Wednesday, June 25, 2014

லட்சுமிமேனன் படம் போட்ட மஞ்சப்பைல தாம்பூலம்

1. கள்ளத் தொடர்பு, சேடிஸ்ட்.. முன்னாள் அமைச்சர் செந்தமிழன் மீது மனைவி சரமாரி குற்றச்சாட்டு! # செந்தமிழன் தீந்தமிழன் ஆகிட்டாரா?


==================2 மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்! - ராமதாஸ் # நமக்கு அடிதடி வெட்டு குத்து தானே தெரியும்? மின்வெட்டு பத்தி என்ன தெரியும்?======================


3   தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் - ராமதாஸ் # காதலரா இருந்தாலும் சரி ,தேசமா இருந்தாலும் சரி பிரிக்கறதுலயே குறியா இருக்காரு====================


4  மத்தியஅரசு உதவியுடன், கட்சியின் இழந்த செல்வாக்கை மீட்போம்- விஜயகாந்த் # கன்னிப்பொண்ணோட கற்பும் ,கட்சியோட செல்வாக்கும் இழந்தா இழந்ததுதான்


===================5  டெல்லியில் மின் தட்டுப்பாடு: பாரதீய ஜனதா மீது அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு. # ஜெ டெல்லி போய்ட்டு வந்திருப்பாரோ?


=====================


6  உலகில் அதிக ‘இரைச்சலான நகரம்’ மும்பை ஆய்வில்... முடிவு # எல்லாம்.ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களா இருப்பாய்ங்க போலயே?


====================7  திருமணமான 4 நாட்களில் காதலனுடன் சென்ற புதுப்பெண் பரபரப்பு புகார். # 4 பேர் 4 விதமா பேசுனாலும் பரவால்லைனு கிளம்பிடுச்சு போல=====================


8  நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை #,அட கிறுக்கு பய புள்ளே.பணம் காசு எப்போ வேணா சம்பாதிச்சுக்கலாம்.நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டியே


====================


9  அடையாளம் இல்லாதவர்களுக்கு இசையால் முகவரி தந்திருக்கிறேன்: இளையராஜா # ஐ டி கார்டு புரொடக்சன் யூனிட் வெச்சுருக்கார் போல==================10  வித்தியாசமாக காதலிப்பேன் மனம் திறக்கிறார் ரெஜினா # தொழில் அதிபருக்குப்பதிலா நாடோடியை லவ்வப்போறீங்க்ளா?==================


11  காங்கிரசை சுத்தப்படுத்துவோம்: ஞானதேசிகன் # கூவத்தை சுத்தப்படுத்துவேன்னு சொல்றவரை நம்பு.காங்கிரசை சுத்தம் செய்வோம் என்பவரை நம்பாதே!


================


12  FB் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி# முதல் இரவு நடக்கும்போதும் ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு லைக்ஸ் வருதானு பார்த்திருப்பாங்க்ளோ?


===========================


13  கள்ளக் காதலை ஏற்க மறுத்த 40 வயது ஆசிரியை யை சுட்டுக் கொன்ற இளைஞன் # சொல்லும்போதே இது நல்ல காதல்னு சொல்லி இருந்தா சரினு சொல்லி இருக்கும்

===================

14 தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் -ராமதாஸ் #ஒரு அன்புமணி இங்கிருக்காரு.இன்னொரு ஜிங்கிளமணி எங்கிருக்காரு?


=====================15 2016ல் ஆட்சியை பிடிப்போம் -விஜயகாந்த் # ஒரு பொண்ணைக்கூட லவ் பண்ணாதவர் 234 பொண்ணும் நமக்குத்தான்னாராம்


=====================16 துப்பாக்கி ரீ மேக் ஹாலிடே தோல்வி -செய்தி # ஹிந்திலயும் விஜய் யே புக் ஆகி இருந்தா ஹிட் ஆகி இருக்குமோ?


=====================17 இந்தியா தனக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று நவாஸ் ஷெரிப் அதிருப்தி # லட்சுமிமேனன் படம் போட்ட மஞ்சப்பைல தாம்பூலம் கொடுத்து அனுப்புனமே?


====================18 என் காலை தொட்டு கும்பிடாதீர்கள்: அமைச்சர்களுக்கு மோடி வேண்டுகோள் # அதானே? தமிழக சிஎம் க்கும் பாரத பிரதமருக்கும் வித்தியாசம் வேணாமா?


====================19 விவசாயத்திற்காக 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம்: ஜெ.# கலைப்புலி எஸ் தாணு பட பூஜை மாதிரிஓப்பனிங் பிரம்மாண்டம்.ஆனா ரிசல்ட்?=====================


20  பெரியாரை விமர்சிப்பவர்கள் பெரியாருக்கு எதிரி.-கி.வீரமணி # இந்த மாதிரி ஜனநாயகத்துக்கு விரோதமாப்பேசறவங்கதான் எல்லாத்துக்கும் எதிரி


======================


0 comments: