Monday, January 19, 2015

இளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் புலிக்கு தடையா?

1  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வெளி மாநிலங்களிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர்#,தன்னிகரில்லா தண்ணி அடிக்கும் கூட்டம்

==================


2  விழாக்கால SMS கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் கைவிட்டது # வாட்சப் மச்சினி வந்ததும் செல் போன் மனைவிகள் பம்முவது சகஜம்


=================


3
பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியன் சுவாமி # தமிழர்கள் நம்பிக்கெட்டவர்கள்.ஆனால் தரம் கெட்டவர்கள் இல்லை


=================

விருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த சமந்தா. #குளிச்ட்டு இருக்கும்போது லேட் ஆகிடுச்சினு அப்டியே வந்துட்டாங்களாம்


===================

5 பொங்கல் பண்டிகை: நாளை முதல் இலவச— வேட்டி சேலை,வழங்க தமிழக அரசு அறிவிப்பு # இலவச பஸ் பாஸ் குடுங்க. முடிஞ்சா தெருவுக்கு ஒரு பஸ்


==============

6 மோடியின் ஆட்சியில் நாட்டில் உள்ள சூழ்நிலை அவசரகாலத்தைவிட மிகவும் மோசமாக உள்ளது - மம்தா பானர்ஜி # அவரு நிதானமாத்தானே டூர் போறாரு?


===============

7
Twitterல ஒவ்வொருவரும் காங்கிரஸ்ல இணைஞ்சு பாடுபடனும் -குஷ்பு"# அப்புறம் நாங்க தான் படாத பாடு படனும் மேடம்


=================


8 பெண் பயணியை கட்டி பிடித்து சில்மிஷம் போலீஸ்காரருக்கு ‘தர்ம அடி’ # எத்தனை பேரை லாக்கப்ல அடிச்சிருப்பாரு.இதான் சாக்குன்னு குமுறிட்டாக


===================


9  ஐ படக் கதையை முதலில் சொன்னதே ரஜினிக்குத்தான்! - ஷங்கர் வெளியிட்ட ரகசியம் # சும்மா அடிச்சு விடுங்க.யார் வந்து சாட்சி கேட்கப்போறாங்க?


==================

10
கடவுளே வந்தாலும் சொத்துு வழக்கில் ஜெ வை காப்பாற்ற முடியாது-RS.பாரதி # அந்த ஆண்டவரே வந்தாலும் தமிழ்நாட்டை ஆண்டவரைக்காப்பாத்த முடியாது?
======================
11 இரு மாதங்களுக்கு ஒரு முறை ரயில் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை# விமான டிக்கெட்டை எவ்ளவ் வேனாலும் ஏத்திக்குங்க.பஸ்/ரயில் ல கை வைக்காதீங்க
==================
12  சம்பளத்தை உயர்த்த கோரி நாடு முழுவதும் வரும் 7-ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.# வங்கிக்கொள்ளையர்களுக்கு தகவல் போயிடப்போகுது


================


13 நான் உன்னை 38,000 அடி உயரத்தில் காதலிக்கிறேன்' ஏர்ஏசியா விமான பணிப்பெண் SMS# ரொம்ப ஹை டெக் லவ் போல.ட்யூட்டி டைம்ல ப்யூட்டிக்கு லவ்வு


=================


14 'டாஸ்மாக் ன்9000 கோடி வருமானத்தை விடஏழை மக்களின் உயிர் தான் முக்கியம்.' - கேரள CM#ஓஹோ.அப்போ சட்டுனு ஷட்டரை சாத்தாம ஏன் ஸ்டெப் பை ஸ்டெப்பா


=================


15  
தெலுங்கில் ஒரு நேரடிப் படம் இயக்குவேன்- இயக்குநர் ஷங்கர் #அதன் ரீமேக்கில் நான் தோன்றுவேன் -இளைய தளபதி


===============

16 ஆஸி,ல் மேலாடை இல்லாமல் பெண்கள் சன் பாத் எடுக்கத் தடை #என்னய்யா அநியாயம் இது? பெண்களுக்கு சுதந்திரமா இருக்க உரிமை இல்லையா?


===============

17  அடக்கம் இல்லையேல் "நெற்றி"யடி கிடைக்கும்: புதிய நிர்வாகிகளுக்கு கருணாநிதி 'வார்னிங்# கட்சி ஏற்கனவே மரண அடி வாங்கி இருக்கு.இவர் வேற


=============

18  மோடி தான் எங்கள் கேப்டன்: பா.ஜ க # கேப்டன் தான் எங்க மோடி - தேமுதிக"


==================

19 இளைய தளபதி யின் அடுத்த பட டைட்டில் "புலி"- செய்தி # தமிழ் நாட்டில் தான் புலி க்கு தடை விதிச்ட்டாங்களே? விடுவாங்களா யுவர் ஆனர்


=================

20 நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் -தந்தை புகார் # அந்த ஆள் புடனியைப்பிடிச்சு லாக்கப் ல தள்ளி விசாரிங்க யுவர் ஆனர்


========================
 

0 comments: