Sunday, January 11, 2015

திருச்செங்கோடு-தேவதாசி முறை-சர்ச்சையில் பெருமாள்முருகன். -ன் ‘மாதொருபாகன்’ நாவல்

தமிழ் அறிவுலகின் வருடாந்திரக் கொண்டாட்டம் சென்னையில் தொடங்கிய அதே நாளில், தமிழ் அறிவுலகில் அந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது: தான் நேசித்த சொந்த ஊரான திருச்செங்கோட்டிலிருந்து தொடர் நிர்ப்பந்தங்களின் விளைவாக வெளியேற்றப்பட்டிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.
திருச்செங்கோட்டில் நேற்று முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றப் புறக்கணிப்பும் நடந்திருக்கிறது. ஆனால், இவற்றுக்கெல்லாம் காவல் துறையினரின் அனுமதி அல்ல; அவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக்கூடத் தெரியவில்லை. இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், இதை முன்னின்று ‘வெற்றி கரமாக’ நடத்திய அமைப்பு எதுவென்றுகூட ‘யாருக்கும்’ தெரியாது. ஆனால், ‘அந்த அமைப்பு’ ஒவ்வொரு நாளும் கூடுகிறது. மண்டபங்களில் பகிரங்கமாகக் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.
பொது இடங்களில் சுவரொட்டிகள் அடித்து ஒட்டுகிறது. வீதி வீதியாக வீடுகளில், கடைகளில், அலுவலகங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறது. சமூக வலைதளங்களில் ‘பெருமாள்முருகன் எதிர்ப்பு இயக்கம்’ (https://www.facebook.com/protestperumalmugan) நடத்துகிறது. எந்தக் கோரிக்கையையும் முன்வைக்காமல், ஓர் எழுத்தாளரை அவருடைய எழுத்துகளை முன்வைத்து ஓட ஓடத் துரத்துகிறது. வெறுப்பைக் கக்கி வேட்டையாடத் துடிக்கிறது.
எங்கே இருக்கிறோம்?
நாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா? ஆம், தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம். இதெல்லாம் திருச்செங் கோட்டில்தான் நடக்கிறதா? ஆம். திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. ஈரோட்டிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. இந்தியாவின் பெருமைக்குரிய சுதந்திரக் கருத்தாளர்களில் ஒருவரான பெரியாரின் களங்களில் ஒன்றான திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. திராவிட இயக்கத் தளகர்த்தர்கள்
என்.பி. நடேசனும் சங்கரலிங்கமும் ‘பெரியார் நகர்’ அமைத்த தி.ரா.சு. மணியனும் இருந்த திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, தாய்மொழி காக்க மொழிப் போராட்டத்தில் மாணவர்களை உயிர் பலி கொடுத்த திருச்செங்கோட்டில்தான் நடக்கிறது. ஆம், இன்றைக்குத் தமிழகத்தில் பாசிஸத்தின் பரிசோதனைக் களமாகியிருக்கிறது திருச்செங்கோடு.
முகமற்றவர்களின் அதிகாரம்
யார் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்? வெளியே பெயரை அறிவித்துக்கொள்ளத் துணிவில்லாத ‘அடிப்படை வாத சக்திகள்’ இதன் பின்னே கைகோத்திருப்பதாகச் சொல்கிறார்கள் திருச்செங்கோடு மக்கள். இதைத் தாண்டி கவனிக்க வேண்டிய இன்னொரு அபாயகரமான விஷயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்: இங்கே ‘அடிப்படைவாத சக்தி’யாக உருவெடுத்திருப்பது இந்துத்துவ-சாதிய சக்திகளின் கலவை. மிக நுட்பமாக, முதலில் ஒவ்வொருவரிடமும் இயல்பாக சொந்த ஊர் மீது இருக்கும் நேசத்தைக் குறிவைத்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். பிறகு, மத உணர்வைத் தூண்டுகிறார்கள். கடைசியாக, சாதிய உணர்வைக் கைப்பற்றுகிறார்கள் என்கிறார்கள் திருச்செங்கோட்டு மக்கள்.
ஒரு படைப்பாளியின் வேலை சமூகம் நம்பிக் கொண்டிருக்கும்/ மெச்சிக்கொண்டிருக்கும் ஆகிவந்த பெருமிதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் சந்தனம் பூசுவது அல்ல. அடிப்படையிலேயே, இயல்பிலேயே படைப்பாளி என்பவர் ஒரு கலகக்காரர். ஒரு சமூகம் எழுப்பி யிருக்கும் அதிகார / புனிதப் பிம்பங்கள் மீது அவர் தன் கருத்துகள் மூலம் உருவாக்கும் மோதல்களினாலேயே அவர் படைப்பாளி ஆகிறார். அந்தச் சமூகத்தை அவர் அடுத்த தளத்துக்குத் தள்ளுகிறார். அதனால்தான் அவரைப் படைப்பாளி என்று கொண்டாடுகிறோம்.
இதுதான் நம் எதிர்வினையா?
பெருமாள்முருகனின் சர்ச்சைக்குரிய ‘மாதொருபாகன்’ நாவல் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பா, இல்லையா; அதில் அவர் வரலாற்றையும் புனைவையும் கையாண்டிருக்கும் விதம் சரியானதா, தவறானதா எனும் விவாதங்களெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தமிழகத்தில் ஒரு எழுத்தாளர் ஒரு நாவல் எழுதுகிறார்; அவர் எழுதியிருக்கும் சில விஷயங்கள் நமக்கு உடன்பாடானதாக இல்லை; அதற்கு நாம் வெளிப்படுத்தும் எதிர்வினை என்ன? அந்தப் புத்தகத்தை எரித்து, அந்த எழுத்தாளருக்கு எதிராக வெறுப்பை உமிழ்ந்து, துவேஷப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, மிரட்டி ஊரை விட்டுத் துரத்துவதா?
இங்கே கவனிக்க வேண்டிய மிக நுட்பமான விஷயம், எதிர்ப்பாளர்கள் தங்கள் நோக்கம்/ கோரிக்கை என்ன வென்று இதுவரை எங்கும் வெளிப்படுத்தவில்லை என்பது தான். “பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம், அவர்கள் வரவில்லை” என்று கூறுகிறார் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.
ஒரு தவறான முன்னுதாரணம் என்றாலும்கூட, எழுத்தாளர் பெருமாள்முருகன் தானாக முன்வந்து, செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்திருப்பதோடு, அடுத்த பதிப்பில் எதிர்ப்பாளர்களுக்குச் சங்கடம் தரும் விஷயங்களைத் தவிர்ப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை என்றால், அவர்களுடைய நோக்கம்தான் என்ன?
தமிழக வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத ஒரு அக்கிரமம் இப்போது நடக்கிறது. ஒரு வாரம் தாண்டி இந்த விவகாரம் தீப்பற்றி எரிகிறது. ஊடகங்கள் தொடர்ந்து எழுதுகின்றன. ஆனால், தமிழகத்தின் அரசியல் இயக்கங்கள் இதுபற்றி அணுவளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. நாம் இருப்பது தமிழகத்தில். இந்த தேசத்தின் மதிப்புமிக்க ஜனநாயகக் களமான தமிழகத்தில்... உணர்கிறோமா?
- சமஸ், தொடர்புக்கு: [email protected]
 
 
thanx - the hindi
 
 • K.Palanivel  
  அக்காலத்தில் திருசெங்கோட்டிலே தேவதாசி முறை அமுலில் ஈ.வே.ரா காலத்தில் இருந்தபோது அக்கொடிய சமூகசீர்கேட்டை அவர் எப்போதாவது எதிர்த்து பேசியோ போராடியோ இருக்கிறாரா?
  Points
  1545
  about 2 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     
 • Pugazh  
  ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க உரிமை இருக்கு ..
  about 3 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • Thandapani  
  ஒருவன் நான் ஹிந்துன்னு சொன்ன மட்டும் தான் உங்களோட சகிப்பு தன்மை கெட்டுவிடும் என்று பேசுவது எந்த விடத்தில் நியாயமோ. மத்த மதத்துகாரன் பேசும் பொது எங்க போறீங்க நீங்கெல்லாம்
  Points
  215
  about 4 hours ago ·   (8) ·   (0) ·  reply (0) · 
 • Dilli Babu  
  பாஜகவும் ,தாலிபனும் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள். இவர்கள் மேலும், மேலும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி கொண்டே இருப்பார்கள்.குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் இவர்கள் தொழில்..
  Points
  3075
  about 4 hours ago ·   (1) ·   (5) ·  reply (0) · 
 • bcd  
  ஒரு மிக கட்டுப்பாடான சமூகம், ஒரு இக்கட்டான பிரச்சனைக்காக தன்னை எவ்வளவு நாசூக்காக தளர்த்திக் கொள்கிறது என்று இந்த நாவலின் மூலம் வியந்தேன். இன்று நவீன மருத்துவத்தில் லட்சலட்சமாக பிடிங்கிக்கொண்டு கிட்டத்தட்ட இதே தானே நடக்கிறது. காசு பணம் இருந்தால் எல்லாமே நியாயம். தனது ஒரு பாகம் பெண்ணானவை அசிங்கமாக திட்டலாம், தெய்வமாக கொண்டாடலாம். அதுதானே திருச்செங்கோட்டின் பெருமை. இந்த திருச்செங்கோடு இருக்கும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவிலேயே அதிகமாக எயிடசால் பாதிக்க்ப்பட்ட மாவட்டமாக அறியப்பட்ட போது என்ன கடையடைப்பு நடந்தது? அப்போதெல்லாம் கெடாத பெயர், கல்வி என்ற பெயறில் தமிழ்நாட்டில் அதிகமாக கொள்ளை அடிக்கும் பள்ளிகள் என்பதில் கெடாத பெயர், இந்த யாரும் கண்டுகொள்ளாத புத்தகத்தால் கெட்டு விட்டதாம். மக்களே ஒரு அறிவார்ந்த சமூகமாக இருப்பதா இல்லை மூளையும், அன்பும் இல்லாத காட்டுமிராண்டிகளாக இந்த மத இன சக்திகளாக இருப்பதா என முடிவு செய்யுங்கள்
  about 5 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) · 
 • uduman  
  மதவாதிகள் தங்கள் திட்டத்தை இது போன்ற முறையில் நடைமுறை படுத்துகிறார்கள். அதற்கு நாம் இடம் அளிக்க கூடாது.
  Points
  510
  about 5 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • Nathan  
  இப்ப தான் தமிழனத்தை ஒரு குரூப் மொழி , சினிமா ,சாதியை வைத்து கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறது..இப்ப புதுசா ஒரு குரூப் மதத்தின் பேரால் கொள்ளை அடிக்க முயற்சி செய்து வருகிறது போலும்..போதும்டா சாமி , நாங்க தாங்கமுடியல
  Points
  840
  about 10 hours ago ·   (2) ·   (0) ·  reply (0) · 
 • tknithi  
  முப்பெரும் மதங்கள் தோற்றுவித்த இந்தியருக்கு அவ்வளவு எழிதாக மதம் இறங்கி விடுமா என்ன?
  Points
  10195
  about 11 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • Navaneethan rA The Idiot Prince 
  As Samas has rightly pointed out , Thiruchengode slowly turning into a breeding ground for Fascist forces in Tamilnadu :(
  about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • Sevvel  
  கருத்துரிமை காவலர்கள் என்ற பேரில் பெருமாள் முருகனின் ஆபாச கருத்துகளுக்கு வக்காலத்து வாங்கும் முற்போக்கு கம்யூனிஸ்ட்கள் தான் அருண் ஷோரி எழுதிய "Worshipping False Gods" புத்தகத்தையும் எதிர்த்தார்கள். சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டீ குரூஸ் எழுதிய ஆழி சூழ் உலகு புத்தகம் ஆங்கிலத்தில் பதிவாவதை தடுத்தார்கள். அதேபோல ஹிந்துத்வ குரூப்பில் சிலரகளும் பெ.முருகனுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். இதே ஹிந்து அமைப்புகள் தான் வெண்டி தோனிங்கர் எழுதிய ஹிந்துயிசம் என்ற புஸ்தகத்தை தடை செய்ய போராடி வெற்றி பெற்றனர். அண்ணாதுரையின் ஆரிய மாயை, புலவர் குழந்தையின் ராவண காவியம், தெய்வநாயத்தின் விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒரு ஒப்பாய்வு புஸ்தகம், ஆண்டாளை கேவலப்படுத்திய புஸ்தகம் போன்றவற்றை எதிர்த்தனர். இவர்களுக்கெல்லாம் ஒரு நியாயம் திருசெங்கோட்டு மக்களுக்கு ஒரு நியாயமா?? இன்னும் சிலர் குழந்தைத் தனமாக புத்தகத்தை எரிப்பது சரஸ்வதியை அவமதிப்பது என்கிறார்கள். அவர்களுக்கு சில செக்ஸ் புத்தகன்லை அனுப்பி வைக்க வேண்டும், பார்ப்போம் சரஸ்வதி பூஜையில் அவற்றை வைத்து பூஜிப்பார்களா என்று!
  about 14 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
 • Venkatesan  
  இவரு என்ன இதுக்கு முன்னாடி தமிழ் நாடு அப்பாடக்கரா இருந்த மாதிரி பேசறாரு? தருமபுரில குடியிருக்குற குடிசைகளை எரிச்ச நாடு தானே இது?
  Points
  140
  about 14 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) · 
 • SAK  
  இந்த புத்தகம் வெளிவந்து நான்கு வருடங்கள் ஆகிறது. நான்கு ஆண்டுகளாக போகாத மானம் இப்போது போய்விட்டதாக சொல்லும் இந்த அதி புத்திசாலிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது!!!!!
  Points
  2475
  about 16 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
 • T V  
  ஒரு காலத்தில் திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு நன்கு தெரியும் . இந்தியாவில் எங்காவது பெரிய கொள்ளை நடந்தால் காவல் துறை இந்த பகுதிக்கு விரைவு என செய்திதாள்களில் செய்தி பதிவாகும் . அதற்காக எங்கள் ஊர் பெயர் கெடுகிறதே என்று எவரும் காவல் துறையை எதிர்த்து பந்து நடத்தவில்லை . பாரிசில் நடந்த தாக்குதலை விட கேவலாமான தாக்குதல் திருசெங்கோடு மீது நடத்தப்பட்டு இருக்கிறது . திருசெங்கோடு என்ன ஹிந்து மதத்தின் மெக்காவா அல்லது ஜெருசலமா. அல்லது ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் மொத்த குத்தகை காரர்களா ? மதம் சொல்வதை கேட்பதற்கும் நடைமுறை படுத்துவதற்கும் எந்த ஏற்பாடும் கிடையாது இவர்கள் தான் மதத்தை காப்ற்ற கிளம்பி யுள்ளனர் . மிரட்டல் மூலம் கடையடைப்பு செய்து விட்டு ஊரின் கௌரவத்தை குறைத்துள்ளனர் . போஸ்டரில் பெயர் கூட போட துணிவிலாத இவர்கள் கோழைகள் .சாதி அரசியல் மூலம் மத அரசியலுக்கு விசா கொடுத்துள்ளார்கள் . கோழி பண்ணைகள் போல் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு கல்வி என்ற பெயரில் பெற்றோர்கள் கொள்ளை அடிக்கபடுகிறார்களே இதை பற்றி எல்லா ஊடகங்களும் செய்தி வெளியிட்டு உள்ளதே அது இவர்களுக்கு வலி ஏற்படுத்தாதா ?
  Points
  18305
  about 17 hours ago ·   (28) ·   (15) ·  reply (0) · 
 • Bhagyalakshmisrinivasan  
  சமஸ், எந்த புறமும் சாயாமல் பொதுவான ஒரு கருத்தை நான் சொல்ல விழைகிறேன். இந்தக் கட்டுரையைப் படித்த என் வெளி நாட்டு நண்பர்கள் சிலர் அந்தப் புத்தகம், பெயர் என்ன..?'(மாதொரு பாகனா?) வாங்கிப் படிக்க விருப்பப்படுகிறார்கள்!
  Points
  1275
  about 17 hours ago ·   (13) ·   (2) ·  reply (0) · 
 • கிரிஷ்  
  இந்திய தலிபான்களின் அராஜகம் நாளுக்கு நாள் பெறுகிறது. பெருமாள் முருகன் ஒரு கட்டுரை எழுதி கருத்துக்களை தெரிவித்திருந்தால் அதற்கு எதிர் கருத்துக்களை தெரிவிப்பது நியாயம். ஒரு புனைவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அறியாமை. இந்திர விழா போன்ற நிகழ்வுகள் மகாபாரதம் தொட்டு பல நூல்களில் இந்திய பேரு நிலத்தில் நடந்ததாக கூறபடுகிறது. எல்லா இலக்கியங்களையும் தடை செய்ய வேண்டுமா?
  Points
  350
  about 18 hours ago ·   (15) ·   (4) ·  reply (0) · 
 • jay  
  whatever it is, it's good for Tamils to stay away from Hindutva groups...they would try to behave favors to local city or language or people, but they would show their real face after getting power....
  Points
  115
  about 19 hours ago ·   (16) ·   (5) ·  reply (0) · 
 • s.leelavathy  
  முன்பொரு தொடர்கதைக்கு, "குமுதம்" பத்திரிகை இதுபோன்று நிலையில், அந்த கதையை நிறுத்திவிட்டது ஏன் ?
  Points
  1935
  about 20 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
 • Mohankumar.T  
  Is it possible for a writer to write anything apart from Hinduism also. Please justify about journalism and a term so called 'Nathigam' - against to what?
  about 20 hours ago ·   (12) ·   (10) ·  reply (0) · 
 • venkatesan  
  நீங்கள் அந்த ஊரில் பிறந்து இருந்தால் வலி புரிந்து இருக்கும் .எதிர்ப்பாளர்களுக்கும் பேச்சுஉரிமை இருக்கு சார் .
  about 20 hours ago ·   (31) ·   (28) ·  reply (1) · 
  • விமலா  
   பேசட்டும்- பதில் எழுதட்டும்- அதோடு நிறுத்தி கொள்வது தானே அழகு-
   about 20 hours ago ·   (21) ·   (11) ·  reply (0) · 
 • suresh pillai  
  ஹிந்துக்கள், நாங்க அமைதியான முறையில் பந்த் நடத்துறோம் .... சார்லி ஹெப்டோ பத்திரிகை ஆபீசில் கொலை பண்ணுறாங்களே ...அதுக்கு என்ன சொல்லுறீங்க ..ஹிந்துக்கள் மட்டும் இளிச்ச வாயர்களா
  Points
  1480
  about 21 hours ago ·   (258) ·   (28) ·  reply (2) · 
  • T V  
   நீங்கள் செய்வது தாலிபன்கள் செய்ததை விட கேவலமானது. பெயரை கூட மறைத்து அராஜகம் நடத்தும் கோழைகள் . நீங்கள் எந்த எல்லைக்கும் போக கூடியவர்கள் . ஹிந்துக்கள் ஹிந்துக்கள் என்று ஏலம் போடும் நீங்கள் அடிமட்டத்தில் கிடக்கும் ஹிந்துக்களை பற்றி என்றாவது கவலை பட்டது உண்டா ? சனா தானிகளுக்கு வால் பிடிக்கும் நீங்கள் காப்பாற்றும் நிலையில் ஹிந்து மதம் அவ்வளவு பலகீன்பட்டு இல்லை . முதலில் ஊர் வெறி பின்னர் சாதி வெறி பின்னர் மத வெறி என திட்டமிடும் நீங்கள் மனித குலத்திற்கு எதிரான தாலிபன் வகையை சேர்ந்தவர்கள் .சார்லி ஹெப்டே தாக்குதல் பற்றி பேச இன்னொரு தாலிபன்களுக்கு அருகதை மட்டும் அல்ல உரிமையும் கிடையாது
   about 18 hours ago ·   (37) ·   (100) ·  reply (0) · 
  • VelPandi  
   இப்படி பேசினால் நீங்கள் முத்திரை குத்தப்படுவீர்கள் ஹிந்து மத வெறியன், மத சார்புள்ளவன் என்று. ஏனென்றால் இது மத சார்பற்ற நாடு???!!!!
   about 20 hours ago ·   (18) ·   (12) ·  reply (0) · 
 • susi  
  வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 1. நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும். இது இதே பக்கத்தில் கடைசியல் தங்களால் சொல்லப்பட்டிருக்கும் கருத்து. கருத்து தெரிவிக்க தணிக்கை உள்ளபோது, படைபாளிக்கு வேண்டாம்மா ....
  about 21 hours ago ·   (43) ·   (9) ·  reply (0) · 
 • VelPandi  
  படைப்பாளியின் புத்தகத்தை எரிக்கிறார்கள் என்கிறீர்கள் கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பர் படைப்பாளி இல்லையா? விஸ்வரூபம், துப்ப்பாக்கி திரைப் படங்களை படைத்தவர்கள் படைப்பாளிகள் இல்லையா? அப்போது நடைபெற்ற எரிப்புகளையும் எதிர்ப்புகளையும் என்னவென்று சொல்வது?
  Points
  1885
  about 22 hours ago ·   (25) ·   (9) ·  reply (0) · 
 • srini rama  
  சமஸ் நீங்கள் சொல்வதை பார்த்தால் யாராவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதையாவது எழுதினால் அதை யாரும் எதிர்க்க கூடாது என்பது போல உள்ளது. டா வின்சி code படத்தை ஏன் தடை செய்தார்கள், அப்படியானால் விஸ்வரூபம் படத்தை ஏன் எதிர்த்தார்கள். கமலஹாசன் கூடத்தான் நான் தமிழ் நாட்டை விட்டே போய்விடுவேன் என்று சொன்னார். அது நடந்தது தமிழகத்தில் இல்லையா. கமல்ஹாசனை துரத்தவில்லையா, படைப்பாளிக்கு அவர் கருத்தை சொல்ல அப்போது உரிமை இல்லையா. அப்போது உங்களுக்கு தமிழகத்தில் தான் இருக்கிறோமா என்ற எண்ணம் தோன்றவில்லையா.
  Points
  1300
  about 22 hours ago ·   (56) ·   (10) ·  reply (1) · 
  • T V  
   அதெல்லாம் சரி நீங்கள் ஏன் பாரதி படத்தை போட்டு இந்த கருத்தை பதிவு செய்கிறீர்கள் . பாரதி எந்த கருத்தையும் சுதந்திரமாக அழுத்தமாக சொன்னவன் . தயவு செய்து வள்ளலார் மட்டன் ஸ்டால் என்று போர்டு வைத்து விடாதீர்கள்
   about 17 hours ago ·   (24) ·   (24) ·  reply (0) · 
 • அன்சாரி  
  இதயே முஸ்லிம்கள் செய்தால் கருத்து சுதந்திரம் அப்படினு சொல்வீங்க எ-க விஸ்வருபம்
  about 22 hours ago ·   (61) ·   (12) ·  reply (0) · 
 • kavingarMagan@rasipuram  
  திரு சமஸ் அவர்களே. பெருமாள் முருகன் எப்படி தன் கருத்துக்களை எழுத்தில் சொன்னாரோ (எழுத்து சுதந்திரம் என்ற பெயரில்) அதே போல் அவர் கருத்தை ஏற்றுக்கொள்ளதவர்களும் தன் கருத்தை கடையடைப்பு மூலமாக தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். இதை எப்படி நீங்கள் தமிழ் அறிவுலகில் கொடுமை நிகழ்ந்திருக்கிறது என்கிறீர்கள் ? எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்வதும் மறுப்பு தெரிவிப்பதும் அவரவர்களின் சமூக, மத, இன உணர்வுசார்ந்தது. அதை எதிர்த்து பேசுவது, எழுதுவது தான் புரட்சி, சீர்திருத்தம் ஆகுமா ? சரியான விளக்கம் தேவை. அன்பன் க.சுப்பராயன். ராசிபுரம்.
  Points
  430
  about 23 hours ago ·   (149) ·   (15) ·  reply (1) · 
  • விமலா  
   உங்கள் ஊரில் 100 பேர் குட அதை படித்து பார்த்து இருக்க மாட்டார்கள்- rss /பிஜேபி /மதவாதிகள் கடையடைப்பு கட்டாய படுத்தி செய்தார்கள்
   about 20 hours ago ·   (19) ·   (19) ·  reply (0) · 
 • Mannan Mannen  
  மற்ற பெரிய கட்சிகள் இதை பற்றி என் மவுனம் காக்கிறார்கள் துணிவு இருந்தால் இதை மற்ற கட்சிகள் கண்டிக்கிறோம் என்று சொல்ல வேண்டியது தானே சொல்ல மாட்டார்கள் காரணம் மேலும் அந்த கட்சி பலபடுத்த படும் என்று பயபடுகிரர்கள் முதலில் மவுனம் காப்பார்கள் அடுத்த தேர்தல்க்கு பிறகு இலக்கிய நடையோடு நான் அன்றே கோவில் கூடாது என்று சொல்லவில்லை மற்றவர்களோடு தனக்கு அதிக கரிசனம் இருக்கிறது என்று காட்டி கொள்வார்கள் அனைத்து தேர்தலில் நிற்கும் கட்சியும்
  Points
  16460
  about 23 hours ago ·   (12) ·   (4) ·  reply (1) · 
  • விமலா  
   இந்த காரியத்தை கண்டித்து , RSS /பிஜேபி காரியங்களை கண்டித்து , பேச்சு சுதந்திரத்தை உறுதி படுத்த வெளிபடையாக CPI -M கட்சி செய்தி அறிக்கை போட்டுஉள்ளது -
   about 20 hours ago ·   (7) ·   (13) ·  reply (0) · 
 • SELVARAJU  
  திரு சம்ஸ் அவர்களுக்கு , எதனால் கடைஅடைப்பு நடந்தது என்பது உங்களுக்கு தெரியாதா ?, வேறு சமுகத்து பெயரில் இந்த புத்தகத்தை எழுதிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும். மக்களின் மனநிலையை புரிந்து விமர்சனம் செய்யவும்.
  about 23 hours ago ·   (204) ·   (18) ·  reply (0) · 
 • Vicky Alpha Business Analyst at Honey Traders 
  a எல்லாம் சரிதான்.. yenakku ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது.யாராவது ஒருத்தர் லேசா இஸ்லாம் பத்தி பேசனாலே சிறுபான்மை மக்களோட மனச காயபடுத்தீட்டதா சண்டைக்கு வர்றீங்க. hhinஹிந்துவ பத்தி யாரவது அநாகரீகமா பேசறதுக்கு எதிர்ப்பு therivichchaa உடனே matha veriyargalnu solreenga. perumbaanmai makaloda manasellam kayame padatha? நியாயம் ந ரெண்டுக்கும் ore மாதிரிதானே குரல் குடுக்கணும் ? நான் ஏதும் தப்பா புரிஞ்சுகிட்டேனாஇல்ல தப்பாதான் thappa தான் நடக்குதான்னு யாரவது புரிய வைங்கப்பா ப்ளீஸ்.
  Points
  285
  about 23 hours ago ·   (261) ·   (9) ·  reply (2) · 
  • விமலா  
   பேச்சுக்கு பேச்சு- பதிலுக்கு பதில் கட்டுரை எழுதட்டுமே- யார் வேண்டாம் என்பது- அது தானே சரிக்க இருக்கும்
   about 19 hours ago ·   (10) ·   (7) ·  reply (0) · 
  • VelPandi  
   நீங்க சொல்வது சரி தான். அனால் சிலருக்கு கசக்கும்.
   about 22 hours ago ·   (13) ·   (0) ·  reply (0) · 
 • ErodeNanban  
  உங்களுக்கு திருச்செங்கோடு ஒரு சிறிய ஊராக தெரியலாம். ஏனென்றால் நீங்கள் சென்னை வாசி. ஒரு முறை கோவையில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடந்தது, ஆனால் அதை பத்தி எந்த ஒரு பத்திரிக்கையும் வெளி உலகத்திற்கு சொல்லவே இல்லை. மிகப்பெரிய கோவைக்கே அந்த நிலைமை என்றல், நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். சென்னை மட்டுமே உலகு என்று இருக்காதீர்கள். ஒரு முறை சென்னையில் ஒரு பேருந்து பலத்தில் இடித்து நின்று விட்டது, அந்த செய்தியை சுமார் 3 மணி நேரதிருக்கு மேஅல் கிட்டத்தட்ட 6 thalaippu seithigal pottu cover seitheergal. aanal engal oorgalil dinam dinam 10 vipathu nadakkiradhu. endravadhu அந்த mukkiyathuvam koduthu வெலியீடுகீரீர்கல?
  Points
  170
  about 23 hours ago ·   (127) ·   (6) ·  reply (0) · 
 • பாலாஜி  
  எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் தனிப்பட்ட சமூகத்தையோ ,ஊரையோ குறிபிட்டு பேசுவது தவறு.இதே போன்று மற்ற மதத்தவரை இவர் சுட்டி காட்ட முடியுமா?இந்துக்கள் என்றால்இளிச்சவாயர்கள் .....
 

1 comments:

ஏர் முனை said...

இந்த பதிவில் இருக்கும் உண்மைகளையும் கொஞ்சம் பார்க்கவும்.. காழ்புணர்ச்சியின் அடிப்படையில் தனது எழுத்தாற்றலை ஆயுதமாக பயன்படுத்துவதால் பொய்கள் உண்மையாகாது..

http://www.karikkuruvi.com/2015/04/blog-post.html