Thursday, June 12, 2014

மோடி ஜோடி சேர்ந்தா அம்சம் இல்ல ஜீவனாம்சம்

1. மோடிக்கு கைக்காசாக 101 ரூ கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்த தாயார்! # மணிரத்னம் சகாப்தமே முடியப்போகுது.ஏன் விக்ரமன் படம் ஓட்றாங்க?================


2 மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே-ஜெயலலிதா கண்டனம்# சபாஷ் மேடம்.தில்லுதுரையம்மா்================


3 ராஜபக்சேவை பாஜக அழைப்பதற்கும் காங் அழைப்பதற்கும் வித்யாசம் உள்ளது-பொன்ராதா. # மாமியார் உடைச்சா மண் குடம்.மருமக உடைச்சா பொன் குடம்.===========4 கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு..# படத்துல எஞ்சாய்மென்ட் ,கேளிக்கை எதுவுமே இல்லையோ என்னவோ?===================


5 ”நீதி கேட்டு கலியுக பாஞ்சாலிகளாக நிற்கிறோம்-பெண் டூ ஜெ# அஞ்சலி தான் சித்தி கிட்டே இருந்து தப்பிக்கநீதி கேட்டுச்சு.பாஞ்சாலி எப்போ?


================


6 ராஜபக்ஷேவை எதிர்ப்பவர்கள் எல்லோரும் அரைவேக்காடுகள்#ஹெச் ராஜா#அப்போ ஆதரிப்பவங்க முழுவேக்காடு என சொல்ல என்ன நோக்காடு?================


7  மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: கோவாவில் இளைஞர் சிறைக்கு போகிறார் # தாமரை யின் ஆட்சியில் ஜனநாயகம் தழைக்கும்னாங்க?=======================


8 இந்தியாவில் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா: தொ.மு.ச. பேரவை கண்டனம் # அவங்கவங்க வீட்டுக்குத்தானே அனுப்ச்சுது?எதுக்கு கண்டனம்=======================


 9 இசையில் வன்முறை பெருகிவிட்டது: இளையராஜா ஆதங்கம் # கோச்சடையான் பிஜிஎம் எபக்ட்?


====================


10 மோடியின் பதவியேற்வு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்தால் கலந்துகொள்வேன்:மனைவி யசோதா பென் # ராஜபக்சேவே போறப்ப நீங்க போனா என்ன?பொட்டிய கட்டுங்க


=====================


11 ஆளுநர் பதவி கொடுத்தால் ஏற்க மாட்டேன்-தமிழருவி மணியன் # ஏங்க.பாயாசம் ஊத்தறவரே இங்கே வாங்க.ம்.எனக்கு பாயாசம் 2 கரண்டி ஊத்தவேணாம்=====================


12 சிவகாசி-ஓட்டலில் சாப்பிடதும் இல்லாமல் கல்லாபெட்டியையும் ஆட்டையை போட்ட 4 நண்பர்கள்# நல்ல வேளை கேஷியர் ஆம்பளை.பொண்ணா இருந்திருந்தா.=====================13 ராஜபக்சே அழைப்பில் 1மாற்றமும் இல்லை. வைகோ கோரிக்கையை நிராகரித்தார் மோடி..# வைகோவை தமிழ்மக்களே மதிச்சு ஓட்டு போடலை.இவர் எப்படி மதிப்பாரு?======================


14 மோடி சம்மதித்தால் அவருடன் சேர்ந்து வாழ தயார் - யஷோதா பென் # நான் ரெடி இப்போ நீங்க ரெடியா? னு லேடி டூ மோடி


====================15  ராஜபகக்ஷே இந்தியா வந்தால் தமிழகம் பற்றி எரியும் - சீமான்.# பெட்ரோல் க்கு காசு இவர் தருவாரா?=======================


16 சிக்கன் குழம்பு கேட்ட கணவனை கழுத்தில் வெட்டி கொன்ற மனைவி # ரசம் கேட்டா விஷம் வெச்சுக்கொன்னிுருக்கும் போல=====================


17 வட தமிழகத்தில் சூறாவளி காற்றுடன் மழை # மொத்த தமிழ் நாட்லயும் தாக்கிட்டிருக்கு ஒரு சூறாவளி.கோச்சடையான்======================


18 ஜூன் 3-இல் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம# 3 6 2014 = கூட்டுத்தொகை 7 வருது.ஏழரை மதுரைல இருந்து வந்து கலந்துக்குவாரு======================


19 மோடி பதவியேற்புவிழாவில் நவாஸ்ஷெரீப் பங்கேற்பு: # இலங்கை ,சீனா, பாகிஸ்தான் என கோபால் பல்பொடிக்கே டப் பைட் குடுக்கும் போலயே


======================20 நாங்கள் விவாகரத்து செய்துகொள்ளவில்லை: யசோதா பென்! # ஜீவனாம்சம் கொடுக்கனுமேன்னு பம்மி இருப்பாரு.ஜோடி சேர்ந்தா அம்சம் இல்ல ஜீவனாம்சம்

0 comments: