Friday, January 09, 2015

சாமானியர்களின் அந்தரங்கம்

கோப்புப் படம்: தி இந்து.
கோப்புப் படம்: தி இந்து. 
 
 

அடுத்த 10 ஆண்டுகளில் கேள்விக்குறியாகும் சாமானியர்களின் அந்தரங்கம்'

 
அடுத்த 10 ஆண்டுகளில், அந்தரங்க (பிரைவசி) விவரங்களைக் காக்க, மிக அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையம் தனது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வின் முடிவில், "வரும் காலங்களில் உலகம் மிகவும் வெளிப்படையாகவும் அல்லது பகிரங்கத்தன்மையுடனும் இயங்கும். இணைய வசதி மேம்பட்டுக் கொண்டே இருக்கும் காலக்கட்டத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஏற்கெனவே 2014-ல் பிரபலங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், விவரங்கள் போன்ற பல தரப்பட்ட அந்தரங்க விஷயங்கள் இணையத்தில் கசிந்தன.
இதன் அடிப்படையில் வரும் காலத்தில் அந்தரங்க விஷயங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் ஆடம்பர செலவுமிக்க காரியமாக விளங்கும் என்று பல வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நிலையில், சாமானிய மக்களின் அந்தரங்கம் கேள்விக்குறியாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆய்வு குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டிஃபானி ஷாலின் கூறும்போது, "இந்தச் சமூகம் அந்தரங்கம் வெளிப்படைத்தன்மையுடன் பார்க்க தொடங்கும் காலக்கட்டத்தில், இதனை அடிப்படையாக கொண்டு மிகப் பெரிய அளவிலான விளைவுகள் உருவாகும். இதற்கு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினர் பெரிய அளவில் மிக எளிமையாக பாதிக்கப்படுவார்கள்.
2025-ல் அனைத்துமே வெளிப்படைத்தன்மையுடன் காணப்படும். அப்போது மக்களுக்கு அந்தரங்கம் என்பது வெறும் பிம்பமாக மட்டுமே இருக்கும்" என்றார் அவர்.
இந்த ஆய்வு குறித்த விவரத்தை, அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

நன்றி

த இந்து


  •  
    இப்ப மட்டும் என்ன வாழுதாம்? புகழ் வரணும்கிறதுக்காக சில பிரபலங்கள் தாங்களே செய்திகளைப் பரப்பிக்கொள்வதும் நடக்கத்தானே செய்யிது? பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள்வர்கள் எதனால் பாதிக்கப்படுவார்கள் என்பது தானே புரியவில்லை...!
    Points
    1250
    about an hour ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • syed abudhahir  
    கியாமத் நாளின் அடையாளங்கள் உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றனர். அந்த அடையாளங்களை இந்த நூல் கீழ்க்காணும் தலைப்புகளில் தொகுத்துச் சொல்கிறது. சிறிய அடையாளங்கள் மகளின் தயவில் தாய் பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல் குடிசைகள் கோபுரமாகும் விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும் தகுதியற்றவர்களிடம் பொறுப்பு பாலை வனம் சோலை வனமாகும் காலம் சுருங்குதல் கொலைகள் பெருகுதல் நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல் பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது நெருக்கமான கடை வீதிகள் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல் ஆடை அணிந்தும் நிர்வாணம் உயிரற்ற பொருட்கள் பேசுவது பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்... இன்னும் .........
    about 3 hours ago ·   (3) ·   (2) ·  reply (0) · 
  • புத்தன்  
    இணைய வசதியை பயன்படுத்தாவிட்டால் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும்.
    Points
    875
    about 5 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) · 
  • musthak ahamed  
    இதற்குத்தான் வாழ்வியலின் மேன்மைகள் குறித்தும் தனிமனித ஒழுக்கங்கள் குறித்தும் மிகதெளிவாக தனது கருத்தை எங்கள் தூதர் முஹம்மது நபி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் ...எவருக்கும் தெரியக் கூடாது என்று நாம் செய்யும் அனைத்தும். கெட்ட தீங்கான செயல்களே...என்று அண்ணல் நபி அவர்கள் தன் கூட்டத்தினருக்கு அறிவுறுத்தி உள்ளார்கள் ...இதனை பின் பற்றினாலே போதும் ...பிறர் சதையை பிடுங்கித் தின்னும் செயல் தானாகவே இல்லாமல் போய்விடும் .... உலகம் மாறுமா ?????

0 comments: