Wednesday, January 21, 2015

கருணை மலர்,கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம்!!

1  கருணை மலர் னு ஆல்ரெடி அக்கவுன்ட் இருக்கும்போது ஏன் அதே பேர்ல மேலும் 4 ஐ டி? கருணைக்கிழங்கு ,கருணை புஷ்பம் னு ஆரம்பிச்சிருக்கலாம்


===============

2 கடன் அன்பை முறிக்கும் னு கடை ல போர்டு வெச்சிருக்கற பூரா பயலுகளும் பேங்க் ல லோன் வாங்கி "நன்றி - பேங்க்"னு போர்டு வெச்சவனாத்தான் இருக்கானுக


===================

3  சார்.நீங்க பச்சை பச்சையா எழுதறீங்களாமே? னு கெஜட்டட் ஆபீசர்ட்ட கேட்க முடியாது


=================

4
அஜித் க்கு தொப்பை இருக்கு ,நரை முடி இருக்கு னு கிண்டல் பண்றவங்கள்ல 90% பேருக்கு இளநரை ,பீர் தொப்பை இருக்கு


==================

5 சலூன் கடை சன்னிதானந்தா = என்னிடம் 100 இளைஞர்களைக்கொடுங்கள்.சிரமப்பட்
டு சிகை முடி வெட்டி அவர்களை கண்ணியமாக மாற்றிக்காட்டுகிறேன்

====================

6
3 டி ( த்ரி டி) படம் எடுத்தா அது அம்புலி ,மகதீரா ,2ம் உலகம் ல இருந்து பாதி பாதி திருடி எடுத்தா அது சிம்பு தேவன் ன் புலி


==================

7 அஜித் , விஜய் என இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.நடிகர்களைப்பற்றி நாகரீக வார்த்தைகளில் கலாய்த்துக்கொள்ளுங்கள்.நடிகரின் குடும்பத்தை இழுக்காதீர்கள்


======================


8 கடன் வாங்குபவர்கள் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிக்கொடுக்க முடியா விட்டால் வராக்கடனில் கணக்கை எழுதிவிட எதிர்பார்க்கிறார்கள்


====================


9 சமூக நலன் ,மீனவர் பிரச்சனை ,விவசாயிகள் போராட்டம் இவற்றிற்கு ஆதரவாக மட்டுமே டேக் போட்டு ட்ரெண்ட் பண்ணனும்னு விதி வந்துட்டா நல்லது


================


10 விபத்தில் வலது கையில் அடிப்பட்டவர் ஹோட்டலில் இடது கையால் சாப்பிடுவதைப்பார்த்ததும் இயற்கைக்கும் ,என் வலது கைக்கும் நன்றி சொன்னேன்


==================

11 அதிகாலையில் கண் விழித்து எழுந்தால் அன்றைய நாளுக்கு நீ அதிபன்


==================

12  நீ என்ன செய்யப்போகிறாய் ? என்பதை அம்மாவிடம் சொல்.எப்படி செய்ய வேண்டும் என்பதை அப்பாவிடம் கேள்.நம் வாழ்வின் சிறந்த வழிகாட்டி நம் பெற்றோரே!


====================

13
உடை சுருக்கி ,கிளாமர் பெருக்கி கவர்ச்சியை கடை பரப்புவது பெருமை என மாடர்ன் பிகர்கள் பலர் நினைக்கிறார்கள்


=================

14 எளிமையில் நீ ராணியாக இருந்தால் அனைவரின் கண்களுக்கும் நீ அழகு ராணி யாகத்தெரிவாய்!


=================


15 தினமும் அதிகாலையில் 4 கிமீ நீ நடந்து விட்டால் உன் ஆரோக்யத்துக்குப்பாதகமாய் எதுவும் நடந்து விடாது.நடைப்பயிற்சி ஆரோக்ய முயற்சி!


==================


16 உழைப்பை நீ பேவரைட் செய்தால் அதிர்ஷ்டம் ஆட்டோமேட்டிக்கா ஆர் டி ஆகும்


===============

17 வேப்பங்குச்சியில் நீ பல் துலக்கினால் பிரஸ் சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தும் வேலை மிச்சம்.


===============

18 பெற்றவர்களை எதிர்த்துப்பேசினால் அவர்கள் மனம் புண்படும்.சம்சாரத்தை எதிர்த்துப்பேசினால் நம்ம உடம்பு புண் ஆகிடும்.


===============


19 பணக்காரர்களை விட ஏழைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கக்காரணம் அவர்கள் அதிக நேரம் பசியுடன் இருப்பதே


================

20
வாயால் கெட்டவர்கள் ஊருக்குள் பலர் உண்டு.மவுனத்தால் கெட்டவர்கள் உலகில் ஒருவர் கூட இல்லை.முடிந்த வரை மவுனியாக இரு


==================