Sunday, June 01, 2014

மத்திய பிரதேசத்தில் உத்தம வில்லன் !! சென்சார் உஷார்!

1.'முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், அரசியல் ஆதாயம் தேடாதீர் - கலைஞர் # தனக்குத்தானே சொல்லிக்கறார் போல====================


2 தமிழகத்தில் தொடர் வறட்சி காரணமாக, இதுவரை இல்லாத அளவுக்கு அரிசிவிலை எகிறும் # கோதுமை, ராகி, கேழ்வரகுன்னு உணவுமுறையை மாத்திக்கவேண்டியதுதான்


======================


3 தமிழகத்தில் ஜெலடின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் பல இடங்களில் பறிமுதல்# கொடநாட்டில் குடி கொண்ட போயஸ் மாதா தமிழ்நாட்டுக்கு வாங்கம்மா


======================4 25 மாநிலங்கள், 437 பொதுக்கூட்டங்கள், 3 லட்சம் கி.மீ பயணம் செய்த மோடி # வைகோ மாதிரி நடந்தா போனாரு? விமானம் தானே?=====================


5 சோனியா தலைமையில் மன்மோகனுக்கு ‘ஃபேர்வெல்’ பார்ட்டி! # போய் வா நதி அலையே!


====================


6 திருமணமானவர்கள் ஆபாச படங்களை பார்ப்பது விவாகரத்துக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல் # இதான் சாக்குனு அவனவன் டிவிடியோட வீட்டுக்குப்போவான்்


==================


 7  என் கணவருக்கும், புதுமுக நடிகைக்கும் தொடர்பா?: நடிகை வித்யா பாலன் விளக்கம் # தானிக்கு தீனி.நீங்க ஒரு புதுமுக நடிகர் கூட பழகறீங்க.=================


8 தேர்தல் சோதனை :நாடு முழுவதும் ரூ.313 கோடி பறிமுதல்  # புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சிக்கு அது சொந்தமாகிடுமா?=====================


9 லோக்சபா தேர்தலில் DMK இரட்டை இலக்கத்தில், வெற்றி பெற்றால்,  'துணை' தலைவர் பதவி ஸ்டாலினுக்கு - மு க # சிங்கிள் டிஜிட்க்கே சிங்கி அடிக்குது


======================


10 ஒரு ருபாய் என்பெயரில் இருந்தால் வாழ்நாள் சிறைவாசத்துக்கு தயார்-ஆ.ராசா# பினாமி பேர்ல எழுதி வெச்ட்டாரு போல


======================


11  லிங்கா நாயகி சோனாக்ஷிக்கும், நடிகர் ஷாஹித் கபூருக்கும் இடையே காதல் # தலைவர் புக் பண்ணுனதும் கல்யாண ராசி வந்துடுச்சு.ரஜினிடா லிங்காடா


======================


12 இனி இந்தியாவிற்கு நல்ல காலம் தான் ! பங்குச்சந்தை 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டது # கண்ணா! மே 16க்குப்பின் பாரு. குப் குப்னு ஏறும்.மோடி ராக்ஸ்


===================
13 கருத்துக்கணிப்பு முடிவுகள் எதிரொலி: ராகுலை காப்பாற்றும் முயற்சியில் காங்கிரஸ்  # இத்தாலிக்கே பேக் பண்ணி அனுப்பிடுவாங்க்ளோ?


=====================
14 மன்மோகன் சிங்கிற்கு காங்.,பாராட்டு # யார்  என்ன ஊழல் பண்ணாலும் கண்டுக்கலை, நீங்க ரொம்ப நல்லவர்னு சொல்லிட்டாங்க்ளோ?


======================
15 மத்திய பிரதேசத்தில் உத்தம வில்லன் ஷூட்டிங்க் - செய்தி # கமல் படம்னாலே  மத்தியப்பிரதேசம் முதன்மை பெறுவது சகஜம் தானே?


======================
16 கணவனுக்கு பயந்து ஓடியபோது கள்ள காதலனுடன் கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் # துரத்தும்போதே பிளான் பண்ணி  ரூட் பார்த்து துரத்தி இருக்கான்


====================


17 கொடநாட்டில் இருந்து நாளை (மே 15) சென்னை திரும்புகிறார்  ஜெ #  ரயில் வெடிகுண்டு சம்பவத்துக்கு வர்ல, தேர்தல் ரிசல்ட்னதும் வர்றார், சபாஷ்
===================
18 பீகார் -பாட்னா வில் பொதுத்துறை வங்கி வேனிலிருந்து ரூ. 1 கோடி பணம் கொள்ளை  # மங்காத்தா இப்போதான் அங்கே  ரிலீஸ் போல
=======================
19 தமிழகம் வந்த தமிழ் அகதிகளை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை # உங்க சகவாசமே வேணாம்னு தானே கிளம்பறாங்க,அது கூடப்பொறுக்கலயா?


=======================
20  431 நாள்களில் செவ்வாய்கிரகத்துக்கு சென்று வரலாம் -நாசா ஆய்வறிக்கை # போவாங்க, திரும்பி வந்தாதான் நிஜம்=============================

0 comments: