Friday, January 23, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 231/ 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

1

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் - சினிமா அறிமுகம்- நண்பர் , பதிவர்  செங்கோவி

விநியோகஸ்தர்-சீரியல் ஆக்டர்-வசனகர்த்தா-திரைக்கதை ஆலோசகர் என்று பல முகங்கள் இருந்தாலும், கேபிள் சங்கருக்கு அடையாளம் ‘பதிவர்-சினிமா விமர்சகர்’ என்பது தான். காரணம், மற்றவற்றை விட இதில் அவர் அடைந்த புகழ் அதிகம். சினிமாவில் இருந்துகொண்டே நேர்மையான விமர்சனங்கள் எழுதுவது எளிதல்ல. அதனால் அவருக்கு வந்த சில மிரட்டல்களையும் நானறிவேன். இருந்தாலும் இப்போதுவரை நேர்மையைக் கைவிடாத மனிதர் அவர்.
அகிரா குரோசோவாவில் ஆரம்பித்து பல உலக சினிமாக்கள் பற்றிய அறிவு இருந்தாலும், அதையெல்லாம் எழுதி படம் காட்டாமல் ‘கமர்சியல் சினிமா’ தான் நமக்கு நல்லது எனும் தெளிவு கொண்டவர். தமிழ் சினிமாவைப் புரட்டிப்போடப் போகிறேன் என்றெல்லாம் சொல்லி நம்மை பீதியூட்டாமல் ‘இது ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும்’ என்று அறிவித்துவிட்டே ‘தொட்டால் தொடரும்’ படத்தைத் தொடங்கினார். இதோ, இந்த வாரம் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ்.

ஏற்கனவே பாடல்கள் நம் மனதைக் கொள்ளை கொண்டுள்ளன. அதே போன்று படமும் நம்மைக் கவரும் என்று நம்புகிறேன். சினிமா வியாபாரத்தை கரைத்துக் குடித்தவர் என்பதாலும், அவருக்கு இருக்கும் திரைக்கதை அறிவினாலும் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான படமாக இதை உருவாக்கியிருப்பார்.

இது ஒரு லவ் & ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. தமன் சூட்டிங்கில் பட்ட கஷ்டங்களும், அவரது சின்சியாரிட்டியும் இன்னொரு நல்ல ஹீரோ தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துவிட்டார் என்றே பறைசாற்றுகின்றன. திருத்தமான முகம் இருந்தும், பொங்கி வரும் அழகிருந்தும் போக்கற்ற படங்களில் நடித்து வந்த அருந்ததிக்கு, இந்தப் படம் ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். 
ஃபேஸ்புக்கில் ஆயிரம் பேர் ஃப்ரெண்ட்டாகச் சேர்ந்தாலே கெத்து காட்டும் ஆட்களுக்கு மத்தியில், யாரையும் மதித்துப் பேசும் பண்பான மனிதர் நம் கேபிள் சங்கர். அவரது நல்ல குணத்திற்கே, வெற்றி அவரைத் தேடி வரும். அவரைப் போன்ற மனிதர்கள் ஜெயிக்க வேண்டும்.

எனவே நண்பர்கள் அனைவருக்கும் கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும் படத்தினைப் பரிந்துரைக்கிறேன். இப்போதுவரை குவைத்தில் படம் ரிலீஸ் ஆவது கன்ஃபார்ம் ஆகவில்லை. எனவே படத்தின் விமர்சனத்தை பார்க்காமலேயே, இப்போதே எழுதிவிடுகிறேன். :)

பார்க்கலாமா?:
கண்டிப்பாகப் பார்க்கலாம்!அரூபம் ராணா பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அரூபம். இதில் நாயகனாக தேவா, நாயகிகளாக தர்ஷிதா சஹானா அறிமுகமாகின்றனர், சரண், ஜெகன், ஏ.கே. ராஜேந்திரன், விஜயலட்சுமி, குள்ளமணி, தேனிமுருகன், ஆகியோரும் நடிக்கின்றனர். 

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.வின்சென்ட் ஜெயராஜ் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். அரூபம் என்பது உருவம் அற்றது. ஒரு மனிதன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் காலத்துக்கு முன்பாக துர் மரணம் அடையும் போது அவன் ஆத்மா ஆசாபாசங்களை நிறைவெற்றி கொள்ள அலைகிறது என்பது நியதி. இக்காலத்தில் நிலவும் பெரும்பான்மை துர் மரணங்கள் பணத்தாசை மற்றும் பெண்ணாசையால் நடக்கின்றன. அந்த கருத்தை உள்ளடக்கிய பேய் படமாக தயாராகிறது. கிளைமாக்ஸ் காட்சி கொடைக்கானலில் உயர்ந்த இடமான பல்லங்கி மலை உச்சியில் படமாகி உள்ளது.

ஒளிப்பதிவு: ஜெயபாலன், இசை: சுனில் சேவியர், பாடல்: தமிழமுதன், மதுரகவி, மதுமதி, சாரதி, தாமரை தாசன், எடிட்டிங்: கேசவன், நடனம்: சாம்போ ராஜு, ஸ்டண்ட்: ஆர்.கே. முரளி, கொடைக்கானலில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

3  அப்பாவி காட்டேரி-  ரத்த காட்டே‌ரி பற்றி ஹாலிவுட்டில்தான் படமாக எடுத்து தள்ளுவார்கள். அவர்களின் ட்ராகுலா சீ‌ரிஸ் வெகு பிரபலம். அதிலும் கப்போலோவின் ட்ராகுலாவுக்கு இங்கேயும் மவுசு அதிகம்.

மலையாளத்தில் இயக்குனர் வினயன் காட்டே‌ரி ரசிகர். அவ்வப்போது கடைவாய் கோரைப்பல்லை நடிகர்களுக்கு மாட்டி காட்டே‌ரி படங்கள் எடுப்பதுண்டு. சமீபத்தில்கூட நான்காம் பவுர்ணமியோ ஏழாம் பவுர்ணமியோ ஒரு படம் எடுத்தார். வினயனின் தேசத்திலிருந்து அலி அ‌க்பர் என்று இன்னொருவர் கிளம்பி வந்திருக்கிறார்.

மலையாளத்தில் ஐடிய‌ல் கப்பிள் படத்தை இயக்கிய இவர் அப்பாவி காட்டே‌ரி என்ற படத்தை தமிழில் எடுத்து வருகிறார். முப்பது வருடங்களுக்கு முன் செத்துப்போன நபர் காட்டே‌ரியாக திரும்பி வருவதுதான் கதை. காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் தந்து எடுத்திருக்கிறார்கள். சீ‌ரியஸாக எடுத்தாலும் இதுபோன்ற காட்டே‌ரி படங்கள் கிச்சுகிச்சு மூட்டுபவையாகவே இருக்கும். படத்தில் நமக்கு தெ‌ரிந்த ஒரே முகம் தலைவாசல் விஜய்.

மலையாள வாசனை தூக்கலாக இருப்பதைப் பார்த்தால் அங்கு வெளியான படத்தின் டப்பிங்கோ என்று சின்ன சந்தேகம். தெ‌ரிந்தவர்கள் சொல்லலாமே.

நன்றி -செங்கோவி  , மாலை மலர் , வெப்துனியா

0 comments: