Friday, January 30, 2015

டூரிங் டாக்கீஸ் - சினிமா விமர்சனம்

 

இதுதான்  என்னோட இயக்கத்தில்  வரும் கடைசிப்படம் என்ற  அறிவிப்போட  நம்ம  100  கோடி கலெக்டர் ( கலெக்சன்  செய்பவர் = கலெக்டர்) தளபதியோட அப்பா  கதையின்  நாயகனா  நடிச்சு  இயக்கிய  படம்  தான்  டூரிங்  டாக்கீஸ். பல  வருடங்களுக்கு முன்பே  கே பாலச்சந்தர்  இதே  போல்  ஒரு வீடு  இரு  வாசல்  என்ற  டைட்டிலில்  ஒரே  படத்தில்  இரு கதைகள்  சொல்லி  புதுமை செஞ்சார். நம்ம ஆளு  என்ன செஞ்சார்னு பார்ப்போம்.


ஹீரோவுக்கு 75  வயசு. அவருக்கு ஒரு காதலி 25 வயசுல  தொலைஞ்சிடுது. எந்தத்திருவிழாவில்  தொலைச்சார்னு  ஒரு ஃபிளாஸ்பேக்  இருக்கு. லவ்  பண்ணும்போதே  ஹீரோ  மேட்டரை  முடிச்சுடறார். தொடாம  காதலிக்க  இது  அகத்தியன்  படம் இல்லை.வழக்கம்  போல்  எல்லா  பெற்றோரும்  போல்  காதலியின்  பெற்றோரும்  மிரட்டி  ஹீரோ கண்ல படாம  பண்ணிடறாங்க.


50  வருசம்  கழிச்சு  எதேச்சையா  தன்  காதலி  இருக்கும்  இடம்  தெரிஞ்சு அவரைத்தேடு  தேடுனு  தேடறதுதான்  முன்  பாதிக்கதை. இதை இப்டியே  சொன்னா  சாதா  கதை ஆகிடும், அனுதாப  ஓட்டு  வாங்கனுமே,அதுக்காக  ஹீரோக்கு  பிளட் கேன்சர் , ஸ்மோக்கிங் கேன்சர்னுஒரு  எக்ஸ்ட்ரா  பிட்டு .


ஹீரோவா  எஸ்  ஏ சி .சால்ட்  &  பெப்பர்  லுக்கில்  அஜித்  கெட்டப்பில்  வர்றார்.எந்த  அஜித் கெட்ட்ப்பைப்பார்த்து  விஜய்  ரசிகர்கள் கிண்டல்  பண்ணாங்களோ  அதே  கெட்டப் .என்ன  ரீ ஆக்சன்  காட்டுவாங்களோ  பாவம்.  ஒரு  ஹீரோவா  அவர்  அடக்கி  வாசிச்சாலும்  இயக்குநரா  அவர்  இன்னும்  மாறாம  1985ல்  தான்  இருக்கார் . 


ஹீரோயினா  ஒரு  பாப்பா சங்கவி  சாயல்லயே  தேடிப்பிடிச்சுப்போட்டிருக்கார். இதுல  ஏதாவது  குறியீடு  இருக்குமோ?முன்  பாதி  ஓரளவு கண்ணியமான  கதையா தான்  போகுது. என்ன  3 லிப்  கிஸ்  சீன்  ஒரு   பெட்ரூம்  சீன்  இருக்கு அவ்ளவ்  தான்  , ஜம்பு  புகழ் கர்ணன்  படம்னா  கில்மா  சீன்  இருப்பதும் எஸ்  ஏசி  படம்னா  ரேப்  சீன்  இருப்பதும் சகஜம்  தானே?ஹீரோவுக்கு    உதவி   செய்யும்  திருடன்களா  2  பேர்  , ஆக  மொத்தம்  கிட்டத்தட்ட  6  பேரை  வெச்சே  இடைவேளை  ஓவர் 


 2வது  கதை தான் . கொஞ்சம்  கில்மாவா  இருக்கும் . ஆண்கள்  மட்டும்  படிக்கவும், இல்லை  நான்  மிருதுளாவுக்கே  அக்கா , மீனம்மா  வுக்கு  தங்கை என்பவர்கள்  படிக்கலாம்  தடை  இல்லை


ஒரு  ஊர்ல  ஒரு  பெரிய  மனுசன்  வில்லன்  , அவன்  மகன்   அவனை  விடக்கேடி. இல்லாத  அட்டூழியம்   எல்லாம்  பண்றான்.ஊர்ல  ஸ்கூல் டீச்சரை  கிண்டல்  செஞ்சதை தடுத்த   ஒரு 10 வயசு  சிறுமியை  ரேப்  பண்ணி  கொலை  பண்றான். பையன்  ரேப்  பண்ண  பொண்ணோட  அக்காவை  வில்லனோட  அப்பா  ரேப்  பண்ணப்பார்க்கறார். அது  நிறைவேறுச்சா? இல்லையா? என்பதே  மிச்ச  மீதி  எச்சக்கதை.


ரோபோ சங்கர்தான்  அந்த  வில்லன். ஏதோ  காமெடி பண்ணி  கேப்டனை  வெச்சுப்பொழைப்பை ஓட்டிட்டு  இருந்தாரு  , அவரை  இப்டி  கேவலப்படுத்தி  இருக்க  வேணாம். 


இந்தப்படத்தில்  இசை  இளையராஜா வாம் . அய்யோ  பாவம் 
மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1
        மனோபாலா = ஏற்கனவே கோனைவாய்.இது ல கொட்டாவி வேறயா ? # டூ டா
 
 
 
2
        இப்போ நான் என்ன செஞ்சேன்?
 
 
கன்னத்தில் முத்தம் இட்டாய்.பக்கா பிராடுடா நீ!
 
 
அந்த பிராடுத்தனத்தை நீயும் பண்ணேன்? # டூ டா
 
 


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  முத கதை டைட்டில்  லவ் @75 .சில்வர் க்ரே ஹேர்   ஜீன்ஸ் எஸ் ஏ ஸி  இன்ட்ரோ # டூ டா


2 நல்ல  வேளை  விஜய்  மாதிரி ஓப்பனிங்  சீன்ல  டான்ஸ்  ஆடலை. ஆடிப்போய் இருப்போம்

        SAC பிளாஸ்பேக் ல 25 வயசு புதுமுகத்த போட்டிருக்காரு.அந்த கேரக்டர் ல  தளபதியைப்போட்டிருந்தா 100 கோடியை அசால்ட்டா பார்த்திருக்கலாம் # டூ டா

      4     75 வயசு ஹீரோ 50 வருசம் முன் தொலைத்த தன் 25 வயசு காதலியை தேடறது தான் கதை.தேடு தேடு னு தேடிட்டே இருக்கார்.முடியல #,டூ டா
      
     5      எஸ் ஏ ஸி எப்போ மேஜர் சுந்தர் ராஜன் ஆனாரு?
என் காதலி அழகா இருப்பா.ரொம்ப க்யூட்டா இருப்பா #,டூ டா

 
 
எங்க பரம்பரைக்கே பிடிக்காத ஒரே வார்த்தை கெட்டப் சேஞ்ச் #,டூ டா
 
 6   ஹீரோவை 2,ரவுடிங்க அடிச்சுப்போட்டுடறாங்க.முதல் உதவி செய்யாம அவனை கில்மா க்கு கூப்பிடுது ஹீரோயின்.அய்யய்யோ.யு/ ஏ வா?#,டூ டா
 
 
7        ஹீரோயின்  புதுமுகம் சங்கவி சாயல்லயே இருக்கு.அங்க தான் நிக்கறார் சந்திரன் # டூ டா
 
 

8  அப்பா கூடத்தேவலை.கெட்டப் சேஞ்ச் எல்லாம் பண்றாரு.குணா கமல் கெட்டப்.அடடே !! #,டூ டா
           
      9       2 வது கதை பிரமாதம்.ஊர் பெரிய மனுசன் மகன் ரோபோ சங்கர் 5 வது படிக்கும் சிறுமியை ரேப் & மர்டர்.சப்பா # டூ டா
10
             டாக்டர் ராம்தாஸ் இந்தப்படம் பார்த்தா செம கடுப்பாகிடுவாரு.சீன் பை சீன் யாரோ ஒருவர் தம் அடிச்ட்டே இருக்காங்க #,டூ டா

    11         ஹீரோயின் தன் யூரினை சரக்கில் கலந்து வில்லனுக்குத்தருதுஅந்த கேனக்கிறுக்கன்  செம டேஸ்ட்னு குடிக்கறான்.அட கன்றாவியே! # உவ்வே டூரிங் டாக்கீஸ்

   12           வில்லன் க்ளைமாக்சில்  ஹீரோயின்  ஜாக்கெட்டை  அரிவாளால் கிழிக்கறான்.கிறுக்குப்பயபுள்ள.
ட்ரிம்மிங் சிசர் போதாதா? # டூ டா
 
 

13  பல வருசத்துக்கு முன் சத்யா னு ஒருதொடர்  சன் டி வி ல 10pmவந்துச்சு.ஒரே பெட் ல ஹீரோ ஹீரோயின் .உல்டா பண்ணிட்டார்.யோவ்

 14                குடும்பப்பெண்களுக்கு  எச்சரிக்கை.பின் பாதி  சில கேவலமான காட்சிகள் /ரேப்/மசாஜ்  இருப்பதால் டூரிங் டாக்கீஸ் தியேட்டரில் பார்ப்பதை தவிர்க்க்15  ஒரு ஜி கே கேள்வி = எஸ் ஏ சி இயக்கத்தில் ரேப் சீனோ ,ஹீரோயின் குளிக்கும் சீனோ இல்லாமல் படம் வந்திருக்கா?

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1  இந்த  கேவலமான  படத்தில்  கெஸ்ட்  ரோல்ல  நடி  என  இளைய தளபதியைக்கூப்பிட்டு  அவர்  பேரைக்கெடுக்காம  விட்டது2   பின்  பாதிக்கதைலயும்  நாம  தான்  தலை  காட்டனும்னு  அடம்  பிடிக்காம  ஒதுங்கிக்கிட்டது3   இது தான்  என்  கடைசிப்படம்னு  அறிவிச்சது  (  நம்ப  முடியாது.  கலைஞர்  கூட  இது  தான்  என்  கடைசித்தேர்தல்னு  40வருசம்  முன்  சொன்னார்)

4   முக  லட்சணமான  2  புதுமுகங்களை அறிமுகம்  செஞ்சது. 20,000  சம்பளம்  கொடுத்துட்டு  20 லட்சம்  ரூபா  க்கு  சீன்   ஷூட்  பண்ணிக்கிட்டதுஇயக்குநரிடம்  சில கேள்விகள்


முன்  பாதி  ஃபிளாஸ்பேக்  சீன்ல  ஹீரோ  பாட்டுக்கு சிவனேன்னு தான் இருக்கான் . ஹீரோயின்  தான்  கில்மாக்கு  கூப்பிடுது. பெண்களை  மதிப்பவர் பெண் ரசிகைகள்  அதிகம்   உள்ளவரின்  தந்தை இப்படித்தான்  சீன்  வைப்பதா?2 ஹீரோ  ஹீரோயினைத்தேட போலீசின்   உதவியை  நாடாம  2  திருடன்கள்  உதவியை  நாடுவது ஏன்?


3  அந்தத்திருடன்க  2  பேருக்கும் 5  லட்சம்  ரூபா  செக்  போட்டுத்தர்றாரு.4  வேளை  சாப்பாட்டுக்கு  250 ரூபா தானே  வரும் ? 100  கோடி ல  இருந்து எடுத்ததால  அள்ளி  விட்டுட்டாரா?4  பின்  பாதிக்கதைல  வில்லன்   டீச்சரை  விட்டுடறான். அது  தக தகனு  தங்க  விக்ரகம்  மாதிரி  இருக்கு. அந்த  தேரை  விட்டுட்டு  பாவம்  குழந்தையை  ரேப்பரான். அய்யோ  சாமி 
                 ஹீரோயின் வில்லனை பழி வாங்க 2,தேள்களை ஒரு துணில சுத்தி தன் இடுப்புல முடிஞ்சிருக்கு.ஏய்யா தேள் பொண்ணுங்க இடுப்பை கொட்டாதா?
 6
         வில்லன் சரியான கூமட்டையனா இருக்கான்.வந்தமா ஹீரோயினை ரேப்புனமான்னு இல்லாம கண்ணை மூடி படுத்துக்கிட்டு ஹீரோயினை மசாஜ் பண்ண சொல்றான்
               ரேப் பண்ண வரும் வில்லன் கிட்டே ஹீரோயின் " நான் இன்னைக்கு வீட்டுக்கு தூரம்,நாளை பாத்துக்கலாம்"குது.அந்த கேன வில்லனும் நம்பி விட்டுடறான்.


சி  பி  கமெண்ட் - டூரிங் டாக்கீஸ் =முன் பாதி காதல் கதை= 2/5,
             பின் பாதி கில்மா ரேப் மசாஜ் கதை சாரி சதை = 1/5  
             டோட்டலா 1.5 / 5 
              விகடன்  மார்க் = 30ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 30குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = பிரமாதம் (  கவர்  கவர்  ) ரேட்டிங் =  1.5 / 5வடலூர்  முருகா  தியேட்டரில்  படம்  பார்த்தேன் .  முருகா  மன்னிச்சிடு

1 comments:

Umesh Srinivasan said...

பொறுமையின் சிகரம் சார் நீங்க, அந்தப் படத்தப் பார்த்து மட்டுமில்லாம பிரிச்சு மேய்ஞ்சி விமர்சனம் வேற பண்ணியிருக்கீங்க.