Friday, June 27, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 26. 6.2014 ) 8 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. சைவம்'.தலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. 


தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார். ”சைவம் முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும். 


இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் சாராவும், நாசரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன் நாசரின் இளைய மகன் பாஷாவும் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். சமீபத்தில் சைவம் படத்தைப் பார்த்த உதயநிதி அதன் வெளியீட்டு உரிமையை வாங்கினார். படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. 


இந்நிலையில் சைவம் படம் வரும் ஜூன் -27ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப்படத்தை வெளியிடுகிறது. விஜய்-அமலாபால் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் அவர்களுக்கு மிகச்சிறந்த பரிசாக ‘சைவம்’ இருக்கும்.

ஈரோடு ஆனூர்-ல்  ரிலீஸ் 

 
2. அதிதி   - ஸ்பெல்பௌண்ட் பிலிம்ஸ் INC சார்பில் ராமகிருஷ்ணன் நாயர் தயாரித்திருக்கும் படம் “அதிதி”. 


இதில் நந்தா நாயகனாகவும் அனன்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இன்னொரு நாயகனாக நிகேஷ்ராம் நடித்திருக்கிறார். மற்றும் தம்பிராமய்யா, சென்றாயன், பேபியுவினா,சம்பத்ராம், காஜல் பசுபதி, இவர்களுடன் பாடகர் பிரசன்னா, இன்னொரு முக்கிய வேடத்தில் அஸ்வதிவர்ஷா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடல் கட்சியில் ரக்ஷனா மௌரியா நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குனர் பரதனிடம் கேட்டோம்…“அதிதி” என்றால் சுத்தத் தமிழில் விருந்தினன் என்று பெயர். இளம் ஜோடிகளான நந்தா, அனன்யா வாழ்க்கையில அதிதியாக அதாவது அழையா விருந்தாளியாக நுழையும் நிகேஷ்ராம், அவர்களுக்கு என்ன மாதிரியான இடைஞ்சல்களைத் தருகிறான் என்பது கதை! ரசனை மிகு படமாக அதிதி உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெற்று முடிந்திருக்கிறது என்றார் பரதன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரதன். இவர் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கியதுடன் கில்லி, தூள், மதுர, ஒஸ்தி, தில், வீரம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு சண்டிகா வில்  ரிலீஸ் 


3 என்ன சத்தம் இந்த நேரம்  - டைரக்டர் ஜெயம் ராஜா, மாஜி ஹீரோயின் மானு நடித்து வரும் படம் என்ன சத்தம் இந்த நேரம். ஏவிஏ புரொடக்ஷன் அனூப் தயாரிக்கிறார். குரு ரமேஷ் டைரக்டர் செய்கிறார். இந்தப் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த அதிதி, ஆக்ரித்தி, ஆக்ஷிதி, ஆப்தி என்ற சகோதரிகள் நடிக்கிறார்கள். 8 வயதான இவர்கள் தோற்றத்திலும், குணத்திலும் ஒரே மாதிரியானவர்கள். ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றவர்களின் சந்தோஷமும், துக்கமும் படத்தின் கதை. 


என்ன சத்தம் இந்த நேரம்’ படத்துக்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.


ஏ.வி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்‘. நாயகனாக நிதின் சத்யா நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பணியாற்றிய குரு ரமேஷ் இயக்குகிறார்.உலக சினிமாவில் முதல்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்து, ஒரே தோற்றம் கொண்ட 8 வயதே ஆன நான்கு பெண் குழந்தைகள் அதீதி, ஆக்ரிதி, அக்ஷிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாகா இசையமைக்கிறார். சஞ்சய் பி.லோகநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.


பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் 4 பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இயக்குனர் ஜெயம் ராஜா நடித்திருக்கிறார்


ஒரு மிருகக்காட்சி சாலையை சுற்றிப்பார்க்க செல்லும் நான்கு மாணவிகள் வழி தெரியாமல் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கே வேலை பார்க்கும் பாதுகாவலரான நிதின் சத்யா அவர்களை எப்படி மீட்டு அனுப்பி வைக்கிறார் என்பதுதான் கதை.

 

. இதனிடையே படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே இந்தப் படம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு  ஸ்ரீ கிருஷ்ணா வில்  ரிலீஸ் 

4 தனுஷ் 5-ம் வகுப்பு - கே.வி.சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘தனுஷ். 5-ம் வகுப்பு’. இதில்  அகில் நாயகனாகவும், அஷ்ரிதா நாயகியாகவும் நடிக்கின்றனர். பழைய நடிகை கே.ஆர்.விஜயா முக்கிய கேரக்டரில் வருகிறார்.

நிழல்கள் ரவி, மீனாள், இளங்கோவன், மாஸ்டர் தருண், பேபி ஸ்ருதி ஆகியோரும் நடிக்கினறனர். இப்படத்துக்கு திரைக்கதை எழுதி கதாக.திருமாவளவன் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் சொல்கிறார். கணவன், மனைவி இடையே நடக்கும் ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதே கரு. குழந்தைகள் மனதில் எதை விதைக்கிறோமோ வளர்ந்த பிறகும் அதே மனவோட்டம் தொடரும். அதற்கான முடிச்சுகளை அவிழ்க்கும் படமாகவும் இருக்கும். தர்மபுரி, ஒகேனக்கல், பாலக்கோடு, ராயக்கோட்டை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து இறுதி கட்ட பணிகள் நடக்கின்றன.

ஒளிப்பதிவு: ஜி.சிவசங்கரன், இசை: ஷாம் டி.ராஜ், பாடல்: விவேகா, யுகபாரதி, மோகன்ராஜ், மீனாட்சி சுந்தரம், இணை தயாரிப்பு: டாக்டர் கலாவள்ளி, டாக்டர் மோகனசெந்தில், நிர்வாக தயாரிப்பு: வி.கார்த்திக். 

 ஈரோடு சங்கீதா வில்  ரிலீஸ் 


 
இனி ஒரு விதி செய்வோம் -ஆந்திராவில் வெற்றி பெற்ற சேவகுடு என்ற தெலுங்கு படம், இனி ஒரு விதி செய்வோம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

ஒரு நகரத்தையே தன் வசப்படுத்தி, மக்களை சித்ரவதை செய்யும் தாதாவிடம் இருந்து நகரத்தையும், மக்களையும் ஒரு இளைஞன் எப்படி மீட்கிறான்? என்பதே இந்த படத்தின் கதை. ஸ்ரீகாந்த், சார்மி, நாசர், பிரதீப் ராவத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார்.

சிபிசந்தர் வசனம் எழுத, கதை-திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருக்கிறார், வி.சமுத்திரா. தீரன் கிருஷ்ணா, எம்.எல்.விஜீத் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 
 


என் காதலுக்கு நானே வில்லன் -ஷோபா சினிமாஸ் சார்பில் கே.எஸ்.மணி தயாரிக்கும் படம் என் காதலுக்கு நானே வில்லன் இதில் நாயகனாக ரோஹித் நடிக்கிறார். இவர் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தம்பி மகன். நாயகியாக நிஷா அகர்வால் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, சாயாஜி ஷிண்டே, முமைத்கான் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை  பரசுராம் இயக்குகிறார். தெலுங்கில் வெளியாகி ஹிட்டான சோலே படமே  என் காதலுக்கு நானே வில்லன் பெயரில் தமிழில் வெளியாகிறது.

தன்னந்தனியாக வாழ்ந்து விட்ட நாயகன் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு நிறைய சொந்தங்கள் இருக்க வேண்டும் என விரும்புகிறான். அது போல நாயகியின் அண்ணன் தனது தங்கையை நிறைய சொந்தங்கள் உள்ள வீட்டுக்கு அனுப்ப விரும்புகிறான். இந்த சூழலில் நாயனும், நாயகியும் காதலிக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்பதே கதை.

 

7 மீண்டும் அம்மன்

கோடிராம கிருஷ்ணா இயக்கத்தில் “மீண்டும் அம்மன்”

Kodi Ramakrishans Meendum Amman
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு தமிழ், தெலுங்கு மற்றும் கேரளா, கர்நாடகாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பக்திப் படம் - அம்மன். அத்திரைப்படத்தை இயக்கிய கோடிராம கிருஷ்ணா அடுத்து இயக்கி இருக்கும் படம் “மீண்டும் அம்மன்”. இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடிக்கிறார். கதாநாயகனாக ரிச்சர்ட் நடிக்கிறார். கதாநாயகியாக குட்டி ராதிகா நடிக்கிறார். மற்றும் நாகமணி, ஜெய்வாணி, கோலிசோடா வில்லன் மது ஆகியோர் நடிக்கிறார்கள்.

தனது பக்தையையும்,அவளது குடும்பத்தையும் காக்க அம்மன் அரணாக இருக்கிறார். அம்மனின் அரனை மீறி அந்த குடும்பத்தை எப்படியாவது அழித்தேத் தீருவது என்று போராடும் தீயசக்திக்கும் இடையே நடக்கும் போராட்டமே “மீண்டும்அம்மன்” படத்தின் கதை. கிராபிக்ஸ் கலக்கலாக பிரமாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது. கிருஷ்ணா இசையமைக்க, வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் எழுதி தமிழ் உருவாக்கம் பொறுப்பேற்றிருப்பவர் ARK.ராஜராஜா. இவர் தமிழாக்க பொறுப்பேற்று இது வரை 200 படங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. எஸ்.சுந்தரலட்சுமி வழங்க சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
ஈரோடு ஸ்ரீநிவாசா வில்  ரிலீஸ் 
 
Transformers: Age of Extinction-   As humanity picks up the pieces, following the conclusion of "Transformers: Dark of the Moon," Autobots and Decepticons have all but vanished from the face of the planet. However, a group of powerful, ingenious businessman and scientists attempt to learn from past Transformer incursions and push the boundaries of technology beyond what they can control - all while an ancient, powerful Transformer menace sets Earth in his cross-hairs.
ஈரோடு அபிராமியில்  ரிலீஸ்  

0 comments: