Friday, January 23, 2015

தொட்டால் தொடரும் - சினிமா விமர்சனம்


ஹீரோயின்  ஒரு டெலி காலர். கஸ்டமர்ஸ்க்கு ஃபோன்  பண்ணி லோன்  வேணுமா?ன்னு  கேட்கற  ஜாப். சக பணீயாளினிக்கு   இந்த  ஒர்க்கை  சொல்லித்தர்றார்.அந்த  டைம்ல  ஹீரோயினின் தோழிக்கு  ஹீரோவோட  நண்பரிடம்  ஏற்பட்ட கசப்பான  உரையாடலால்  கடுப்பாகி  ஹீரோயின்  கிட்டே  புலம்பறாங்க. ஹீரோயின் ஹீரோ  கிட்டே   ஃபோன்ல  பேசி  திட்டறாங்க. காலம் எல்லாம்  காதல்  வாழ்க  படத்தில்  வருவது  போல்  ஹீரோ  ஹீரோயின்  இருவரும்  நேரில்  ஒருவரை  ஒருவர்  பார்க்காமயே  நட்பை/ காதலை வளர்த்திக்கறாங்க.


ஹீரோ கூட  ஃபோன் ல  கடலை  போட்டுட்டே  வண்டி  ஓட்டும்போது  ஹீரோயின்  பிசாசு  படத்தில்  வருவது  போல் ஒரு விபத்தில்  மாட்டிக்கறாங்க . அதுல ஹீரோயின்  தம்பிக்கு  சீரியஸ்.  ஆபரேசனுக்கு  30 லட்சம்  பணம்  வேணும்.


ஹீரோயினுக்கே தெரியாம  ஹீரோ  ஃபேஸ்புக்  மூலம்  டொனேசன்  கலெக்ட் பண்றார். 


இது  ஒரு டிராக். 

ஒரு  சமூக  விரோத  கும்பல்  ஒரு   கொலை  பண்ண  திட்டம்  போடுது . அது  விபத்து  போல்  செட்டப்  செய்யனும்னு  ஃபோன்ல பேசிக்கறாங்க . ஆக்சிடெண்ட்ல  ஆள்  செத்தா  30  லட்சம்  ரூபா  பாலிசி  பணம்  கிடைக்கும். இந்த  மேட்டரை வெச்சு ஹீரோயின்  தவறா  ஒரு முடிவு  எடுக்கறாங்க. இதனால  ஏற்படும்  விளைவுகள்   பின்  பாதி திரைக்கதை.


முதல்ல  ஒரு வார்ம்  வெல்கம்  டூ  கேபிள் சங்கர். வலைப்பதிவரா  , சினிமா  விமர்சகரா   நெட்டில்  உலா வந்து   கலகலப்பு  படம்  மூலம்  வசனகர்த்தாவா  வந்து  இப்போ  இயக்குநராக   பதவி உயர்வு. 


ஆரம்பக்கட்ட காட்சிகள்  சீரியல்  பாதிப்பில்  மெதுவா  நகருது . மெல்ல  மெல்ல  திரைக்கதை  பிக்கப்  ஆகிக்குது.  ஒரு  புது முக இயக்குநரா  ஜெயிச்சுட்டார்னே  சொல்லலாம் . குறிப்பா  பெண்கள்  முகம் சுளிக்காத  அளவில்  கண்ணியமான  காட்சிகள் நகர்த்தலில்  அவர்  சாமார்த்தியம்   தெரிகிறது. 


வசனகர்த்தாவாக   ட்விட்டர்  ஐஆம்  கார்க்கி.சந்தானம்  காமெடி டிராக்கில்  வரும்   ஒன்  லைனர்கள்  தான்  இவர்  டார்கெட். படத்தில்    ஹீரோவின்  நண்பர்   13  ஒன் லைனர்கள்  அள்ளி  வீசறார். அதில்  பல  வசனங்கள்  நல்லாருக்கு , சில  வசனங்கள் ஆல்ரெடி  ட்விட்டர்ல  வந்ததா  இருக்கு . இட் இஸ் ஆல் இன் த  கேம். செண்ட்டிமெண்ட் டச்  டயலாக்சும்  உண்டு. இவருக்கும்  வாய்ப்புகள்  தொடரும். 


ஹீரோவா  தமன் . மிக  இயல்பான  நடிப்பு . பிரசன்னா  போல் முகச்சாயல் , மைக்  மோகன்  போல்  நடிப்புச்சாயல்.காலம்  கனிந்தால் இவருக்கு தமிழ்  சினிமாவில் நல்ல  வாய்ப்பு உண்டு 


ஹீரோயினா  அருந்ததி.ஹோம்லி  லுக் . சுடிதாரில் துப்பட்டா  போடாமல்  விட்டால்  கூட  கண்ணியம்  காக்கும்  பெண்ணிய முகம்.படத்தில்   ஹீரோவை  விட  ஹீரோயினுக்குத்தான்  முக்கியத்துவம் . காதல்   மலரும் காட்சியில்  , தோழியிடம்  வெட்கப்படும்  காட்சியில்  கிளாசிக்.


வில்லனா வரும்  வின்செண்ட்  அசோகன்  ஒரு வரி வசனம்  கூட  பேசாமல்  இருப்பது  புதுசு.


பின்னணி  இசை , பாடல்  இசை  கன கச்சிதம். 



ஒளிப்பதிவு  நல்லாருக்கு. 


வசனகர்த்தா  ஐ ஆம் கார்க்கி

மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  கிடைக்கற பிகரை எல்லாம் தேத்தி வைப்பதுதான் என் ட்யூட்டி



2 வாழ்க்கை தரும் வலிகளைத்தாங்கிக்க முடியாம தற்கொலை பண்ணிக்கறவங்க மரணத்தின் வலி பத்தி தெரிஞ்சா அப்டி பண்ணிக்க மாட்டாங்க


3 சரக்கு அடிச்சவன் சம்சாரத்துகிட்டே இருந்து தப்பிக்கலாம்.ஆனா சைட் அடிச்சவன் பிரண்ட் கிட்டே இருந்து தப்பிக்க முடியாது


எதுக்காக மிஸ்டு கால் கொடுத்தீங்க?

நேத்து கடைசியா போன் பண்ணினது நீங்க தானே? கை பட்டு கால் போய்டுச்சு போல#TT



பசங்கமனசு ரஜினி படம்போல் வெளில போய் பாப்கார்ன் வாங்கிட்டு வந்தாலும் புரியும்.பொண்ணுங்க மனசு கமல் படம் போல்.ஒரு சீன் மிஸ் ஆனாலும் புரியாது்


6 புரட்சிக்கனல்னு பத்திரிக்கைக்குப்பேர் வெச்ட்டு ஆஃபீஸ்ல ஏ சி போட்டிருக்கீங்க ? கனல் அணைஞ்சிடாது?


 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  தமிழ் வலைப்பூ பதிவர்கள்/கீச்சர்கள் பங்கு பெற்ற முதல் தமிழ்ப்படம் தொட்டால் தொடரும் வெற்றி பெற வாழ்த்து டூ இயக்குநர் கேபிள் சங்கர்,கார்க்கி


2 ஓப்பனிங் சீன்ல கார்க்கி ஹீரோயின் கிட்டே ஒரு பஞ்ச் , இயக்குநர் ஒரு சீன்ல வர்றார்


கேபிள்  சங்கர்


இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1   கண்ணியமாக   நாயகி காதலை  சொன்ன  விதம் .  பாடல்  காட்சிகளில்  கூட வடம்பு மீறலை



2  டைட்டில் சாங்க்   ஹிட் ஆக்கியது , எல்லாப்பாடல்களும்  கேட்கும் விதத்தில்  படம் ஆக்கியது



3   க்ளைமாக்ஸ்  காட்சி  ஏரியல்  வ்யூவில்  பிரம்மாண்டமாய்   படம் ஆக்கியது



4   ஹீரோவுக்கு  ஓப்பனிங்  சாங் , ஃபைட்   எதுவும் வைக்காமல்  இயல்பாய்   ஒரு த்ரில்லர்  தர  முயற்சித்தது

5   பட  ரிலீஸ்  தேதியை  சாமார்த்தியமாக   ஐ  அலை  ஓய்ந்த  பின்  , அல்ட்டிமேட்டின்  அலை தொடங்கும்  முன்     வைத்தது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   டைட்டிலுக்கு  சொந்தக்காரரான  பட்டுக்கோட்டை  பிரபாகர்க்கு   மரியாதை செலுத்தி  இருக்கலாம்.


2   விபத்து  செயற்கையாக  செட்டப்  செய்வது  தான்  கதையின்  அடிநாதம்.இது   பல  படங்களில் வந்த  கதை  தானே?  முதல்  படம்  எனும்போது  ஏதாவது  புது  விதமான  திரைக்கதை  சொல்லி  இருக்கலாம்.


3   பின் பாதியில்  ரொமான்ஸ்  காட்சியில்  நாயகி  நாயகன்  இடது  கையைக்கடிப்பது  போல்  காட்சி  வருது. முத  முத   ரொமாண்டிக்கா  கடிக்குது பாப்பா ,செண்ட்டிமெண்ட்டா  வலது உள்ளங்கையை  கடிச்சிருக்கலாம்





சி  பி  கமெண்ட்  -  தொட்டால் தொடரும்  - முன் பாதி காலம் எல்லாம் காதல் வாழ்க டைப் லவ் , பின் பாதி த்ரில்லர் ,விகடன் மார்க் மே பி  40  , ரேட்டிங் = 2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -  ஓக்கே



 ரேட்டிங்  =  2.5  / 5



கள்ளக்குறிச்சி   நவநீதம்  தியேட்டரில்  படம்  பார்த்தேன்.



2 comments:

'பரிவை' சே.குமார் said...

அப்போ வெற்றிக் கொடி நாட்டி விட்டார் கேபிள் அண்ணான்னு சொல்லுங்க...
வாழ்த்துக்கள்.

Unknown said...

Padam sumar. Built up pannina alavuku kuda illai.