Thursday, January 15, 2015

ஆம்பள - சினிமா விமர்சனம்

 

ஹீரோவோட அப்பாவுக்கு  2 சம்சாரம்.இன்னொரு சம்சாரத்தை  விட்டுட்டு வந்துடறாரு.பிரிந்த  குடும்பம் சேர  சில  முயற்சிகள்  நடக்குது. 3  பசங்களுக்கும் அப்பாவா , ஒரு பொறுப்பான  மாமாவா வேலை செய்யறாரு.அதாவது அத்தைங்க  3 பேருக்கும்  தலா  1 பொண்ணு ங்க . 3 பசங்களும்  தலா  1 அத்தை  பொண்ணை  கரெக்ட் பண்ணனும். இந்த உயரிய  லட்சியத்தை  நிறைவெற்ற 3 பசங்களும்  கிளம்பறாங்க , இடைவேளை

3 பேரும் அத்தை  பொண்ணை கடத்திட்டு  வர்றதுக்குப்பதிலா  அத்தை  யையே  கடத்திட்டு  வந்துடறாங்க.யாரும்  ஜெர்க் ஆகவேணாம் . விபரீதமா  எதுவும் நடக்கலை. இது ஒருதமாசுப்படம்,  அதனால  3  பேரும்  3  பொண்ணுங்களை  கரெக்ட் பண்றதுதான்  மிச்ச  மீதிக்கதை .


ஹீரோவா ஆம்பள  விஷால். பாண்டிய நாடு , நான்  சிகப்பு மனிதன் அப்டினு தொடர்ந்து 2  ஹிட்  படங்கள் கொடுத்து  ஹாட்ரிக்  அடிக்க  பூஜை போட்டாரு. தப்பிப்போச்சு. இதுவும்  அண்ணனுக்குக்கை கொடுப்பது டவுட்  தான் . 


ஃபைட்  சீன்கள்  ல  25  அடி உயரம்  பறக்கறார். ஜெட்லீக்குப்போட்டியா  ட்ரை  பண்றார்  போல  . செம  ,



ஹீரோயினா அமுல்  டப்பா  பூஸ்ட் பாப்பா  இண்ட்டர் நேஷனல்  லக்சா  அஞ்சரை அடி சந்தன  தேக்சா ( சின்ன அண்டா = தேக்சா). இவரோட  கிளாமரை  நம்பிதான் பாதிப்படம்  ஓடுது. இவர்  ரொம்ப  சிக்கனவாதியா  டிரஸ்  ரொம்ப  கம்மியாப்போட்டு  வாங்குன சம்பளத்துக்கு  வஞ்சகம்  இல்லாம  வந்துட்டுப்போறாரு. எப்போ  பாவாடை கட்டிட்டு  வந்தாலும்  நெட்டுக்கா  4  இடத்துல  கிழிச்சு  விட்டுக்கறார் . ஃபேஷன்  போல . 10 நிமிஷத்துக்கு  ஒரு வாட்டி எம்பி எம்பி  குதிக்கறார் . 5  நிமிஷத்துக்கு  ஒரு வாட்டி  லோ  கட்  ஜாக்கெட்  போட்டு  கீழே  குனியறார். இதைவிட  குணச்சித்திர  நடிப்பை  ஒரு  நாயகி  எப்படித்தர  முடியும் ? 


அத்தைங்களா   ரம்யா  கிருஷ்ணன்  , கிரண் , ஐஸ்வர்யா  3  பேரும் . எங்கே  ஹீரோ  கூட சேர்ந்து  கும்மி  அடிக்கற  டூயட்  கனவு பாட்டு  வந்துடுமோன்னு  பயந்துட்டே  இருந்தேன்  நல்ல  வேளை  அப்படி  எதுவும்  படுக்கலை . சாரி  நடக்கலை


பிரபு  ஹீரோவோட  அப்பா .  ஓக்கே  ரகம் . 


காமெடிக்கு சந்தானம்  முதல்  20 நிமிசம்  மட்டும்  வர்றார். அவரது  காமெடி  டிராக்  புத்திசாலித்தனமா  இணைக்கப்பட்டிருக்கு .  பின்  பாதியில்  படத்தை  முடிக்க அவர்  பங்களிப்பு   சிறப்பு





மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  நான் அரசியலுக்கு கூட்டம் சேர்க்கறவன்.ஆனா கூட்டத்தை வெச்சு அரசியல் பண்ண மாட்டேன் # ஆ


2  சந்தானம் = காவி டிரஸ் போட்டவன் எல்லாம் கலர் கலரா பிகரை கரெக்ட் பண்ணும்போது காக்கி சட்டை போட்ட நான் கரெக்ட் பண்ணக்கூடாதா? #ஆ


3  கலரா இருக்கற பொண்ணுங்களுக்கு எல்லாம் கறுப்பா இருக்கற பசங்களைத்தான் பிடிக்குது # ஆ


4  இந்தக்கால பொண்ணுங்க கிளாஸ் பார்க்கறதில்லை.மாஸ் தான் பார்க்கறாங்க # ஆ


5  உனக்குப்பின்னால பெரிய கூட்டத்தையே சேர்த்துட்டே போல ன்னு ஒரு வசனம் வருது.பின்னால திரும்பிப்பார்த்தா தியேட்டர்ல 36 பேர்.அடேங்கப்பா # ஆ


6  ஓடிப்போன என் சம்சாரம் திரும்பி வந்துட்டா


 சந்தானம் = உன் மூஞ்சியே தேவலைன்னு அவ வந்தா ன்னா கூட்டிட்டுப்போனவன் மூஞ்சி எப்டி இருந்திருக்கும் 


7   மனோபாலா = எப்டி நம்ம செட்டப்பு? 


சந்தானம் = பல்லுக்குத்தும் குச்சிக்கு பப்பாளிப்பழம் எதுக்கு?


8
மனோபாலா =,மாசமானா என்னைத்தேடி வருவான்


 சந்தானம் = இவ எப்போ மாசம் ஆவா? அவன் எப்போ வருவான்?


9  இந்தா 10 ரூபா.டீ வாங்கி சாப்டு


 சந்தானம் = பின்னே இந்தக்காசை வெச்சு தங்க பஸ்பமா சாப்பிட முடியும்? 


10 
சந்தானம் =,அந்த வீணாப்போன மூஞ்சிக்கு டீனா ன்னு பேரா?

11 சந்தானம் = பல்சர் பின்னால போன பிகரைப்பார்த்திருக்கேன்.பல்லுப்போன கிழவி பின்னால போற பையனை இப்போ தான் பார்க்கறேன்


12  சதீஷ் = சாங் ல சேர்ந்த குடும்பத்தைப்பார்த்திருக்கேன்.சரக்குல சேர்ந்த குடும்பத்தை இப்போ தான் பார்க்கறேன் .அப்பா பசங்க 3 பேரு எல்லாரும் 1


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


ஆம்பள ரன்னிங் டைம் =144,இது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?

சுந்தர் சி படத்துல ஹரி எப்போ ஜாயின் பண்ணாரு? 45 ஜீப் பறக்குது

3   ஹன்சிகா ஜாகிங் போகுது ,எம்பிக்குதிக்குது ,மழைல நனையுது .நவ ரசமும் தெரியுது நடிப்பில்.அடடே!


 4 இத்துப்போன மர பெஞ்ச்சை ஹீரோ தூக்கி வீசறாரு.அது பட்டு 35 பேரு கீழே விழுந்துட்டாங்க

விஷால் விஜய்க்குப்போட்டியா வருவார்னு பார்த்தா சிம்பு க்குப்போட்டியா ஹன்சிகா வை கரெக்ட் பண்ணிட்டு இருக்காரு # ஆ

6
அட்டர் பிளாப் படத்துக்கான சகல அம்சமும் தெறிக்குது # ஆம்பளடா



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


ஹன்சிகாவுக்கு  10 லட்சம்  ரூபா  சம்பளம்  குடுத்து  20 லட்சம்  ஒர்த்துக்கு  குணச்சித்திர  கண்ணிய  நடிப்பை  காட்ட  வெச்சது 
2  ஹீரோ   ஒரே    ஒரு  சீன்ல  போலீஸ்  யூனிஃபார்ம்ல   வரும்  டுபாக்கூர்  சீனை வெச்சு  இது  ஒரு  போலீஸ்  கதைன்னு  ஜனங்களை , டிஸ்ட்ரிபியூட்டர்சை  நம்ப  வெச்சது



3  ஹரி  படங்களுக்கு  இணையா   ஜீப்களை  களம்  இறக்குனது 


4 தாய் மாமன்  , மாமன்  மகள்  படங்கள் ல  இருந்து  சாமார்த்தியமா காட்சிகளை  உருவினது



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   படம்  காமெடியாத்தான்  இருக்கு, ஆனா  1980 ல வந்திருக்கனும்.  இன்னும் திரைக்கதை  நாலெட்ஜே  இல்லாம   பம்மாத்து  பண்ணினா  மக்கள் ஏத்துக்குவாங்களா? 
 
2  பிரபுவோட   முதல்  காதலி செத்துட்டாங்கனு வந்த  தகவலை அவர்  எப்படி  நம்பறாரு>? டெட்  பாடியை  கண்ணால  கூடப்பார்க்காம? 


3  ஹீரோ  விஷாலும்   அவர்  தம்பியும்   புது  ஊர் ல  குளத்துல  குளிக்க ப்போகும்போது  தன் லக்கேஜை  முன்  பின்  தெரியா த  ஆள்  கிட்டே  ஒப்படைச்சு  ஏன் ஏமாறனும் ? ஒருவர் லக்கேஜைப்பார்த்துக்கிட்டு  இன்னொருவர்  போய்  ரெடி  ஆகிடலாமே? 








சி  பி  கமெண்ட் -ஆம்பள - பிரமாதமான  காமெடி டிராமா, ஆனா 1980 ல வந்திருக்கனும், டூ லேட்,இதுக்கு மேல சொல்ல விரும்பல - விகடன் மார்க் - 38 , ரேட்டிங் = 2.25 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  38



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  =  சுமார்



 ரேட்டிங்  =2.25 / 5



ஈரோடு  அபிராமியில்  படம்  பார்த்தேன்

0 comments: