Wednesday, January 28, 2015

ஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக்

தேவா ,ஹாரீஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு பிடித்த தமிழ் செய்யுள் தொல்"காப்பி "யம்


==============


2
இந்தப்பொண்டாட்டிங்க எல்லாம் அடிக்கடி சேமியா உப்புமா செஞ்சே பணத்தை சேமிக்கப்பார்க்கறாங்க.மாமியா மேல சத்தியமா சொல்றேன்.இது ரொம்பதப்பும்மா

===============


3
ஓயாமல் உழைக்கும் உழைப்பாளி அரசியல் வாதிக்கும் ,உயிர் உள்ளவரை பதவி ஆசை உள்ளவருக்கும் ஒரே வாழும் உதாரணம் தானைத்தலைவரே!


==============


4
வருமான வரி வழக்கு வேறு .சொத்துக்குவிப்பு வழக்கு வேறு.குழப்பிக்காதீங்க.அந்த கேஸ் விசாரணை நடந்திட்டுதான் இருக்கு # ஜெ


==============


5 ஒரு சினிமாப்பைத்தியத்தின் முதல் இரவு டயலாக் டியர் FDFS டைம் நைட் 9 டூ 12 னு ஜோசியர் சொல்லி இருக்கார்.வாம்மா மின்னல்


=============


6 ஒரு  கடி ஜோக்  ரைட்ட்ரின்  ஆதங்கம்அவங்கவங்க காதலி கிட்டே சொல்ல வேண்டிய டயலாக்கை ஏன் என் கிட்டே சொல்றாங்க? # கடிக்காத


===============


7
உன் சக போட்டியாளர் மேன்மேலும் முன்னேறிக்கொண்டிருக்கையில் நீ பெண்ணாசையால் பின் தங்கி விடாதே ! # உதா - தனுஷ் ,சிம்பு


===========

8
மொக்கை ஜோக்ஸ் எழுதறதையே தொழிலா வெச்சுட்டு இருக்கறவன் கிட்டே சிலர் "ஸார்.உங்க ஜோக்ஸ் மொக்கையா இருக்கே?"னு கேட்கறாங்க.அய்யோ ராமா ;-))


============


ஐ படத்துக்கு தடையாம்.பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலைன்னா ஒரு பெரிய வேடிக்கை நடக்கும் பாருங்க.போஸ்ட் புரொடக்சன் ஒர்க் முடிச்ட்டோம்னு எ அ வந்துடும்


===========

10  நியாயம் உன் பக்கம் இருந்தால் எதிரிக்கு இயற்கையாகவே ஏதாவது பின்னடைவு நிகழும்


============


11  அதிகாலை நாலரை க்கு நீ தினமும் எழுந்து விட்டால் உன் வாழ்வில் ஏழரை (சனி)க்கு என்றும் இடம் இராது.


=================

12  அன்பே! தினமும் சாதாக்கோலமே 10 நிமிடத்தில் போட்டுட்டு உள்ளே ஓடிடறியே! கிளிக்கோலம் , தேர்கோலம் போட்டா என்ன?


===============


13   தமிழர்களின் எதிரி ராஜபக்சே வின் வீழ்ச்சி ஆரம்பம் எனும் நல்ல செய்தியுடன் இன்றைய திருப்பள்ளி.எழுச்சி ;-))))


============

14
பொண்ணுங்க யாராவது FB ல இட்லி போட்டோவை அப்டேட்டினா "வாவ்! இந்த மாதிரி பதார்த்தத்தை நான் பார்த்ததே இல்லை!" னு சிலாகிப்பான் நெட் தமிழன்


===============================


15   இன்று ஒரு வெட்டித்தகவல்.மீனம்மா கிட்டே DMலஉங்க ஊரு எது?னு கேட்கத்தேவையில்லை.சித்ரா கிட்டே டி எல் லில் கேட்டா போதும்.2,பேரும் ஒரே ஊராம் #குற்றாலம் டூ கோவில்பட்டி ஒரு ஆன்மீகப்பயணம்


=================


16 நான் ஏன் முட்டாளா இருக்கேன்னா புத்தி உள்ள அனைவரும் வெற்றி காண்பது இல்லைனு முன்னோர்கள் சொன்னதால.


===============


17  அடிக்கடி சம்சாரத்துக்கு உடை எடுத்துத்தருவதால் தான் அந்தக்காலத்துல புருசனை உடை யவன் னு சொல்லி இருக்காங்க போல


==============


18 
பஸ் ல ஒரு லவ் ஜோடி பரஸ்பரம் செல் போனை மாத்தி sms,calls.செக் பண்ணிட்டு இருக்காங்க.2 பேர்ட்டயும் ஸ்டெப்னி போன் இருந்தா?


===============


19 
கண்ணியமான ஆண்கள் சேலை கட்டிய பெண்களை நேருக்கு நேர் நின்று ரசிப்பதை விட பக்கவாட்டில் நின்றே ரசிக்கிறார்கள் # இது கேள்வி அறிவில் எழுதியது


=================

20 

திறமை யாரிடம் இருந்தாலும் ரசி! அபிமான நடிகர்களை நேசி! வெறித்தனமான அன்பைத்தவிர்த்தால் பிரச்சனை வருமா?நீ யோசி


=================0 comments: