Sunday, June 29, 2014

மத்திய பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்

1.

வரும் ஜூலை 10 ஆம் தேதி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி. பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய டாப் 10 அம்சங்கள் இதோ:

வருமான வரி விலக்கு உச்சவரம்பு: அருண் ஜேட்லி ஏற்கெனவே இது குறித்து தெரிவித்தது என்னவெனில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சத்திற்கு அதிகரிக்க்ப்பவேண்டும் என்பதாகும். இதனை அவர் அறிவித்தார் வரி வலையிலிருந்து 3 கோடி மக்கள் விடுவிக்கப்படுவார்கள். நாட்டின் சம்பளப் பிரிவினருக்கு நிம்மதி அளிக்க என்ன திட்டம் வைத்திருக்கிறார் ஜேட்லி என்பது முதல் அம்சம். ஏனெனில் பாஜக-வின் பெரும்பான்மை வாக்கு வங்கியாயிற்றே இது. | ஷிவ்குமார் புஷ்பகர்

 
2 வரிச் சீர்திருத்தங்கள்: 2009ஆம் ஆண்டிலிருந்து நேரடி வரி மசோதா நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவை அமல் செய்து இதன் மூலம் சில சீர்திருத்தங்களைச் செய்வது பாஜக-வின் நோக்கமாகும். ஆனால் பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. வரிச் சீர்திருத்த மசோதாக்களின் நிலை என்ன என்பது அடுத்த முக்கிய அம்சம். | ஜி.கிருஷ்ணசாமி

 

3 3. பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு: மே, 2014 நிலவரப்படி நாட்டின் பணவீக்க விகிதம் 8.28%. முந்தைய அரசின் வீழ்ச்சிக்கு விலை உயர்வுகளே முக்கியக் காரணம், மேலும் பதுக்கலை ஒழித்தால் பணவீக்கம் குறையும் விலையும் குறையும் என்று அருண் ஜேட்லி கூறிவருகிறார். இந்த விவகாரத்தில் அரசின் மீது பெரும் எதிர்பார்ப்பு காத்திருக்கும் நிலையில் ஜேட்லியின் பட்ஜெட் என்ன செய்யப்போகிறது என்பது 3வது முக்கிய அம்சம். | நாகர கோபால்
 
4. கருப்புப் பண விவகாரம்: அயல் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீண்டும் கொண்டு வருதல். இதற்காக சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிக்கும் அருண் ஜேட்லி கடிதம் எழுதியுள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் நாட்டைப் பொருளாதாரச் சீரழிவிற்கு இட்டுச் செல்லும் கருப்புப் பண விவகாரங்களுக்கு ஜேட்லியின் கொள்கை ரீதியான நடவடிக்கை என்ன என்பதும் இந்த பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம். | படம்: வி.சுதர்சன்


 
5. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நாடாளுமன்ற உரையில் "100 புதிய நகரங்கள்” என்று கூறினார். மேலும் கிராமங்களில் உயர்தர நெடுஞ்சாலை, அனைவருக்கும் வீடு, தடையற்ற, குறையற்ற மின்சாரம், அதிவேக ரயில்கள், சிறந்த வான் வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்து வசதிகள், என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இதற்கெல்லாம் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும், அத்தனைக்கும் நிதி ஒதுக்கப்பட முடியுமா என்பது இந்த பட்ஜெட் எதிர்நோக்கும் அடுத்த முக்கிய அம்சமாகும். | விவேக் பிந்த்ரே


6. வறட்சி அபாயம் மற்றும் விவசாயம்: பலவீனமான பருவமழை மற்றும் எல் நினோ விளைவு என்று கூறப்படும் ஒரு இயற்கை விளைவினால் நாட்டின் பெரும்பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நீடித்து வரும் விவசாயிகள் தற்கொலை, விவசாயக் கடன் விவகாரம், நாட்டின் உயிர்மூச்சான வேளாண் துறையில் மேம்பாடுகள், உணவு தானியங்களை சரிவர பாதுகாத்து வைக்க முடியாத மோசமான கிட்டங்கி வசதிகள் என்று இந்தத் துறையில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா? அல்லது யு.பி.ஏ. அரசு போல் மேட்டுக்குடி பட்ஜெட் ஆக இது அமையுமா? என்பது மிக முக்கியமான அம்சமாகும். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்
7. முதலிட்டிற்கான சாதக சூழ்நிலையை உருவாக்குதல்: எதிர்க்கட்சியாக பாஜக இருந்த போது 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் பின்னோக்கியத் திருத்தம் செய்வதை ’வரி பயங்கரவாதம்’ என்று விமர்சித்தது. வணிகத் துறையிலும் பின்னோக்கிய வரி என்பது சரியான வரவேற்பைப் பெறவில்லை. வோடஃபோன் மற்றும் நோக்கியா நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீஸ் விவகாரம் முதலீட்டுக்கான சாதக சூழ்நிலையைப் பாதித்துள்ளது. “வர்த்தக-நட்பு” பாஜக அரசு இப்போது என்ன செய்யப்போகிறது? | படம்: பிஜாய் கோஷ் 
 
 
8. கங்கை நதியை சுத்தம் செய்தல்: கங்கை நதியில் பல தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலந்து சில பகுதிகளில் நச்சு நீராகவே மாறியுள்ளது. இதனை மோடியும் ஜனாதிபதி தனது உரையிலும் தெரிவித்தனர். இதற்கு பட்ஜெட்டில் என்ன நிதி ஒதுக்கப்படவுள்ளது என்பது அடுத்த எதிர்பார்ப்பு. | படம்: பிடிஐ
 
 
 
9. புதிய மாநிலம் தெலங்கானா உதயம், ஆந்திராவின் எதிர்காலம்: பல ஆண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு யு.பி.ஏ. அரசால் உருவான தெலுங்கானா என்ற புதிய மாநிலம். இதற்காக ஒதுக்கப்படும் தொகை. ஆந்திராவுக்கான புதிய தலைநகரும் உருவாகியுள்ளது. இதனால் கூடுதல் நிதியுதவி அந்த மாநிலங்களுக்குத் தேவைப்படும் இதை எப்படி சமாளிக்கப்போகிறார் அருண் ஜேட்லி. | படம்: கே.வி.ரமணா
 
 
10. ராணுவம்: அருண் ஜேட்லி பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பிலும் இருப்பதால், ராணுவத்திற்கு எவ்வளவு தொகையை இந்த பட்ஜெட்டில் ஒதுக்குகிறார் ஜெட்லி என்பதும் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. | படம்: பி.வி.சிவக்குமார்
 
 
thanx  - the hindu

0 comments: