Saturday, January 24, 2015

கத்தி , ஜில்லா , தலைவா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

1  பைக்கை நிறுத்தி சென்ட்டர் ஸ்டேன்ட் போட 30 நொடி ஆகுமா? அதுக்குக்கூட டைம் இல்லாம 10 நொடி ல சைடு ஸ்டேன்ட் போட்டுட்டுக்கிளம்புவான் தமிழன்


================

2
சிரிச்ச முகமா ஒரு பொண்ணு உன் கடையில் வேலை செஞ்சா உன் கடை என்ன கடையா இருந்தாலும் நகை கடை ஆகும்


=============


3 பேங்க் ல கவுன்ட்டர் டோரை மூடிட்டாக்கூட ஜன்னல் கம்பி வழியா பணம் /செல்லான் நீட்டுவான் அவசரத்தமிழன்

=============


4 AVOID ENVY & N V ( non veg)


=============


5
வாரமலர் அந்தரங்கம் கேள்வி பதில் ,குமுதம் குஷ்பூ கேள்வி பதில் எல்லாம் கேள்வியும் நானே பதிலும் நானே டைப் தான்


================


6
எதிரியின் மகனை நம்பினாலும் டாஸ்மாக் குடிமகனை நம்பாதே!


===============


7 விபத்துக்குள்ளாகும் பெரும்பாலான விமானங்கள் பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனமாத்தான் இருக்கு.விஐபி கள் பாதுகாப்பாக போய் விடுகிறார்கள்

=================


8 உன் துறையில் சக போட்டியாளர்க்கு நீ ட்ரெண்ட் செட்டராக இரு.யாரோ ஒருவருக்காக ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கிட்டு இருக்காதே!


==============


9 பரங்கிமலை ஜோதி டைப் தியேட்டருக்கு அடிக்கடி போய்க்கொண்டு இருந்தால் உன் வாழ்வில் ஜோதி தெரியாது.உன் தோழி ஜோதியும் உன்னை விட்டுட்டுப்போய்டும்


================

10 கோடிகளில் சம்பளம்வாங்கும் ஹீரோவுக்கு அவர் ரசிகர் லட்சத்தில் ஒருவர்.உன்னை யாரென்றே தெரியாதவருக்காக உன் வாழ்வின் பெரும்பகுதியை செலவழிக்காதே

===============


11 அபிமான நடிகரின் புகழ் பாடி உன் அருமையான நேரத்தை வீணாக்காதே!


================


12  வாசல்ல புள்ளி வெச்சு1 மணி நேரம் சிரத்தை எடுத்து கோலம் போட்ட காலம் மலை ஏறிடுச்சு.மாடர்ன் பொண்ணுங்க கோல அச்சை வெச்சு 5 நொடியில் போட்டுடறாங்க


================


13 திருப்பதி மாதிரி புண்ணியஸ்தலங்களில் குடி இருப்போர்க்கு அதன் அருமை தெரியாது.நம்முடனே வாழ்ந்து வரும் பெற்றோரின் பெருமை நமக்குப்புரியாது


===============


14
அலாரம் அடிக்கும் முன் அதிகாலையில் நீ எழுந்து விட்டால் அதிர்ஷ்ட தேவதை உன் வீட்டுக் காலிங் பெல்லை அடிக்கும்

===============


15   என் திருமண நிகழ்ச்சியை யாரும் வீடியோ எடுக்கக்கூடாது.த்ரிஷா அதிரடி அறிவிப்பு # கற்பனை


===============


16
த்ரிஷா வின் கழுத்தில் 3 முடிச்சு போட்டார் தொழில் அதிபர் இ னா வா னா .அட்சதை தூவினார்.1 ராணா 2,ஆர்யா 3 சிம்பு # கற்பனை ஹெட்டிங் நியூஸ்
===============
17 நாணயமாகவும் ,நேர்மையாகவும் நடந்ததற்கு/நடப்பதற்கு பதில் மரியாதை கிடைக்காவிடில் தடம் மாறுவதாலேயே பெரும்பாலானோர் ஊரோடு ஒத்து வாழ்கின்றனர்
===============
18

ஆனா சிம்பு மடம் ,ஆகாட்டி பிரபுதேவா மடம் .ஹேப்பி பர்த் டே நயன் தாரா
===============
19 
மனக்கணக்கு/தப்புக்கணக்கு/பொய்க்கணக்கு 1,தலைவா.= 75 கோடி வசூல் 2 ஜில்லா = 90 கோடி வசூல் 3,கத்தி = 160 கோடி வசூல்
 
 
==============
 
 
20 
உனக்கான யோகப்பொழுது விடியும் வரை காத்திரு!எதிரி அகஸ்மாத்தமாய் சறுக்கி விழுவான்.பார்த்திரு!
 
 
=================