Monday, January 12, 2015

ஹோட்டல் வேலைக்கு எதுக்கு சினிமா விமர்சகர்கள் ?

1  டியர்! அவளதிகாரம் எழுதலையா?


 அவள் அதி இனிப்பு வேணா எழுதலாம்

==============

2 எனக்கு நெக்லஸ் வாங்கித்தந்த பின் தான் என்னைத்தொடனும்.டியர்.அரசாங்கம் கூட சுங்க வரியை ரத்து பண்ணிடுச்சு.நீ புதுசா அங்க வரி விதிச்சா எப்டி?


==================

 3  நான் இதுவரை என் அரசியல் வாழ்வில் 1000 மேடை கண்டவன் .


 தலைவா! ஒரு மேடைலயாவது கூட்டம் வந்ததா?


===============

4 என் படத்தைப்பாத்தா ஆடியன்ஸ் எல்லாரும் அழுவாங்க


. பயப்படுத்தும் பேயையே அழ வெச்ட்டீங்களே?ஆடியன்ஸ் எம்மாத்திரம் ?


===============


5  டியர்.ஏதாவது தின்பண்டம் வாங்கித்தாங்கம்க்கும்.சொல்லும்போது THIN பண்டம்னுதான் சொல்றே! ஆனா THICKகா சாப்டறே!


===================


6  சார்.இன்ட்டர்வ்யூ ரூம்க்குள்ளே வந்து அரை மணி நேரம் ஆகுது? கேள்வி ஏதும் கேட்கலையா?


 சாரி.அதெல்லாம் ஆம்பளைங்களுக்குத்தான்.லேடீஸ்க்கு இல்லை

==============


மேடம்.எப்பவும் பச்சை கலர் டிரஸ் சே போடறீங்க்ளே ஏன்?
ஹாலிவுட் நடிகை EVA GREEN = EVER GREEN ஹீரோயின் னு பேர் எடுக்க


==================


8 முதல் இரவில் கணவன்டியர்.எதுக்கு லாங்க் சைஸ் 2,குயர் நோட்டை என் கிட்டே தர்றே?


காலேஜ் படிக்கும்போது யாரையாவது லவ்வினியா?ன்னீங்க்ளே? லிஸ்ட்

================


9 சப்பாத்திக்கு யூஸ் ஆகும் மைதா மாவை சல்லடை ல சலிக்காம அப்டியே குண்டால கொட்டறே?ஏன்?
எந்த வேலை செஞ்சாலும் சலிக்காம செய்யனும்னீங்ளே?

==============

10 டியர்! உனக்கு டை கட்டத்தெரியுமா?
சரிக்கு சரி யார் கூட வேணும்னாலும் சண் டை கட்ட வேணா நல்லாதெரியும்


=============


11 டியர்.உனக்கு யார் கூடவாவது எங்கேஜ்மென்ட் ஆகிடுச்சா?ஏன் கேட்கறீங்க?

எப்போ போன் பண்ணாலும் எங்கேஜ்டு ன்னே வருதே?=================


12 காலி பிளவர் இருக்கா?சாரி.எல்லா பிளவரும் காலி

===============

13 ஜட்ஜ் = எதுக்காக 2 மாசம் பரோல் ல போகனும் னு சொல்றே?கைதி = 60 நாட்கள் 60 படம் பார்க்கும் பிளான் இருக்கு


===================


14 மிஸ் ! உங்களுக்கு 2 அவார்டு தரப்போறோம்.
ஐ ஜாலி. ஆனா 1 கண்டிஷன்.உங்க வீட்டுக்கு நேர்ல வந்துதான் தருவோம்.அட்ரஸ் சொல்லுங்க

===================


15 யுவர் ஆனர் ! பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி ,சிராக்கோ ,51/2க்குள்ள வண்டி படம் பார்க்கனும்.பரோல் ல விடுங்க.யோவ்.இது கோர்ட்டா? லாட்ஜா?

================


16 சார்.நீங்க ரசித்த பெண் கீச்சாளர் யார்?
நேர்ல வந்தாங்கன்னா எல்லா ட்வீட்டர்சையும் பார்த்து ரசிப்பேன்.இதுல என்ன பேதம் ?


=================

17 இன்ட்டர்வ்யூவில்
வாங்கற சம்பளத்துக்கு சின்சியரா ஒர்க் பண்ணிவீங்களா? சம்பளம் வாங்கற அன்னைக்கு நிச்சயம் சின்சியரா ஒர்க் பண்ணுவோம்


=============


18 யுவர் ஆனர்.எப்பவும் பொய்க்கு ஆதரவாவே தீர்ப்பு சொல்லிட்டு " உண்மை 1 நாள் வெல்லும்"னு ஏன் சொல்றீங்க?மாசத்துக்கு்.30 நாள் அப்டி.1 நாள் இப்டி

=================


19 சினிமா  விமர்சகர்கள்  4  பேரை  எதுக்கு  உங்க  ஹோட்டல்ல வேலைக்கு  வெச்சிருக்கீங்க? 

 மாவு ஆட்டி  முடிஞ்சதும் கிரண்டரைக்கழுவி கழுவி ஊத்த


===================


20   மேத்ஸ் மிஸ் மேகலா- ஈவு க்குப்பின்  வருவது   இரக்கமா? மீதியா?மீனா+ரசனை -  டீச்சர் . EVE (ஏவாள்) க்குப்பின்  வருவது  எப்பவும் ஆதாம்தான்


=============================

0 comments: