

நடிகை குஷ்பு | கோப்புப் படம்
திமுகவின் அடிப்படை உறுப்பினர் நிலையில் இருந்து விலகுவதாக, நடிகை குஷ்பு இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.
இது தொடர்பான விலகல் கடிதத்தை, திமுக தலைவர் கருணாநிதிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "என்னை தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக்கொண்ட
அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே
நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொதுவாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்.
அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம்
சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல்
அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள்.
ஆனால், என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து
நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும்
பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தும், அதன் அடிப்படை உறுப்பினர்
என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன்
மேற்கொள்கிறேன்" என்று அந்தக் கடிதத்தில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
thanx - the hindu
- manivannan Flagஉண்மையான உழைப்புக்கு dmk வில் மரியாதை இருக்காது என்பதை இப்போதுதான் உணர்ந்து உள்ளார்6 days ago · (0) · (0) · reply (0) · promote to News Feed
Sadha Sadhanandavel
இப்போதெல்லாம் பெற்ற மகனுக்கே பதவி இல்லை என்கிற போது, நமக்கு எப்படி கிடைக்கும் என்று யோசிக்க வேண்டாமா? குறைந்த பட்சம் நீங்கள் வாக்கு சேகரிக்க சென்ற செலவையாவது கொடுத்தார்களா?
0 comments:
Post a Comment