Sunday, January 25, 2015

உன் காதலி உயரமானவராக இருந்தால் ...


  
    
1  உன் காதலி உயரமானவராக இருந்தால் நீ முத்தம் தரும்போதுகூடத்தலை குனியத்தேவை இல்லை.
==================

    
2  ராதா ,கீதா,சீதா என்ற பெயருள்ள பெண்களின் காதலருக்கு முத்தம் தா என நேரடியாகக்கேட்கத்தேவை இல்லை.பேர் சொல்லி அழைத்தாலே போதும்
=================

  
    
3  ஒரு ஆண் மவுனமாக இருந்தால் அவன் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்று அர்த்தம்.
=================

  
    
4  எதிரியால் நீ பாதிக்கப்பட்டதும் உன் பதில் தாக்குதலை உடனே ஆரம்பித்து விடாதே! எதிரி யின் பலவீனமான தருணத்திற்காகக்காத்திரு
================


    

    
5  கார்த்திகை ,மார்கழி மாதங்கள் தான் வாக்கிங் போவோர் எண்ணிக்கை குறையும் தருணம் #,குளிர் ,பனி
================

  
    
6  இன்னைக்காவது சம்சாரம் நல்ல ருசியான பொரியல் செஞ்சிருக்கனும் னு மனசுக்குள் நினைப்பது கூட "கூட்டு"பிரார்த்தனையே!
===============
7 மணமான பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றின் மஞ்சளை மாதம் ஒரு முறை மெருகேற்றிக்கொள்தல் நலம் .அல்லது புதுமஞ்சள் கயிறுகட்டலாம்
=============

  
    
8  ஒரு பெண் மவுனமாக இருந்தால் அவரால் ஒரு ஆண் பாதிக்கப்படப்போகிறார் என அர்த்தம்.
================  
    
9  ஆப்பிள் பழம் வாங்கித்தரவே ஆயிரம் தடவை யோசிச்சு இலந்தைப்பழம் வாங்கினவன் கிட்டே ஆப்பிள் போன் கேட்ட கதையா.,...============


10 

பவித்ரா உன்னை கை கழுவிட்டா ப"வித்ட்ரா" னு சொல்லலாம்.==============


11

    
ஜமுனா ன்னு பேர் வெச்சா அந்தப்பொண்ணு ஜடை அழகியா இருக்கனும்னுஅவசியம் இல்லை
====================

  
    
12 வெய்யில் காலத்தில் காலை எட்டு மணி ஆகியும் எழாதவனா குளிர் காலத்தில் ஏழு மணிக்கு எழப்போகிறான்?

=============

  
    
13  கார்த்திகை ,மார்கழி குளிர்/ பனி காலம் முடியும் வரை புத்திசாலிக்கணவன் சம்சாரத்துடன் சண்டை போட மாட்டான்


============

  
    
14  அன்பே! அழகு நிலையம் செல்லாமலேயே உன் புருவம் வில் போல் இருப்பதால் நீ என்றும் உத்தம வில்லி!


==================


15 
வாட்சப்பில் நீ இருந்தும் வாடிப்பட்டி முதல் வடுகப்பட்டி வரை எந்த பிகர் நெம்பரும் வாட்ச் பண்ணலை எனில் நீ நெட் கார்ட் போட்டு என்ன பயன்?
 
 
================
 
 
16
நான் சின்னப்பையனா இருக்கும்போது கள்ளக்காதல் னா ஒரு திருடனும் ,திருடியும் லவ் பண்றது ன்னு நினைச்ட்டு இருந்தேன்
 
 
================
 
 
17 
    
மெத் மெத் னு இருப்பதால் வெண்டைக்காய்க்கு லேடீஸ் பிங்கர் னு பேராம்.அப்போ முருங்கைக்காய் க்கு ஜென்ட்ஸ் பிங்கர் னு பேரா?
 
 
=============
 
 
18 
இந்தக்காலத்துப்பசங்க விவரமானவங்க.பொண்ணுங்க கூடப்பேசும்போது அங்கங்க பேபிம்மா ,குட்டிம்மா சேர்த்துக்கறாங்க
 
 
================

  
    
19  பனி காலம் முடியும் வரை இனி ஒரு பய கூட மொட்டை மாடில படுக்க மாட்டான்.இதுக்கு பாய் ,பெட்சீட் போட்டு இடம் எல்லாம் பிடிப்பான் (வெய்யில் காலத்துல)


===============
 
    
20 நைட் டின்னர் க்கு சப்பாத்தி /பூரி செய் ன்னா இந்த பொண்டாட்டிங்க எல்லாம் மாவுக்குண்டாவைக்கைல குடுத்து உருண்டை பண்ணித்தா-ங்கறாங்க
 
 
===============

  
    

0 comments: