Monday, January 19, 2015

நித்ய கல்யாணி யின் அத்து மீறல்கள்

1  அதிகாலையில் தூக்கத்துக்கு இடம் தராமல் இருந்தால் அன்றைய நாளில் துக்கத்திற்கு இடம் இல்லாமல் போய் விடும்


==============

 2 
பெற்றோருக்குக்கணக்குப்பார்க்காமல் நாம் செய்யும் செலவுகள் எல்லாமே நம் புண்ணியக்கணக்கில் பல மடங்காக சேர்ந்து விடும்


================

3 புது வருசத்தில் பெண்கள் சொந்த டிபி வைத்தால் புது வசந்தம்வீசும் என நேற்று இரவு எம் ஜி ஆர் என் கனவில் சொன்னார் .(அடிச்சு விடுவோம்)


================

4 மீனராசி அன்பர்களே! இந்த வருசம் பூரா பைரவரையும் ,பெருமாளையும் தரிசிச்சா நல்லதாம்.ரைட்டர் நாயோன் ,ஆண்டாள் ,பாமா,ருக்மணி க்கு வணக்கம் போடவும்

=================


5
ஆஸ்திரேலியாவில் நாளை முதல் ”சூரிய குளியலுக்கு” தடை.. # சூரியனுக்கு எல்லா ப்பக்கமும் நேரம் சரி இல்ல போலயே!


==================

6 ஆக்சன் ஹீரோ பட ட்ரெய்லர் தயாரிப்பவர்கள் ஹிரோவுக்கு பஞ்ச் டயலாக் வைக்கும்போது அது எதேச்சையாக எதிராளிக்கான எச்சரிக்கையாக அமைந்து விடும்


====================


7 விஜய் = வில்லன் கிட்டே அடி வாங்கி இருப்பீங்க போல?


 அஜித் = ஹீரோ படத்துல அடி வாங்குனா தப்பில்லை.படமே அடி வாங்கக்கூடாது. 

====================


8 ஷங்கர் = என்ன சார்? வணக்கம் வெச்சாக்கூட பதில் பேச மாட்டேங்கறீங்க?  ரஜினி = நான் ஏதாவது பேசுனாக்கூட ஸ்டோரி டிஸ்கசன் செஞ்சோம்பீங்க. 


==================


9 சார்.உங்க லவ் புட்டுக்கிச்சே ஏன்?


 நான் லட்சுமிராயை லவ்வினேன்.அவரு ராய் லட்சுமி னு பேரை மாத்தினாரு.நான் ஆளை மாத்திட்டேன். 


=================

10 சொர்க்க வாசல் திறப்புக்காக பெருமாள் கோவிலில் காத்திருப்பதை விட உன் பெற்றோர்க்குப்பணி விடை செய்தால் உன் வீடே சொர்க்கமாகும்


==================

11 கோயில் ல சாமி தரிசனம் பன்றப்போ FB ல ஸ்டேட்டஸ் போட அந்த சாமி கிட்டயே ஸ்மைல் ப்ளீஸ் னு ரிக்வஸ்ட் குடுப்பான் மாடர்ன் தமிழன்===================

12  ரோபோ கதை கமல் தான் நடிக்க வேண்டியது.எந்தப்புள்ளியில் அது ரஜினிக்கான கதை எந்திரன் ஆனது என்பது ஷங்கருக்கு மட்டும் தெரிந்த ரகசியம்


=================


13 மயில் வாகனன் ,குயில் வாகனன் ,குருவி வாகனன் வந்தா அரோகரா அரோகரா! பைக் வாகனன் வந்தா.அதாரு உதாரு,எதிர்த்து நின்னு ஜெயிப்பதாரு?


======================


14 இவங்க பாட்டுக்கு ஏதேதோ காரணங்களுக்காக ரிலீஸ் தேதியைத்தள்ளிப்போட்டுடறாங்க.நாம மெனக்கெட்டு யோசிச்சு பஞ்ச் டயலாக் அடிக்கவேண்டி இருக்கு;-)


=================


15  பசித்திரு.தனித்திரு.அதிகாலையில் விழித்திடு


===============


16 எப்போ பாரு ட்விட்டர் சந்துக்குள்ளே துரு துரு னு சுத்திட்டு இருந்தா சந்துருதுரு என பையனையும் சந்து உலா நீ சிந்துதுலானி என பொண்ணையும்  கூப்பிடலாம்

==================

 17  தாமரை யின் ஆதிக்கம் இந்தியாவில் மட்டுமல்ல என்(பத)னை அறிந்தால்.


===================


18 தினமும் ஒரு கல்யாணி பீர் சாப்பிடும் மாடர்ன் பிகரை நித்ய கல்யாணி னு சொல்லலாம்

================


19 FB ல பொண்ணு ங்க கீதோபதேசம் ,திருக்குறள் ல இருந்து 2வரி எடுத்துப்போட்டு எவ்வளவு சத்தியமான வார்த்தை பார்த்தீங்க்ளா?னு கேட்கறாங்க. பாக்லீங்

==================


20 காலைல 1 பர்லாங் தூரம் நடந்துட்டு களைப்புத்தீர 4 டம்ளர் பாயாசம் ,8 மெதுவடை 2 மசால் வடை சாப்ட்டுகணக்கை நேர் செஞ்சிடுவான் தமிழன்


====================

0 comments: