Tuesday, June 10, 2014

சோனாக்‌ஷி சின்ஹா தனுஷ்க்கு மாமியார் முறை ஆகுதா?

1. சென்னை சென்ட்ரல் நடைமேடை 9ல் கவுகாத்தி - பெங்களூர் ரயில் வந்தபோது ரயிலின் கோச்சில் குண்டு வெடிப்பு # கொடநாட்டு ஸிஎம் வாங்கம்மா கிளம்பி


==================


2 வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா # லிங்கா ல ரஜினிக்கு ஜோடி.அப்போ முறைப்படி மாமியார் முறை 


=====================


3 நான் ஒரு பிற்படுத்தப்பட்டவன்''- திடீரென ஜாதியை கையில் எடுக்கும் நரேந்திர மோடி # இதுதான் உங்க பிரம்மாஸ்திரமா? சகிக்கலை=====================


4 படப்பிடிப்பில் கௌதமுக்கு ரொமான்சே வரவில்லை.-ராகுல் ப்ரீத் சிங் # நீங்க கேரவுன் வேன் கூட்டிட்டுப்போய் சொல்லிக்குடுத்திருப்பீங்களே?=======================


5 பிரச்சார மேடையில் ராமர் படம்: மீண்டும் சர்ச்சையில் மோடி # புத்தர் ஃபோட்டோ வெச்சுக்குங்க, 2 பேரும் குடும்பத்தை விட்டு வந்தவங்க====================6 நான் இடது சாரியுமல்ல, வலது சாரியுமல்ல -அரவிந்த் கேஜ்ரிவால்!#வைகோ .மாதிரி பாதசாரியா? பாபா ராம்தேவ் மாதிரிசுடிதார் சாமியா?


=====================


7 அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை: பிரியங்கா # பொண்ணுங்க அகராதில இருக்குன்னா இல்லைனு அர்த்தம்.இல்லைனாஇருக்குனு அர்த்தம்


=====================


8 யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது:பிரியங்கா # தனக்குக்கிடைக்கலைனா தரணில யாருக்குமே கிடைக்காதுனு பாடலாமா லாவணி?


===================


9 ஒன்றரை கோடி இன்ஜினியர்களுக்கு வேலை இல்லை' -செய்தி # உடன் பிறப்பே! கழக ஆட்சியில் 1 கோடி இஞ்சினியர் மட்டுமே வெட்டியா இருந்தாங்க=====================


10 அமலாபால் க்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி குழந்தையும் உண்டு.இயக்குநர் விஜய் அதிர்ச்சி - மாலைமலர் # அமலா பால் திரிஞ்சு கெட்டுடுச்சு போல====================


11 இங்கிலாந்தில் 4ல் ஒருவர் சரிவிகித உணவு உண்பதில்லை:#் # நடுக்கடலில் கப்பலைவிட்டு இறங்கித்தள்ள முடியுமா?சாப்பாட்டில் தமிழனை மிஞ்ச முடியுமா?


=====================12 எனதுமனைவி திக்விஜய்சிங்கைதிருமணம்செய்துகொள்வதில் எனக்கு அதிருப்தி ிஇல்லை-அமிர்தாராயின்கணவன் # அதை விடுங்க.பேக்கரி எப்டி போகுது?===================


13 குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை ஜெ பார்க்கவில்லை -ஸ்டாலின் # தேர்தல் முடிஞ்ச பின் பார்த்து என்ன பயன்?னு மேடம் நினைச்சிருக்கலாம்


====================


14 டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார் சன்னி லியோன் # கல்யாண மாலை மாதிரி சாந்திமுகூர்த்த மாலை யா?======================== 


15
ஆபாச உடையுடன் அலம்பிய பூனம் பாண்டே கைது # பெண் களின் உடை விஷ்யத்தில் யாரும் தலையிடகூடாது.நாங்க எப்போதான் சீன் பார்ப்பது?======================16 லிங்கா படப்பிடிப்பிற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுக்கிறது: ரஜினி அதிர்ச்சி # சுத்த கர்நாடகமா இருப்பாங்க போல=====================


17  தமிழகத்திற்குள் மேலும் பல தீவிரவாதிகள் ஊடுறுவல்.. மத்திய உளவுத்துறை #அதனால்தான் எங்க தலைவி பாதுகாப்பா கொடநாடு போய்ட்டார்.யாரு கிட்டே?


====================


18  மோடி குழந்தையைப் போல் நடந்துகொள்கிறார்! - பிரியங்கா # அப்போ எல்லோருக்கும் பிடித்தவர் ,எல்லோர் மனதையும் கவர்ந்தவர்னு சொல்றீங்களா?


=====================


19 திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அமலாபால் நடிக்கமாட்டார்! - இயக்குநர் விஜய் # அதை நீங்க சொல்லக்கூடாது.அவரையே சொல்லச்சொல்லுங்க


======================


20 மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்! - லாலு #நீங்க என்ன அனுப்பறது? பிரதமர் ஆனதும் அவரே மீட்டிங் க்காக போவாரு=======================

0 comments: