?
ராஜ்கிரண் = சாமிக்கு செய்வதும் ,ஆசாமிக்கு செய்வதும் 1 தானே? #,ம பை


8 உன் ஆளு எப்போ பாரு அவன் பிரண்ட் கூடவே சுத்திட்டு இருப்பான் போல
லட்சு = சும்மா இருடி.அது பிரன்ட் இல்லை.அவன் தாத்தா


9 லட்சு = பீர் சாப்ட்டு ஹேங்க் ஓவர் ஆகிட்டே .இந்தா மோர் சாப்பிடு.சரி ஆகிடும் # மோர் ல இப்டி 1 இருக்கோ?


10 பணம் காசு சம்பாதிக்கறதை விட முக்கியம் மனுசங்களை சம்பாதிப்பது # ம பை


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S

1. தென்னங்கீற்றில் கண்ணாடி ,வாட்ச் செய்து குழந்தைக்கு மாட்டிவிடும் ஆர்ட் டைரக்டரின் அழகியல் நேர்த்தியுடன் மங்களகரமான ஓப்பனிங்# மஞ்சப்பை

2 பியூட்டி குயின் லட்சுமிமேனன் ஸ்கூட்டியில் # ஓப்பணிங்


3 லட்சுமிமேனன் ஒரு சாயல்ல ஆசை சுவலட்சுமி மாதிரியும் , ஒரு கோணத்தில் சரிதா மாதிரியும் இருக்கு.


4 லட்சுமி கண் டாக்டராம்.அய்யகோ.அதுதான் பத்தாங்கிளாஸே இன்னும் முடிக்கலைனு சொல்லுச்சே?


5 சுடிதார் போட்ட சுங்குவார் சத்திரமே! #,லட்சுமிமேனன் ஆடை வடிவமைப்பு அசத்தல்கள்


6 முழு உடலையும் கவனமாகப்போர்த்தி எந்த உடையிலும் கண்ணியமாக கவர் செய்வதால் இனி இவர் கவரிங் ஸ்டார் லட்சு


7 லட்சுக்கு தங்கச்சியா ஒரு ரவா லட்டு .யாரு? டைட்டில்ல பேரே போடலை


8 விமல் விஜய் மாதிரி (,சக்கரை நிலவே ஸ்டெப்) டான்ஸ்.முடியல


9 ராஜ்கிரண் ,விமல் 2 பேரும் 4 சீன் ல அழும்போது கூட தாங்கிட்டேன்.லட்சு ஒரு சீன் ல கண்ணீர் விடுதே.அடடா


10 அய்யய்யோ விஷால் சார்.யுவர் அட்டென்சன் ப்ளீச்.விமல் லிப் கிஸ் டூ லட்சு. என்னய்யா ஆளாளுக்கு கிஸ் அடிக்கறாங்க.இது தப்பில்லையா?


11. ஏகோபித்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க லட்சுமி மேனன் ன் மஞ்சப்பை (,சிங்குலர்) : "


சி பி கமெண்ட் -மஞ்சப்பை - தாத்தா பேரன் பாசம் சொல்லும் பேமிலி மெலோ டிராமா,ராஜ்கிரண் நடிப்பு டாப் = விகடன் மார்க் =42 ,ரேட்டிங் = 2.75 / 5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =2.75 / 5


லட்சுமிகரமான லட்சுமிமேனன் படம் நெய்வேலி மகா லட்சுமில்.மஞ்சள் பெயின்ட் மஞ்சப்பை மேட்சுக்கு மேட்ச் பை மஞ்ச மாக்கான்


டிஸ்கி-

உன் சமையல் அறையில் -சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_7504.htmlManja Pai Poster.jpg
Production poster
Directed by Naveen Raghavan
Produced by N. Subash Chandrabose
A. Sargunam
Nandha Kumar
Starring Vimal
Lakshmi Menon
Rajkiran
Music by N. R. Raghunanthan
Cinematography Masani
Editing by Deva
Studio Thirupathi Brothers A Sargunam Cinemaz
Distributed by Thirupathi Brothers[1]
Country India
Language Tamil

No Title Singer Length
1 Aagaasa Nilavu S.P. Balasubrahmanyam 04.24
2 Anbu Dhaan Krishnaraj 03.39
3 Ayyo Ayyo Laxman, Rishi, Sailaxmi, Harish, Ayshwarya, Asvitha & Vaishali 03.37
4 Paathu Paathu Hariharasudhan & Vandana Srinivasan 03.56
5 Sattena Karthik 04.21

1 comments:

Ramesh said...

மஞ்சப்பை (சிங்குலர்) செம குறும்பு..... நம்மாலுங்க புரிஞ்சுதான் டைட்டில் வைக்கிறானுங்களானு தெரில.... சின்ன வயசு ஆனா நாலஞ்சு..... னு ஆரம்பிக்கும் ஹார்லிக்ஸ் விளம்பரத்தையே செம ஓட்டு ஓட்டின ஆளுங்க நாம ....