Sunday, January 18, 2015

கொள்ளி வாய்ப்பிசாசு மோகினியின் லிப் கிஸ்!!

1  மாநிறமோ ,சிவப்போ ஒரு பிகரு வெள்ளை ப்பொடில கோலம் போட்டாலும் அது வண்ணக்கோலம் னு தான் சொல்லனும் - கலர் போடும் கலர்க்கோலம்


=================

2
கூந்தலில் பூ வைத்த எல்லாப்பெண்களும் பூங்குழலிகளே!


===============

3 ஐ படத்தை 50% லாபம் வெச்சு விக்கரோம்.ஓக்கேவா? 


 விக்ரம் படம் .என்ன விலை சொன்னாலும் வாங்கறோம். 


================

4 பஸ் ஸ்ட்ரைக்கால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்ல னு சொல்ற மினிஸ்டர்களை டவுன்பஸ்ல ஏத்தி விட்டு ஒரு நாள் பூரா பயணித்துப்பாருங்கனு சொல்லிடனும்


=================

5 சமுக வலைத்தளத்தில் இயங்கும் திருமணமான பெண்கள் ரொம்ப விபரமா டி பி ல அவங்க குழந்தையோட இருக்காங்க.முன் ஜாக்கிரதை முத்தம்மா


=================

6
விடியல் காலையில் நீ தினம் எழுந்தால் உன் நேர நெருக்கடிப்பிரச்சனைகளுக்கு ஒரு விடியல் ஏற்படும்

===============


7
பெற்றோரின் மனப்பூர்வமான ஆசீர்வாதம் உனக்கு இருந்தால் நீ அதிர்ஷ்டதேவதைக்கு அத்தை மகன் ஆகி விடுவாய்!


================


8 மாடர்ன் பிகருங்க இன்னும் பழம்பஞ்சாங்கமா வளையல் அணிந்த கை ,தோடு போட்ட காது ,மூக்குத்தி போட்ட மூக்குனு FB ல அப்டேட்டிங்.ஒய் நாட் ஒட்டியாணம்?


=================


9 அன்பே விமலா! நீ என்னுடன் வாக்கிங் வராமல் போனால் எனக்கான காலை வி(டியா)மலா போய்விடும்?


==================

10
செலிபிரிட்டிகளிடம் மென்சன் போட்டு பேசுபவர்கள்.மிஸ்! ஐ ஆம் யுவர் பிக் FAN.PLS கிஸ் மீ னு கேட்கறதில்லை.நல்ல வேளை


================


11 அடுத்த வாரம் யோகா போய் கரைச்சுடலாம் னு தனக்குத்தானே சமாதானம் சொல்லி இந்த வாரம் பூரா நொறுக்க்குத்தீனியா சாப்ட்டு குண்டாவார் தமிழச்சி


================


12  ஒரு பர்லாங் தூரம் வாக்கிங் போய்ட்டு ரொம்ப டயர்டா இருக்கேன்னு 2 சாம்பார் வடை ஒரு க்ரீம் கேக் னு சாப்பிடுவான் ஆரோக்யத்தமிழன்


================


13 
செகன்ட் ஷோ சினிமா பாத்துடு ஜாமத்தில் தனியாப்போகும்போது எதிரே கொள்ளி வாய்ப்பிசாசு மோகினி வந்தாக்கூட ஒரு வாய் கிஸ் அடிச்சிடவா?னு கேட்பான்

=================


14  அன்பே! நான் ஊர்ல இருக்கற எல்லா பிகர்ட்டயும் கடலை போட்டாலும் நீ என்னிடம் மட்டுமே பேச வேண்டும்.எப்படி நம் காதல் சமத்துவம்?


================

15 பிரசவ வைராக்யம் னா என்ன ? 


மேரேஜ் ஆகி 270 நாள் ல சம்சாரத்தை பிரசவ ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடனும்னு வைராக்யத்தோட இருப்பது


===============


16  நானும் இனிமே வாக் போறப்ப கண் ல தட்டுப்படும் கோலத்தை க்ளிக் கி நான் போட்ட கோலம் னு ஸ்டேட்டஸ் போடலாம்னு இருக்கேன்.யாருக்குத்தெரியப்போகுது?

==============

17
கிரி நீ அக்கா னு படிச்ட்டேன்.அது கிருனிகா வாம்.ஆ!


================


18 
எனக்கென்னமோ அஜித்தை அருண் விஜய் அசால்ட்டா ஓவர்டேக் பண்ணிடுவாப்லனு தோணுது 


ஓஹோ!எந்த விஜய் யும் அப்டி ஓவர்டேக் பண்ண முடியாதுனு தோணுது


==================

19 விஜய் = புது வருசம் யாருக்கு சாதகமா இருக்கும்?

 அஜித் = வியாழக்கிழமை ல ஆரம்பம்.வியாழன் ராசி யாருக்கு ஒர்க் அவுட் ஆகும்னு ஊருக்கே தெரியும் 


=================


20
வியாழன் குருவின் ஆதிக்கத்தில் புது வருசம் பிறப்பதால் டீச்சருக்கு லவ் லெட்டர் தர உகந்த நாள் - கொல்லிமலை சித்தர்


======================

0 comments: