Friday, January 23, 2015

எங்க ரைசிங் ஸ்டாரை யார்யா கேவலப்படுத்தறது? ராஸ்கல்ஸ்


டாக்டர்! பஸ் ல ,ரயில் ல போகும்போது நியூஸ் பேப்பர் படிச்சா கண்ணுக்கு நல்லதா?


 பேப்பர் விற்கற பையனுக்கு நல்லது

===============

2  டாக்டர்!படித்த விசயங்கள்,அப்படியே மண்டையில் கணினியில் பதிவாகிவிடுவதுபோல ,பதிவாக என்ன செய்ய வேண்டும்?ஏம்மா அது  தெரிஞ்சா நான் MBBS பாஸ் ஆகி  இருப்பேனே?


===============


3 எங்க ஆஃபீஸ்லயே இவரு மட்டும் தான்  கார் ஓட்டுவாரு.

 ஓஹோ , மத்தவங்க?

இவரை  ஓட்டிட்டு இருப்போம்
===============
4 அரிச்சந்திரன் தன் காதலியை எப்படி வர்ணித்திருப்பார்?

உன்னை  வர்ணிக்க என் கிட்டே பொய்/வார்த்தை இல்லை


================

5 பொண்ணை  மாப்ளைக்குப்பிடிக்கலையாம்.

அட போப்பா. எங்க  பொண்ணு  ஃபேஸ்புக்ல 19000  லைக்ஸ் வாங்கிட்டு இருக்கு. ரசனை இல்லாத ஆளா  இருக்கியே?=============


6   டெய்லி  750 rsஅட்வான்ஸ் கேட்கறியே? என்ன  செலவு?

செலவெல்லாம்  இல்லை.எப்படியும் 1 ந்தேதி  சம்பளம் வராது. முன் கூட்டியே வாங்கி கழிச்சுட்டா?


===============


7 டாக்டர்!  எனக்கு  எல்லாமே   மூணு மூணா  தெரியுது.

யோவ்! நீ  போட்டிருக்கற கிளாஸ்  மை டியர் குட்டிச்சாத்தான்  3 டி படம்  பார்க்க தந்தது,கழட்டுய்யா


==================

8  ஆபீஸ் ல எல்லாரும் டெய்லி என் கிட்டே வந்து இன்னைக்கு தேதி என்ன சார்? னு கேட்கறாங்களே? சிம்பாலிக்கா காலண்டர் கேட்கறாங்களா?

 நோ.சம்பளம்  கேட்கறாங்க. 1ந்தேதி  ஆனா  போட்ருங்க சார்


=================


9 ஓப்பனிங் ஷாட் ல ஹீரோ கிச்சன் ல அரிசி களையறாரு.


சூப்பரு.ரைசிங் ஸ்டார் க்கு மேட்ச்சுக்கு மேட்ச்


==============


10  டீச்சர். கேக்குக்கு (cakes) தமிழ்ல என்ன?,எப்டி கூப்டனும்?


 டேஸ்ட்டா இருந்தா சாப்ட்டுடு.கூப்ட்டா அதுக்கு கேட்கவா போகுது?


============


11 டியர்.நான் குழந்தையா இருக்கும்போது எங்க அம்மா தான் ஊட்டி விட்டாங்க..நீங்களும் அதே மாதிரி  செய்வீங்களா?


 ம்.ஒரு கண்டிசன்.ஊட்டி ல விட்டுட்டா திரும்பி வந்துடக்கூடாது

=============


12 
பிசிக்ஸ் மிஸ் பிந்துமாதவி = நேத்துத்தானே பாடம் நடத்தினேன்.இன்னைக்கு வெய்ட்டிங் பார் மாஸ் னா என்ன அர்த்தம்? 


அது சூர்யா பட டைட்டில் டீச்சர்


================


13  டாக்டர். மதியம் சாப்பிட்டப்புறம் வர்ற தூக்கம் சாப்பாட விட ஆனந்தமா இருக்கு...


 அப்போ சாப்பிடாமயே தூங்கிடுங்களேன்.சமையல் வேலை  மிச்சம் 


==============


14  பஸ் ல பின் சீட்ல ஒருத்தன் ரொம்ப நேரமா உன் கூந்தலை தடவிட்டா இருக்கான்.நீ கண்டுக்காம இருக்கே? 


 சவுரியைத்தான் தடவறான் பாவம்


===============

15  வழக்கமா தியேட்டரை இடிச்ட்டு கல்யாண மண்டபம் கட்டுவாங்க.நீங்க ஏன் ஜூ ஆக்கிட்டீங்க? 


 சிங்கம் சிறுத்தை புலி படம் வரிசையா ரிலீஸ் ஆகுதே? 


================


16 உங்க படத்துக்கு மாஸ் னு டைட்டில் வெச்சிருக்கீங்க்ளே? எதுக்கு? 


இனிமே யார் கேட்டாலும் நான் தான் மாஸ் ஹீரோ னு சொல்லிக்கலாமே? 


===============

 17  உங்களுக்கு கார்த்திக் தெரியுமா?

 ம் 

பிரபுவைத்தெரியுமா?


 ஓ! 


சுந்தர் சி யைத்தெரியுமா? 

யா. 


எல்லாரையும் தெரியும்.ஆனா குஷ்பூவை மட்டும் தெரியாதா?


==================


18  வரலாறு டீச்சர் வனிதா = தாஜ்மஹால் என்றதும் உனக்கு் ஞாபகம் வருவது எது? மும்தாஜா? காதலா?


 லொள் மாணவன் = ரியா சென் டீச்சர்


===================


19 ஹீரோ படம் பூரா டை கட்டிட்டே வர்றார்.

 ஓஹோ.ஏன் அப்டி?

ஹீரோ பேரு டை கர்.மேட்சுக்கு மேட்ச்


================


20  சார்.உங்க படத்தோட ஓப்பனிங் சீன் நல்லால்லை


அப்போ 10 நிமிசம் லேட்டா தியேட்டருக்குப்போய் இருக்கலாமே?


===================