Monday, June 30, 2014

புதிய கட்டிடங்களின் தரத்தை ஆராய்வது எப்படி?

சென்னை அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் ஒரு கட்டிடம் தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆராய ஒரு முறையான அமைப்பு தேவை என்பதை உணர்த்தியுள்ளது. 


கடந்த 2012 அக்டோபரில் திருவல்லிக்கேணியில் ஒரு பழைய அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். அப்போது சுறுசுறுப்படைந்த மாநகராட்சி அதிகாரிகள், சில விதிமுறைகளை சொல்லிவிட்டு பின்னர் அதை கிடப்பில் போட்டனர். 



இந்நிலையில்தான் மவுலிவாக்கம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 11 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் வீடு வாங்குவதற்காக ஏராளமானோர் முன்பணம் கட்டியுள்ளனர். கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த நிலையில் சாதாரண மழைக்கே இடிந்து விழுந்துவிட்டது. கட்டி முடித்து அனைவரும் குடியேறிய பிறகு இடிந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். கட்டிடம் இடிந்து நொறுங்கிய இடம் ஏரிப்பகுதி என்றும் தெரியவந்துள்ளது. 



இந்த விபத்து குறித்து தேசிய அளவிலான கட்டுமான சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 


பொறியாளர்கள், கட்டிடக் கலை வல்லுநர்கள், டிசைனர்கள் என பல தரப்பட்ட நிபுணர்கள், குறிப்பாக பல்லாண்டு அனுபவம் பெற்றவர்கள் சேர்ந்து முறையாக திட்டமிட்டு கட்டிடப்பணியை செயல்படுத்த வேண்டும். முதலில் கட்டிடம் அமையவிருக்கும் பகுதியின் மண்ணின் தன்மையை ஆய்வுக்குட்படுத்தி, அதற்கேற்ப கட்டிடங்களின் வடிவமைப்பை உருவாக்க வேண்டும். ஆனால், இன்றோ புற்றீசல் போல் பல தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைக் கட்டத் தொடங்கியிருக்கின்றன. அடுக்குமாடி கட்டுமானத் தொழிலில் முன் அனுபவம் இருக்கிறதா என்பதையெல்லாம் அதிகாரிகள் ஆராய்ந்து பார்ப்பதில்லை. அதற்கான வழிமுறைகளும் வகுக்கப்படவில்லை. 


இதுதவிர, கட்டிடத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை எக்காரணம் கொண்டும் அந்த இடங்களில் தங்க வைக்கக் கூடாது. இதனை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. 



வடமாநிலத்தவர்கள்
தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் கூலி அதிகமாகக் கேட்பதாலும், குறைந்த கூலிக்கு மற்ற மாநிலங்களில் ஆள் கிடைப்பதாலும் வடமாநிலத்தவர்களை இங்குள்ள பல கட்டுமான நிறுவனங்கள் பணிக்கு அமர்த்துகின்றன. 


தற்போது விபத்துக்குள்ளான கட்டிடத்தில் இடிதாங்கி இல்லாததால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இத்தொழிலில் அனுபவமற்ற நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுப்பதுடன் தொழிலாளர்களுக்குத் தேவையான வசதி செய்து தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

.
தர நெறிமுறைகள் 

 
கட்டிடம் கட்டுவதற்கு முன் மாநகராட்சியோ, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமமோ அதற்கான திட்ட அனுமதியை வழங்குகின்றன. அதன்பிறகு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், பணி முடிந்ததற்கான சான்றிதழையும் அவை வழங்குகின்றன. ஆனால், கட்டிடம் கட்டும்போதே அது தரமாகக் கட்டப்படுகிறதா, தரமான பொருட்களைக் கொண்டுதான் கட்டப்படுகிறதா என்பதை ஆராய அரசிடம் வழிவகைகள் ஏதும் இல்லை. 



எனவே, புதிய கட்டிடங்கள் கட்டப்படும்போது அப்பணி முடியும் வரை, இடையிடையே அதிகாரிகள் சென்று கண்காணிக்கும் வகையில் புதிய நெறிமுறைகளை சிஎம்டிஏவும் மாநகராட்சியும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இப்பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள், முறைகேடுகளில் ஈடுபடாதவகையில், கட்டிடத்தின் உறுதித்தன்மைக்கு அவர்களைப் பொறுப்பாளிகளாக்கும் வகையில் விதிகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அந்த கண்காணிப்பு நடைமுறை, நேர்மையாக நடைபெறும் என்கிறார் சிஎம்டிஏ-வில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் நகரமைப்பு வல்லுநர். 


நன்றி - த இந்து


  • Rajagopalan  from CHETPUT
    One must get into specifics to avoid such mishaps. 1) Is this founded on defunct tanks ? 2)Whether Soils were tested by exploratory bore holes and SBC is ascertained ? 3) Depletion of water table by massive pumping as Chennai is water scarcity city? 4) Are the distress signs were progressing from bottom to top ? if so crack widths . 6) What type of foundations were adopted ?
    Points
    320
    about 23 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • s Palraj Insurance Consultant at Ayyampalayam' Kavandapadi Bhavani TK 638455 from COIMBATORE
    குண்டு வெடிப்பு, பள்ளிக்கூடம் தீ விபத்து., பள்ளிப் பேருந்து விபத்து, சாலை ஓரக் கிணற்றில் பேருந்து விழுந்து விபத்து, ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை விழுந்து விபத்து, அதிக குழந்தைகளை ஏற்றிய ஆட்டோ விபத்து., விடுதியில் தங்கியுள்ள குழந்தையை கடத்தி பாலியல் கொடுமை, பள்ளிக் குழந்தைகள் உல்லாசப் பயணத்தின் போது நீரில் மூழ்கி மரணம், ரயில் குண்டு வெடிப்பு போன்றவை நடந்தவுடன் எடுக்கும் நடவடிக்கையோடு சரி. பிறகு யாரும் கண்டு கொள்வது இல்லை. இவை அனைத்தும் மனிதனின் உதாசீனத்தால் நடைபெறுகின்றன. இவைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் எல்லா மட்டத்திலும் காசை வாரி இரைத்து தண்டனையிலிருந்து தப்பி விடுகின்றனர். இதுவே இவை போன்ற. விபத்துகளுக்குக் காரணம். எனவே இவைகள் தொடர்கதை தான். எஸ். பால்ராஜ். ஓடத்துறை. கவுந்தப்பாடி.
    a day ago ·   (4) ·   (0) ·  reply (1)   
    • Karan  from CHETPUT
      நல்ல கருத்து ஆனால் இவை எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் தான் ஐயா
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • selvarajan.  from PONDICHERRY
    இன்று மார்கெட்டில் கிடைக்கின்ற கட்டுமான பொருட்களின் தரம் சரியாக இருந்தாலே ---இந்த மாதிரியான அசம்பாவிதங்களை ஓரளவுக்கு தடுக்க முடியும் .அன்று வெறும்" போர்ட் லேண்ட் " என்ற சிமெண்ட்டை வைத்து கட்டிய கட்டிடங்கள் இன்றும் வலுவானதாக உள்ளது ---ஆனால் தற்போது சிமெண்ட் கம்பெனிகள் " கிரேடு " என்கிற பெயரில் பலவித வகைகளை சாம்பல் கொண்டும் தயாரித்து விற்பனை செய்கின்றார்கள் . அதைப்போல மணல் , கம்பிகள் மற்றும் முக்கியமாக செங்கற்கள் போன்றவை நல்ல தரத்துடன் கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது என்றுதான் கூறவேண்டும். எல்லோரும் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருந்தால் இப்படிதான் நடக்கும். உப்புகலந்த மணல் ---வேகாத செங்கற்கள் ---பழைய இரும்பு குப்பைகளில் தயாராகும் கம்பிகள் எல்லாமே தவறானவைதான் ---தரத்துடன் கிடைக்க எல்லோரும் ஒத்து உழைக்க வேண்டும் .
    Points
    110
    a day ago ·   (3) ·   (0) ·  reply (0)   
  • sadhasivasaravanan  from COIMBATORE
    தமிழ் திரைபடத்தில் ஒரு நல பயன் ரமணா திரைப்படம் இது போன்ற எத்தனை திரைப்படம் வந்தாலும் அரசும் அரசு அதிகரிழலும் அதை ரசித்து பார்பார் தவிர அதை உணர்த்து செயல்படமாட்டர்கள். நிர் நிலை இருந்த இடத்தில் கட்டிட அனுமதி வழங்கிய அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் தண்டனை வழங்க வேண்டும்.இனி இது போன்ற சம்பவகள் நடக்காமல் அரசும் அரசு அதிகாரிகளும் முறையான சரியான கடுமையான கட்டிட விதிகளை வகுத்து பின்பற்ற வேண்டும்.பண முதலாளிகளின் வருமான நோக்காகளுகும் வளர்சிக்கும் உயிர் பலியாவதை சகித்து கொள்ள முடியாது
    Points
    1865
    a day ago ·   (2) ·   (0) ·  reply (0)   
    Siva Subramaniam  Up Voted
  • Ragam Thalam  from CHENNAI
    விதிமுறைகளை மதிக்காமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் சதுர அடிக்கு 50 பைசா அபராதம் கட்டினால் போதும் என்பதுதானே சட்டமாக இருக்கிறது.
    Points
    1035
    a day ago ·   (0) ·   (0) ·  reply (0)   
  • sasibalan  from COIMBATORE
    அரசு கட்டுமானங்கள் என்றாலும் தனியார் கட்டுமானங்கள் என்றாலும் கண்காணிப்பு பணியை அரசு முறையாக செய்வதில்லை.எனவேதான் அரசு கட்டுமானங்கள் திறப்பு விழாவிற்கு முன்னதாகவே கீறல் விழுகிறது.சாலைப் பணிகளோ ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்காமல் சின்னாபின்னமாக ஆகிறது. கண்காணிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள், சம்பந்ததப்பட்ட இடத்திற்கு கூட சென்று பணியின் தன்மை,தரம் குறித்து ஆராயாமல், தனது பங்குக்கான கமிசனை மட்டும் கறாராக பெற்றுக் கொண்டு காட்டிய இடத்தில் கையொப்பமிடும் போக்கே உள்ளது.அபரிமிதமான ஊழலால் அரசுப்பணிகள் எங்குமே தரமாக இல்லை என்பதை அனைவரும் அறிவர்.இந்நிலையில் அரசு கட்டுமானங்களின் கதியே அதோகதியாக இருக்கும் போது, தனியார் கட்டுமானங்களில் அரசின் கண்காணிப்பு எந்தவகையில் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.தனியார் பல அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டும் போது, அரசின் கண்காணிப்பு அதிகாரிகள் அனுமதி என்ற பெயரில் தனியாரிடம் கமிசனாக கறக்கும் தொகை எவ்வளவு என்பது மில்லியன் டாலர் கேள்வி.எனவே அரசு நிர்வாக இயந்திரத்தில் படிந்துள்ள ஊழலை அகற்றாதவரை இதுபோன்ற துயரங்கள் தொடர்கதையே.

0 comments: