Wednesday, January 07, 2015

குதிரை மேல் குஷ்பூ

'தாமரை'யை 'கை' கொண்டு பறிக்கலாம் - குஷ்பூ # பறிச்சு வாக்களர் காதுல வக்கணையா வைக்கலாம்.அழகா இருக்கும்
================
2
ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா எந்த நேரத்திலும் உதவும்- டுவிட்டரில் பிரதமர் மோடி # உள்நாட்டையும் கொஞ்சம் கவனிச்சாத்தேவலை
=====================

  
  
3 கண்ணில் மிளகாய் பொடி தூவினார், செல்போனில் திட்டுகிறார்.. மனைவி மீது கணவன் போலீசில் புகார் # கண்ணை மூடிக்கோ.செல்போனை ஆப் பண்ணு


==================
  
  
4: சிபிஐ யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது: காங். எம்.பி.. # நீங்க ஆட்சில இருந்தப்ப சிபிஐயைப்பயன்படுத்தவே இல்லையாமே?
=================நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: மன்மோகன்சிங்கை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவு! #விசாரிக்கலாம் கேள்வி கேட்கலாம்.ஆனா பதில் மட்டும் வராது
=================

  
  
6 இனி ஆதார் இல்லாமல் திருமண இணையதளங்களில் பதிவு செய்ய முடியாது #முதலிரவில் மனைவி =டியர்.முதல்ல உங்க ஆதார் அடையாள அட்டையைக்காட்டுங்க
===================

HM ஆல் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கல்வித்துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு # இடம் சுட்டி பொருள் விளக்குகனு கேட்க இது எக்சாமா?
=================

  
  
8  அமிதாப்பச்சனிடம் ஷாருக்கான் ஆசி # இப்டித்தான் அத்வானி கால் ல விழுந்து மோடி ஆசீர்வாதம் வாங்குனாரு.அத்வானி சேப்டர் க்ளோஸ்
=================
9

காங்கிரஸ் ஆட்சி அமையும் வரை தொண்டர்கள் சோர்வு அடையக்கூடாது-EVKS் # சோர்வு அடைந்தால் இருக்கவே இருக்கு குஷ்பூ.புத்துணர்ச்சிக்கு தீர்வு
================
10 
பாமக தலைமையை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ராமதாஸ் பேட்டி # கேப்டன் கூட இதேதான் சொன்னார்.பிட் அடிச்ட்டாரா? டாக்டர்?
 
 
===================

  
  
11  நாட்டுக்கு உழைக்கவே நேரமில்ல..- இந்திப் படத்திலிருந்து விலகிக் கொண்ட ஸ்மிருதி இரானி! # உழைச்சு உழைச்சு ஓடாத்தேய்ஞ்சுடாதீங்க.
 
 
================

  
  
12  கருப்புப் பணம் குவிப்பதில் இந்தியாவுக்கு 3வது இடமாம்! # இந்திய அளவுல தமிழ்நாடுதான் முதல் இடமா? 1 தானைத்தலைவர் கலைஞர் 2 ஜெ
 
 
==================
 
 
13
நான் இதுவரை 20 தமிழ்ப்படம் மட்டுமே பார்த்திருக்கேன் - மிஷ்கின் # சபாஷ் மன்னா! கொரியன்மூவி பார்த்தாத்தானே யாருக்கும் தெரியாம சுட முடியும்?
 
 
==================
 
 
14 

  
 
பாமக தலைமையை ஏற்றுக்கொண்டால் BJPகூட்டணி தொடரும்.-ராம்தாஸ் # அய்யா சாமி ! ஏதாவது பிச்சை போட்டா நான் இந்த ஏரியாவுக்கு தொடர்ந்து வருவேனுங்க.
 
 
==============
 
 
15 
 
காங்கிரஸ் கட்சியை பந்தய குதிரை ஆக்குவேன் - குஷ்பு #குதிரை மேல் குஷ்பூ ! எப்படி டைட்டில்?================


16 
 
லஷ்மண ரேகையை தாண்டக்கூடாது: மோடி எச்சரிக்கை.# முதல்ல பிரதமர் ஜனாதிபதி யாரும் இந்திய எல்லையைத்தாண்டக்கூடாதுனு சட்டம் போட்ரனும்


====================
  
 
17  தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் உயர்வு வெளிநாட்டினர்க்குிRS.1000 ்.# உள்நாட்டினர்க்கு ஏத்திடாதீங்க.வெளிலயே சுத்திப்பாத்துட்டு போய்டுவான் தமிழன்
 
================
 
 
18  ஐ படத்தில் இடைவேளை வரை எல்லோருக்கும் நெகடிவ் ரோல் தான் - கிசுகிசு செய்தி # பட ரிசல்ட் பாசிட்டிவ்வா வந்தா சரி
 
 
===============
 
 
 
19 

வரலட்சுமி என் பொக்கிஷம் -விஷால்! #லட்சுமி மேனன் என் புதையல் ,த்ரிஷா என் செல்வம் ,ஸ்ருதி என் வெல்லம் னு சொல்லிட்டே போவாரோ?
 
 
==================

20 வரலட்சுமி என் பொக்கிஷம் -விஷால்! # நீங்க சிலாகிக்க ,கரெக்ட் பண்ண கரெக்ட்டா என் பட டைட்டில் தான் கிடைச்சுதா?-சேரன்
 
 
=================

21  நயன்தாராவோடு நடிக்க மீசை தாடியை துறந்தார் விஜய்சேதுபதி# தியாகத்தின் திரு உருவமே! நயன் தாராக்கு இன்னும் மீதம் இருக்கு காதலிக்கும் பருவமே!
 
===================

0 comments: