Wednesday, June 04, 2014

4 பெண்களின் நப்பாசையில் மண்ணள்ளிப்போட்ட மோடி

1. அரை நிர்வாண காட்சியில் ஹரிப்ரியா! -செய்தி # ம்க்கும்.இப்டித்தான் போஸ்டர்ல ஆசை காட்டி படத்துல மோசம் பண்ணுவீங்க=====================

2 பெண்ணை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு நீதிபதி முன்னிலையில் திருமணம் |# நல்ல வேளை.ஜட்ஜ் முன்னால கல்யாண முகூர்த்தம் மட்டும் நடந்தது.


======================


3 காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது என்பதை ஏற்கமுடியாது! - ஞானதேசிகன் #  தோல்வியை ஒத்துக்கவோ, ஏத்துக்கவோ கூட பலம் இல்லை போல
===================


4 91 வயது என்.டி.திவாரி 2-வது திருமணம்-67 வயதுதோழியை மணந்தார். # கேட்டுக்கிட்டீங்களா? யாரும் நம்பிக்கை இழக்காதீங்க.எப்ப வேணா செட் ஆகும்=====================5 திமுக பாஜக வுக்கு ஆதரவு தராது - மு க # தலைவா! நாமளே ஜீரோ.நாம எப்டி ஆவோம் ஹீரோ?=====================


6 எனக்கு மகத்தான வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு நன்றி-ஜெ # மேடம்.நன்றியை மின் விநியோகத்துல காட்டுங்க==================== 7 முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளையும் அள்ளிய மோடி # மதபேதம் இல்லாத அலை=================8 விடைபெற்றது கூட்டணி ஆட்சி . 30 ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு!! # பல லேடிகளின் நப்பாசையில் மண்ணள்ளிப்போட்டார் மோடி=================


9  திமுக தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது - மு.க.அழகிரி # இன்று முதல் அழகிரியார் மதுரையார் அப்பா காலை வாரியார் என அழைக்கபடுவாராக=======================10 குத்து ரம்யா,நக்மா தோல்வி.# இந்தியன்  எங்கே வேணாலும் யார் கிட்டே வேணாலும் ஜொள் விடுவான்.ஆனா ஓட்டு மட்டும் எங்கே குத்தனுமோ அங்கே  கரெக்ட்டா குத்திடுவான்


==================

11  இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவே தனிப் பெரும் கட்சி! # 200 ரூபா ஒரு வாக்குக்கு செலவு. சும்மா வந்துடாது வெற்றி! அம்மாடா=====================


12 2016 பேரவைத் தேர்தலிலும் தோல்வி எதிரொலிக்கும்- அழகிரி # வலது கால் ல அடிபட்டுதுனு டாக்டர்ட்டபோனா இடது காலும் அவுட் ஆகும்னாராம்====================


13 ஆ.ராசா ஒரு லட்சம் வாக்குகளில் படுதோல்வி # அடடா, ஒண்ணேமுக்கால் லட்சம் ஓட்டு வித்தியாசத்துல தோப்பாருனு நினைச்சேனே!=====================


14 திமுக தோல்வி: ட்விட்டரில் தயாநிதி அழகிரி கொண்டாட்டம் # எலிக்கு மரண வலியாம் , பூனைக்குக்கொண்டாட்டமாம்====================


15 மோடி, ஜெயலலிதாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து # எப்படியோ கோச்சடையான் ரிலீஸ் ஆகனுமே? அவர் கவலை அவருக்கு=======================


16 மோடியும் ஜெயலலிதாவும் மாபெரும் சக்திகள்: நடிகர் விஜய் # அப்போ எலக்சன் டைம் ல ஜெ வை சந்திக்காம ஏன் மோடியை மட்டும் சந்திச்சீங்க?=====================17 
 திமுக வுக்கு 10 இடங்களில் டெபாசிட்டே காலி - செய்தி # கும்தலக்கடி கும்மாவா?அம்மான்னா சும்மாவா?200 ரூபா எபக்ட் டோய்======================18 ஜனநாயக இந்தியா.அன்று டீ விற்ற நரேந்திர மோடி பாரதத்தின் பிரதமராகிறார்! # எல்லா மலைகளுக்கன படிக்கட்டுகளும் அடிவாரத்தில் இருந்தே தொடங்கும்


=========================19 தேர்தல் தோல்வியை திமுக தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறது: கருணாநிதி # நாம தோத்ததுக்கு அஜித்க்கு ஏன் சலாம் போடனும் தலைவா?


======================
20 தமிழகத்தில் கன்னியாகுமரியை தவிர, இத 38 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி டெபாசிட்டை இழந்துள்ளது. # இது நமோ போட்டு விட்ட ஸ்பெஷல் நாமம்


========================

0 comments: