Saturday, June 14, 2014

புரோட்டாவுக்கும் தமிழனுக்கும் என்ன சம்பந்தம்?

1. சேலை கட்டிய சோலையிடம் ஒரு காளை தலை குனிந்து பேசுகிறான் எனில் அச்சோலை சேலையை கெண்டைக்கால் தெரிய கொசுவத்தை தூக்கி சொருகி இருக்கும் என கொள்க====================


2 கோச்சடையான் ல ரஜினி ”கடல்” ல இருந்து “சுறா” வோட பீறிட்டுப்பாய்ந்து வரும்போதே உள்ளே எனக்கு அலாரம் அடிச்சுது


=====================

3 அபிமான நடிகரோ, அரசியல் தலைவரோ தவறான  ஒரு முடிவு எடுத்து விட்டால் அதற்கு சப்பைக்கட்டு கட்டாமல் நிதர்சனத்தை உணர்பவனே நடுநிலை வாதி


===================
4 பஸ்ஸில் லக்கேஜுடன் ஏறும் வயதான கிராமத்தாரை நாய் போல் கடிந்து கொள்ளும் கண்டக்டர்களே! உங்கள் பெற்றோருக்கும் இதே நிலை வரும் என் அறிக======================


5 மோடி ஆண்டாலும் ,ராகுல் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.ஆனா ராஜபக்சே மட்டும் பதவி ஏற்பு விழாவுக்கு வருவதை ஏத்துக்கமுடியாது=====================6 FB ல ஒரு பொண்ணு பார்க் ல நின்னு எடுத்த போட்டோவுக்கு ஒருத்தர் " பேக் கிரவுன்ட் சூப்பர் " னு கமென்ட் போட்டிருக்காரு.புரியாம அதை லைக் பண்ணுது======================


7 தனக்கு அறிமுகமே இல்லாத அபிமான ஹீரோ செஞ்ச தப்பை நியாயப்படுத்த பக்கத்து வீட்டுக்காரனைக்கூட பகைச்சுக்குவான் தமிழன்=====================8 விருந்துக்கு அழைத்தவர் வீட்டுக்கு வெறுங்கையுடன் போனாலும் ,ஹாஸ்பிடலில் இருக்கும் நோயாளியைப்பார்க்கப்போகையில் வெறுங்கையுடன் போகாதே!======================


9 ஆடி மாசத்துல புது மணத்தம்பதியை பிரிச்சு வெச்சது அந்தக்காலம். புதுமணத்தம்பதிக்கு ஆடி கார் வாங்கித்தருவது இந்தக்காலம்


====================10 ஷங்கர் ன் ஐ படத்தை ஐ மேக்ஸ் ல பார்ப்பவங்க " ஐ.ஐ வாட்ச்டு ஐ இன் ஐ மேக்ஸ்"ம்பாங்க
\

======================


11 ஸ்டைல் என நினைத்து நீ புகை வளையத்தை வானில் விட்டால் வெகு சீக்கிரம் பூமியில் நீ மலர் வளையம் மரியாதை பெறுவாய்!=====================


12 உன் குடும்பத்துடன் நீ செலவழிக்கும் நேரம் வீணாய்ப்போவதே இல்லை.மனநிம்மதிக்கான முதலீடு அது======================


13 அம்புட்டு ஹாப்பியா இருக்கேன்னு யாராவது அலப்பரை செஞ்சா வீட்ல குழாப்புட்டு செஞ்சு குடுத்திருக்காங்கனு அர்த்தம்====================


14 டிவி தெரியலை ,கேபிள் ஒயர் பிரச்னை என்றால் மட்டுமே மொட்டை மாடிக்கு மக்கள் வருகை தரும் கால கட்டம் இது====================15 கோயில் பிரகாரத்தில் உள்ளேபோகும் வழி செம கூட்டமா இருந்தா அசால்ட்டா வெளியே வரும் வழியில் உள்ளே போய் தரிசனம் செய்பவன் தான் தமிழன்


========================


16 கோயில் பிரகாரத்தில் சாமி கும்பிடும்போது கூட இந்த பொண்டாட்டிங்க எல்லாம் புருசனைக்கண்காணிச்ட்டேதான் இருக்காங்க.# தமிழச்சிடா=======================17 வயதாகி விட்டதே இனி நாம் என்ன சாதிக்க முடியும் என மனம் கலங்காதே! உலகமே வியந்து நோக்கும் இந்தியப்பிரதமர் மோடி கூட வயதானபின்னரே சாதித்தார்


====================


18 சின்ன வயசில் எதுவும் சாதிக்க முடியாதென எண்ணாதே.ஒரு முத்தக்காட்சியில் நடிக்க.10 லட்சம் கேட்ட லட்சுமிமேனன் வயது 18 தான்


=====================


19 எப்பவும் எல்லாத்துக்கும் நதிமூலமும் ரிஷிமூலமும் பார்க்க நீ மூலம் நோய் க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் இல்லை என்பதை உணர்====================20 புரோட்டா  எண்ணிக்கை பார்த்து கண் பட்டுப்போய்விடக்கூடாதே என அதை பிச்சுப்பிச்சுப்போட்டு அதுல குருமாவை ஊத்தி மறைச்சு வளைச்சு அடிப்பான்தமிழன்


============================


 

0 comments: