Friday, June 13, 2014

முண்டாசுப்பட்டி - சினிமா விமர்சனம்


a
 நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில்  கலைஞர் டி வி யில் பல குறும்படங்களை இயக்கியவர்  திருப்பூர் ராம் . அவரது மாஸ்டர் பீஸ் காமெடி ஸ்டோரி 8 நிமிடப்படம் ஒன்றை ( உச்சம் ) 142 நிமிடப்படமாக  எடுத்திருக்கார். அது எப்படி எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் .

முண்டாசுப்பட்டினு ஒரு கிராமம் . இந்த ஊர்ல ஒரு மூட நம்பிக்கை. அதாவது யாராவது ஃபோட்டோ எடுத்துக்கிட்டா அவங்க செத்துடுவாங்க . இந்த நம்பிக்கை எப்படி அவங்க மனசுல வேர் போல் பதிஞ்சது என்பதற்கு ஒரு ஃபிளாஸ்பேக் கதை இருக்கு . 


அப்படிப்பட்ட கிராமத்துக்கு நம்ம  ஹீரோ வர்றார். அவர்  ஒரு ஃபோட்டோ கிராஃபர் . கிராமத்தில்  ஒரு பெருசு இப்பவோ அப்பவோனு இழுத்துட்டு  இருக்கு . அவரை  ஃபோட்டோ பிடிக்கனும். அது தான்  ஹீரோவுக்கு தரப்பட்ட வேலை . 

பொதுவா நாம கேமராவில் எந்த இயற்கைக்காட்சியைப்படம் பிடிச்சாலும் அது நல்லா க்ளிக் ஆகிடும் . அதுவே படம் பிடிச்சது  ஒரு பொண்ணா  இருந்தா அந்தப்பொண்ணே  க்ளிக் ஆகிடும் .


பெரிசு  வீட்டில்  ஹீரோயின் . ஹீரோ ஹீரோயினைப்பார்க்கறார். மெட்ராஸ் ஐ வந்தவவங்க கண்ணைப்பார்த்தா  மெட்ராஸ் ஐ வருதோ  இல்லையோ , இப்பவெல்லா,ம்  ஹீரோ ஹிரோயினைப்பார்த்து 10 விநாடில லவ் வந்துடுது . 

 இவங்க லவ் என்னாச்சு ? இது  ஒரு டிராக். 


பெருசுவை ஃபோட்டோ எடுத்தது சரியா விழலை. டெட் பாடியை எரிச்சுடறாங்க . இப்போ ஃபோட்டோ தர்லைன்னா கிராமத்து ஜனங்க பின்னிடுவாங்க . அதனால என்ன ஐடியா பண்றாங்கன்னா  சினிமா  ப்படத்துல நடிக்கும் ஆசை கொண்ட ஒரு சினிமாப்பைத்தியத்தை  அந்த டெட் பாடி மாதிரி கெட்டப் ரெடி பண்ணி  ஃபோட்டோ எடுக்கறாங்க . கடைசில பார்த்தா  அந்த சினிமாப்பைத்தியத்தோட சித்தப்பா தான்  டெட் பாடி . உண்மை தெரிஞ்ச அவன் என்ன பண்றான் ?  இது ஒரு டிராக் 


கிராமத்துல  ஒரு விண் கல் வந்து  விழுது . அது சாமின்னு மக்கள் கொண்டாடுறாங்க .அந்த  விண்கல் ல பல விலை மதிக்க முடியாத கனிமப்பொருட்கள் இருக்கு .சாதா கனிமம் இல்ல . கனிமொழி ஒண்ணே முக்கால் லட்சம் கோடி  அளவுக்கு இல்லைன்னாலும் தங்கம் , வைரம் மாதிரி காஸ்ட்லியான கனிமம் . அந்த அபூர்வக்கல்லை அபேஸ் பண்ணப்பார்க்கும் ஒரு பண்ணையார்  இது 3 வது டிராக் .

 மேலே சொன்ன 3 டிராக்கையும்  ஒரு கதையில் இணைச்சிருக்காங்க 


ஹீரோவா  விஷ்ணு . நல்ல நடிப்பு . ஆனால் கதை நடக்கும் கால கட்டம் 1982 என்பதால் அவருக்கு சுதாகர் காலது விக் ஸ்டைல் . லேசா உறுத்துது . அதை எல்லாம் திரைக்கதையும்  , வசனமும், காமெடி காட்சிகளிம் சரி பண்ணிடுது . 


 ஹீரொயினாக நந்திதா. அடக்க ஒடுக்கமான கேரக்டர் . ஹீரோவை இவர் ல வ் பண்றாரா ? இல்லையா? என்பதை  ரொம்ப இழுத்தடித்து  கேப்டன் பிஜேபி கூட்டணியை அறிவிக்க  லேட் செய்தது  போல் காத்திருக்க வைப்பது   சோதனை . 

ஹீரோவின் நண்பராக காளி . குறும்படங்களில்  ஹீரோவாக வந்தவர் . இதில்  ஹீரோவுக்கு ந்ண்பர்  இவர் டயலாக் டெலிவரி கலக்கல் . நல்ல டைமிங்க் சென்ஸ்


டெட் பாடிக்கு  பினாமியாக வரும்  முனீஷ் கந்த் கலக்கலான காமெடி நடிப்பு . கேமரா பயம் என்றால் கிலோ என்ன விலை? என கேட்பார் போல . மனிதர் பின்னிப்பெடல் எடுத்துட்டார்  . வாவ்!! 


சாமியாராக வருபவரும் செம காமெடி நடிப்பு . 


 ஆர்ட் டைரக்டர்க்கு படத்தில்  நல்ல  ஹோம் ஒர்க். கதை நடக்கும் இடம் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் . இயக்குநர் நம்ம ஏரியா திருப்பூர் என்பதால்  திரையில்  இயல்பாய் ஒரு நேட்டிவிட்டி வந்து விடுகிறது . இசை  சராசரிக்கும்  மேல் . ஒளிப்பதிவு , எடிட்டிங்க்  ஓகே ரகம் .


 


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இண்ட்டர் நெட்டில்  முண்டாசுப்பட்டி போசில் விஐபி களை போட்டிய்யில் கலந்து கொள்ள வைத்தது நல்ல உத்தி . குறுகிய காலத்தில் நம்ப  முடியாத  ரீச் 


2 அறிமுக  இசை அமைப்பாளர் ஷான்  ரோல்டன்  பி ஜி எம் மில் பல புதுமைகளை முயற்சித்து இருக்கார் ,.  அவருக்கு ஒரு ஷொட்டு .  ராசா மக பாட்டு வைரம் 


3 க்ளைமேக்ஸ் காட்சியில்  அந்த காமெடிக்கலக்கலான  முத்திரை  இயக்குநரின் அக்மார்க் முத்திரை 

4 பொட்டிக்கடைக்காரன் பொண்ட்டாட்டி யை  ஊரில் பாதிபேர் க்ரெக்ட் பண்ணுவது , பூசாரியுடன் அவர் ஓடிப்போவது  வெடிச்சிரிப்பு . அந்த கள்ளக்காதல் காமெடி டிராக்குக்கு  லேடீஸ் ஆடியன்சின் வரவேற்பு ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கு 


5  பூசாரியை வைத்தே  , அந்த  மூட நம்பிக்கையை வைத்தே   கதையை நகர்த்திய  விதம் ,  முனீஸ்காந்த்தின் அபார நடிப்பு 


6 கிராமத்தில்  இருக்கும் எல்லா வீட்டுக்கதவிலும்  “ திரும்பிப்போ “ என எழுதி வைத்திருப்பது எதற்கு என விளக்கும் காட்சியில் காமெடி அதகளம் 

 


இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  நாயகி பள்ளியில்  +2  படிக்கும் வகுப்பில்  ஒரு காட்சி . அதில் போர்டில் பதிவு  35  எனவும் வருகை  32 எனவும் காட்டறாங்க . ஆனா லாங்க் ஷாட்டில் காட்டும் போது ரொம்ப கம்மியான பொண்ணுங்க தான் இருக்காங்க 


 2 சாவு நடந்த இழவு வீட்டில்  நாயகன் , நாயகி காதல் வளர்க்கும் காட்சிகள் இப்போது  பல படங்களில் வந்து விட்டபடியால்  சலிப்பு ஊட்டும்  தேக்க நிலை 


3 நாயகி   ரூமில் படுத்திருக நாயகன் வீட்டின் மேல் கூரையில் ஓட்டைப்பிரித்து   ரூட் விடுவது  ஜெயம், படத்தில் பார்த்தாச்சு 


4    மெயின்  கதை டெட் பாடி ஆள் மாறாட்ட காமெடி தான் . அதை இழுக்க கதையை வளர்த்த  ஹீரோ - ஹீரோயின் காதல் கதை , விண்கல் கதை வலுவந்தமாக செருகபட்டதால் அது மெயின் கதையின் காமெடியை பாதிக்கிறது . முழுக்க முழுக்க இதை  ஒரு காமெடிப்படமாகவே  எடுத்திருக்கலாம்

5   வயாக்ரான் போல் பவர்  ஃபுல்லானது  பூனை சூப் என வரும் வசனமும் , காட்சி அமைப்பும்  உவ்வே ! 


6  ஹீரோ  ஹீரோயின்  இடையே காதல் காட்சிகள்   பெரிதாக மனதில் பதியவில்லை . சிக்கிரம் லவ் சீனை முடியுங்கப்பா, காமெடி சீன் போடுங்க என சொல்லும் அளவு காமெடி டாமினேட் செய்வதால் , காதல் காட்சியில் ஆழம் இல்லாததால்  திரைக்கதை  தடுமாறுகிறது


மனம் கவர்ந்த வசனங்கள்1. எங்க அய்யாவை  சிங்கம் மாதிரி   ஃபோட்டோ எடுக்கனும் 

 அதுக்கு காட்டுக்குதான் போகனும் 2  இவரு  பெரிய நேரு பரம்பரை . சாம்,பலை இந்தியா   பூரா  தெளிச்சுட்டுப்போறாரு . முப்போகமும் விளைஞ்சிடும் 


3  ஒரு டீ சொல்லு 

 டீ 

4  பாரதிராஜா படமா இருந்தா பாடை ல போகும் வேஷமா  இருந்தாலும் செய்வேன் 

5  விடிஞ்சாலும் விடிஞ்சிடு,ம் - இதுதான் நான் நடிச்ச படம் எப்பூடி ? டைட்டில்; ? 

 கிழிஞ்சாலும்  கிழிஞ்சிடும் 


6   துரு  புடிச்ச துப்பாக்கிக்கு  பூனை சூப் எதுக்கு ?  பூனை  சூப் வீணா போச்சு 


 7   டீ சாப்பிடறீங்களா ?

 ம் \\\

 கடைல போய் ஒரு  டீ சாப்ட்டுட்டு வாங்க . நான்  வெயிட் பண்றேன் 


 8  சும்மா   போற சனியனை  சுனைக்குள்ளே  கூப்ட்ட கதையா 


9  ஏண்டா  லேட் ? 

  பைக் ஸ்லோ \\


 இதுக்கு  நீ நடந்தே வந்திருக்கலாம்
சி பி கமெண்ட் -முண்டாசுப்பட்டி - மயிலின் தோகை போல் நீளமான , ஆனால் அழகான திரைக்கதை ,முன் பாதி ஆமை போல் ஸ்லோ - விகடன் மார்க் = 43 , ரேட்டிங்க் = 3 / 5 . ஏ செண்ட்டர்ல   ஓரளவு  ஓடிடும்,  பி சி க்கு அடுத்த படம் இன்னும் நல்லா பண்ண வாழ்த்துகள்


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =43

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங்= 3 / 5 a


கரூர் எல்லோரா - அஜந்தா காம்ப்ளெக்ஸ்
Embedded image permalinka
 
 
 
கரூர் எல்லோரா - அஜந்தா காம்ப்ளெக்ஸ் 

2 comments:

ஆர்வா said...

படம் இன்னும் பார்க்கலை... நாளைக்குத்தான் பார்க்கணும்.. உங்க விமர்சனம் பார்க்கலாம்ன்னு சொல்லுதே..

Unknown said...

உங்க பிளாக்கை படிப்பதற்கு விளம்பரங்கள் ரொம்ப தடையா இருக்கு
அதை கொஞ்சம் கவனிங்க பாஸ்