Tuesday, January 06, 2015

ஈஷா யோகா மையம் மீது ஸ்வீடனை சேர்ந்த பெண் வழக்கு -சதுரங்க வேட்டை டைப் மோசடி

ஸ்வீடன், பாகர்மூசன் ஸ்டாக் ஹோமைச் சேர்ந்தவர் ஜெயா பாலு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர், கடந்த 16-ம் தேதி ஸ்வீடனிலிருந்து இந்தியா வந்துள்ளார். டிசம்பர் 23-ம் தேதி, கோவை பூண்டியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற லிங்க பைரவ யந்திர விழாவில் கலந்து கொண்டார். அப்போது, யோக மையத்தில் 160 கிலோ லிங்க பைரவ சிலை வேண்டி, கோயில் நிர்வாகத்திடம் ரூ.4.50 லட்சத்தை வெளிநாட்டு வங்கி கிரெடிட் கார்டு மூலமாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்ட ஈஷா யோகா மையத்தினர், சேதமடைந்த சிலையைக் கொடுத்தார்களாம். இது குறித்து புகார் தெரிவித்த ஜெயா பாலு, இந்த சிலையை மாற்றி வேறு சிலை கேட்டுள்ளார். ஆனால், வேறு சிலையை மாற்றித் தருவதற்கு மேலும் ரூ.50 ஆயிரம் கேட்டார்களாம். இதையடுத்து, பணத்தை அவர் திருப்பித் தரக் கேட்டுள்ளார். பணத்தைத் தர மறுத் ததால், புதுடெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தில் பண மோசடி தொடர்பாக புகார் தெரி வித்துள்ளார். 


இதைத்தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை மூலமாக, கோவை மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு வந்தது.
ஜெயா பாலு அளித்த புகாரின் அடிப்படையில் ஆலாந்துறை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். 

நன்றி - த இந்து


 • ramachandran mohan  
  காவி உடை அணிந்து திரு நீர் பூசி தாடி வளர்த்து தியானம் என்ற பெயரில் கண்ணை மூடி எதாவது கார்பரட் முதலாளிகளையும் அரசியல் தலைவரையும் கையில் வைத்து கொண்டு இந்த தொழிலை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன் .கூடிய சீக்கிரம் உலக பேரு முதலாளிகளில் ஒருவனாகி விடுவேன்.பில் கேட் வாரேன் பப்பெட் லவேலுக்கு போகலாம் .ஒபாமாவும் ,மோடியும் வரிசையில் நிற்ப்பார்கள் தரிசனம் செய்ய .
  Points
  615
  about 16 hours ago ·   (13) ·   (1) ·  reply (0) · 
     
  reefa · mani · humanbeing · nallavan · Shan  Up Voted
 • Thil  
  தவறான அழைப்பு(wrong call) என்று தெரிந்தும், தவறு செய்வதே நம் மக்களின் அறிவாளி தனம். அவ்வளவு விலை போட்டு அந்த லிங்கத்தை வாங்க வந்த ஜெயா பாலு என்ன வியாபாரம் செய்ய திட்டம் போட்டாரோ... இறைவா கொஞ்சம் call பண்ணு!
  Points
  1025
  about 17 hours ago ·   (7) ·   (0) ·  reply (0) · 
 • Jagath Venkatesan  
  உண்மைதானா ...ஈஷா யோகா மையமும் இப்பாடிதானா
  Points
  955
  about 17 hours ago ·   (8) ·   (2) ·  reply (0) · 
  reefa  Up Voted
 • கிரிஷ்  
  போலி சாமியார்களின் நடவடிக்கைகளை தோலுரிக்கும் PK போன்ற திரைப் படங்களையும் தடை செய்ய சிலர் கோருவதுதான் வியப்பளிக்கிறது.
  Points
  340
  about 18 hours ago ·   (13) ·   (69) ·  reply (0) · 
  reefa · mani · humanbeing · Mauroof,-Dubai  Up Voted
  ramachandran mohan  Down Voted
 • deva  
  உள்ளே போய்பார்த்தால் நமக்கு தெரியும்,யார் யாரை எப்படி ஏமாற்றலாம் என்ற வித்தையை மிக சிறப்பாய் பயன் படுத்துகிறார்கள் .எல்லாம் அரசை கைக்குள்ள போட்டுவிடோம் என்ற ( நன்கு திட்டமிட்ட) தைரியம். தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாமல் , எந்த தொழில் அழிந்து ,மக்கள் உணவில்லாவிடாலும் பரவாஇல்லை .இவர்களுக்கு மட்டும் தடை இல்லா மின்சாரம்.ரொம்ப நல்லவர்கள் போல உலாவரும் இவர்களை மக்களாக ஒதுக்கினால் மட்டும் மாற்றத்தை கொண்டுவரமுடியும் .எந்த அரசியலும் நமக்கு உதவாது , .என்ன நாடு இது . அனைத்துக்கும் ஆசை படு சாமியார் சொல்லும் வார்த்தையா இது ? எனவே பொதுநலம் அற்ற இதுபோன்றவைகளை அகற்ற ஆசை படுவோம்.
  Points
  195
  about 21 hours ago ·   (5) ·   (2) ·  reply (0) · 
  reefa  Up Voted
 • Mauroof, Dubai  
  ஈஷா யோகா மையம், அதன் நிறுவனர் மற்றும் நிர்வாகம் மீது எண்ணற்ற வழக்குகள் இந்தியா முழுவதிலும் பதியப்பட்டு உள்ளது. இயற்கை வளங்கள் மற்றும் வனங்களைச் சூறையாடுதல்/ஆக்கிரமித்தல், மோசடி செயல்கள், மோசடிகளை வெளிக்கொனர்பவர்களை கொலை செய்தல் போன்ற வழக்குகள் இதில் அடங்கும். ஆனால் நடவடிக்கை மட்டும் எடுக்கப்படாது. காரணம், பண மற்றும் அரசியல் பலம். அறம் என்ற பெயரில் அரக்கர்களாக/அயோக்கியர்களாகச் செயல்படும் இவர்களை சட்டம் தண்டிப்பதில்லை. இவர்கள் கடவுள்களாகப் போற்றப்படுகின்றனர். கடவுள் மறுப்பாளர்கள் கூட காசுக்காக இவர்களோடு கை குலுக்கி கொள்கின்றனர். பசுமையை பெருமளவில் அழிக்கும் இவர்கள் மரம் நடுகிறோம் என்ற பெயரில் செய்யும் ஏமாற்று வேலைகளை மக்களில் பெரும்பாலானோர் அறிவதில்லை. பிரபல்யமான பத்திரிக்கைகள் கூட இவர்கள் செய்யும் அட்டூழியங்களை வெளிக்கொணர்வதில்லை.
  Points
  13730
  about 22 hours ago ·   (32) ·   (44) ·  reply (0) · 
  reefa · mani · nallavan  Up Voted
 • v.kameswaraN  
  ஈஸ்வரா ஈஸ்வரா பூஜைக்கு வேண்டித்தானே ஆர்டர் கொடுத்திருப்பார் பெரிய தொகை கொடுத்து வாங்கி அது சரியாக இல்லை என்றல் கேட்கத்தானே செய்வர்.இதை தூதரகம் வரை செல்லும்படி விட்டிருக்கவேண்டாம்.ஈசியாக மேட்டர் முடிய ஈசன் துணை புரியட்டும்.சம்போ மகாதேவா.
  about 22 hours ago ·   (28) ·   (11) ·  reply (0) · 
  Mannan-Mannen  Up Voted
  reefa  Down Voted
 • Balasubbu  
  ஓம் நமசிவாய, என்ன நடந்தது என்பதை ஈசா யோகா நிர்வாகமும்,காவல்துறையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
  about 22 hours ago ·   (10) ·   (5) ·  reply (1) · 
  Mannan-Mannen  Up Voted
  • Mauroof, Dubai  
   நீங்கள் சொல்வது போல் செய்வதெல்லாம் அவர்களுக்கு கை வந்த கலை.
   about 22 hours ago ·   (4) ·   (2) ·  reply (0) · 
   reefa  Up Voted
 • shankar  
  பணம் எங்கேயோ பிரச்சனை அங்கே.நம் தலிவர் கட்ச்யையே எடுத்து கொள்ளுங்களேன், அடி தடி நடக்கவில்லையா, ஆதலால் இந்த சாமியார் விழ்ஷயதிலும் அது தான் பிரச்சனை.
  Points
  195
  about 23 hours ago ·   (5) ·   (5) ·  reply (0) · 
  Sudharsan-Ramasamy · mani · Shan  Up Voted
 • மூக்கையா  
  இந்த யோகாமையத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தவேண்டும்
  Points
  955
  about 23 hours ago ·   (21) ·   (3) ·  reply (0) · 
 • Mannan Mannen  
  அனைத்துக்கும் ஆசை படு சாமியார் சொல்லும் வார்த்தையா இது ? இந்திய முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் வைத்து கேள்விகேட்டு பதில் சொல்லி தன்னை முன்னிலை படுத்தி கொள்கிறார்கள் இதனால் தான் உண்மை துறவிகள் தங்கள் மீது விளம்பர வெளிச்சம் படாமல் இருக்கிறார்கள்
  Points
  13255
  about 23 hours ago ·   (13) ·   (2) ·  reply (0) · 
  Sudharsan-Ramasamy · mani  Up Voted
 • mani eral  
  கடவுள் விசயத்தில் ஊழலா .புகழ் பெற்ற மையங்கள் இப்படி அசிங்கபடாத அளவுக்கு நடக்க தங்களை பக்குவபடுத்தாமல் இருபது ஆச்சரியம்
  Points
  350
  about 23 hours ago ·   (5) ·   (0) ·  reply (0) · 
  Sudharsan-Ramasamy · mani  Up Voted
 • mani  
  இவர் ஒருவர்தான் இன்னும் பிரச்னையில் மாட்டாமல் இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருந்தேன்.... ஆரம்பித்துவிட்டது பிரச்சனை . மனிதனை இறைவனாக வழிபடுகின்ற அனைவர்களின் நிலையும் கடைசியில் ஏமாற்றமும், விரக்தியும்தான்....
  Points
  3080
  about 23 hours ago ·   (46) ·   (0) ·  reply (1) · 
  • Mauroof, Dubai  
   அவ்வாறில்லை. இவர் மீது எண்ணற்ற வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. கைது நடவடிக்கைக்கு உத்திரவிட்டால் இவரும், இவரது மையமும் செய்துள்ள/செய்துவரும் விவகாரங்கள் அம்பலமாகும். பண பலம் மற்றும் அரசியல் பலங்களே இதற்குத் தடையாக இருக்கிறது.

0 comments: