Thursday, January 15, 2015

டார்லிங் - சினிமா விமர்சனம்

 


100 கோடி  முதலீடு  போட்டு 2 வருசம்  கடின  உழைப்பில்   உருவாகும் படங்கள் கூட  போட்ட  முதலீட்டை எடுக்க தகிந்தனத்தோம்  போட்டுட்டு  இருக்கும்போது  மிகக்குறைந்த  முதலீட்டில்  புதுமுகங்களைப்போட்டு  எடுக்கும்  படங்கள்  சில  சமயங்கள்  பிரமாதமான  லாபத்தைத்தந்துவிடும். .காஞ்சனா , யாமிருக்க பயமே , பிசாசு  போன்ற  படங்கள்  வரிசையில்  தமிழ்  சினிமா வின்  திகில்  கலந்த  காமெடிக்கலக்கல் படம்  தான்  டார்லிங்.

வானமே  எல்லை  படத்தில்  வருவது  போல்  4 பேரு தற்கொலை  பண்ணிக்க  ஒரு பங்களா  வுக்கு  வர்றாங்க.4 பேரும்  ஆம்பளையா  இருந்தா  படம்  போர் அடிச்சிடும், வாழ்க்கைலயும்   சரி , சினிமாலயும் சரி  பொண்ணுங்க எண்ட்ரி  கொடுத்த  பின்  தான்  சுவராஸ்யம்.அதனால  1  பொண்ணு , 3  ஆம்பளைங்க .


அந்தப்பொண்ணு  ஹீரோவை  லவ்  பண்ணுது. ஆனா  ஹீரோவுக்கு ஆல்ரெடி  ஒரு லவ்  ஃபெய்லியர்  இருக்கு. ஆனா  கூட  இருக்கும்  ஃபிரண்ட்ஸ்  2 பேரும்  ஹீரோவை உசுப்பேத்தி  விடறாங்க. அந்தப்பொண்ணை  கரெக்ட்  பண்ணிக்கனு ஐடியா  குடுக்கறாங்க . 


 இப்போதான்  பேய் எண்ட்ரி  குடுக்குது. அதாவது  ஹீரோ ஹீரோயினைத்தொடும்போது  கரெக்ட்டா எம் ஜி ஆர்  கணக்கா வந்து  தடுத்துடுது. முக்கியமான  சீன்  வர்ற  நேரத்துல  கரண்ட்  கட் ஆகும்போது வரும்  கடுப்பு  இந்தப்பேய்  வரும்போதும்  வருது. எதனால அந்தப்பேய் அப்டி செய்யுது?இதெல்லாம்  மிச்ச  மீதித்திரைக்கதை.


கேட்கும்போது  மிக சாதாரணமாத்தெரியும் இந்தக்கதை  நம்ப  முடியாத  நகைச்சுவைசம்பவங்கள்  வசனங்களால்   படம்  பூரா  காமெடி  ரசம்  தெளிக்கப்பட்டு  பிரமாதமா  வந்திருக்கு.


ஹீரோவா  இசை அமைப்பாளர்  ஜி வி  பிரகாஷ் . தோற்றச்சாயலில்  இவர் இயக்குநர் அட்லீ  போல்  இருந்தாலும் நடிப்புச்சாயலில்  தனுஷ்  மாதிரி  முயற்சி  பண்ணி  இருக்கார் . முதல்  படம் என்ற அளவில் ஓக்கே . பின்னணி இசையில்  பல  இடங்களில்  சபாஷ்  போட  வைக்கிறார்.

ஹீரோயினா நிக்கி  கல்ராணி யவண  ராணியா கொழுக் மொழுக்  பேபியா வர்றாங்க.பேயாக  வரும்போதும் பேயிங்  கெஸ்ட்டா  நம்ம மனதில்  தங்கிடறாங்க. ஆல்ரெடி  உடல் சுற்றளவில்  2  ரவுண்ட்  வந்த  இவர்  சினி ஃபீல்டில்   இன்னும்  1 ரவுண்ட்  வருவார். இவர்  போட்டு வரும்  மிடி  , நைட்டி  எல்லாம்  ரொம்ப  ரொம்ப  மெல்லிசு.உடம்போட  ஒட்டிக்குது


கருணாஸ்  காமெடிக்கு .  செம  டைமிங்  டயலாக்  அடிச்சு அப்ளாஸ் அள்ளறார். பாலா வும்  காமெடியில்  பின்னி  எடுக்கிறார்.


 வசனகர்த்தா  படத்தின்  வெர்றிக்கு  மிகப்பெரிய   காரணம் .அதே  போல்  திரைக்கதை  பக்கா . தியேட்டரில்  80 இடங்களில்   சிரிப்புச்சத்தம்  எழுந்தது. 


தற்கொலை  முயற்சி என்பது ஒரு  சோகம் , பேய்  வருதல்  என்பது  ஒரு பயம் . ,இந்த   2  வித்தியாச  சிச்சுவேசன்ல  காமெடி கொண்டு  வருவது  தமிழுக்குப்புதுசு. சீன் பை  சீன்  சிரிப்புத்தான்.நான்  கடவுள்  வில்லன் நடிப்பும்  செம


 பாடல்கள் ஓக்கே  , பின்னணி   இசை  அருமை. ஒளிப்பதிவு  கனகச்சிதம்  . எடிட்டிங்  , இன்னபிற டெக்னிக்கல் அம்சங்கள்  எல்லாமே  தரம்


 மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  நீங்க தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன ஆகும்? எந்த ஸ்டேட்டஸ்.போட்டாலும் 5,லைக்ஸ்.தான் விழும்.ஹூம்.இதுக்கு எப்டியோ?# டார்லிங்்2
சாகப்போகும்போதாவது சந்தோசமா இருப்போமே? சந்தோசமா இல்லைன்னு தான் சாகவே முடிவெடுத்தோம் #,டார்லிங்


3  சார்.நீங்க தற்கொலை பத்தி என்ன நினைக்கறீங்க? அதான் மேரேஜ் பண்ணிக்கிட்டேனே # டார்லிங்சாவு வீட்ல ஏன் டான்ஸ் ஆடறே? இன்னொருத்தன் சாவுல நாம ஆடுனாத்தான நம்ம சாவுக்கு வேற ஒருத்தன் ஆடுவான் # டார்லிங்்


5   என்னடா உளர்றே?,நேரா மேட்டருக்கு வாடா!


 அதுக்குத்தான் அவளும் கூப்பிடறா # டார்லிங்


6  பிரண்டு பிரண்டு னு சொல்லி முத்தம் தர்றது தாண்டா இப்போ ட்ரெண்டு # டார்லிங்


7  
கிரிக்கெட் ஆடனும்னு ஒரு தடவை பேட்டைக்கைல எடுத்துட்டா தினம் தினம் மேட்ச் தான் # டார்லிங் ( டபுள் மீனிங்)


8  கருணாஸ் =,நாங்க பன்னிங்க இல்ல.நீங்க 2 பேரும் தான் உள்ளே என்னமோ பண்ணீங்க #,டார்லிங்


9  பேய் = ஆம்பளை பயந்தா பேய்க்கு எவ்ளோவ் சந்தோஷமா இருக்கு தெரியுமா? # பாத்தும்மா.பயந்த மாதிரி பாவ்லா காட்டிட்டு பேயையே கரெக்ட் பண்ணிடுவான்10 
டார்லிங் செம ஹிட் டயலாக் = பச்சை மண்ணுடா அவ


11   பச்சை மண்ணு மாதிரி இருக்கா? இவ பேயா?


 அவளை தொட்டா தான் பேய் வரும். 


 பொண்ணைத்தொட்டா மூடு தான் வரும்.பேயுமா வரும்? # டார்லிங்


12
நம்ம ஊர் பொண்ணுங்களுக்கு மட்டும் இல்ல.பேய்க்குக்குக்கூட வெளிநாட்டுக்காரனைத்தான் பிடிக்குது # டார்லிங்


13 பேய் இருக்குது?

 இன்னைக்கு மட்டும் வரட்டும்.பேய்க்கு இருக்குது #,டார்லிங் 
 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  கே பாலச்சந்தர் ன் வானமே எல்லை கதைக்கு காமெடி முலாம் பூசி ரீ மிக்ஸ் போல # டார்லிங்

2  இப்போ தான் ஹீரோயினை தடவிட்டு இருக்கார்.முதல் கட்டமா ஹீரோயினைத்தேத்துவார்.@iamkalvan: @senthilcp ஜிவி நடிப்புல தேறுவாரா"


3 யாமிருக்க பயமே பாணியில் புதிய களத்தில் திரைக்கதை பயணிக்குதே ! அடடே!! # டார்லிங்


சினிமால வர்ற ஹீரோயின் பெரும்பாலும் மஞ்சள் கலர் நைட்டி தான் போடுதுங்க.மங்களகரமான கவர்ச்சிக்கா? ஏதாவது குறியீடா?


பேயின் கண்ணில் இருந்து விழும் ஒரு துளி ரத்தக்கண்ணீர் நீச்சல் குளத்தில் விழுந்து முழு சிவப்பாகும் காட்சி கிராபிக்ஸ் கலக்கல்


6  2013 ல் தெலுங்கில் ரிலீஸ் ஆன பிரேமகதா சித்ரம் தான் தமிழில் டார்லிங் னு ரீமேக் காம்.இது  கன்னடத்திலும்   ரீ மேக்  ஆகி  இருக்கு


7  தியேட்டர்ல இருக்கும் 89 காதலிகளும் கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்குங்க.காதலர்கள் எல்லாரும் பவ்யமா பாப்கார்ன் /பப்ஸ் கொண்டாறானுங்க.

8 கருணாஸ் க்கு செம ரீ என்ட்ரி .குட் காமெடி


9  
முன் பாதியை விட பின் பாதி கலக்கல் காமெடி # டார்லிங்

 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1     ஹீரோ  ஹீரோயினை  கரெக்ட்  பண்ண பெட்ரூமில்  போகும்போது  பேய்  வரும் என்னும்  எதிர்பார்ப்பில்  அமைந்த  4 காட்சிகளும்  கலக்கலாக  எடுக்கப்பட்டிருக்கு .தியேட்டரில் ஆரவாரமான  கரகோசம்
வழக்கமான  பேய்ப்படங்களில் வருவது  போல்  ஹீரோ , ஹீரோயின் இருவரால் அல்லது  யாரோ  ஒருவரால்  பாதிக்கப்பட்ட  பேய்  என்பது  இல்லாமல்  அவர்கள்  இருவருக்கும்  சம்பந்தம் இல்லாமல்   இருப்பது  புதுசு.
 


3 நான்  கடவுள்  வில்லன்  மொட்டை  பேய்  ஓட்டியாக  வரும்  காட்சிகள் கல கல 


4 படத்தில்   பேசப்படும்  வசனங்களில்  80%  காமெடி  சர வெடி  தான் . ஒவ்வொரு  கேரக்டரும்   பேயை  இது  பச்சை  மண்ணுடா  என்பது  செம 
இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  5  பேரால்   ரேப்பப்பப்படும்  பெண்  பேயாக  மாறி   ஒரு  பங்களாவில்  ஏன் தங்கி  டைம்  வேஸ்ட்  பண்ணனும் ? அந்த  5  பேரை  அதுவே  போய் ப்ழி வாங்காதா?  அவங்களை கூட்டி  வர  ஒரு ஆள்  எதுக்கு ? பேய்க்கு  பவர்  அவ்வளவு  தானா? 
ஹீரோயினை  ஹீரோ  நெருங்கும்போது   பேய்  ஏன்  தடுக்குது?  சீன்  போச்சேன்னு  வருத்தத்தில்  கேட்கலை.  லாஜிக்  இடிக்குதே.  பேயை  ரேப்  பண்ணிய  வில்லன்கள்  போல்  ஹீரோ  ஹீரோயினை ரேப்பலை . பாப்பா சம்மதத்தோட  தான்  போறார். அது  ஏன்  பேய்க்குப்பிடிக்கலை ?  நெருங்க  விட மாட்டேங்குது  ? ஹீரோவை  லவ்  பண்ணீ  இருந்தாதான்  தடுக்கனும் . பேய்க்கும் ஹீரோவுக்கும்  சம்பந்தமே இல்லையே?


3   அந்த  5  வில்லன்க  ஃபிளாஸ்பேக்கில்  பெண்ணை  ரேப்  பண்றப்ப  பங்களா  தோட்டத்தில்  வெட்டவெளில  ரேப்  பண்றாங்க . அது மெயின்  ரோட்டில்  இருந்து  பார்த்தா  நல்லா  தெரியும் /  ஏன்  ரூம் க்கு  போகலை  ?3  க்ளைமாக்ஸ்  ல   பேய்   ஹீரோயின்  கிட்டே  இருந்து  ஹீரோ  உடம்புக்கு  ட்ரான்ஸ்ஃபர் ஆவது  எதுக்கு ?  ஃபைட்  போடவா?  ஹீரோயின்  உடம்பில்  இருந்தே   பழி  வாங்கலாமே? கைல  பிளேடால்  கிழிச்சுக்கிட்டதாலஹீரோயின் உடம்பு  வீக்னு  சால்ஜாப்  சொல்றாங்க  . பேய்   ஹீரோயின்  உடம்புல  புகும்போது  பேயோட  பலம்  வந்துடும்  இல்ல ? 


4   க்ளைமாக்ஸ்  ல   நடுநிசி  12க்குத்தான்  பேயோட முழு  பலமும்  வெளில  வரும்னு  காட்டறாங்க  . ஏன் 11  55  க்கு  எதுவும்  ஆகாதா?  11  45  ல  இருந்து  12  வரை  வில்லன்க  வெயிட்  பண்ணிட்டு  இருப்பாங்களா?
சி  பி  கமெண்ட்  - டார்லிங் = கலக்கலான காமெடி ,வசனங்கள் செம ,திகில் - விகடன் மார்க் = 44 ,ரேட்டிங்.= 3 / 5ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -44குமுதம்  ரேங்க் ( கணிப்பு)- நன்று ரேட்டிங்  =3 / 5


ஈரோடு  தேவி  அபிராமில பார்த்தேன் . ஊர்ல   ஒரு  பேய்ப்படம்  ரிலீஸ் ஆகிடக்கூடாது , ஆளாளுக்கு  ஒரு காதலியையைக்கூட்டிட்டு  ஜோடியா வந்துடறாங்க
=


0 comments: