Saturday, June 07, 2014

உன் சமையல் அறையில் -சினிமா விமர்சனம்


எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை சுட்டு மலையாளத்தில் சால்ட் அண்ட் பெப்பர்னு லாலை வெச்சு  சூப்பர் ஹிட் கொடுத்தாங்க .அதை நம்ம தமிழில்  ரீமேக் செய்து இயக்கி இருப்பது  ஆரோக்யமான தமிழ் சினிமா விரும்பி  பிரகாஷ்ராஜ். இது  எந்த அளவுக்கு  ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் . ஹீரோ ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ல அதாவது  தொல்பொருள் துறை ல அதிகாரி . 45 வயசாகியும்  மேரேஜ் ஆகலை. பொண்ணு எதுவும் செட் ஆகலை . 25 வயசுப்பையனுக்கே பொண்ணுங்க செட் ஆவது கடினம். 45 க்கு எப்படி ஆகும் ? 

ஒரு  ராங்க் கால் ல  ஹீரோயின் அறிமுகம்  கிடைக்குது . ஃபோன் ல யே கடலை போடறாங்க. தமிழன் எந்தத்துறைல வேலை செஞ்சாலும் விவசாயத்துறை கடலை டிபர்ட்மெண்ட் ல மன்னனா இருப்பான்.அந்த விதிப்படி 2 பேரும்  க்டலை சாகுபடி பண்ணி  நேர் ல மீட் பண்ண பிளான் . ஆனா தயக்கம். நேர் ல பார்க்கும்போது  பிடிக்காம போய்ட்டா? அதனால 2 பேருமே அவங்களே சந்திச்சுக்காம அவங்க சார்பா  ஒரு ஆளை அனுப்பறாங்க .மோடி பதவி ஏற்பு விழாவில்  ரஜினி போகாம அவர் ஃபேமிலியை அனுப்பிய மாதிரி . ஆள் எப்படினு பார்த்துட்டு வரச்சொல்றாங்க 

அவங்க 2 பேருக்கும் பத்திக்குது . 2 பேரும் அவங்கவங்க எஜமான் கிட்டே வந்து உங்க ஆள் சரியில்லை கட் பண்ணிடுங்கனு சொல்லிட்டு இவங்க காதலை  டெவலப் பண்ணிட்டு   இருக்காங்க . 

 ஒரிஜினல்  லவ் ஜோடி எப்படி சேர்றாங்க என்பது தான்  கதை இந்தப்படத்தின்  ஹீரோ  இசை ஞாநி  இளையராஜா தான் நு கண்ணை  மூடிக்கிட்டு காதைத்திறந்து  வெச்சுக்கிட்டு  சொல்லிடலாம் . என்ன ஒரு  இசை . நல்ல இசை  சாதாரண படத்தை அசாதாரண படமாகவும் , நல்ல ப்டத்தை  பிரமாதமான படமாகவும் மாற்ற வல்லவை . அந்த  வகையில்  திரைக்கதையில் பல  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்   தன் இசையால் அதை எல்லாம்  மறைத்து மறக்கடிக்கிறார்  ராஜா . 


ஹீரோவா  பிரகாஷ் ராஜ் . தமிழ்  சினிமாவில் 2 வில்லன்கள் மறக்க முடியாதவர்கள்   1  ரகுவரன்  2 பிரகாஷ் ராஜ் . இவர் புத்திசாலித்தனமாக   கேரக்டர்  ரோலும் பண்ணி  ஹீரோவாகவும்  தன்னை தக்க வைக்கிறார் . விடுகதை படத்தில்  இவர் ஆல்ரெடி செஞ்ச ரோல்  தான்  இதுவும் என்றாலும்  மனிதர்  குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார் . ஹீரோயினாக  சினேகா . மேரேஜ் க்குப்பின் இவர் அழகு நேரில் 25 %  கூடியும்  , திரையில்  50 %  குறைந்திருப்பதும் ஏனோ?  அவர்  உடலில்   மாபெரும் சோர்வு . பிரசன்னா கவனம் . முகத்தில்  கூட   புன்னகை  ஒரு மாற்று  உற்சாகம்  குறைவாகவே  தெரிகிறது . க்ளைமாக்ஸ் காட்சியில் சபாஷ்  போட வைக்கிறார் . 


இன்னொரு  ஹீரோவாக  புதுமுகம் தேஜஸ்.  முகத்தில் நல்ல தேஜஸ் . எதிர் காலம் உண்டு . நடிப்பில் பாஸ் மார்க் 


 இன்னொரு ஹீரோயின் சம்யுக்தா ஹர்னாட் .  மிக மெல்லிய  புருவங்கள் . மிக ஒல்லிய உதடுகள்  என  தமிழனின் மனசை அள்ளியவர் பட்டத்தை எட்டிப்பிடிக்க  முயலாதவராக வே  இருக்கிறார்.  காதல் காட்சிகளில்  முக பாவம் கன கச்சிதம் . 

தம்பி ராமைய்யா சமையல் கலைஞனாக கலக்குகிறார் ,  செண்ட்டிமெண்ட் காட்சி இவருக்கு நல்லா வருது . ஆனா பல படங்களில்  மொக்கை காமெடி தனக்கு நல்லா வருது என நினைத்து  இவர் பர்ஃபார்மென்ஸ் செய்வது ஏனோ ? 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 டைட்டில் சாங்க் அபாரம்  .  கேபிள் சங்கரின் சாப்பட்டுக்கடை தொகுப்பு போல எந்த எந்த  ஊரில் என்ன உணவு வகை பிரபலம் என்பதை விளக்கும் பாடல் அட்டகாசம் ., அதை க்காட்சிப்படுத்திய விதமும் அருமை . 87  லொக்கேஷன்கள்  4 நிமிட பாடலில் . இந்தப்பொறப்புதான் பாட்டு இசைஞானியின்  மகுடத்தில் மற்றும்  ஒரு வைரக்கல் 


2 பெண் பார்க்க வந்த இடத்தில்  அந்த  வீட்டு சமையல் காரனை தன் கூடவே அழைத்துச்செல்லும் காட்சி ஆரவாரம் .  தியேட்டரில் அப்ளாஸ் மழை 


3 போஸ்டர்  டிசைன்  , டைட்டில் அட்ராக்சன்  , படத்துக்கான  ப்ரமோ எல்,லாம் கனகச்சிதம் 4   நான் தான்  உனக்கு  வில்லன்  எனும்போது  பிரகாஷ்  ராஜ்  “ எனக்கேவா?”:  என கேட்கும்போது  டைமிங்க் நல்லா இருக்கு . ( ஆனா அவர் இதே போல்  3 தெலுங்குப்படத்தில்  பேசிட்டார் ) 

5 ஒளிப்பதிவு  , எடிட்டிங்க்   ஓக்கே  ரகம் 
இயக்குநரிடம் சில கேள்விகள் 
1   படத்தின்  மாபெரும்  மைனஸ் என்ன  தெரியுமா? மூலக்கதை எழுதப்பட்ட காலகட்டம்  கேமரா ஃபோன்  புழக்கத்தில்  இல்லாத  காலம். அதை பீரியட் ஃபிலிமாக எடுத்திருக்கனும் . அல்லது  திரைக்கதையில் மாற்றம் செஞ்சிருக்கனும் 


2 ஹீரோ  ஹீரோயினை பார்க்க போக கூச்சப்பட்டு  தன் சார்பாக சொந்தக்காரப்பையனை  அனுப்பறார் . ஹீரோயின் தன் தங்கையை அனுப்பறார் . இருவரும்   கேமரா செல் ஃபோனில் அவங்களை படம்  பிடிச்சுட்டு வா அப்டினு சொல்ல மாட்டாங்களா?> சிம்ப்பிள் லாஜிக். இது  மொத்தப்படத்தையுமே பாதிக்குதே ? 


3   ஆள் மாறாட்ட சந்திப்புக்குப்பின்  செல் ஃபோனில்  மெசேஜ்  கூட அனுப்பிக்க மாட்டாங்களா?  அட்லீஸ்ட்  ஒரு கால்  கூட பண்ணிக்க மாட்டாங்களா ? 


4   ஃபோனில்   பல  முறை பேசியவர்கள்  க்ளைமாக்ஸ் ல் காரில்   ஒருவருடன்  ஒருவர்  பேசும்போது  குரல் அடையாளம்  தெரியாதா? 


5    ஆதிவாசிக்கு அடைக்கலம்  கொடுத்தல்  , லோக்கல் எக்ஸ் எம் எல் ஏ அராஜகம்  அந்த  போர்சன்  எதுக்கு ? கதைக்கு சம்பந்தமே  இல்லாமல் ? 


6 அதே  போல்  சினேகா வீட்டில்  ஒரு திருநங்கை கேரக்டர்  தேவை இல்லாமல்  உலா வருது . 


7  ஊர்வசி  கேரக்டரும் , ஐஸ்வர்யா  கேரக்டரும்  வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் .  ஐஸ்வர்யாவின்  ஆண் கட்டைக்க்குரல் சகிக்கலை 

மனம் கவர்ந்த வசனங்கள்
  1. காதலி சொன்னா பொய் கூட அழகாத்தெரியும் #,உ ச அ2
  2. நீ அவளுக்குத்தேவையா?இல்லையா?ங்கறதை அவதான் முடிவு பண்ணனும்.நீ எப்படி முடிவு பண்ண முடியும்? # உ ச அ3
  3. வாழ்க்கைல எல்லாருக்கும் துணை தேவைப்படும் ஏதோ ஒரு கட்டத்துல # உ ச அ 4
  4. அட்லீஸ்ட் அவ வயசாவது தெரியுமா? வாய்ஸ் தெரியும் # உ ச அ5
  5. நம்மூர் ஹீரோயின் கள் எல்லாம் வேஸ்ட்டுடா.வடக்கத்திப்பொண்ணுங்க தான் கும்முனு இருப்பாங்க # உ ச அ

   6 .சமைக்கும்போதெல்லாம் எனக்கு எங்க அம்மா நினைவு வரும். எல்லோர்   வாழ்க்கையிலும் அம்மா நினைவு தவிர்க்கமுடியாதது #,உ ச அ7 .பொண்ணுங்க கிட்டே பேசும்போது சுருக்கமாப்பேசக்கூடாது.எக்ஸ்டென்ட் பண்ணிப்பேசனும் # உ ச அ

8  டென்ஷனா இருக்கா? டென்சனா தெரியுதா? # உ ச அ ( டயலாக் = விஜி)


9 .பஸ்ல போனா கண்டவனுங்க இடிப்பானுங்க.தெரிஞ்ச பாய் பிரன்ட் கூட சேப்டியா பைக் ல போனா என்ன தப்பு? # உ ச அ


10  காதலி சொன்னா பொய் கூட அழகாத்தெரியும் #,உ ச அ


படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  1. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது .இளையராஜாவின் கொண்டாட்டப்பாடல் .துள் இசை #,உ ச அ2
  2. ஈரமாய் ஈரமாய் பூ மழை தூவுதே மெலோடியில் இளையராஜா தான் ஒரு மென் இசை சிறப்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கார் # உ ச.அ
3.திரைக்கதையின் தேவை கருதி மவுன மொழியை உலவ விடும் இளையராஜா மவுனத்தை உடைக்கும் முதல் நொடியில் வட்டியும் முதலுமாய் சிக்சர் அடிப்பார் # உ ச அ4     .3 குடும்பப்பெண்கள் 1 சேர்ந்து வீட்டில் சாதாரணமா சரக்கு அடிக்கறாங்க. # அய்யோ ராமா @,உ ச அ

5 .இளையராஜா இசை அமைக்கும் படத்தில் மட்டும் அவரும் ஒரு கதை சொல்லி # வாட் எ பிஜிஎம்?6 .இந்தப்பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக்கிடைச்சது # இளையராஜா ராக்கிங்க் இசை


  


7 .இளையராஜா இன்னிசை என்றாலே டைட்டில் சாங் ஸ்பெஷலிஸ்ட் தானே? # உன் சமையல் அறையில்
சி பி கமெண்ட் -உன் சமையல் அறையில் - ஆள் மாறாட்டக்காதல் கதை -கண்ணியம் -இளையராஜாவின் இசை + .லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம் - விகடன் மார்க் =41 .ரேட்டிங் 2.5 / 5எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41

குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =2.5 / 5

டிஸ்கி -மஞ்சப்பை -சினிமா விமர்சனம்

-http://www.adrasaka.com/2014/06/blog-post_2063.html


Un Samayal Arayil
Directed by Prakash Raj
Produced by Prakash Raj
Written by Viji (dialogues)
Screenplay by Prakash Raj
Story by Shyam Pushkaran
Dileesh Nair
Based on Salt N' Pepper
by Aashiq Abu
Starring Prakash Raj
Sneha
Urvashi
Music by Ilaiyaraaja
Cinematography Preetha
Editing by Kishore Te.
Studio Duet Movies
Distributed by Toogudeepa Distributors (Kannada)[1]
Duet Movies (Tamil)
Sri Venkateswara Creations (Telugu)
Release dates 6 June 2014
Country India
Language

1 comments:

writerpara said...

விமரிசனமெல்லாம் ஜோராக எழுதுகிறீர்கள். ஆனால் தளத்தில் படிக்க முடியாதபடிக்கு விளம்பர இம்சை. ஒரு ஓரமாக அதைத் தூக்கிப் போட்டால்தான் என்ன? ஸ்க்ரால் ஆகும்போதெல்லாம் கூடவே வந்து இம்சிக்கிறது. ஆஃப் செய்யும் ஆப்ஷனும் இல்லை.