Wednesday, January 11, 2012

எனது 1000வது பதிவு - பதிவுலகம் -நண்பர்கள் -ஒரு பார்வை

எங்கப்பா பேரு பழனிச்சாமி.. சொந்த ஊரு ஈரோடு மாவட்டம்  பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, புத்தூர்க்கு இடைப்பட்ட சாலப்பாளையம் என்னும் கிராமம்.. குலத்தொழில் நெசவு..சொந்தமா 8 கைத்தறி போட்டு தொழில் நடத்துனார்.. அவர் கூடப்பிறந்த அண்ணன்  1,தம்பி 1 ,நெசவு நெய்தது துண்டு மற்றும் பெட்ஷீட்..  4 மிதி தறிகள்.. 

அப்பா தீவிர எம் ஜி ஆர் ரசிகர்.. அந்த காலத்துலயே  கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு.. 

எங்கப்பா கிட்டே கெட்ட பழக்கம் எதுவும் இல்ல.. அப்பாவோட தம்பி செம சரக்கு பார்ட்டி.. பெரியப்பா 24 மணி நேரமும் சுருட்டு குடிச்சுட்டே இருப்பாரு.. எங்க தாத்தாவும் சுருட்டு பார்ட்டி தான்.. ஆனா எங்கப்பா எந்த கெட்ட பழக்கமும் இல்லாம வளர்ந்தது ஆச்சரியம்.. ஏன்னா ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.. எங்கப்பா ஊர்லயே எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஆண் எங்கப்பாதான்னு ஊர் மக்கள் எல்லாம் ரொம்ப புகழ்வாங்க.. எனக்கு செம குஷியா இருக்கும்.. 

எம் ஜி ஆரின் ரசிகர் என்பதால் எங்கப்பா அந்த மாதிரி கெட்ட பழக்கம் எதுவும் இல்லாம வளரனும்னு நினைச்சிருப்பார்னு யூகிக்கறேன்.. புங்கம்பாடில ஒரு வாய்க்கால் இருக்கும்.. அதனோட அகலம் பள்ளிபாளையம் ஆறு மாதிரி அகண்டு இருக்கும்.. எங்கப்பா நீச்சல்ல கில்லாடி.. ஓடி வந்து குதிச்சா அக்கறைல போய் தான் எந்திரிப்பார்.. உள் நீச்சல், கடப்பாறை நீச்சல் எல்லாம் கலக்குவார்.. 

எனக்கு நீச்சல் சென்னிமலைல பழக்கி விட்டார்.. சென்னிமலை வாய்க்கால் ரொம்ப அகலம் கம்மி.. முதல்ல சுரப்பரடை ( சுரைக்காயை காய வைத்து செய்தது) மூலம் , பிறகு வயிற்றில் கயிறு கட்டி, பின்  சும்மா ... ஒரே மாதத்தில் கற்றுக்கொண்டேன்.. 

எங்கே போனாலும் சைக்கிளில் தான் போவார்.. எங்கப்பா கிட்டே இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு நல்ல பழக்கம்  சிக்கனம்.. தேவை இல்லாம செலவு பண்ணமாட்டார்.. தேவை இருந்தா கொஞ்சமா செலவு செய்வார்.. 

எங்கப்பா வை நான் பெருமையா நினைவு கூறும் இன்னொரு சம்பவம்..  தாத்தா உடல் நிலை சரி இல்லாம இருந்தப்ப சொத்து பிரிச்சாங்க.. அப்போ அப்பாவோட அண்ணனுக்கும், தம்பிக்கும் ஒரு சண்டை.. தம்பிகாரர் அதாவது என் சித்தப்பா தனக்குத்தான் அதிக இடம் ஒதுக்கனும், நான் தான் கடைக்குட்டி என அடம் பிடிக்க, பெரியப்பாவோ நான் தான் மூத்தவன் எனக்கு தான் அதிக இடம் வேணும் என வாதிட கை கலப்பு ரேஞ்சுக்கு போச்சு.. 

எங்கப்பா கூலா சொல்லிட்டாரு.. ஏம்ப்பா அடிச்சுக்கறீங்க? என் பங்கை ரெண்டா பிரிச்சு ஆளுக்குப்பாதியா வெச்சுக்கங்க.. அவங்க ஸ்டன் ஆகிட்டாங்க.  ஆனாலும் ஏத்துக்கிட்டாங்க  ( மனிதர்கள் என்றும் சுயநலம் தான்) எங்கப்பா என் கிட்டே சொன்னாரு.. நாம சம்பாதிக்கற சொத்தே நமக்கு போதும்.. நம்ம அம்மா அப்பா சம்பாதிக்கற சொத்து நமக்கெதுக்குன்னு..அடுத்தவங்க சொத்துக்கோ .பொருளுக்கோ ஆசைப்படக்கூடாதுன்னு நான் அவர் கிட்டே இருந்து கத்துக்கிட்டேன். 

எங்கப்பா அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை.. ரொம்ப சாஃப்ட் கேரக்டர்.. சென்னிமலை சென் கோப் டெக்ஸ் சொசயிட்டில  மெம்பர் நெம்பர் 397.. ஜக்காடு பெட்சீட் நெசவு.. நின்னுக்கிட்டே தான் 10 மணி நேரமும் நெய்யனும்.. ஒரே ஒரு மிதி.. மாத்தி மாத்தி மிதிச்சுட்டே இருப்பாரு. சாலப்பாளத்தார்னா சென்னிமலைல எல்லாருக்கும் தெரியும்.. எங்கபாவோட பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் 2 பேரு . செந்தாம்பாளத்தார், குலத்தான் .நான் காலேஜ் முடிச்சு சொந்தமா கார்மெண்ட்ஸ் வைக்க முயற்சி செஞ்சப்ப எங்கம்மாவோட எதிர்ப்பையும் மீறி வீட்டு பத்திரத்தை வெச்சு லோன் வாங்கி கொடுத்தார்.. எங்கப்பாவுக்கு சுகர் இருந்தது.. ஹார்ட் அட்டாக்ல 5 வருடம் முன்பு ஜூலை 7 இறந்தார். எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.. 

கண்டிப்பை அவர் என் கிட்டே காட்னதே இல்லை.. அன்பு, பாசம், அரவணைப்பு மட்டுமே காட்டி இருந்தார்.. அவர் நல்ல குணங்களை பின்பற்றி அவர் பேரை காப்பாத்தனும் என்பதாவே என் கொள்கையா இருந்தது.. 

அடுத்து எங்கம்மா.. அவங்க ஈரோடு.. எங்கம்மா ஆன்மீகத்தில் அலாதி ஈடு பாடு.. நான் 5ங்கிளாஸ் படிச்சப்பவே என்னை தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை எல்லாம் கோயில்ல படிக்க வெச்சு மார்கழி மாச பஜனைல கலந்துக்க வெச்சாரு.. ஈஸ்வரன் கோயில்  சுத்தி 4  ரோடுலயும் மார்கழியின் அதிகாலையில் நடந்த அனுபவம் இன்னும் நினைவு இருக்கு..

எங்கம்மா டெயிலர். லேடீஸ் டிரஸ் எல்லாம் பிரமதமா தைப்பார்.. ஜாக்கெட்க்கு ஹெம்மிங்க் பண்றது கொக்கி வைக்கறது எல்லாம் நான் செய்வேன்.. சின்ன வயசுல சிங்கள்க்கு முடி போடுவேன்..

எங்கம்மா பக்கா சைவம்.. அதே மாதிரி என்னையும், எங்கக்காவையும் வளர்த்தாங்க.. நோ டீ நோ காபி... நோ முட்டை,நோ மட்டன் சிக்கன்..  எங்கப்பா இறந்த பிறகு  எனக்கு ஆன்மீகத்துல நம்பிக்கை குறைஞ்சிருச்சு.. காரணம் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவரே 70 வயதில் திடீர்னு இறந்துட்டாரு.. ஆனால் ஊரை அடிச்சு உலையில் போடும் பல தீயவர்கள் 100 வயசு வரை உயிர் வாழறாங்க.. அதான்.. 

இப்போ அம்மா சென்னிமலைல நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருக்காங்க.. இந்தியா பூரா அனைத்து ஆன்மீக தலங்களும் சுத்தி பார்த்துட்டாங்க.. இலங்கை, சீனா எல்லாம் போய் இருக்காங்க..

இந்த நாளில் எங்கம்மா, அப்பாவுக்கு என்  வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfh1PEkDqHAsu386lDGyL5NPmCbC5i1tJ1NZZclEQs0okdh2WwwfhsiWtXmpdWDAynIlYWINuqN4V7KF_aRrgyCgkWBUrjSEe4z1Py4Nw7zfBKXWlYT7F6JtAqiq6R_BsNtem12A5vfz1P/

ஓக்கே ஃபிளாஸ்பேக் போதும்..  இப்போ  பிளாக் பற்றி பேசலாம்.. 2010 ஜூலை 17 தான் நான் பிளாக் உலகத்துக்கு வந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் நல்ல நேரம் சதீஷ்.. எனக்கு 12 வருஷ பழக்கம்..  அவர் சித்தோடு, நான் ஈரோடு.. 2 பேரும்பாக்யாவுல ஜோக்ஸ் எழுதுவோம். அப்போ பழக்கம்.. அவர் தான் எனக்கு எல்லா உதவியும் செஞ்சு கொடுத்தாரு... 

எங்க வீட்ல நெட் கனெக்‌ஷன் கிடையாது.. நேரம் இருக்கும்போது டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சுடுவேன்,..என் நண்பர்கள் 12 பேர்கிட்டே பிளாக் பாஸ்வோர்டு இருக்கு.. அவங்க யாராவது போஸ்ட் போடுவாங்க..

அலெக்ஸா ரேங்கிங்க் தான் தமிழ் வலைப்பூக்களின்  டிராஃபிக் ரேங்க்கை நிர்ணயிக்குது.. அதுல நெம்பர் குறைய குறைய நாம் முன்னேறிட்டு இருக்கோம்னு அர்த்தம்.. நான் வந்த புதுசுல என்னோட அலெக்க்ஸா ரேங்க் 13 லட்சம்.. இப்போ என்னுது- 66,000. கேபிள் சங்கர் - 65,860, ஜாக்கி சேகர்-86,180, சவுக்கு-48,711

நான் பதிவுலகத்துல வந்த புதுசுல முதல் 5 மாசம் எந்த சர்ச்சைகளும் இல்லாம போச்சு.. அதுக்குப்பிறகு விகடன் பத்திரிக்கைல வந்த சில பதிவுகள் என் பிளாக்ல போட்டதால காப்பி பேஸ்ட் பதிவர்னு எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க.. சரக்கு இல்லாம போடறான்னு சொன்னாங்க.. ஆனா உண்ஐ அதுவல்ல.. நான் கடந்த 18 வருடங்களில் எழுதிய 1லட்சத்து 2890 ஜோக்ஸ், கவிதைகள் 80, கட்டுரைகள் 70 , சிறுகதைகள் 34, ஒரு பக்க சிறுகதைகள் 45 , போன்றவை எல்லாம்  டைப் பண்ணி டிராஃப்ட்ல போட்டு வெச்சிருக்கேன்..அதனால கை வசம் சரக்கு இல்லாம இல்லை.. அவள் விகடன், நானயம் விகடன், பசுமை விகடன் போன்ற புக்ஸ் எல்லாரும் வாங்கறது இல்லை.. அவங்களுக்கு யூஸ் ஆகட்டும்னு அப்டி போட்டேன்.. இப்போ வந்த எதிர்ப்பால் அதையும் தவிர்த்துட்டேன்,..கீழே உள்ள படத்தை அனுப்பியவர் கார்த்தி கவி, நன்றி அவருக்குசினிமா விமர்சனத்துல வசனங்கள் போடறதை பற்றி ஒரு பேச்சு.. செல் ஃபோன் எடுத்துட்டு போய் அதுல ரெக்கார்டு பண்ணிக்கறார்னு.... என்னோட செல் ஃபோன் நோக்கியா பேசிக் மாடல் 1100.. அதுல அந்த வசதி எல்லாம் கிடையாது.. எதுக்காக வசனம் எழுதறேன்னா ஒரு அடையாளத்தை காட்டவும் , தனித்து நிற்கவும்.. பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர், உண்மைத்தமிழன் மூவரும் சினிமா விமர்சனத்தில் விற்பன்னர்கள்... அவர்கள் ரேஞ்சுக்கு எழுத முடியலைன்னாலும்.. 4 வது இடத்தையாவது பிடிக்கனும் என்பதற்காக வசனம் எழுதும் பாணியை மேற்கொண்டேன்..


எனது தளங்களில் போடப்படும் சினிமா நடிகைகளின் ஸ்டில்கள் , கூகுளில் போடப்பட்ட கல்லூரி மாணவிகள் ஃபோட்டோக்கள் போடுவதை நண்பர்கள் சிலர் சுட்டிக்காட்டினார்கள்.. அவற்றையும் தவிர்த்து வருகிறேன்..

பதிவுலகில் எனக்கு எதிரிகள் யாரும் இல்லை.. நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?

ஆனா ஒண்ணு.. நண்பர்கள்க்கு நன்றி சொல்ல ஆரம்பிச்சா அதுக்கு தனி பதிவே போடனும்.. முடிஞ்ச வரை நினைவில் நிற்பவர்களுக்கு பெயர் சொல்லி நன்றி சொல்லிக்கறேன்

http://greetings.webdunia.com/cards/tm/thank_you/thaks02.jpg
லே அவுட், டெம்ப்ளேட் விஷயங்களில் அடிக்கடி உதவி புரிந்து வரும் சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி, நிரூபன், கடம்பவனக்குயில்,ராஜி நால்வருக்கும் முதல் நன்றிகள்

பிளாக் ஆரம்பித்த புதிதில் கமெண்ட்ஸ் போட்டு ஊக்குவித்த சிரிப்பு போலீஸ் ரமேஷ்,ராம்ஜி யாஹூ,திருப்பூர் புரட்சித்தலைவன்க்கு என் நன்றிகள்

ஆரம்ப கட்டத்தில் தன் கமெண்ட்ஸ் மூலம் என்னை ஊக்குவித்த பன்னிக்குட்டி ராம்சாமி & டெர்ர் குரூப் நண்பர்கள்க்கு நன்றி

பதிவுலகின் உயிர் நண்பர்களும், அவ்வப்போது உயிரை எடுக்கும் நண்பர்களுமான விக்கி உலகம் தக்காளி, நாஞ்சில் மனோ எனும் லேப்டாப் மனோ இருவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்

                
இராஜராஜேஸ்வரி- மணிராஜ்
ராம்வி-மதுரகவி
சித்ரா-கொஞ்சம் வெட்டிப்பேச்சு,
கடம்பவனக் குயில்- கடம்பவன பூங்கா
அம்பாளடியாள்- அம்பாளடியாள்
சாதாரணமானவள்- சாதாரணமானவள்
கீதா- கீதமஞ்சரி
மாலதி-மாலதியின் சிந்தனைகள்
ஹேமா- வானம் வெளித்த பின்னும்
ரூஃபினா செல்ல நாய்குட்டி
ஜோஸ்பின் -ஜோஸ்பின் கதைக்கிறேன்,
கல்பனா-
ஏஞ்சலின்-காகித பூக்கள்
லக்‌ஷ்மி-குறை ஒன்றும் இல்லை
சசிகா -மேனகா-
இந்திரா - மொக்கை இந்திரா 
thenammaiதேனம்மை லெக்ஷ்மணன் 

ஆஃபீசர்- உணவு உலகம்
சதீஷ்குமார்- நல்லநேரம்
பன்னிக்குட்டி ராம்சாமி- ஸ்டார்ட் ம்யூசிக்
ரமேஷ் சுப்புராஜ்- சிரிப்பு போலீஸ்
 மாத்தி யோசி -ஜீவன்
ராஜேந்திரன் - நண்டு நொரண்டு
மனோ- நாஞ்சில் மனோ
.விக்கி- விக்கியின் அகடவிகடங்கள்
பிரகாஷ்-தமிழ்வாசி பிரகாஷ்
ராஜா-ராஜபாட்டை
கருண்- வேடந்தாங்கல்
சௌந்தரபாண்டியன் கவிதைவீதிசௌந்தர்
.K.S.S.ராஜ்- நண்பர்கள்/நண்பர்கள்
துஷ்யந்தன்-
மனசாட்சி மனசாட்சி பஜ்ஜி கடை
மதுமதி- தூரிகையின் தூறல்
ரமணி- தீதும் நன்றும் பிறர் தர வாரா

ஆரூர் மூனா செந்தில்

சேட்டைக்காரன்


சேலம் தேவா, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நாகராஜ சோழன் எம் ஏ, நாய் நக்ஸ் நக்கீரன்

கணேஷ்- மின்னல்வரிகள்
சுரேஷ்குமார்-வீடு
சீனா அய்யா- வலைச்சரம்
ரத்தனவேல்- ரத்தனவேல் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து,
கோவை நேரம்- கோவை நேரம்
நிரூபன் நாற்று
ரெவரி- மெல்ல தமிழ் இனி வாழும்
செல்வா- செல்வா கதைகள்
சென்னை பித்தன்
ரஹீம் கலாஸி
சங்கவி- சங்கவி
செங்கோவி- செங்கோவி
சூர்யஜீவா- ஆணிவேர்
ஐ.ரா.ரமேஷ்பாபு- உரைகல்
கும்மாச்சி- கும்மாச்சி
சசிகுமார்- வந்தேமாதரம்
சரியில்ல-
பெ.சொ.வி-
M.R.
கோவிந்தராகன். மதுரை
மதுரன்
ஹாலிவுட் ரசிகன்
கோகுல்- கோகுல் மனதில்
தனிமரம்
பிலாசபி பிராபகரன் - பிரபா ஒயின் ஷாப்
ரமேஷ் வெங்கடபதி
கேரளக்காரன் ஆனாலு அதிரி புதிரி
வைகை
சேலம் ரியாஸ், மொஹம்மத்

யானைக்குட்டி
அனைவருக்கும் என் நன்றிகள்.. 


வாழ்த்து சொல்பவர்கள் தங்கள் ஆலோசனையையும் சொல்லவும்.. பிளஸ் என்ன? மைனஸ் என்ன? என்பதையும் கூறவும்.. அப்போதுதான் என்னை செதுக்கிக்கொள்ள, திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.. 


ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் , கரூர் ஜெகன் @ ஆல்தோட்டபூபதி, ஈரோடு தங்கதுரை : )), , Senthil Nathan , jeevan , Parisalkaaran ,ராஜன் , , C.Kesavan,@ Sudha,, நையாண்டி,@ SeSenthilkumar,, மதுரை ரியாஸ், கரையான்,DKCBE, பாரத்...பாரதி...,, புலவர் தருமி, GiRa, vivaji,

சிங்கப்பூர் சாந்தி, பல்ஸ்மாலா, கோவை அரட்டைகேர்ள், கோவை சவுமி, மதுரை உமாகிரிஷ்,சென்னை மோஹனா,சோனியா, மங்கை,கோவை கிரேட் விஜி, @ sbnu , பூங்குழலி :) , :) , JanuShath அனைவருக்கும் என் நன்றிகள்

விடுபட்டவர்கள் பெயர்கள் அவ்வப்போது சேர்த்துடறேன்..டைம்லைனுக்கு வர வர அவங்க பேரை காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிடறேன் ( காபி பேஸ்ட் பதிவர்)

ஃபாலோயர்ஸ் 1000 கொண்டு வர முடியலை.. 8 குறையுது..  ஹிட்ஸ் 20 லட்சம் கொண்டு வர நினைச்சேன் .. அதும் 100000 குறைஞ்சுடுச்சு, இண்ட்லில் 210 ஃபாலோயர்ஸ்..

188 comments:

கோவை நேரம் said...

வணக்கம் . வாழ்த்துக்கள்.

Anonymous said...

me first me first

கோவை நேரம் said...

ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிந்தாமணியே.

Anonymous said...

acho missing

கோவை நேரம் said...

இந்த சேவையினை பாராட்டி தங்களுக்கு

பதிவுலக தானே(புயல்)

கோவை நேரம் said...

பதிவுலக சிங்கம்
பதிவுலக தங்கம்
பதிவுலக சூப்பர் ஸ்டார்
பதிவுலக பாக்யராஜ்
ப்ளாக் (Blog ) டைகர்

கோவை நேரம் said...

சென்னிமலை சிகரம்
கில்மா கிங்
அதிரடி அண்ணல்
பரபர பதிவன்
தீப்பொறி திருமுகம்
காமெடி கிங்
வசன வள்ளல்

கோவை நேரம் said...

மொக்கை மோகனன்
பதிவுக் கடல்
விமர்சன வித்தகன்
பதிவர் குல மாணிக்கம்
ஈரோடு ஈசன்

கோவை நேரம் said...

என பல்வேறு பட்டங்களை அளிப்பதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கோவை நேரம் said...

இனி தான் படிக்க போகணும்,,,,இருங்க படிச்சிட்டு வர்றேன்

கோவை நேரம் said...

நாங்க தீயாய் வேலை செய்வோம்ல....(எனக்கு பிடித்தவை )

கோவை நேரம் said...

ஆச்சர்யமாக இருக்கிறது....உங்க பெற்றோர் படம் போட்டு இருக்கிறீர்கள்

கோவை நேரம் said...

அப்பா புத்தி அப்படியே உங்களுக்கு .....சினிமா கட் அடிக்கிறது

Chitra said...

Congratulations!!!!

HAPPY PONGAL!

கோவை நேரம் said...

அதனால் தான் நீங்க எப்போதும் வெஜ் .ஆ ?

கோவை நேரம் said...

சிக்கனம் ....சிபிகிட்டே இல்லையே...வாரம் 4 படம்..பார்த்தல் எப்படி ..?

கோவை நேரம் said...

அம்மாவோட பக்தி இருந்ததினால் தானே சனிக்கிழமை தோறும் ஆன்மீக பதிவு போட முடிஞ்சது

rajamelaiyur said...

Congrats Thala .

கோவை நேரம் said...

சைக்கிள் கேப்புல கலைஞரை உள்ள இழுக்கிற மாதிரி தெரியுதே/// .....ஊரை அடிச்சு உலையில போட்ட...../// ஆனாலும் உங்களின் பாசம் உணர்வு என்னை மெச்சுகிறது

சேகர் said...

ஈரோடு சிந்தனை சிற்பிக்கு எனது வாழ்த்துக்கள் ..

Anonymous said...

உங்க அப்பா அம்மா பற்றி நினைவுகூர்ந்த்துருக்கீங்க, எல்லாருக்கும் அவங்க அப்பா அம்மா முன்மாதிரி தான், ஆனா உங்க அப்பா அடுததவஙக சொத்துக்கு ஆசைப் படகூடாதுனு தன் அப்பா சொத்தையே வேண்டாமுன்னு சொல்லியிருக்கார், ரொம்ப உயர்ந்த மனசுஙக,

ராஜி said...

வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

உங்களோட பதிவுல என் பெயரும் இடம் பெற்று விட்டதே ,,,,நன்றி,,,

சசிகுமார் said...

1000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்....

ராஜி said...

உங்க அப்பாவை போலவே இருக்கீங்க. அப்பாவை கொஞ்சம் மாடர்ன் டிரெஸ் போட்டு, உங்களை போல ஹேர் கட் பண்ணினால் யார் சிபி, யார் அப்பான்னு கண்டுபிடிக்க திணறனும் நீங்க பார்க்கும் சினிமாக்களில் வருவது போல

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள்.
சிபி...உங்க சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் எழுத்துலக பணி...

Anonymous said...

எவ்ளோ எழுதியிருகிஙக பிரமிப்பா இருகுஙக, ஏதொ சில பதிவுகள் விகடன் ல இருந்து எழுதி இருக்கலாம், ஆனா மதத எல்லாமே உஙக சொந்த உழைப்பு, இப்போ எல்லாம் கவிதை கதை எல்லாம் போடரதே இல்லையே, பதிவு பன்னுஙக சார், படிக்க காத்திருகிரோம்..

கோவை நேரம் said...

உங்க அப்பா அந்த காலத்து ஹீரோ போலவே இருக்கிறார்....ரவிச்சந்திரன் அல்லது முத்துராமன் போல...

Unknown said...

வணக்கம் சிபி!...முதலில் வாழ்த்துக்கள் ஆயிரம் பதிவுகள் படைத்ததட்க்கு...மிகப்பெரிய சாதனை குறுகிய காலத்தில், அதுவும் யாரிடமும் சண்டயிடாமல் இதுவரை இருந்து வந்ததர்க்கும்!..ஒரு நண்பன் என்பவன் வெறும் முகஸ்துதி பாடுவதர்க்கு மட்டும் இல்லை என்பது என் கருத்து..ஹிஹி!..இன்னும் நீங்கள் உங்களை செம்மை படுத்த வேண்டி இருக்கு சிபி...அதாவது உமக்கு இருக்கும் ஞாபக சக்திக்கு நீர் இந்த தளங்களில் உள்ள பல முக்கிய கணிப்பொறி விஷயங்களில் கவனம் செலுத்த முயற்ச்சிக்கவும்!...இன்னும் குழந்தை போல எல்லோரையும் நம்பும் பங்கை குறைத்து கொள்ளவும்(நான் உற்பட ஹிஹி!)...இன்னும் பல யோசிச்சி பதிவு செய்கிறேன் ஹிஹி!

கடம்பவன குயில் said...

Kurukiya kaalathil 1000 pathivai ettiyaathu mikapperiya saathanaithaan.. Vazhthukkal Nanbare.

Neenga ninaivu koornthu nandri koorum alavu ungalukku perithaai ondrum seiyala naan. Nanparkalukkul seiyavendiyathu kadamai thaan. Nandrikalukku apparpattathu natpu

Unknown said...

உங்க 1000 வது போஸ்ட்டுக்கு மனோவால் வர இயல வில்லை..தனிப்பட்ட வேலை காரணமாக ...உங்க கிட்ட வாழ்த்துக்கள் சொல்ல சொன்னார்!

நாய் நக்ஸ் said...

Vazhthukkal......
Hats off

ungal ninaivu sakkthi-ku
en poraamai
kalantha
vazhthukkal.....

Unknown said...

வாழ்த்துகள்...தலை.....உங்க தந்தை,தாய் பற்றி கூறியிருப்பது மனதை நெகிழவைத்தது...நீங்க பதிவுலக சூப்பர் ஸ்டாரா இருந்தாலும்! எல்லா குழந்தைகளுக்கும் அப்பாதான் ஹீரோ..நீங்கள் பதிவுலகிலும் சொந்த வாழ்விலும் மேன்மேலும் வளர இறைவனை பிரத்திக்கிறேன்....நன்றி!

கோவை நேரம் said...

மெயில் பாக்ஸ் நிரம்பி வழியும் சிபிக்கு வாழ்த்துக்கள்.

முத்தரசு said...

வாழ்த்துக்கள் சி பி வாழ்த்துக்கள்

கோவை நேரம் said...

4
3
2
1
...
வாழ்க்கை ஒரு வட்டம் மாதிரி...இன்னிக்கு 4 இல் இருக்கிற நீங்கள்
முதலில் வருவீர்கள் என்ற நம்பிக்கையில் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

சௌந்தர் said...

அதி விரைவில் 1000 பதிவை கடந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மேலும் 1000 பதிவுகள் இட வாழ்த்துகிறோம்

Unknown said...

ஆயிரம் பதிவுகளே மலருங்கள்!
மலர்ந்து சுகந்தம் வீசுங்கள்!

ஆயிரம் பிறை காணுவதற்குள்
பல்லாயிரம் பதிவுகள் காண
வாழ்த்துக்கள்!

Anonymous said...

வெகுவிரைவில் 1000 ஃபாலோயர்ஸ், 20லட்சம் ஹிட்ஸ் கொண்டுவந்துரும் உங்க எழுத்து...

Pulavar Tharumi said...

உருக்கமான பதிவு. குறுகிய காலத்தில் 1000 பதிவுகள் போட்டு சாதனை படைத்ததற்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

வாழ்த்துக்கள்! :-)
சென்னிமலை சி.பி. செந்தில்குமார் என்ற பெயரை அடிக்கடி பார்த்திருக்கிறேன் குமுதம், குங்குமம் இதழ்களில்!

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் முதலில் 1000ம் பதிவுக்கு வாழ்த்துக்கள் இது மிகப்பெரிய சாதனைதான்.இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுதி கலக்க வாழ்த்துக்கள் நாங்கள் இருக்கோம் பக்க பலமாக.

பதிவுலகில் பொதுவாக நீங்கள் சின்னதாக ஒருவரியில் கமண்ட் போடுவதால் நீங்கள் பதிவை படிக்காமல் கமண்ட்போட்டுவதாக பலர் சொல்லித்திரிந்தார்கள்.ஆனால் அவர்களுக்கு ஒன்றை இந்த நேரத்தில் பகிர்கின்றேன்

சி.பி அண்ணனுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ தெரியவில்லை எனது பதிவில் ஒரு முறை ஒரு சின்ன எழுத்துப்பிழைய சுட்டிக்காட்டி யிருந்தார்.பதிவை துள்ளியமாக படித்தால்தான் அப்படியான சின்னச்சின்ன எழுத்துப்பிழைகளை கண்டு பிடிக்கமுடியும்...இப்ப சொல்லுங்கள் சி.பி அண்ணன் பதிவை படிக்காமலா கமண்ட் போடுகின்றார்?
இதை இந்த நேரத்தில் பகிர்வதை நான் பெருமை அடைகின்றேன்

நான் எல்லாம் சி.பி அண்ணன் விமர்சனம் பார்த்துதான் பல படங்கள் பார்பதுண்டு..

தொடர்ந்து எழுதுங்கள் பாஸ் இன்னும் பல ஆயிரம் பதிவுகள் எழுதி புகழ் அடைய வாழ்த்துக்கள்.

Astrologer sathishkumar Erode said...

அம்மா,அப்பாவை பற்றி எழுதியது மிக நேர்த்தியாக சுவாரஸ்யமாக இருந்தது! உங்களுக்கு கெட்ட பழக்கம் எதுவும் இல்லாததும்,காசு விசயத்துல கெட்டியா இருக்குறதையும் கண்டு பல சம்யம் ஆச்சர்யபட்டிருக்கேன்.அது உங்கப்பாகிட்ட இருந்து வந்த பழக்கம்னு இப்பதான் தெரிஞ்சிகிட்டேன்!!

1000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!

2000 வது பதிவு போடும் நாள் வெகு தூரம் இல்லை..குறுகிய காலத்தில் 1000 மாவது பதிவு..மற்றும் 1000 ஃபாலோயர்ஸ் (இன்று மாலைக்குள் ஆகிவிடும்)கிடைத்திருப்பது தமிழ் பதிவுலகில்,உங்களுக்கு மட்டுமே!!

உங்கள் படைப்பாற்றல் பூங்கதிர்,மற்றும் பத்திரிக்கை உலக சிறு எழுத்தாளர்கள் அனைவரும் அறிவோம்.. நான் 10 வருசத்துக்கு முன்பே அறிவேன்...விரைவில் இணைய உலகில் இருப்பவரும் அறிவர்..

தமிழ் வலைப்பதிவு உலகில்,உங்கள் சாதனை தொடர நானும் உதவியிருப்பது சந்தோசம்!! வாழ்த்துக்கள்!!

கேரளாக்காரன் said...

1000 pathivukku vaazhththukkal thala...... Aduthathaa en name mention pannathukkum nandri ada naan thaan keralakkaaran indru mudhal mounaguru apdingara namela varuven

RAMA RAVI (RAMVI) said...

முதலில் 1000 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் தாய் தந்தையைப்பற்றி நெகிழ்ச்சியாக எழுதியிருக்கீங்க.படிக்கும்போதே சிலிர்க்க வைத்தது.


1000 மேலும் மேலும் வளர்ந்து லக்‌ஷ்மாக மனப்புர்வமான வாழ்த்துக்கள்.

Anonymous said...

தங்கள் தாயார் பூரண உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகள். பதிவுலகில் தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்.

Anonymous said...

ஒரு லட்சம் ஜோக்ஸா? மலைக்க வைக்கிறது. சினிமா வசனங்களின் எண்ணிக்கையை சற்று குறைக்கலாம்.

விஸ்வநாத் said...

செந்தில் வாழ்த்துக்கள்;

iyyanars said...

ஒரு முக்கியமான பதிவில்...எங்களையும் `நட்பினால்` பெருமைப் படுத்தியதற்கு நன்றி நண்பரே!

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் சிபி

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் சிபி

thatswhyiamhere said...

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

"எந்த ஊருக்கு போனாலும் அந்த ஊர நாம ஆளனும்

ஈரோடு காரங்க யாருன்னு இந்த பதிவுலகத்துக்கு காட்டனும்"

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துகள்

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே,
ஆயிரம் பதிவுகள் என்பது சும்மா வருவதல்ல..
அதன் உழைப்பின் தன்மையை ஒரு பதிவனாக
என்னால் உணர்ந்துகொள்ள முடியும்.

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் புனைந்திட
என் மனமார வாழ்த்துகிறேன்.

எந்த ஒரு வெற்றிக்கும் ஒரு பிறப்பிடம் உண்டு.
இந்த பதிவின் மூலம் உங்கள் தாய் தந்தையரை
நீங்கள் நினைவு படுத்தியதிலிருந்து அது தெளிவாகிறது.

உங்க அப்பாவை நீங்க அப்படியே உறிச்சி வைச்சிருக்கீங்க.

இன்று போல் என்றும் உங்கள் வாழ்வும் உங்கள் பதிவுகளும்
புதுப்பொழிவுடன் திகழ இறைவைனை இறைஞ்சுகிறேன்

அன்பன்
மகேந்திரன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ur father is great.

All the best for your 1000th post.

Anonymous said...

சமீபத்தில் உங்கள் பதிவுலகத்திலும் நட்பிலும் இணைந்த ஒருவன் நான்.. ஒவ்வொரு பதிவையும் படிப்பதும் அதை நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் செய்கிறேன். உங்களுடைய ஆயிரமாவது பதிப்பில் எழுதிய 

"ஒரு மனிதனின் நல்ல கெட்ட பழக்கங்கள் அவன் சூழ்நிலையை சார்ந்தே அமையுது.."
கருத்து எதார்த்தமான உண்மை. 

தொடர்ந்து உங்களில் வலைப்பதிவுகளை எழுதுங்கள்..

Honey said...

congrats for 1000 post and 1000 follwers,

I am the 1000 th follower...

NKS.ஹாஜா மைதீன் said...

வாழ்த்துக்கள் பாஸ்...

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!வாழ்த்துக்கள்.இந்த மாதிரி யாரும் சுயபுராணம் படித்ததில்லை!அருமை!உங்களைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்!அம்மா வாழ்க,இன்னும் பல்லாண்டுகள்!!!!

பால கணேஷ் said...

எவரையும் மறக்காமல் நன்றி சொன்ன பாங்கு அருமை செந்தில். ஆயிரம் கடந்து விட்டதற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

குடிமகன் said...

வாழ்த்துக்கள் சிபி!! ஆயிரத்தை பத்தாயிரமாக்க வாழ்த்துக்கள்!!

shunmuga said...

ஆயிரம் பதிவுகள் எழுதிய சி(ற்)பிக்கு வாழ்த்துக்கள் !
உணவு உலகம் - சங்கரலிங்கம் என் போடுவதற்குப் பதில் ராஜலிங்கம் என் போட்டுள்ளீர்கள் !

Thirumalai Kandasami said...

Congrats Sibi ji,Naalaiya Iyakunar review is my favourite,,
minus--whenever you get information from some site(may be news or article)you should five credit to them by of adding source URL.

இந்திரா said...

ஆயிரம் பதிவெழுதிய அபூர்வ சிந்தாமணன் வாழ்க...

விஜி said...

வாழ்த்துகள் :))))

டீலிங் முடிஞ்சுது. அக்கவுண்ட் நம்பர் தெரியுமில்ல :)

Anonymous said...

என்னண்ணே புசுக்குன்னு வெறும் 1000மாவது பதிவுக்கெல்லாம் நெகிழ்வான பதிவு போட்டுக்கிட்டு. நாம போற தூரம் நிறைய இருக்கு. வெறும் 1000 அடி நடந்தவுடனே அது பெரிய பயணம் ஆகிடுமா, 2013ல நாம 10000வது போஸ்ட பாக்கணும். 2015ல 100000வது போஸ்ட் பாக்கணும் எவ்வளவு இருக்கு, ஆட்டைய கலைங்க.

Stanly said...

வாழ்த்துக்கள்... கலக்குறீங்க போங்க :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள்... சிபி...

Advocate P.R.Jayarajan said...

My best wishes to your 1000th post... Keep growing...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

1000-வது பதிவில் தங்கள் தங்கள் குடும்பத்தையும் பற்றியும் நண்பர்களைப்பற்றியும் நினைவு கூர்ந்தது அழகு....

தங்களின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்...

RealBeenu said...

அருமையாக உள்ளது சார். நீங்க ரொம்ப கலக்குறீங்க.. நான் இன்னும் ஒன்னு கூட எழுதலா.. நீங்க ஆயிரம் வந்துட்டீங்க!! உங்கள் நகைச்சுவை ட்வீட்ஸ் பல கவலைகளை தீர்க்கும் வகையில் சிறப்பாக உள்ளது. மேலும் வளர வாழ்த்துக்கள். என்னைப்போன்ற பெரியவர்கள் வாழ்த்தினால் நீங்க நல்லா வருவீங்க

வரதராஜலு .பூ said...

வாழ்த்துக்கள்

பட்டுக்கோட்டையான் said...

1999 களில் ஆனந்தவிகடனில் என்று நினைக்குறேன் தங்களுடைய ஜோக்ஸ் படித்த நாபகம். அப்பொழுது நாமும் ஜோக்ஸ் எழுதலாமே என்று நினைத்ததுண்டு , தற்பொழுது உங்களுடைய பதிவை தவறாமல் படித்துவிடுவேன் . வாழ்த்துக்கள் அண்ணே ......

Unknown said...

Congratulations brother..

ராஜி said...

அந்த காலத்துலயே கட் அடிச்சுட்டு சினிமா பார்ப்பாராம்.. சைக்கிள்லயே 14 கிமீ மேட்டுக்கடை வந்து படம் பார்ப்பாராம்.. அந்தக்காலத்துல சினிமா பாட்டு புக், வசன புக் எல்லாம் விக்கும்.. அதை வாங்கி பைண்டிங்க் பண்ணி வெச்சுடுவார்.. அந்த கலெக்‌ஷன்ஸ் எல்லாம் இன்னும் இருக்கு..
>>>
சினிமா பழக்கம் அப்பாக்கிட்ட இருந்து வந்ததா?

vazeerali said...

முதலில் உங்கள் ஆயிரம் பதிவை பெற்றோர்களுக்கு
தந்த கட்டுரைக்கு பாராட்டுக்கள்...உங்கள் கடின முயற்சியோடு இந்த வெற்றியை கொண்ட நிலையையும்,இதற்க்கு ஊக்கமாய் இருக்கும் நண்பர்களின் விலாசத்தை தந்து உங்கள் மனதின்
விசாலத்தை காணமுடிந்தது..தொடருங்கள் உங்கள் பாணியில்...உங்கள் பயணத்தை...

வாழ்த்துக்கள் தோழரே...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

1000க்கு வாழ்த்துக்கள் சிபி.

SENTHIL MURUAGN said...

1000ம் 10,000மாக வாழ்த்துக்கள் சிபி Sir,

கோவி.கண்ணன் said...

1000 பதிவா யப்பா மூச்சு முட்டுது,
உங்கள் பெற்றோர்கள் பற்றிய குறிப்புகள் சிறப்பு.

நான் 1000 பதிவு எழுத நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன், நீங்களும் பிறரும் ஒரு சில ஆண்டுகளில் 1000 கண்டுள்ளீர்கள் நல்வாழ்த்துகள்.

Admin said...

1000 வது பதிவுக்கு வாழ்த்துகள்..

Admin said...

ஆயிரம் பதிவென்பது சாதாரண விசயம் அல்ல ..அதற்கான உழைப்பை கொடுத்திருக்கிறீர்கள்..அந்த உழைப்பே உங்களை பதிவுலகில் தவிர்க்க முடியாத சக்தியாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது..உங்களது படைப்புகளை பத்து வருடங்களுக்கு முன்னதாகவே பாக்யாவில் படித்திருக்கிறேன்..தொடர்ந்து பதிவுலகில் வாகைசூட இந்த ஈரோட்டு இளைஞனின் வாழ்த்துகள்..

Admin said...

திராவிட தீபம் தோன்றியது

Unknown said...

வாழ்த்துக்கள் தலைவரே..

உங்கள் பெற்றோர்களுக்கு என் வந்தனம்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, ஆயிரமாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.....

sarav said...

hi
your followers are now 1002 congratulations for both the 1000

தமிழ்வாசி பிரகாஷ் said...

தந்தை, தாயாரை நாம் ஒரு எல்லையை அடையும் சமயம் நினைத்து பார்ப்பதில் தான் எத்துனை இன்பம் நமக்கும், அவர்களுக்கும்....

சின்ராஸ் said...

அட்ராசக்க #1000 . உங்களை எங்களுக்கு அறிமுகம் செய்த அத்துனை நண்பர்களுக்கும் நன்றி.. வாழ்த்துகள்.. கலாய்த்து கமெண்ட தான் ஆசை என்ன செய்ய இன்னும் நிறைய பதிவு எழுதீவிங்கள அதுல பார்த்துக்கொள்கிறேன்...

சேலம் தேவா said...

1000 பதிவுகள் கண்ட "மூத்த"பதிவருக்கு வாழ்த்துகள்..!! :) கலக்குங்க பாஸ்...

தட்சிணாமூர்த்தி said...

வழக்கமாக மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் உங்களின் பதிவு, இந்த முறை உணர்வுகளின் வெளிப்பாடாகவே இருந்தது. எதுவும் எழுத முடியவில்லை...பல்லாயிரம் பதிவுகள் எழுத வேண்டும். பல ஆண்டுகள் வாழ்ந்து பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்திட வேண்டும்...வாழ்த்துக்கள் தல ! என்றும் நம்பர் 1 தாங்கள் தான் !

சி. சரவணகார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள்!

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்.

வவ்வால் said...

சிபி,

ஆயிரம் தலை(ப்பு) கண்ட அபூர்வ சிகாமணிக்கு வாழ்த்துகள்!

இப்போ நீங்க கிலோ வாட்ஸ் பவர் காட்டி இருக்கிங்க, கூடிய சீக்கிரம் மெகா வாட்ஸ், டெரா வாட்ஸ் என பவர் ஏற்றிக்காட்டி "பதிவுலக பவர் ஸ்டாராக" மின்ன வாழ்த்துகள்!!!

Sen22 said...

வாழ்த்துக்கள் சி.பி சார்...

sowbarnika said...

வாழ்த்துகள் ! நண்பர்கள் பட்டியலில் இணைத்து கொண்டதற்கு நன்றி!!

sulthanonline said...

வாழ்த்துக்கள் சி பி அண்ணா

Amudhavan said...

தகுந்த நேரத்தில் பெற்றோர் பற்றிய குறிப்பு நெகிழ்வு. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Riyas said...

Congratulations!!!! CP it's Amazing!

shanthi said...

உள்ளம்கனிந்த வாழ்த்துகள் .........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்ப நாங்க உங்ககிட்ட இருக்கிற மைனஸை சொன்ன திருந்திடுவீங்க அப்படித்தானே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அப்ப நாங்க உங்ககிட்ட இருக்கிற மைனஸை சொன்ன திருந்திடுவீங்க அப்படித்தானே...

நிரூபன் said...

வணக்கம் சித்தப்பூ,
ப்ளாஷ் பேக் எல்லாம் நன்று, உங்கள் தந்தையின் பிரிவினைச் சுட்டும் வரிகள் மனதை நெருடுகிறது.

ஆயிரம் பதிவுகளைக் கண்ட எங்கள் விமர்சனப் புயல், வித்தக ஜோக்கருக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்தும் எழுதுங்கள். குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டச் சொன்னீங்க. ஏலவே சொல்லியிருக்கேன். நீங்கள் நன்றாக கவிதை எழுதுவீங்க. ஆனால் நீண்ட காலமாக கவிதை எதனையும் ப்ளாக்கில் போடலை. அதனை எதிர்பார்க்கிறேன். இயக்குனருக்கு சில ஆலோசனைகள் சொல்லுவதில் ஆங்கிலப் பட, ஹிந்திப் பட இயக்குனருக்கு ஆலோசனை சொல்லுவதை தவிர்க்கலாம்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிபி... நீ 1000
நான் 100வாழ்த்துக்கள்....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சிபியின் அடுத்த பதிவுகள்...

12-01-2012 நண்பன் திரைவிமர்சனம்

13-01-2012 கொள்ளைக்காரன் திரைவிமர்சனம்

14-01-2012 வேட்டை திரைவிமர்சனம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்ன ஒருமனவருத்தம் என்றால் இந்த பொங்கலுக்கு கில்மா படம் ஏதும் வரவில்லை... அதான்

கவலைப்படாதீங்க சிபி....

சி.பி.செந்தில்குமார் said...

@நிரூபன்

நிரூபன், ஆங்கில, ஹிந்தி இயக்குநருக்கு சில ஆலோசனைகள் என்ற டைட்டிலை இனி லாஜிக் மிஸ்டேக் என குறிப்பிட்டு விடுகிறேன் ஓக்கே?

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள் மச்சி...

Anonymous said...

வாழ்த்துக்கள் தல. மேன்மேலும் வளர வாழ்த்துகள். பிளாஷ்பேக் அருமை, நேர்மை.

கிரி said...

உங்க புள்ளி விவரம் (அலெக்சா, கதை, கட்டுரைகள், ஜோக்ஸ்) பார்த்து எனக்கு ரமணா கேப்டன் தான் நினைவுக்கு வந்தார்.. எப்படித்தான் இத்தனை எழுதறீங்களோ!

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். (நான் கோபிச்செட்டிபாளையம்)

Kousalya Raj said...

1000 வெறும் பதிவுகள் அல்ல, உங்களின் உழைப்பு...! பதிவுலகத்தை சுவாசமாக கொண்டு செயல்பட்டு வரும் உங்களுக்கு என் பாராட்டுகள்.

பெற்றோரை நினைவுகூர்ந்தது நெகிழவைத்துவிட்டது...

மென்மேலும் நீங்கள் உயரவேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சீபி...

தங்கள் தந்தையை நினைத்து நானும் பெருமைப்படுகிறேன்...

நிரூபன் said...

சி.பி.செந்தில்குமார் said...
@நிரூபன்

நிரூபன், ஆங்கில, ஹிந்தி இயக்குநருக்கு சில ஆலோசனைகள் என்ற டைட்டிலை இனி லாஜிக் மிஸ்டேக் என குறிப்பிட்டு விடுகிறேன் ஓக்கே//

ஹே...ஹே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
லாஜிக் மிஸ்டேக் என்று போட வேணாம் பாஸ்.

உங்க திறமைக்கு நீங்க ஆங்கில, ஹிந்திப் பட இயக்குனர்களுக்கு ஆங்கில ப்ளாக்கில் எழுதலாம். கண்டிப்பாக அதற்கான மறு மொழிகள், ஏன் சில வெளை இயக்குனர்களின் கவனமும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் நம்ம தமிழை அவங்க படிக்க மாட்டாங்களே.

அதான் தமிழில் எழுதுவதை தவிர்க்கலாம் என்று சொல்கிறேன்.

நிரூபன் said...

அண்ணா, உங்கள் ப்ளாஷ் பேக் சொல்லியது போன்று, தங்களின் எழுத்துலக ப்ளாஷ்பேக்கினையும் இன்னோர் பதிவில் விரிவாகப் போடுவீங்க என எதிர்பார்க்கிறேன்.

உங்களின் முதல் படைப்பு, முதல் எழுத்து எப்படி அமைந்தது என்றெல்லாம் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

Ondipuli said...

வாழ்த்துக்கள் சித்தப்பு

வைகை said...

நான் பல பதிவுகளில் சொன்னதுதான்... நான் முதலில் ப்ளாக் என்று ஒன்று படித்ததே உங்களுடையதுதான்.. அந்த உந்துதலில்தான் நானும் எழுத ஆரம்பித்தேன். என்ன.. முன்புபோல் இப்போது நேரம் போதவில்லை.. பட் தொடர்ந்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆயிரம் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். இன்னும் சிறப்பாக வரவும் என்னுடைய வாழ்த்துக்கள் :-))

மாங்கனி நகர செல்லக் குழந்தை said...

1000வது பதிவை தொட்ட உங்களுக்கு வாழ்த்த வயதில்லை...அதனால் வணங்கி வாழ்த்துகிறேன்.........

நெல்லி. மூர்த்தி said...

தங்களுடைய ஃபிளாஷ்பேக் மனதை நெகிழவைத்தது. பெற்றோர் குறித்தான பதிவின் முதற்பகுதியின் மூலம் தங்கள் மீதான மதிப்பினை மேலும் கூட்டுகின்றது. தங்களுடைய மாற்றங்களும், அதற்கான காரணங்களும் படிப்பதற்கு சுவாரசியமாக இருப்பினும், சிலநேரங்களில் காயப்பட்டிருப்பீர்கள் என்பதையும் உணரமுடிகின்றது. தாங்கள் மென்மேலும் பல சிகரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan said...

வாழ்த்துக்கள் சிபி.. ஆனா என் பேரு போடலை.. அப்போ அப்போதான் எல்லா ப்லாகுமே படிக்கிறேன்.:)

Agarathan said...

சென்னிமலை காரர்களின் வாழ்த்துக்கள் .....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒன்றரை ஆண்டுக்குள் 1000 பதிவுகள் என்பது ஒரு இமாலய சாதனை. வாழ்த்துகள் சிபி. உங்களிடமிருக்கும் சில நல்ல பழக்கங்கள் தந்தையிடமிருந்தே வந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். ஒவ்வொரு மைல்கல்லைத் தாண்டும் போதும் நண்பர்களாகிய எங்களை நினைவுகூர்ந்தே வந்திருக்கீங்க, அதே போல் இன்றும். இன்னும் பலப்பல உயரங்களைத் தொட, கனவுகள்,லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துகிறேன்!

ராஜகுமாரி said...

வாழ்த்துக்களும் நன்றிகளும் நட்பிற்கு ......இங்கு வந்தது நட்பை சம்பாதிக்கவே என்னும் கருத்தும், விமர்சனங்களை எதிர்கொள்ளும் விதமும் ஆகிய இரண்டு கருத்துக்களும் அருமை :-)

K said...

வாழ்த்துக்கள் சி பி ! உங்களைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் நிறையவே இருக்கு! 24 மணிநேரம் பொறுத்திருங்கள்!

மீண்டும் வாழ்த்துக்கள்!

Prakash said...

இவரு பெரிய கர்ம வீரர் காமராஜர் , காந்தி அடிகள்..
சுய சரிதை எழுதறாரு...

ஓசில ப்ளாக் கெடைச்ச என்னவேனும்னாலும் எழுதுவீங்கள???

K.Arivukkarasu said...

மகிழ்ச்சி...வாழ்த்துகள்...உங்கள் அன்னையிடம் என் வணக்கத்தை தெரியப்படுத்தவும்....ட்வீட்டர் நண்பராக அறிவித்ததற்கு நன்றி....என் மகனுடன் உங்களை நேரில் சந்தித்தது இன்றும் பசுமை....உங்களை அறிமுகப்படுத்திய ட்வீட்டருக்கும் நன்றி ! நீவீர் வாழ்க..வளர்க :))

கேரளாக்காரன் said...

@prakash unnaya yaarum inga koopdala

சி.பி.செந்தில்குமார் said...

@நிரூபன்

ஓக்கே டன்.. 20.1.2012இல் எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் என்ற தொடரை ஆரம்பிக்கிறேன்:))

Anonymous said...

வாழ்த்துக்கள் அண்ணே...

Anonymous said...

உங்கள் ஆசைப்படி போலோவர் ஆயிரத்தை தாண்டிவிட்டதே...

மன்மதகுஞ்சு said...

அண்ணா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. 1000 வது பதிவு என்பதௌ யார் என்ன சொன்னாலும் சாதாரண விடயம் அல்ல,நீங்க சாதித்திருக்கிறீர்கள்,அனைவரையும் உங்களின் உறவுகளாக நீங்கள் நினைத்து அவர்களுடன் அன்பு பகிர்கிறீகளே அது உங்களின் தந்தை தாய் கொடுத்துவிட்டு போன அன்பளிப்பு அண்ணே.. மேலும் உங்கள் பணீ பதிவு தொடர வாழ்த்துக்கள்.

ஈழத்திலிருந்து
மன்மதகுஞ்சு

stalin wesley said...

1000 பதிவுகள் போட்டு சாதனை படைத்ததற்கு வாழ்த்துக்கள்!

வா

ழ்

த்

து

க்ள்

சி

பிண்

ணா

சிராஜ் said...

அண்ணன் செந்தில்,

நான் உங்கள் தளத்தை தொடர்ந்து பார்த்தவன் அல்ல. அவ்வப்போது வருவது உண்டு. 1000 பதிவுகள் என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் பெரும் சாதனை தான்.
எவ்வளவு நேரத்தை செலவிட்டிருப்பீர்கள்? எவ்வளவு யோசித்து இருப்பீர்கள்? அந்த கடின உழைப்பின் பரிசுதான் உங்களின் 1000 மாவது பதிவு.
உளமார்ந்த வாழ்த்துக்கள் சகோ. தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்.

காட்டான் said...

வணக்கம் மாப்பிள!
ஆயிரம் பதிவு உண்மையிலே பதிவுலகின் சாதனைதான்..!! அடுத்து உங்களுக்கு அதிக நாபக சக்தி அதுதான் வசனங்களை நினைவில் வைத்திருக்கிறீங்க.. இன்னும் அதிக பதிவு கண்டு என்றும் முன்னிலையில் நிற்கவேண்டும் என்றும் வேண்டுகிறேன்..

வாழ்த்துக்கள்..!

ஆமினா said...

வாழ்த்துக்கள் சகோ சிபி

அப்பாவை பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றும் ஆச்சர்யத்தை தந்தது.. சொத்தை விட்டுகொடுத்தது உண்மையிலேயே அவரை உயர்ந்த மனிதனாய் தனித்துகாட்டுகிறது.

இனிவரும் காலங்களில் நாங்கள் (பெண்கள்) தைரியமா படிக்கும்படியான பதிவுகள் எழுத வேண்டும். செய்வீர்களா :-)

கூகிள்சிறி said...

1000 க்கு வாழ்த்துக்கள் நண்பா.
இன்று என்வலையில் லண்டன் வீதிகளில் கீழாடை இன்றி அலையும் இளைஞர்கள்-கானொளி இணைப்பு

Rajan said...

1000!!!! வாழ்த்துகள்

சி.பி.செந்தில்குமார் said...

@ஆமினா

ஓக்கே டன்

அந்த 1000 பதிவுகளில் பெண்கள் படிக்க முடியாத பதிவுகள் 19 மட்டுமே..

அதிலும் நோ வல்கர் வோர்ட்ஸ், ஃபோட்டோஸ் மட்டும் கொஞ்சம் இண்டீசண்ட்டா இருந்திருக்கும், இந்த வருஷம் அதையும் கரெக்ட் பண்ணிடறேன்

Unknown said...

ஆயிரம் பத்தாய்யிரமாகட்டும்
வாழ்த்துக்கள்!

புலவர் சா இராமாநுசம்

Renu said...

வாழ்த்துகள் ! C.P.Sனாவே சினிமா விமர்சனம் தான் எனக்கு நினைவு வரும் . அதெப்புடி சார் படம் உடனே பார்த்து விமர்சனம் போடுறீங்க ? ரகசியத்த சொல்லுங்க :)

senthil said...

வாழ்த்துகள் 1000* !!!

கடம்பவன குயில் said...

அம்மா, அப்பா, குடும்பம் பற்றியெல்லாம் அனைவரும் தெரிந்துகொண்டதோடு உங்கள் பொறுமையும் சிக்கனமும் வந்த விதங்களையும் அறிந்து மகிழ்ந்தேன்.

உங்களிடம் நான் வியந்த விசயங்கள் பொறுமை மற்றும் தன்னடக்கம்.
பத்திரிகையாளர் சாவி அவர்களிடம் நீங்கள் பாராட்டு வாங்கியதாக கேள்விப்பட்டேன். ஆனால் நீங்கள் அதை கடைசிவரை வெளியிடவே இல்லை. டைமிங் ஆக டக்குன்னு எதுகை மோனயோடு நகைச்சுவையை உபயோகிப்பது உங்களின் தனித்திறமை.

எங்களை மாதிரி நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இப்போதெல்லாம் நடிகைகளின் கிளாமர் ஸ்டில்ஸ் வெகுவாக குறைத்ததற்கு நன்றி. வருங்காலத்தில் டோட்டலா அவாய்ட் பண்ணிருவீங்கன்னு நம்பறோம்.

அனைவரின் விமர்சனங்களையும் ஏன் கண்டனங்களையும் கூட பாஸிடிவ்வா எடுத்துக்கற உங்கள் குணம்தான் பதிவுலகில் உங்களை தவிர்க்கமுடியாத நம்பர் ஒன் சக்தியாக உயர்த்தியிருக்கிறது.

மேன்மேலும் உயர்ந்து சாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

அன்பின் சி பி செந்தில் குமார்

அருமையான பெற்றோர் - அவர்களைப் பற்றிய பதிவுடன் துவங்கி 1000 வது பதிவினை இட்டமை நன்று. பின்தொடர்பவர்களும் ஆயிரத்தினைத் தாண்டி விட்டனர். 12 நண்பர்கள் பதிவிடுகிறார்களா - நட்பின் இலக்கணம் - நல்வாழ்த்துகள் சி பி செந்தில் குமார் - நட்புடன் சீனா

Anonymous said...

வாழ்த்துக்கள் சி பி...

1000 மைல்கல் மேன்மேரும் பெருக வாழ்த்துக்கள்...

உங்கள் அத்தனை படைப்புகளையும் தாண்டி என்னை அதிகம் கவர்ந்தவை விமர்சனங்களே...இத்தனை படங்கள் உடனே பார்ப்பது கண்டு பல நாள் வியந்ததுண்டு...
அத்தனை வசனங்களும் நினைவு படுத்தி எழுதுவது உங்கள் தனித்துவம்...விமர்சனம் என்றால் விகடன் குமுதம் என்பது போய் அட்ராசக்க என்பதே முதலிடம் ஆக
மாறியது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி...

உச்சியை தொடுவது சுலபம்...அதை தக்கவைப்பது..தலைக்கு ஏறாமல் இருப்பது மிகவும் கடினம்..அதை சீராக செய்து வருகிறீர்கள்..

தொடர்ந்து கலக்குங்கள்...மீண்டும் வாழ்த்துக்கள்...

Mohamed Faaique said...

உங்க ஃப்லாஷ்பேக் சூப்பர்...

வாழ்த்துக்கள் அண்ணா....

மனோ said...

hi . congrats. This is mano from erode staying in hyd.. i used to readu r blog regularly but now a days i am feeling bored of yours . coz too many post .. unable to follow up.sometimew few days i can be able to connect net. when i come back u might posted 10 post in 2days. and out of 20 jokes/news only 3/4 will be good. then i used to think why to read entire blog for few good word.. then i stopped reading ur blog for last 2 months.. sorry.. i like to give suggection like give more quality than quantity... sorry to say this.. as u asked u r +/- i said this.. but i like photos u update in u r post.. keep going..

துரைடேனியல் said...

10000 pathivugal enra ilakkai adainthu Needoodi Vaazha Vaalthukkkal!

K said...

சி பி உங்களிடம் ஒரு கேள்வி!

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு எப்படி வந்தது? ஜோக் எழுதுவதில் உங்களுக்கு யாரேனும் குரு உண்டா?

rajamelaiyur said...

வாழ்த்துகள் .. என்னையும் உங்கள் பட்டியலில் இணைத்தமைக்கு நன்றி ..

rajamelaiyur said...

அதிசயம் ஆனால் உண்மை

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்(ராஜபாட்டை ஸ்பெஷல் )

குறையொன்றுமில்லை. said...

செந்தில் 1000-ம் பதிவுகளுக்கு வாழ்த்துகள். நான் பத்திரிகைகளில் சென்னிமலை செந்தில் குமாரையும் படிச்சிருக்கேன், ப்ளாக்கில் சி,பி, செந்தில் குமாரையும் படிச்சு வரேன். உங்க அப்பா அம்மவை நினைவு கூர்ந்தது ரொம்பவே டச்சிங்கா இருக்கு. பதிவுலக நண்பர்களையும் நினைவு கூர்ந்தது நல்லா இருக்கு. வாழ்த்துகள் & ஆசிகள்.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

1000-மாவது பதிவு தங்களை மேலும் தெரிந்துகொள்ள உதவியது. நன்றி!! உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது...!

Butter_cutter said...

ஆயிரம் பதிவு கண்ட அபூர்வ செந்தில் அவர்கள் மேலும் ஆயிரம் பதிவு பதிய வாழ்த்துக்கள் !

உணவு உலகம் said...

அதிவேக உலகிலே
அயராத உம் உழைப்பு
ஆயிரம் லட்சங்கள் ஆகட்டும்,
கண்ணியமே லட்சியம் ஆகட்டும் பதிவுலகில் சி(ற்)பிக்கு
மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Rekha raghavan said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துகள். நான் வெளியூரில் இருந்ததால் உடனே பதிவை பார்க்க முடியவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.மேலும் வளர வாழ்த்துகளுடன்.

Prem S said...

வாழ்த்துக்கள் இணைய இணைப்பு இல்லாமலேயே இத்தனை பதிவுகளா ஆச்சர்யம் தான்

CS. Mohan Kumar said...

நெகிழ்வான பதிவு. உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. வீட்டில் நெட் கனக்ஷன் இல்லை என்கிற தகவல் அதிர வைக்கிறது. வாழ்த்துகள்

சீலன் said...

1000-வது பதிவிற்கு என் மனமார்ந்தவாழ்த்துக்கள்.

நிரூபன் said...

@சி.பி.செந்தில்குமார்
ஓக்கே டன்.. 20.1.2012இல் எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் என்ற தொடரை ஆரம்பிக்கிறேன்:))//

ரொம்ப நன்றி அண்ணே,
அப்புறமா லாஜிக் மிஸ்டேக் எனும் பகுதியினை ஆங்கில, ஹிந்தி, தெலுங்குப் பட விமர்சனத்தில் தாங்கள் சேர்ப்பதனை அன்போடு வரவேற்கிறேன்,
மீண்டும் வாழ்த்துக்கள்.

bandhu said...

அசுர சாதனை! வாழ்த்துக்கள்.. --நாப்பதுக்கே நாக்கு தள்ளுது.. ஆயிரம் பதிவு இவ்வளவு குறைஞ்ச நாட்களிலே அப்படின்னு நினைச்சு கூட பாக்க முடியவில்லை! அசுர உழைப்பு!

சரண் said...

வாழ்த்துக்கள் சி.பி.

உங்கள் அப்பாவைப் பற்றின தகவல்கள் உணர்வுப் பூர்வமாகவும், யதார்த்தமாகவும் இருந்தது.
நானும் ஈரோட்டுக்காரன்தான். பிறந்தது மொடக்குறிச்சி, வளந்தது திண்டல். "சாலப்பளைய ஜோசியர்" தான் எங்க குடும்ப ஜோசியர். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

10000 -க்கும் மேற்பட்ட பதிவுகளைக் கடந்து வளர வாழ்த்துக்கள்.

iyyanars said...

அவனவனுக்கு ஒரு பதிவு எழுதி முடிக்கவே நாக்குத் தள்ளுது!...(ஹிஹி நான் என்னைச் சொன்னேன்!)...ஆஆயிரம் பதிவுகள்...(!!!)என்றால் நிச்சயம்...அது சாதனைதான்!...சாதனைகள் தொடர...வாழ்த்துகிறேன் நண்பரே!

sasibanuu said...

மென் மேலும் வாழ்த்துக்கள்!!!!!!

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
ஹாலிவுட்ரசிகன் said...

ய்ய்ய்ய்யப்பா ... 1000 பதிவுகள் தாண்டிமைக்கு லேட் வாழ்த்துக்கள் சி.பி. எனக்கு 100பதிவு தாண்டவே 2வருஷம் போகும் போல. :P

உங்கள் அப்பாவின் கரெக்டர்களை வைத்து அடுத்த தவமாய் தவமிருந்து பார்ட் 2 எடுத்துறலாம் போல இருக்கே.

ஆல்ரெடி 1000பாலோயர்ஸ் வந்தாச்சு. சீக்கிரமே 20லட்சம் ஹிட்ஸ் அடைய வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

வாழ்த்துகள்ண்ணே
பயோடேட்டா திரட்டிப்படி

2010 ஜூலை 16 வெள்ளி அன்று பதிவான விருந்தாளி-அபாயம் போகாதே என்ற அற்புதமான பதிவே இத்தளத்தின் முதல் பதிவாகும்

2010 ஜூலை 16 வெள்ளி அன்று மதிப்புக்குரிய rk guru இட்ட good....... என்ற மறுமொழியே இத்தளத்தின் பழமையானது.

இதுவரை 39056 மறுமொழிகள் கொண்டுள்ளது.

சரியில்ல....... said...

நேற்றய தினமே கமெண்ட் இடாததற்கு முடியாமல் போனது. (அவசர வேலை காரணமாக ஆந்திரா சென்றிருந்தேன்)
மேலும், உங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றிதான் இது. (தெரிந்த விஷயம் தானே?) உங்கள் தாயார் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்!

sathishsangkavi.blogspot.com said...

1000 பதிவும் அதை பகிர்ந்த விதமும், இதில் தங்களின் தந்தையை பற்றி கூறிய விதமும் அருமை...

10000யைத் தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

Unknown said...

சுரபரடை இல்ல - அது சொரப்புரடை >>>
ஆயிரம் பதிவு கொண்ட 'சின்சியர் பிளாக்கர் ' (சி.பி) என்னும் பட்டமே பொருந்தும் !

Rathnavel Natarajan said...

இப்போது தான் முழுமையாக படித்தேன்.
வாழ்த்துகள் சிபி.

தக்குடு said...

வாழ்த்துக்கள் சார்

Angel said...

ஆயிரம் பதிவுகளுக்குக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துகள் சிபியாரே.. விரைவில் 2000-த்தையும் தொடுவீர்..!

jroldmonk said...

மனமார்ந்த வாழ்த்துகள் சகா.. ஆயிரம் பல ஆயிரமாக வளரட்டும்.ஒரு பிரபல டிவிட்டர் கம் பதிவரோட பெயர் நண்பர்கள் லிஸ்ட்டில் மிஸ்ஸிங்..#என்னுது தான் ஹிஹி

R.Puratchimani said...

உங்கள் தந்தை பற்றிய தகவல் நன்றாக இருந்தது.
அந்த போட்டோ பாத்து முதல்ல அது நீங்கதான்னு நினைச்சேன் :)
என்னோட செல்லும் 1100 தான் :)
திருஷ்டிக்காக ஒரு குறை சொல்றேன்.....
சிம்பு,சூர்யா,அஜித் படங்களை காரணமே இல்லாம குறை சொல்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் பாத்துக்குங்க.(தவறு என்னோட கண்ணோட்டமா கூட இருக்கலாம்)
நீங்கள் பத்தாயிரமாவது பதிவு போட இப்பவே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்.
வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்........................

அக்கப்போரு said...

அநேகமா இவ்ளோ கம்மி டைம்ல ஆயிரம் போஸ்ட் போட்டது நீங்க தான்னு நினைக்கிறேன். வாழ்த்துக்கள் ....

அகல்விளக்கு said...

நீங்க கலக்குங்க மாம்ஸ்...

Nathan said...

தல... அருமை... தங்கள் அறிமுகம் கிடைக்கப்பெற்றதில் மகிழ்ச்சி... அந்த அடக்கம் அமைதி... இதைத்தான் அதிகமாக ரசிக்கிறேன்...எனக்கு அது வேண்டும் என் விரும்புகிறேன்... அப்புறம் உங்களின் presence of mind, speed and sense of humor... என் பெயர் இந்த பதிவில் இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி, பெருமை..

nellai ram said...

வணக்கம் . வாழ்த்துக்கள்.

சசிமோஹன்.. said...

SENTHIL SIR NIJAMALUM INTHA PATHIVU REALLY SUPER MA NEGILNTHUTEN SANTHANAM LEVALUKU ELLORAIYUM OTRA UNGALUKKULLA IPDI CHERAN POLA MANASA PINNITINGA PONGA SUPER SUPER UNGA PAASYIL SOLLANUMNA ADRASAKKA ADRASAKKA ADRA SAKKAAAAAAAAAAAA

Giri Ramasubramanian said...

//நண்பர்களை சம்பாதிக்கத்தானே வந்தோம் இந்த உலகுக்கு?//

வெல் ஸெட்.

//4ஆவது இடத்தையாவது பிடிக்கணும்//

அதெல்லாம் எதுக்கு செந்தில்? உங்களுக்குன்னு ஒரு இடம் இருக்கு அது ஒரு தனியிடம். அது முதலா இருந்தா என்ன, கடைசியா இருந்தா என்ன?

சீரியஸாத்தான் சொல்றேன்.

வாழ்த்துகள் 1000.

அன்புடன்,
கிரி ராமசுப்ரமணியன்
சென்னை

ராஜ் said...

Congrats Boss... For your 1000th Post...Remarkable acheivement.. Hats Off to ur writing...
Very good article about your Parents.... I have a suggestion for you...

Pls reduce the number of posts...per week/month... I am unable to remember most of ur posts...

செல்வா said...

முதல்ல இனிய வாழ்த்துகள். மிக்க மகிழ்வாகவும் இருக்கிறது.

உங்களோட அப்பா உண்மைலயே மிகச்சிறந்த முன்னுதாரணம். கண்டிப்பா பாராட்டப்படவேண்டியவர்.

(மிகமிகத் தாமதமான கருத்திற்கு மன்னிக்கவும் அண்ணா. )

MANO நாஞ்சில் மனோ said...

ஆயிரமாவது பதிவுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்டா அண்ணா....!!!! வேலைப்பளு காரணமாக லேட்டாக வந்ததுக்கு மன்னிக்கவும் அண்ணே...

MANO நாஞ்சில் மனோ said...

அப்பா அம்மா குடும்பம் பற்றி படிக்கும் போது மிகவும் நெகிழ்ச்சியா இருக்குய்யா, கண்ணில் கண்ணீர்...

MANO நாஞ்சில் மனோ said...

டேய் அண்ணே நீதாம்னே பதிவுலகின் சூப்பர்ஸ்டார்......!!!!

தனிமரம் said...

ஆயிரம் பதிவுகளைக் கடந்த சி.பி அண்ணாவுக்கு பிந்திய வாழ்த்துக்கள்.சென்னையில் இருந்த தால் அன்றைய தினத்தில் இணைய முடியவில்லை. தனிமரத்திற்கும் நெஞ்சில் இடம் தந்ததற்கு நன்றிகள்.

தனிமரம் said...

பிரமிப்பான சாதனை இப்பதிவுலகில் நீங்கள் செய்த செயல் இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தொடர வாழ்த்துகின்றேன்.

செங்கோவி said...

இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன். அப்பா பற்றிய பகிர்வு நெகிழ்ச்சியடைய வைத்தது, நன்றி.

nellai அண்ணாச்சி said...

வாழ்த்துகள் சிபி தம்பி#

R. Jagannathan said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்! நான் தினமும் பார்ப்பது 4, 5 ப்ளாக் சைட்டுக்கள் தான். அதில் நீங்கள் என்றுமே ஏமாற்றியதில்லை! உங்கள் ஆர்வத்தையும், சோம்பல் படாது பதிவேற்றுவதையும், இத்தனை நகைசுவை பதிவுகள் எழுதும் கற்பனையும், ஒரு நாள் விடாது படம் பார்த்து விமரிசனம் எழுதும் 'வெறி'யையும் (வேறு எப்படி எழுதுவது என்று தெரியவில்லை) நான் மிகுந்த ஆச்சர்யத்துடன் பாராட்டுகிறேன். இதற்கு உதவும் அல்லது குறுக்கிடாத மனம் கொண்ட - உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்!- ஜெ.