Thursday, January 22, 2015

ரஜினி யின் புது பிராஜக்ட்டை 200 கோடிக்கு ஏலம் விட்ட பி வாசு

1  ஒரு திறமைசாலியின் பலமும் பலவீனமும் ஒன்றே! அவன் கூடவே இன்னொரு திறமைசாலி இருப்பதே!

==============


2 அரசியலில் ,சினிமாவில் வெற்றி பெற்ற கூட்டணி தொடராமல் பிரியக்காரணமே பெற்ற.வெற்றி யில் யார் பங்கு அதிகம்?என்ற விவாதமே!


===============

3 சூர்யா வுக்கு ஒரு சிங்கம் போல் கார்த்தி க்கு ஒரு சிறுத்தை போல இளைய தளபதி க்கு ஒரு புலி வெற்றி பெற வாழ்த்து #கோடம்பாக்க சென்ட்டிமென்ட்


=============


4 புலி பாய்வதற்காக பதுங்கி இருக்கும்.ஆனா ஒரு நாளும் ஒதுங்கி இருக்காது # புலி பஞ்ச் டயலாக் ஐடியா


===========


5 ஆடுபுலி ஆட்டத்துல தன் பேருக்கே முதல் இடம் னு ஆடு பெருமைப்பட்டுட்டு இருக்கும்போது புலி ஆட்டை அடிச்சு சாப்ட்டுடும்.# புலி பஞ்ச்


=================


6 நீளமாக டைட்டில் வைக்கும் சிம்புதேவன் ரத்தினச்சுருக்கமாய் ஆக்சன் ஹீரோவுக்கு ஏற்ற வகையில் டைட்டில் தேர்வு செய்ததை வரவேற்கிறேன் # புலி


===================


7  பொண்ணு  கட்டும்போதே  ஊட்டி , கொடைக்கானல் , மூணாறு  இந்த  ஊர் லாட்ஜ்  ஓனர்  பொண்ணாக்கட்டிட்டா ( ஏதோ 1 தான் ) தேன் நிலவு செலவு மிச்சம்


==================


8  தலைவரிடம்  கையேந்துங்கள் ! அவர் இதயத்தில் இடம் இல்லை என எப்போதும் சொன்னதில்லை!


================


9 ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வருவது போல்  சோழ மன்னன் -ன் கதை ஃபிளாஸ்பேக்கில்  வரும்  என்பதால் தான் டைட்டில்  புலி என யூகிக்கிறேன்


================\\\


10 ம்ம் சரி சரி என்பது தவிர (உன் சொந்த) மனைவியிடம் எந்த பேச்சு வார்த்தையும் வைத்துக்கொள்ளாதே!


===============


11  நெல்லிக்கனி அது பல்லுக்கு இனியது

==============

12 கடன் வாங்கும்போது கடவுள் மாதிரி எனக்கு உதவி செஞ்சீங்க என நன்றி சொல்பவர்கள் கண்ணுக்கு கடனை திருப்பிக்கேட்கும்போது சாத்தானாக தெரிவோம்


============


13 அறியாமையால் ,பக்குவமின்மையால் நாம் என்ன தவறு செய்தாலும் நமக்காகப்பொறுத்துக்கொள்வது நம் பெற்றோர் மட்டுமே!


==================


14  அதிகாலையில் எழுந்திடு.மற்றவர்களை முந்தனும் என்ற உன் முயற்சி யின் முதல் படியே எழுவதில் நீ சூரியனுக்கு முன்னோடியாய் இருப்பதே!


=================15
பொங்கல் அன்னைக்கு விஷால் ரசிகைகளுக்கு ஒரு சங்கடம். அத்தான்.ஆம்பளை பாக்க போலாமா? னு கேட்கனும்


===============


16 கந்தர்வக்கோட்டைக்குப்பக்கத்துல கோமாபுரம் னு ஒரு ஊர் .கோர்ட் கேஸ்.னு அலையும் அரசியல்வாதிகள் கோமா ல இருக்கேன்னு இங்க.வந்து பதுங்கிக்கலாம்


==============

17 ஆப்குவாட்டர் அடிச்சாலே அடிச்சுப்போட்ட மாதிரி தூங்குவம்னு தெரிஞ்சும்  நைட் புல் அடிச்ட்டு  அடுத்த நாள் காலை ல 11 மணிக்கு  இன்னும் தெளியல னு மப்புல fb ல ஸ்டேட்டஸ் போடுவான் தமிழன்


================

18  அன்பே! உனக்கு சொந்த ஊரு திருவையாறா? ( திரு 5*6),உன் உதடு கொடை ஆரஞ்சு ( 6 5 ) சுளை போல் இருக்கே?


=============


19 ரஜினியால நட்டம் ஆகிடுச்சுனு ஒப்பாரி வெச்ச பூரா பயலுகளும் 10 வட்டிக்குக்கடன் வாங்கி அடுத்த ரஜினி படத்துக்கு அட்வான்ஸ் தர க்யூ வில் நிற்கும்


===============

20 வாசு = கேட்கறவங்க கேட்கலாம்.200 கோடி ஒரு தரம். ரஜினி = ம்க்கும்.நீங்க பாட்டுக்கு வித்துட்டுப்போய்டுவீங்க.என்னை நட்ட ஈடு கேட்பாங்க


=====================

0 comments: