Friday, June 27, 2014

அதிதி - சினிமா விமர்சனம்

a

 மலையாளத்தில் வெளிவந்து  செம  ஹிட் அடித்த காக்டெய்ல் என்ற  படத்தின்  ரீமேக் தான் இந்த அதிதி . 22 10 2010 ல அருண் குமார் இயக்கத்தில் வந்த படத்தை லைட்டா தமிழுக்கு தக்கபடி மாத்தி  கொடுத்திருக்கார் அழகிய தமிழ் மகன் இயக்குநர் பரதன் .இவர் வீரம் படத்தின் வசனகர்த்தாவும் கூட .2007 ஆகஸ்ட் டில் வந்த  பட்டர்ஃபிளை ஆன் எ வீல் அப்டிங்கற கனடா படத்தை சுட்டு தான் இந்த காக்டெய்ல் எடுத்திருக்காங்க . அந்த கனடா படம்  ஒரு கொரியன்  மூவியின்  தழுவல்

அந்தக்காலத்துல  முனிவர்கள்  சொல்லாம கொள்ளாம வருவாங்க திடீர்னு . அவங்களை உபசரிக்கனும். இப்படி வரும் எதிர்பாராத விருந்தாளிகளை  வேண்டாத விருந்தாளி ) அதிதி -னு சொல்வாங்க . அதிதி என்பது சமஸ்கிருத வார்த்தை


ஹீரோ ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஆஃபீஸ் ல  பிராஜக்ட் மேனெஜர் .பெரிய மூளைக்காரர். இவருக்கு ஆஃபீசிலும் , வெளியயும் பல  பொறாமை பிடிச்ச எதிரிகள் உண்டு . இவருக்கு  ஒரே ஒரு சம்சாரமும் , ஒரு குழந்தையும்  இருக்கு .  
 ஒரு நாள் கார்ல தம்பதிகள்  உலாப்போகும்போது   வில்லன்  லிஃப்ட் கேட்கறான் . அவன் வில்லன்கறது நமக்குத்தான் தெரியும் , ஹீரோவுக்குத்தெரியாது . 

லிஃப்ட் கேட்டு கார்ல ஏறுனவன் ஆரம்பத்துல நல்லா சக்கரையா தான் பேசறான் , ஆனா போகப்போக அவன் வாய்ஸ் மாறுது . திடீர்னு பிளாக் மெய்ல் பண்ண ஆரம்பிக்கறான். 

 வில்லனோட ஆள் தம்பதியின்  குழந்தையை கடத்தி வெச்சிருக்கறதாகவும் , ஒரே ஒரு ஃபோன் கால் செஞ்சா போதும் அவ்ங்க குழந்தையை அவன் தீர்த்துடுவான்னும்  மிரட்றான். 

அப்டி எந்த  விபரீதமும் நடக்காம  இருக்கனும்னா   வில்லன் சொல்படி கேட்கனும்னு கண்டிஷன் போடறான். 

முதல் கட்டமா ஹீரோவோட பேங்க் பேலன்ஸ் பூரா  ஒரு சூட்கேஸ் ல ரெடி பண்ணி அதை ஆத்தில் வீச வைக்கிறான் . 

இப்படி பல ம்,எண்ட்டல் டார்ச்சர் தர்றான்

 கடைசி கட்டமா ஹீரோவோட  ஓனர்  வீட்டுக்கு போய் அவரை  கொலை பண்ணச்சொல்றான். அங்கே போனா  ஹீரோவோட  சக பணியாளினி அங்கே  இருக்கா . ஒரு ட்விஸ்ட் . வில்லனும் அவளும்  தம்பதியர்

 இதுக்குப்பின் தான்  பெரிய  திருப்பம்  இருக்கு . இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின்  மீதித்திரைக்கதையை    வெண்  திரையில் காண்க . ஒரே  ஒரு க்ளூ . இந்தக்கதை ஒரு கள்ளக்காதல் ஸ்பெஷல் 


ஹீரோவா நந்தா .  தமிழ் சினிமா கண்டு கொள்ளாத பல நல்ல நடிகர்களில் இவரும்  ஒருவர் . ஆள் நல்ல பர்சனாலிட்டி . நடிப்பும்  குட் . அண்டர்ப்ளே ஆக்டிங்க்  நல்லா வருது , பின்  பாதியில்  இய்லாமை , எரிச்சல் நடிப்பை நல்லா வெளிபடுத்தி  இருக்கார்


 ஹீரோயின் அனன்யா .  பாவமான  முகம் .   ஃபேமிலி  லுக் . க்ளைமாக்ஸ்  வசனம் ரொம்ப  முக்கியத்துவம் வாய்ந்த இடம் . அதுல  ஹீரோ இவரை  டாமினேட் செய்து  விடுவது  மைனஸ் வில்லனா வர்றவர்  படத்தோட  தயாரிப்பாளர் மகன் . பேரு  நிகேஷ் ராம் . இந்த  கேரக்டர் ல   ரகுவரன் மாதிரி ஆட்கள் நடிச்சிருந்தா பட்டாசா  இருந்திருக்கும்  . அவர்  தான்  இல்லையே ?>


 தம்பி ராமையா ,சென்றாயன் ,மயில் சாமி பாடகர் பிரசன்னா ஆகியோரும் நடிச்சிருக்காங்க 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 . மலையாளத்தில்  ஹிட் ஆன படத்தை   முறைபடி  அனுமதி பெற்று படம் ஆக்கியது 


2   பட தயாரிப்பாளர் மகனை  வில்லனாக்கியது


3  கள்ளக்காதலி  ரோலுக்கு களையான  குடும்பபாங்கான  முக அழகியை  தேர்வு செய்தது


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  அவ்வள்வு  பெரிய  திறமை சாலி தன்  ஆஃபீஸ் லேண்ட் லைன் நெம்பர் , பாஸ்  நெம்பர் , கொலீக் நெம்பர்  எதுவுமே மெம்மரில  வெச்சிருக்க மாட்டாரா? 


2  தமிழுக்கு தக்கபடி திரைக்கதை அமைக்கிறேன்னு  சொல்லிட்டு  20 நிமிஷம்  அட்டாச் செஞ்ச  தம்பி ராமய்ய  காமெடி டிராக் படு மொக்கை . முடியல . ரன் படத்தில்  விவேக் காமெடி டிரக் ஸ்டைல் அது . த்ரிலர்  மூவியில்  இது  பொல்  மொக்கை காமெடி பண்ணா  சிரிப்பு வராது . கடுப்பு தான்  வரும் 


3  இந்தபடத்தின்  ஒரிஜினல்  கொரியன்  மூவி 2005 ல் வந்தது . எனவே பாஸ்  தன் கம்பெனி  சீக்ரெட்ஸ் டாகுமென்ஸ்  எல்லாத்தையும்  ஃபைலா  ஹீரோ  கிட்டே  தருவது ம்  வில்லன்  அந்த ஃபைலை  போட்டி கம்பெனிக்கு தாரை வார்பதும் படமா\க்கபட்டதில் கால மாறபடி பென் டிரைவ் ஆக காடி இருக்கலாம் 


4  படத்தோட மெயின்  லாஜிக்  . கள்ளக்காதலியின்  புருஷன்  ஃபோட்டோவை  காதலன் இதுவரை பார்க்கலை என்பது . எந்த கள்ளக்காதலனும் முதல்ல செய்வது   கள்ளக்காதலியின்  புருஷன்  ஃபொட்டோவை\ பார்த்து  வைத்துக்கொள்வதே . அது எச்சரிக்கையா  இருக்க உதவும் ( இது  கேள்வி அறிவில்   தெரிந்து கொண்டது ) .பல வருசம் கள்ளக்காதல் பண்ணிட்டு காதலியின்  புருசன பார்க்கலை   ்ை
என்பது  காதில்  பூ


5  படத்தின்  சஸ்பென்ஸ்  கடைசி  2 ரீலில்  தான்  தெரியுது என்பதால்   ஆடியன்ஸ்   ரொம்பப்பொறுமை காக்க வேண்டி  இருக்கு .

மனம் கவர்ந்த வசனங்கள்


1 குழந்தைங்க போட்டி ல கலந்துக்கிட்டு வந்து ஜெயிச்சாலும் தோத்தாலும் நாம கொண்டாட வேண்டாமா? # அதிதிஇப்போ இருக்கும் சிட்டி லைf ல வேலைக்கார அம்மாக்கள் தான் குழந்தைகளுக்கு அம்மா மாதிரி.அவங்க்தான் அதிக நேரம் கூட இருக்காங்க # அதிதி


3 காஞ்சனாவா? பேரே பயங்கரமா இருக்கே?உங்க எம் டி யோட டாடி பேர் கூட பிச்சை பெருமாள்.அவர் என்ன பிச்சை எடுத்துட்டா இருக்காரு?#,அதிதி


4  ஒருத்தர் மேல ஒருத்தர் முழுசா நம்பிக்கை இல்லாத வங்க ஆரம்பிக்கறதுக்குப்பேர் தான் ஜாயின்ட் அக்கவுன்ட் # அதிதி5  பிரண்டுங்க சரக்கு வாங்கித்தரும்போது என்ன பிராண்ட் னு கேட்கப்படாது # அதிதி6 சரக்கு அடிக்கும்போது சம்சாரம் நினைப்பே வரக்கூடாது # அதிதி7  ஒருத்தன் எப்பவுமே ஜெயிக்கனும்னு நினைக்கறது தப்பில்லை.ஆனா எல்லாரையும் ஜெயிக்கனும்னு நினைக்கறது தப்பு # அதிதி


8  ஸ்மார்ட்னெஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா அதை செய்வது நானா மட்டும் தான் இருக்கனும் # அதிதி


9  இழக்கறதுக்கு எதுவுமே இல்லாதவன் கிட்டே மோதுனா மோதறவனுக்குதான் இழப்பு #அதிதி


10  தனக்குத்தானே கூட விசுவாசமா நடந்துக்காத வித்தியாசமான ஜென்மம் மனிதன் தான் # அதிதி


11   தன் பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கனும்.அடுத்தவன் பொண்டாட்டி நம்ம கூட படுக்கனும்.இது தான் எல்லாரோட எண்ணமும் # அதிதி


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  

1. BUTTERFLY ON A WHEEL (15 8 2007) ( கனடா) = காக்டெய்ல் (22 10 2010) மலையாளம் = அதிதி ( 27 6 2014 தமிழ் )2 ஒரு பொது அறிவுக்கேள்வி.சென்ட்டிமென்ட் பேமிலி சப்ஜெக்ட் ஆன சைவம் ,கள்ளக்காதல் க்ரைம் த்ரில்லர் ஆன அதிதி 2ல் சி பி எதை முதலில் ?


ஒரிஜினல் மலையாளம் 112 நிமிடம்.ரீ மேக் 132 நிமிடம்.அநேகமா 2 டூயட் 4,பைட் எக்ஸ்ட்ரா # அதிதி


4  சின்னச்சின்ன உலகம் இனிப்பதென்ன பாடல் பல்லவி,இசை .எடிட்டிங் எல்லாம் கஜினி யின் சுட்டும் விழிச்சுடரே உல்டா .இசை = பரத்வாஜ் # அதிதிa

சி பி கமெண்ட் -
அதிதி - ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான ் த்ரில்லர் .க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் +.காமெடி டிராக் எரிச்சல். விகடன் மார்க் = 42,ரேட்டிங் = 2.5 / 5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =42


சி  பி  மார்க்  = 40


குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =   2.5  /  5 
 

a


 
Embedded image permalinka
 கரூர் பொன் அமுதா
  டிஸ்கி  -  இனிமே  சி பி மார்க் தனியா வரும் . அதுல என்ன சவுகர்யம்னா  ஆ விக்டன் மார்க்  40  டூ 42  போடுவாங்க என கெஸ் பண்ண ஈசியா  இருக்கும் 


diSki -

சைவம் - சினிமா விமர்சனம்

 

http://www.adrasaka.com/2014/06/blog-post_618.html

 

 

0 comments: